TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா

Go down

யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா Empty யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா

Post by ஜனனி Mon Jan 24, 2011 8:05 am



செஞ்சுரியன்: பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது. தொடரை 3-2 என வென்ற தென் ஆப்ரிக்கா, கோப்பை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் 2-2 என சமமாக இருந்தன. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று செஞ்சுரியனில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.
ஸ்மித் ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், ஆம்லா துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். பின் ஆம்லாவுடன், இணைந்த வான் விக் (56), சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3வது அரைசதம் கடந்து வெளியேறினார்.
ஆம்லா அபாரம்:
அடுத்து வந்த டிவிலியர்ஸ் (11) நிலைக்கவில்லை. மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆம்லா. ஜாகிர் கான் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய ஆம்லா, ஹர்பஜன் பந்திலும் விளாசினார். ஆம்லா (116) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7வது சதம் கடந்தார்.
மழை குறுக்கீடு:
தென் ஆப்ரிக்க அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. பின் 46 ஓவர்களாக மாற்றப்பட்டு போட்டி துவங்கியது. இம்முறை இந்திய வீரர்கள், விக்கெட் மழை பொழிந்தனர். டுமினி (35), டு பிளசிஸ் (8) தாக்குப்பிடிக்கவில்லை. போத்தாவும் 2 ரன்னில் திரும்பினார்.
பீட்டர்சன் (4), ஸ்டைன் (0), மார்கல்(0) மூன்று வீரர்களும், ஜாகிர் கானின் ஒரே ஓவரில் அவுட்டாகினர். தென் ஆப்ரிக்க அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் முனாப் படேல் 3, ஜாகிர் கான், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
விக்., சட, சட...
"டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி மாற்றப்பட்ட (46 ஓவரில் 268 ரன்கள்) கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, வழக்கம் போல "டாப் ஆர்டர்' வீரர்கள் சொதப்பினர். உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் இருந்த ரோகித் சர்மா (5), கடந்த போட்டியில் அசத்திய விராத் கோஹ்லி (2) ஏமாற்றினர். தோனி 5, யுவராஜ் 8 என, ஒற்றை இலக்க ரன்னில் வந்த வேகத்திலேயே திரும்பினர்.
பார்த்திவ் ஆறுதல்:
இளம் பார்த்திவ் படேல் சற்று ஆறுதலாக ரன்கள் சேர்த்தார். ஸ்டைன், டிசோட்சபே, மார்கல் என அனைவரது பந்திலும் பவுண்டரிகள் விளாசினார். இவர் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் வந்த ஹர்பஜன் 13 ரன்கள் எடுத்தார். பியுஸ் சாவ்லாவும் (8) வாய்ப்பை வீணாக்கினார்.
அதிரடி சதம்:
இந்திய அணி 119 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து திணறியது. இந்நிலையில் ஜாகிர் கானுடன் சேர்ந்த யூசுப் பதான், அதிரடியாக ரன்கள் குவித்தார். மார்கலில் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய இவர், போத்தாவின் ஓவரில் 2 சிக்சர் விளாசினார். தொடர்ந்து டிசோட்சபே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து, 68 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
இது சர்வதேச ஒருநாள் அரங்கில் 2வது சதம் ஆகும். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், யூசுப் பதான் 105 ரன்களுக்கு (8 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டாக, இந்திய அணியின் வெற்றிக் கனவு சிதைந்தது.
கடைசியில் ஜாகிர் கானும் (24) கைவிட, இந்திய அணி 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவில் மார்கல் 4, ஸ்டைன், டிசோட்சபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆம்லா தட்டிச் சென்றார்.
இதையடுத்து 3-2 என்ற கணக்கில் தொடரை வென்ற தென் ஆப்ரிக்க அணி, கோப்பை வென்று அசத்தியது. தொடர் நாயகன் விருது மார்கலுக்கு வழங்கப்பட்டது.

புரியாத கணக்கு
கிரிக்கெட்டில் மழை பெய்யும் போதெல்லாம், கொண்டு வரப்படும் "டக்வொர்த் லீவிஸ்' விதி, எப்படி என்பதே புரியாத கணக்காக உள்ளது. நேற்றும் அப்படித்தான் நடந்தது. தென்ஆப்ரிக்கா 46 ஓவரில் 250/9 ரன்கள் எடுத்தது. ஆனால் இதே 46 ஓவரில் இந்தியாவுக்கு இலக்காக 268 ரன்கள் என மாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

தோனியின் தவறான முடிவு
நேற்று "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் செய்வதென்று தவறாக முடிவெடுத்தார். இதனைப் பயன்படுத்திய தென்ஆப்ரிக்க வீரர்கள் ரன்மழை பொழிந்தனர். இதேபோல பேட்டிங் வரிசையில், இவர் முன்னதாக களமிறங்கியதும் பலன் தரவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன் முறையாக, ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கைநழுவியது.

டிசோட்சபே அதிகம்
இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்காவின் டிசோட்சபே அதிகபட்சமாக 13 விக்கெட் கைப்பற்றினார்.
5 போட்டியில் அதிக விக்., வீழ்த்திய "டாப்-5' வீரர்கள்:
வீரர்/அணி விக்.,
டிசோட்சபே(தெ.ஆப்.,) 13
மார்கல்(தெ.ஆப்.,) 12
முனாப் படேல் (இந்தியா) 11
ஜாகிர் கான் (இந்தியா) 9
ஸ்டைன் (தெ.ஆப்.,) 8

ஆம்லா முதல்வன்
பேட்டிங்கின் முதல் இரு இடங்களில் தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆம்லா (250), டுமினி (244) உள்ளனர். கடந்த 5 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த "டாப்-5' வீரர்கள் விபரம்:
வீரர்/அணி ரன்கள்
ஆம்லா (தெ.ஆப்.,) 250
டுமினி (தெ.ஆப்.,) 244
கோஹ்லி (இந்தியா) 193
யூசுப் பதான் (இந்தியா) 166
ஸ்மித் (தெ.ஆப்.,) 156

ஸ்கோர் போர்டு
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்(கே)யூசுப்(ப)ஜாகிர் 7(11)
ஆம்லா-அவுட் இல்லை- 116(132)
வான் விக்(கே)+(ப)யுவராஜ் 56(63)
டிவிலியர்ஸ்(ஸ்டம்டு)தோனி(ப)யுவராஜ் 11(12)
டுமினி(கே)+(ப)முனாப் 35(44)
பிளசிஸ்(ப)முனாப் 8(6)
போத்தா(கே)தோனி(ப)முனாப் 2(2)
பீட்டர்சன்(ப)ஜாகிர் 4(2)
ஸ்டைன்-ரன் அவுட்(தோனி) 0(1)
மார்கல்-ரன் அவுட்(தோனி) 0(2)
டிசோட்சபே-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 11
மொத்தம் (46 ஓவரில் 9 விக்.,) 250
விக்கெட் வீழ்ச்சி: 1-16(ஸ்மித்), 1-113(வான் விக்), 3-129(டிவிலியர்ஸ்), 4-231(டுமினி), 5-242(டு பிளசிஸ்), 6-244(போத்தா), 7-250(பீட்டர்சன்), 8-250(ஸ்டைன்), 9-250(மார்கல்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 9-1-47-2, முனாப் படேல் 8-0-50-3, பியுஸ் சாவ்லா 7-0-32-0, ஹர்பஜன் 8-0-33-0, யூசுப் பதான் 2-0-10-0, யுவராஜ் சிங் 8-0-45-2, ரோகித் சர்மா 2-0-14-0, ரெய்னா 2-0-13-0.
இந்தியா
பார்த்திவ்(கே)பிளசிஸ்(ப)மார்கல் 38(34)
ரோகித்(ப)டிசோட்சபே 5(8)
கோஹ்லி(கே)டிவிலியர்ஸ்(ப)மார்கல் 2(6)
தோனி(கே)ஸ்மித்(ப)மார்கல் 5(10)
யுவராஜ்(கே)டுமினி(ப)ஸ்டைன் 8(14)
ரெய்னா(கே)மார்கல்(ப)ஸ்டைன் 11(8)
யூசுப்(கே)பிளசிஸ்(ப)மார்கல் 105(70)
ஹர்பஜன்(கே)டுமினி(ப)போத்தா 13(16)
சாவ்லா(ப)பீட்டர்சன் 8(11)
ஜாகிர்(கே)மார்கல்(ப)டிசோட்சபே 24(58)
முனாப்-அவுட் இல்லை- 4(9)
உதிரிகள் 11
மொத்தம் (40.2 ஓவரில் ஆல் அவுட்) 234
விக்கெட் வீழ்ச்சி: 1-21(ரோகித் சர்மா), 2-31(விராத் கோஹ்லி), 3-45(தோனி), 4-60(பார்த்திவ் படேல்), 5-60(யுவராஜ்), 6-74(ரெய்னா), 7-98(ஹர்பஜன்), 8-119(பியுஸ் சாவ்லா), 9-219(யூசுப் பதான்), 10-234(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 9-1-32-2, டிசோட்சபே 7.2-0-57-2, மார்கல் 8-0-52-4, ஜோகன் போத்தா 8-0-33-1, பீட்டர்சன் 7-0-45-1, டு பிளசிஸ் 1-0-13-0.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோப்பை வென்றது இந்தியா: 3வது போட்டியில் தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி
» ஆம்லா இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன்குவிப்பு: இந்தியா அதிரடி துவக்கம்
» யூசுப் பதான் அதிரடி: இந்தியா வெற்றி : வீழ்ந்தது ஜிம்பாப்வே
» வாட்சன் விளாசல்: ஆஸி., அசத்தல்! * தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
» இந்தியா பரிதாப தோல்வி* பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்* தென் ஆப்ரிக்கா அபாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum