Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரணாப் கோரிக்கை: எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு
Page 1 of 1

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க,
பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டியது அவசியமா என்று விவாதிக்க,
பார்லிமென்டின் சிறப்பு கூட்டத் தொடரை நடத்தத் தயார்' என்ற மத்திய நிதி
அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பை, எதிர்க்கட்சிகள் நிராகரித்து
விட்டன. "காங்கிரஸ் கட்சி எதையும் மறைக்கவில்லை எனில், பார்லிமென்ட்
கூட்டுக்குழு அமைக்க தயங்குவது ஏன்?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.
இதற்கிடையில், பார்லிமென்டை முடக்கியதற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்புக்
கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்
குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரின. இந்தக்
கோரிக்கையை ஆளும் கட்சியினர் ஏற்காததால், குளிர்கால கூட்டத் தொடரின் போது,
பார்லிமென்ட் நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. ஒரு நாள் கூட முழுமையாக
செயல்படவில்லை. இந்த ஊழல் பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் டில்லியில்
பா.ஜ., சார்பில் பிரமாண்டமான பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது. அதிலும்,
பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடங்குவது
சரியானது அல்ல. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து முடிவு செய்ய
பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்டலாம். கூட்டுக்குழு வேண்டுமா,
வேண்டாமா என்பது பற்றி அதில் விவாதிக்கலாம். விவாதத்தின் முடிவில்
ஓட்டெடுப்பு நடத்தி முடிவு எடுக்கலாம்' என்றார்.
பிரணாப் முகர்ஜியின் இந்த யோசனையை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா
சுவராஜ் நிராகரித்து விட்டார். நேற்று அவர் நிருபர்களிடம் பேசும்போது,"
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்த பார்லிமென்டின் கூட்டுக்குழு
அமைக்கப்பட வேண்டும். இதற்கு மாற்றாக வேறு எதையும் ஏற்க மாட்டோம்.
கூட்டுக்குழு அமைப்பது குறித்து பேசுவது என்பது இனி கிடையாது.
கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்பதே எங்களது கோரிக்கை' என, உறுதிபடக்
கூறினார். ""காங்கிரஸ் கட்சி எதையும் மறைக்கவில்லை எனில், பார்லிமென்ட்
கூட்டுக் குழு அமைக்கத் தயங்குவது ஏன்? அவர்கள் உடனடியாக பார்லிமென்ட்
கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் விசாரணை உண்மைகளை
வெளிக்கொண்டு வரும். பொதுக்கணக்கு குழு முன் ஆஜராக தயாராக உள்ள பிரதமர்
மன்மோகன் சிங், கூட்டுக் குழு அமைக்க தயங்குவது ஏன்? பார்லிமென்ட்
கூட்டுக் குழு தவிர வேறு எந்த யோசனையையும் ஏற்க மாட்டோம்,'' என பா.ஜ.,
தகவல் தொடர் பாளர் ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்தப் பிரச்னை தொடர்பாக நேற்று
நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி கூறியதாவது: பார்லிமென்டை
முடக்கியதற்காக மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 2009 அக்டோபரிலேயே எப்.ஐ.ஆர்., போடப்பட்டது.
எதிர்க்கட்சிகளோ ஒரு ஆண்டு கழித்து இப்போதுதான், கூட்டுக்குழு வேண்டுமென
கேட்கின்றனர். ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை வந்தவுடன் அமைச்சர் பதவியை விட்டு
ராஜா இறங்கிவிட்டார். இருந்தும், பார்லிமென்டில் ரகளை நடத்தி சபை
நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கி விட்டன. அரசாங்கம் எந்த
விவாதத்திற்கும் தயார். ஆனாலும், சபையை நடத்த விடாமல் செய்வது
ஏற்கத்தக்கது அல்ல. ஏற்கனவே பொது கணக்குக் குழு விசாரணை ஆரம்பித்துள்ளது.
இது கூட ஒரு கூட்டுக்குழு போன்றதுதான். இதுமட்டுமின்றி, சி.பி.ஐ,,
அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து
விசாரிக்கின்றன. இதைவிடவா கூட்டுக்குழு தேவை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி
கூறினார்.
இதற்கிடையில் நேற்று டில்லியில் பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா
சீதாராமன் பேசும்போது,"" 2009ம் ஆண்டு எப்.ஐ.ஆர்., போடப்பட்டதாக
சொல்கின்றனர். யார் பெயரையும் குறிப்பிடாமல் போடப்பட்ட எப்.ஐ.ஆர்., அது.
அதற்கு என்ன அர்த்தம்? பொதுக்கணக்கு குழு விசாரணை என்பது வெறும் கணக்கு
வழக்குகளை மட்டுமே பார்க்கக் கூடிய ஒன்று. அதனால், எந்த பயனும் இல்லை.
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ஒளிந்து கிடக்கும் நிறைய விஷயங்களை வெளிக் கொண்டு
வர வேண்டுமென்றால், அதற்கு பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்தால்தான்
முடியும். இப்பிரச்னைக்கு அதுதான் தீர்வு,''என்றார். ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தில், அரசு தரப்பில் அடுத்தடுத்து சில யோசனைகளை முன்வைத்துக்
கொண்டே இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கையில் பிடிவாதம்
காட்டி வருகின்றன. பார்லி கூட்டுக்குழு விசாரணைக்கு குறைந்த எதையும்
ஏற்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றன. அதே நேரத்தில், முன்னாள்
அமைச்சர் ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
அவரிடம் நடக்கும் விசாரணைக்குப் பின், இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு
ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"பொறியில் சிக்க மாட்டோம்': ""ஆளும் கட்சியினர் வைக்கும்
பொறியில் நாங்கள் சிக்க மாட்டோம். பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க
வேண்டும் என்ற எங்களின் நிலையில் இருந்து பின்வாங்க மாட்டோம்,'' என,
பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் கருவூலத்தை கொள்ளை அடித்ததை மறைக்க முற்படுவதை ஏற்க முடியாது.
பிரதமரால் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியவில்லை எனில், ஜனநாயகம்
என்பதற்கே அர்த்தமில்லை. விதிகளை திருத்தி பெருமளவில் மோசடி செய்து,
சொத்துக்கள் குவித்தவர்களை காப்பாற்ற முற்படுவது சரியல்ல. ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீடு மோசடி குறித்து விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக் குழு
அமைக்கவில்லை எனில், பட்ஜெட் கூட்டத் தொடரை முடக்கவும் எதிர்க்கட்சிகள்
தயங்காது. கூட்டுக் குழுவால் மட்டுமே குற்றவாளிகளை அடையாளம் காட்ட
முடியும்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு :பார்லி.,யில் இன்று அமளி உண்டு
» பாக். கோரிக்கை: ஐ.நா. நிராகரிப்பு
» காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
» கறுப்புப் பண விவகாரத்தில் குட்டி நாடு பதில் :இந்திய கோரிக்கை நிராகரிப்பு
» காவிரி நடுவர் மன்ற கூட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum