TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கல்லூரி மாணவர்களின் வங்கிக் கணக்கில் "ஹவாலா' : பின்னணியில் யார்?

Go down

கல்லூரி மாணவர்களின் வங்கிக் கணக்கில் "ஹவாலா' : பின்னணியில் யார்? Empty கல்லூரி மாணவர்களின் வங்கிக் கணக்கில் "ஹவாலா' : பின்னணியில் யார்?

Post by mmani Mon Dec 20, 2010 8:25 am

கோவை : கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகக் கூறி,
வெளிநாடுகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும், "ஹவாலா' கும்பல் குறித்து,
கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு விவரங்களை
முன்பின் அறியாத நபர்களுக்கு, "ஆன்-லைனில்' தெரிவித்து மோசடிக்குள்ளான
மாணவர்கள் இருவரிடம், விசாரணை நடக்கிறது.
கோவை, ராம்நகர், நேரு வீதியில் வசிப்பவர் சிலம்பரசன்(24); சொந்த ஊர்,
சிவகங்கை மாவட்டம். இவர், கோவை நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.பி.டி.,
(பிசியோதெரபி) இறுதியாண்டில் படித்துக்கொண்டே, பகுதி நேர வேலை
தேடினார்.வேலைவாய்ப்பு இருப்பதாக இணையதளம் ஒன்றில் வெளியான விளம்பரத்தை
பார்த்து, "ஆன்-லைன்' முறையில் விண்ணப்பித்தார். அடுத்த இரு நாட்களில், [You must be registered and logged in to see this link.] என்ற, "இ-மெயில்' முகவரியில் இருந்து சிலம்பரசனுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது.
அதில், வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்வதற்கான, "மார்க்கெட்டிங்
எக்சிகியூடிவ்' பணி வழங்குவதாகவும், பொருட்களை விற்றால், 100 ரூபாய்க்கு 15
ரூபாய் கமிஷன் வழங்குவதாகவும் கூறப்பட்டிருந்தது.இதை நம்பிய சிலம்பரசன்,
தன் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை, "இ-மெயில்' செய்தார். ஆனால்,
பொருட்களை விற்பதற்கான வேலை எதுவும் தரப்படவில்லை. மாறாக, சிலம்பரசனின்
வங்கிக் கணக்குக்கு, வேறு ஒரு வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய்,
"டிரான்ஸ்பர்' செய்யப்பட்டிருந்தது. இப்பணத்தை, தாங்கள் குறிப்பிடும்
நபரின் ரஷ்ய வங்கிக் கணக்குக்கு, "நெட் பாங்கிங்' மூலம் மாற்றிவிடும்படி
உத்தரவு வந்தது. காரணம் புரியாத சிலம்பரசனும் அவ்வாறே செய்தார். அதே
போன்று, மீண்டும் ஒரு முறை 50 ஆயிரம் ரூபாயையும், பின்னர், 1.30 லட்ச
ரூபாயையும் இவரது வங்கிக் கணக்குக்கு ஏதோ ஒரு வங்கிக் கணக்கில் இருந்து
மர்ம நபர்கள் டிரான்ஸ்பர் செய்தனர்.
பொருட்களை விற்றுக்கொடுத்தால் கமிஷன் தருவதாகக் கூறிய, "இ-மெயில்'
தொடர்பாளர்கள், வெறுமனே பணப் பரிமாற்றத்துக்காக மட்டுமே தன்னை
பயன்படுத்துவதை அறிந்த சிலம்பரசன், சந்தேகமடைந்தார்.தன் வங்கிக் கணக்குக்கு
கடைசியாக வந்த தொகையை, வேறு வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்யாமல்
தவிர்த்தார். மறுநாளே இவருக்கு, "இ- மெயில்' அனுப்பிய மர்ம நபர்கள்,
தாங்கள் கூறுவது போல செயல்படாவிடில் போலீசில் புகார் அளித்து நிதிமோசடி
வழக்கில், "உள்ளே தள்ளி' விடுவோமென மிரட்டியுள்ளனர். பயந்துபோன இவர்,
அந்நபர்கள் கூறியவாறே செய்தார். அதன்பிறகு, சிலம்பரசனுடனான தொடர்பை அவர்கள்
துண்டித்துக் கொண்டனர்.இந்நிலையில், "நெட் பாங்கிங்' வசதி மூலம், வேறு ஒரு
நபரின் கணக்கில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை சிலம்பரசன்
திருடிவிட்டதாகக் கூறி, இந்தியன் வங்கி அதிகாரிகள், கோவை மாநகர மத்திய
குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.மோசடியில் சிலம்பரசன்
சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறிய போலீசார், இந்தியன் வங்கிக்கு சேரவேண்டிய
இரண்டு லட்சம் ரூபாயை உடனே செலுத்துமாறு எச்சரித்துள்ளனர்.
தன் நண்பர்கள் மூலம், 25 ஆயிரம் ரூபாய் வரை திரட்டிய சிலம்பரசன், போலீஸ்
கூறியபடியே இந்தியன் வங்கியில் செலுத்தினார். மேலும், 1.75 லட்சம் ரூபாய்
கேட்டு வங்கி அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததால், வேறுவழியின்றி போலீஸ்
கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.இவரை போன்றே கோவை,
ஆவராம்பாளையத்தில் வசிக்கும் ஆனந்த கிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவரும் மோசடி
கும்பலிடம் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகிறார். இவரும், போலீஸ்
கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.சிலம்பரசன் கூறுகையில், ""வேலைவாய்ப்பு
அளிப்பதாகக் கூறிய மோசடி நபர்கள், இணையதளம் வழியே மோசடி செய்துவிட்டனர்.
என்னைப் போன்றே, மேலும் பல மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம். மோசடி
நபர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்,'' என்றார்.
கல்லூரி மாணவர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், ""சிலம்பரசனை
போன்றே, நானும் ஏமாற்றப்பட்டேன். மோசடி நபர்கள், என் வங்கிக் கணக்குக்கு
ஏதோ ஒரு வங்கியில் இருந்து பணத்தை டிரான்ஸ்பர் செய்தனர். அந்த தொகையை,
அந்நபர்கள் கூறியபடி வேறு வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்தேன். நான்
கணக்கு வைத்திருந்த வங்கியின் அதிகாரிகள், என்னை குற்றவாளி போல கருதி
விசாரணை நடத்தினர். இதனால், போலீசில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.
"ஹவாலா' கும்பலின் வேலை : போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:வேலை
வாய்ப்பு இருப்பதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து, ஆள்பிடிக்கும் ஹவாலா
கும்பல், முதலில் வங்கிக் கணக்கின் விவரங்களை பெற்றுக்கொள்வர். பிறகு,
அவற்றில் லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தி, அந்த தொகையை தாங்கள் கூறும்
வெளிநாட்டு நபர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு, "நெட் பாங்கிங்'
மூலம், டிரான்ஸ்பர் செய்ய வற்புறுத்துவர்.இப்படி, நூற்றுக்கணக்கான
இளைஞர்கள் மூலம், இந்தியாவில் இருந்து பல கோடி ரூபாயை வெளிநாடுகளில்
வசிக்கும் நபர்களுக்கு எளிதாக மாற்றிவிடுவர்; இதுவும் ஒரு வகையில் ஹவாலா
பணப் பரிமாற்றம் தான்.மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அல்லது வங்கிகளில்
பணிபுரியும் ஊழியர்கள், அதிக தொகையை வங்கிக் கணக்கில் இருப்பு
வைத்திருக்கும் நபர்களின் பணத்தை நூதனமாக திருடி, வெளிநாட்டுக்கு அனுப்பும்
முயற்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது
ரகசிய எண்களை பாதுகாப்பாக வைத்திருக்காவிட்டால் இது போன்ற பிரச்னைகளுக்கு
உள்ளாக நேரிடும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி பதவி ஏற்பில் யார் உள்ளேன்,யார் இல்லேன்? வைகோ கைது .
» வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நவம்பர் 10-ம் தேதி அமல்
» சமையல் "காஸ்' சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு, 4,000 ரூபாய்வரவு வைக்கப்படும்.
» சற்று முன் : கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் -நேரடி காட்சிகள் இவை
» சுரங்கம் நடத்தும் காங்., பிரமுகர்கள் யார் யார்? மோதல் முற்றுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum