Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ.200 கோடி அவுட் : அரசியல்வாதிகளால் வீணடிக்கப்படும் மக்களின் வரிப்பணம்
Page 1 of 1

நமது மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகளால் மீண்டும் ஒருமுறை பொதுமக்களின்
வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. "மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பணத்தை
வீணடிப்பது வழக்கமானது தானே' என, காமெடியாக நினைத்து இந்த விவகாரத்தை
ஒதுக்கி தள்ளிவிட முடியாது. ஏனென்றால், இந்த முறை, சற்று அதிகமாகவே 200
கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பிடிவாதமும், ஆளும் கட்சியின் விதண்டாவாதமும்
சேர்ந்து, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை முற்றிலுமாக முடக்கியதால்
தான், இந்த அளவுக்கு மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
மணியோசை வரும் முன்னே"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என
பழமொழி உண்டு. அதற்கேற்ப, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர்
துவங்குவதற்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடு
விஸ்வரூபம் எடுக்க துவங்கி விட்டது.இது மட்டுமல்லாமல், காமன்வெல்த்
போட்டிகளில் நடந்த ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஊழல்
என, பார்லிமென்டில் ஆளும் கட்சியை போட்டு தாக்குவதற்கு தேவையான விஷயங்கள்
ஏராளமாக இருந்தன. இந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நன்றாகவே பயன்படுத்தி
கொண்டன.
ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் : வழக்கமாக பார்லிமென்ட்டில்
போராட்டம் என்றால், தே.ஜ., கூட்டணி கட்சியினர் ஒருபுறமும், தே.ஜ.,
கூட்டணியில் அங்கம் வகிக்காத இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒருபுறமும்
தனித்தனியாக செயல்படுவர். ஆனால், ஸ்பெக்ட்ரம் விவரகாரத்தில் முறைகேடு
நடந்ததாக கூறப்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் என்ற மெகா தொகை, அனைத்து
எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தது. பார்லிமென்டுக்கு உள்ளே
மட்டுமல்லாமல், பார்லிமென்டுக்கு வெளியிலும் இவர்கள் போராட்டத்தை
தீவிரப்படுத்தினர்.
கூடுவதும், கலைவதும் : கடந்த நவம்பர் 9ம் தேதி பார்லிமென்ட்டின்
குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது. துவங்கிய நாளில் இருந்து, கூட்டத்
தொடரின் கடைசி நாளான கடந்த 13ம் தேதி வரை, ஒரு நாள் கூட முழுமையாக சபை
அலுவல்கள் நடக்கவில்லை. வழக்கம்போல் காலையில் சபை துவங்கும்.உடனடியாக
"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும்'
என, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்புவர். இதற்கு பதிலடியாக, ஆளும்
கட்சியினரும், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் ஊழல் குறித்து கோஷம்
எழுப்புவர். ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவும். இதையடுத்து, சில மணி
நேரங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்படும்.மீண்டும் சபை கூடியதும், இதேபோன்ற
சம்பவங்கள் தொடரும். இறுதியாக, சபை நடவடிக்கைகளை நாள் முழுவதற்கும்
ஒத்திவைத்து விட்டு, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், ராஜ்யசபா தலைவர்
அமீது அன்சாரியும் வருத்தத்துடன் எழுந்து செல்வர். இந்த நடவடிக்கைகள்
தான், கடந்த ஒரு மாதமாக நடந்தன.
சுப்ரீம் கோர்ட் கேள்வி : பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு
இடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த
விசாரணைகள், ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின."ஸ்பெக்ட்ரம்
விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி பிரதமருக்கு எழுதிய
கடிதத்துக்கு பதில் அளிக்காதது ஏன்? சி.பி.ஐ., வழக்கு விசாரணையில் இன்னும்
தீவிரம் காட்டாதது ஏன்? ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை, மத்திய ஊழல்
கண்காணிப்பு ஆணையர் பதவியில் அமர்த்தியது ஏன்? என, சுப்ரீம் கோர்ட்
வரிசையாக கேள்விகளை எழுப்பியதால், மத்திய அரசு அதிர்ந்து போனது.
எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை இறுக பிடித்துக் கொண்டு, அரசை ஒரு
வழியாக்கி விட்டனர்.
சபாநாயகர் வருத்தம் : ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின்
அமளியால், பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடங்கியதில், ரொம்பவே
பாதிக்கப்பட்டவர்கள் இருவர். ஒருவர் சபாநாயகர் மீரா குமார். அடுத்தவர்,
ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி. சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி, சபை
அலுவல்களை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற இவர்களின் முயற்சி,
இறுதிவரை பலிக்கவில்லை.இது தொடர்பாக, இருவருமே விரிவாக கலந்துரையாடினர்.
இதுபோன்ற பிரச்னைகள் எழும்போது, வெளிநாடுகளில் பார்லிமென்ட் எப்படி
சுமுகமாக இயங்குகிறது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடத்தினர். ஆனால்,
எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
இறங்கி வர மறுப்பு : குளிர்கால கூட்டத் தொடர் முடியும் வரை,
ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி இரு தரப்புமே இறங்கி வரவில்லை.
தங்கள் நிலையில் கடைசி வரை உறுதியாக இருந்தனர். "ஸ்பெக்ட்ரம் விவகாரம்
தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும் வரை சபையை
நடத்த விட மாட்டோம்' என்பது, எதிர்க்கட்சிகளின் பிடிவாதமாக இருந்தது.
"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை என்ற
பேச்சுக்கே இடம் இல்லை' என்பது ஆளும் கட்சியின் விதண்டாவாதம்.
யார் காரணம்? பார்லிமென்ட் நடக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும்,
மக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்படுகிறது. இந்த பார்லிமென்ட்
குளிர்கால கூட்டத் தொடரில் 22 நாட்கள் சபை அலுவல்கள் நடக்கவில்லை. இதை
கணக்கிட்டு பார்த்தால், ஒட்டு மொத்தமாக 200 கோடி ரூபாய் மக்களின்
வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுவதாவது: பார்லிமென்ட்
அலுவல்கள் முடங்கியதற்கு ஆளும் கட்சி தான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழல்
என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய்
இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த மெகா ஊழல் குறித்து விசாரிக்க
பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை
நியாயமானது தான். ஆனால், இதை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்ததன் மூலம்,
மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கு மத்திய அரசு காரணமாகி
விட்டது.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தை, பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரிக்கும் என
அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றன.
இதன்மூலம் விதிமுறைகளை எதிர்க்கட்சியினர் மீறுகின்றனர். சபை முடங்கியதற்கு
எதிர்க்கட்சிகள் தான் காரணம்' என்றார்.
யாருக்கு பாதிப்பு?இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டு
கொடுக்காமல் செயல்படுவதால், அவர்கள் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
சாதாரண மக்களுக்கு தான் பாதிப்பு. ஏனென்றால், மக்களின் வரிப்பணம் தானே
வீணடிக்கப்படுகிறது. பார்லிமென்ட்டை சுமுகமாக இயங்க செய்ய வேண்டிய
பொறுப்பு, இரு தரப்புக்குமே உண்டு.மக்களுக்கு சேவை செய்வதற்காக, மக்களால்
தேர்வு செய்யப்பட்டவர்களே மக்கள் பிரதிநிதிகள். இதை அவர்கள் எப்போது தான்
உணர்வரோ...
குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவில் நடந்தது என்ன? *தனி நபர் மசோதா எதுவுமே தாக்கல் செய்யப்படவில்லை
* தனி நபர் மசோதா தொடர்பான விவாதம் எதுவும் நடக்கவில்லை.
* எந்த தனி நபர் மசோதாவும் வாபஸ் பெறப்படவில்லை.
*தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் விவாதிக்கப்படவில்லை.
*தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் ஏற்கபடவில்லை.
*தீர்மானம் வாபஸ் பெறப்படவும் இல்லை.
இதுவும் ஒரு சாதனை (?) தான் : *தெகல்கா விவகாரத்தின் போது, பார்லிமென்ட் தொடர்ந்து 17 நாட்கள் செயல்படாமல் இருந்தது.
*
கடந்த 1996ல், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் சுக்ராமின் வீடுகளில்
சி.பி.ஐ., சோதனை நடத்தியதால், 13 நாட்கள் சபை நடக்கவில்லை.
*கடந்த 1987ல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் நடந்த அமளியால், 45 நாட்கள் சபை அலுவல்கள் முடக்கப்பட்டன.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தினமும் ரூ.5 கோடி "அவுட்!': ஆறு மாதங்களில் ரூ.900 கோடி மக்கள் வரிப்பணம் வீண்
» மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம்
» தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் பாழ்
» பங்குச்சந்தை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி 'அவுட்'
» பிரிட்டனில் நான்கு நாள் கலவரத்தில் ரூ.1,500 கோடி "அவுட்': விடிய, விடிய இயங்கிய கோர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum