Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பட்டினி சாவு: கலங்கிப்போனது காஞ்சி
Page 1 of 1
பட்டினி சாவு: கலங்கிப்போனது காஞ்சி
மகள் இறந்தது கூட தெரியாமல், பட்டினியால் மயக்கமடைந்த முதியவரை, இளைஞர்கள் சிலர் காப்பாற்றியுள்ளனர்.
சமீபத்தில்,
காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அகலப்படுத்தப்பட்ட போது, அந்த பணியை
மேற்கொண்டவர்கள், அப்பகுதியில் உள்ள கந்தன் பார்க்கில் குடிசை போட்டு
தங்கியிருந்தனர். அவர்களது பணி முடிந்த பின், அந்த குடிசைகளை அப்படியே
விட்டு விட்டுச் சென்று விட்டனர்.அவர்கள் விட்டுச் சென்ற குடிசையில்
இருந்து, நேற்று துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் குடிசைக்குள்
நுழைந்து பார்க்க, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல்... அதன் அருகே,
நினைவுகளைத் தொலைத்த முதியவர் ஒருவர். உடனே, சிவகாஞ்சி போலீஸ்
நிலையத்திற்கு தகவல் போனது.விரைந்து வந்த காவல்துறை, அழுகிய நிலையிலிருந்த
பெண்ணின் உடலை பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தது. முதியவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிவித்து, டீ
மற்றும் பிஸ்கெட் வாங்கிக் கொடுத்து, காவல்துறை முதலில் கருணை காட்டியது;
அதன் பின் விசாரணையை துவக்கியது. 90 வயதில் கண்கள் வெளிறிப்போய், திக்கித்
திக்கி பேசத் துவங்கினார் அந்த முதியவர்.
"என் சொந்த ஊர்
திருநெல்வேலி... எங்க ஊர் சாமியின் பேரான பேராட்சிதான் என்னோட பேரு. ஊரில
பொழப்பு சரியா இல்லை. அதனால, பொண்டாட்டி, புள்ளையோட மெட்ராஸ் வந்துட்டோம்.
அங்கங்க கிடைச்ச வேலையை வைச்சு, பிழைப்பு நடத்தினோம். உடம்பு சரியில்லாம
இருந்த என் பொண்டாட்டி, கொஞ்சநாள் முன்னால செத்துப் போயிட்டா. அம்மா போன
அதிர்ச்சியில, என் பொண்ணு முத்துலட்சுமிக்கு கை, கால் விளங்காம
போயிடுச்சு. அவளை தனியா எங்கேயும் விட முடியாதுங்கறதால, என்னோடவே
வைச்சுகிட்டு, கிடைக்கிறதை சாப்பிட்டுட்டு இருந்தோம்.நாங்க ரோட்டில
சிரமப்பட்டு நடந்து வர்றதைப் பார்த்து, ஆம்புலன்சில் வந்தவங்க, இங்க
கொண்டுவந்து இறக்கி விட்டுட்டு போயிட்டாங்க. இந்த குடிசைங்க காலியா
இருந்ததால, இங்க வந்து ஒண்டிகிட்டோம்.பசி வயித்த கிள்ளிச்சு... யாரும்
இந்தப் பக்கம் வராததால, சாப்பிட எதுவும் கிடைக்கல. வெளியே போய் பிச்சை
கேட்க, உடம்பு ஒத்துழைக்கலை. பசி அதிகமானதால மயக்கமாயிட்டோம். இப்ப நீங்க
வந்து எழுப்பிய பின்னாலதான், என் பொண்ணு செத்துட்டான்னு தெரிஞ்சது...'
அழக்கூட
முடியாமல், "ஹீனமான' குரலில் முதியவர் பேசிமுடிக்க, காவல் துறையினர்
கண்களிலும் கண்ணீர் மழை. முதியவர் மீது பரிதாபப்பட்ட போலீசார், அவரை
மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தனர்.ஆனால், அங்கிருந்த இதயமற்ற
ஊழியர்கள், "கவனிக்க ஆள் இல்லை' எனக் கூறி, அவரை சேர்க்க மறுத்துவிட்டனர்.
தங்களின் வாதம் எடுபடாத நிலையில், காவல்துறை கடமையைத் தொடர புறப்பட்டு
விட்டது. அங்கிருந்த இளைஞர்கள் சிலர், தமிழக அரசின் உயிர்காக்கும் 108
ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களோ, " ஏற்கனவே முதியவர்
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனிக்க ஆள்
இல்லாததால், மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டனர். அவரை, மீண்டும்
மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டாம் என, ஊழியர்கள் சொல்லி விட்டனர்' என
தெரிவித்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டனர்.
கருணை, அன்பு, பரிவு போன்ற
வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தொடர்ந்து ஒதுக்கித் தள்ளிய
நிலையில், காஞ்சிபுரம் தாசில்தார் வரதராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர் உடனடியாக, சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, முதியவரை
மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.அவரின்
தலையீட்டால், கந்தன்பார்க்கிற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் முதியவரின், "உயிர்
காக்க' அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.

Similar topics
» ஆறிலும் சாவு நூறிலும் சாவு தட்டிக் கேக்க துணிவோம் தலைவன் வழி செல்வோம்
» சீமான் காஞ்சி உரை - செங்கொடி நினைவு
» நாம் தமிழர் இயக்கம் சார்பாக சென்னை காஞ்சி மாவட்டத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டது
» ஒரு நாள் பிரியாணி, மறுநாள் பட்டினி: திரிஷாவின் ரகசியம் அம்பலமானது
» பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum