Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
Page 1 of 1

சென்னை : ஆந்திராவில் 5 வயதில் காணாமல் போன சிறுவன், 16 ஆண்டுகளுக்கு
பின், இளைஞனாக பெற்றோரிடம் சேர்ந்த ருசிகர சம்பவம் நேற்று சென்னையில்
நடந்தது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மெகபூப்நகர் ஆலம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த
தம்பதிகள் புரான்(56)- சுபேதா பேகம்(50). இவர்களது மகன் சபீர், கடந்த 94ம்
ஆண்டு, ஐந்து வயதான நிலையில், நண்பர்களுடன் விளையாடிய போது, காணாமல்
போய்விட்டான். சபீரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆந்திராவில்
காணாமல் போன சிறுவன் சபீர், ரயில் மூலம் சென்னை வந்துள்ளான். சென்ட்ரல்
ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை மீட்ட பெண் போலீஸ் ஒருவர்,
குழந்தைகள் காப்பகத்தில் அவனைச் சேர்த்தார். காப்பகத்தில் அலீம் என்ற
பெயரில் தங்கியிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின்,
அங்கிருந்து வெளியேறி சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் தோல்
பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனியில் மாதம் 3,500 ரூபாய்
சம்பளத்தில் வேலை பார்த்து, நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதே கம்பெனியில்
பணிபுரியும்,"சூப்பர்வைசர்' சுரேஷிடம், "ஐயப்பன் கோவிலுக்கு நானும்
உங்களுடன் மாலை போட விரும்புகிறேன்' என, அலீம் கூறினார். "வேறு மதத்தில்
பிறந்த நீ எதற்கு அய்யப்பனுக்கு மாலை போட வேண்டும்?' என, சுரேஷ்
கேட்டதற்கு, "சிறு வயதில் என் தாய் - தந்தையை பிரிந்து சென்னை வந்து
விட்டேன். பிரிந்து போன பெற்றோரை மீண்டும் கண்டுபிடிக்க ஐயப்பன் உதவ
வேண்டும் என்பதற்காகவே மாலை போட விரும்புகிறேன்' என, கூறினார்.
நண்பரான அ.தி.மு.க., பிரமுகர் மற்றும் அரிமா சங்க பிரதிநிதிகள்
உதவியுடன், அலீமின் பெற்றோர் குறித்து தகவலறிய, ஆந்திராவில் உள்ள அரிமா
சங்க செயலர் ஒருவர் உதவியை சுரேஷ் நாடினார். அவர்களிடம் அலீம் பற்றிய
அடையாளம் மற்றும் கிராமத்தின் பெயரை தெரிவித்தனர். அதன் பேரில்,
ஆந்திராவில் உள்ள, அலீமின் பெற்றோரை கண்டுபிடித்து சென்னை அழைத்து
வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு
செய்யப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன மகனை நேரில்
பார்த்த சந்தோஷத்தில் பெற்றோர் கட்டித் தழுவினர். அலீமின் பெற்றோருக்கு
தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகள் தெரியும். ஆனால், அலீமுக்கு தமிழ்
மட்டுமே தெரியும். இதனால், அவர்கள் மனம் விட்டு பேச முடியாமல் தவித்தனர்.
அலீம் நிருபர்களிடம் கூறியதாவது: என் சொந்த ஊரிலிருந்து
பெற்றோரை பிரிந்து, எப்படியோ சென்னை வந்துட்டேன். நான் வேலை பார்க்கும்
கம்பெனியில் இருப்பவர்கள் உதவியுடன் இன்று என் பெற்றோரை சந்தித்துள்ளேன்;
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் இடது கையில் கட்டை விரலில் கூடுதலாக,
ஒரு விரல் உள்ளது. எனக்கு ஆறு விரல்கள் உள்ளதை அடையாளமாக
தெரிவித்திருந்தேன். அதை வைத்து என் பெற்றோரை கண்டுபிடித்து சென்னை
அழைத்து வந்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளாக பிரிந்திருந்த, என் அப்பா -
அம்மாவை மீண்டும் சந்தித்துள்ளேன். என் பெற்றோருக்கு தமிழ் தெரியாததால்,
அவர்களிடம் மனம் விட்டு பேச முடியவில்லை. என் பெற்றோர் இப்போது ரொம்ப
கஷ்டத்தில் இருப்பதால், சென்னையிலேயே தங்கி வேலை செய்து, அவர்களுக்கு
மாதந்தோறும் பணம் அனுப்ப விரும்புகிறேன். இவ்வாறு அலீம் கூறினார். அலீமை
அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர்களுடன் பேச வைக்க
பெற்றோர் விரும்பினர். ஆனால், சபரிமலைக்கு போய் வந்த பின், ஊருக்குச்
செல்ல விரும்புவதாக அலீம் கூறினார். இதையடுத்து, பெற்றோரை அலீம்
தங்கிருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

Similar topics
» ஏழு வயதில் குடும்பத்தை பிரிந்த மகள் :34 வயதில் தாய், தந்தையை தேடல்
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!uf
» சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்: ஐந்து வயதில் தொடங்கிய சேவை
» 77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி
» 50 வயதில் பெண்ணாக மாறிய ஆணுக்கும், 46 வயதில் ஆணாக மாறிய பெண்ணுக்கும் திருமணம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum