TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை

3 posters

Go down

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  Empty ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை

Post by ஜனனி Sun Dec 05, 2010 11:10 am

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் தங்கள் மீது தொடுக்கப்பட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது இனப் படுகொலைப் போரே என்பதை ஈழத் தமிழர்களும், அவர்களின் தமிழ்நாட்டு்த் தொப்புள் கொடி உறவுகளும் மட்டுமே அறிந்திருந்த உண்மை, சேனல் 4 இணையத்தளம் வெளியிட்ட வீடியோவாலும், விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்ட கொழும்புவிற்கான அமெரிக்கத் தூதரின் தகவல் பரிமாற்றத்தாலும் உலக மக்கள் மத்தியில் உறுதியாகியுள்ளது.

சேனல் 4 வெளியிட்ட வீடியோ காட்சிகள் மானுடத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. தங்களிடம் சரணடைந்த, நிராயுதபாணியான தமிழ் இளைஞர்களை கண்ணைக் கட்டி, காலால் உதைத்து சுட்டுக் கொன்றதும், தமிழ்ப் பெண்களை கற்பழித்து, சுட்டுக் கொன்று, அவர்களின் ஆடைகளை விலக்கி வைத்து கேவலமான வார்த்தைகளைக் கூறி இழிவுபடுத்திய காட்சியும் சிங்கள அரசின், அதன் இராணுவத்தின் இனவெறி முகத்தை பட்டவர்த்தனமாக மானுடத்தின் முன்னால் படம் பிடித்துக் காட்டிவிட்டது.

சிங்கள பெளத்த இனவெறி அரசான சிறிலங்கா, தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலைப் போர் தடையின்றி நடத்தப்பட்டபோதே, தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமையை, ஒவ்வொரு நாளும் வீடியோக்களை வெளியிட்டு பறைசாற்றியபோது, உலக நாடுகளின் ஊடகங்களும், அரசுகளும் கண்களைத் திறந்து பார்த்திருந்தால், முள்ளிவாய்க்காலிலும், வட்டுவாகலிலும் இறுதிக் கட்டப்போரில் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்களா? வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளைக் கண்டு அதிரும் உலகம், அந்த நாளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ராஜபக்ச அரசும், அதன் இனப் படுகொலைத் திட்டத்திற்குத் துணைபோன தெற்காசிய வல்லரசுகளும் ஒன்று சேர்ந்து கட்டிவிட்ட கதைகளை நம்பி வாளாயிருந்ததன் விளைவு, பல பத்தாயிரக்கணக்கில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று பின்னாளில் ஐ.நா.மனித உரிமை ஆணையர் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனது நாட்டோடு பொய்யுரைத்தலை மகிந்த ராஜபக்ச நிறுத்திக்கொள்ளவில்லை, இன்றும் தொடர்ந்துள்ளார். அதுதான் தி டைம்ஸ் நாளிதழின் ஜேம்ஸ் ஹார்டிங், பென் மாசின்டைர் ஆகியோருக்கு அளித்த பேட்டியாகும். அதில் ராஜபக்ச துணிந்து கூறியுள்ள பொய்யுரை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

“பெரும்பாலான பொதுமக்களைக் கொன்றது விடுதலைப் புலிகள்தான். அந்த பயங்கரவாதிகள் அவர்களை பாதுகாப்பு கவசங்களாக பயன்படுத்தினார்கள். அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றவர்களை அவர்கள் கொன்றார்கள்” என்று இன்றைக்கும் கதை கட்டிவிடுகிறார்.

பெரும்பாலான பொதுமக்களை கொன்றது விடுதலைப் புலிகள்தான் என்பது உண்மையானால், பன்னாட்டு விசாரணைக்கு ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே? எதற்கு ஐ.நா.விசாரணை குழு அமைப்பது எங்களது இறையாண்மையில் தலையிடுவது என்று கூறிக்கொண்டு பதுங்க வேண்டும்?

சிறிலங்க அரசின் முப்படைகளின் தலைவராக மகிந்த ராஜபக்ச உள்ளார். அவருடைய படையினர் எந்த அளவிற்கு ‘யுத்த தர்ம’த்தைக் கடைபிடித்தனர் என்பதைத்தானே சேனல் 4 வெளியிட்ட வீடியோ காட்டுகிறது? இதிலிருந்து சிறிலங்க படையினர் இனவெறியுடன்தான் நடந்துகொண்டார்கள் என்பது புரியவில்லையா?. அதனால்தானே, போரில் நடந்த குற்றங்கள் அனைத்திற்கும் ராஜபக்சவும், அவருடைய சகோதரர்களும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் காரணம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பாட்ரிசியா பியூடானிஸ் அனுப்பிய இரகசிய அறிக்கை கூறுகிறது?



விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்களா? எப்படி அது சாத்தியம்? தமிழர்களை அழித்தொழிக்கும் இனப் படுகொலைப் போரைத்தான் ராஜபக்ச மட்டுமின்றி, அவருக்கு முன்பிருந்த சந்திரிகா குமாரதுங்காவில் இருந்து ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனேவரை நடத்தியுள்ளனர். என்றைக்கு அவர்கள் தமிழர்களை தங்கள் நாட்டவராக நினைத்துள்ளனர், மதித்துள்ளனர்? கொழும்புவில் 3,000 தமிழர்களை கொன்றனரே, சிறிலங்க காவல்துறையும், இராணுவமும் தடுத்து நிறுத்தினவா? வேடிக்கை பார்த்தனவா? விவரமறியாதவர்களுக்கு காது குத்துவதில் கைதேர்ந்தவர் ராஜபக்ச.

சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போகாமல் விடுதலைப் புலிகள் தடுத்ததார்கள் என்றால், அது சரிதானே? உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்ததைத்தானே அந்த வீடியோ காட்சி காட்டுகிறது? உலகத்தை முட்டாள் என நினைத்து்ப பேசியிருக்கிறார்.

“சிறிலங்க பொது மக்களை ஒருபோதும் கொன்றதில்லை” என்று கூறியுள்ளார் ராஜபக்ச. தி டைம்ஸ் தன்னை பேட்டியெடுப்பவர்கள் தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்து ஆங்கில பத்திரிக்கை நடத்திக்கொண்டிருக்கும் சிறிலங்க ரத்னா பட்டம் பெற்ற பத்திரிக்கை ஆசிரியர் என்று நினைத்து பேசியிருப்பாரோ?

“இது மனிதாபிமான நடவடிக்கை. பொது மக்களை நீங்கள் தொடக்கூடாது” என்று சிறிலங்க இராணுவத்தினரிடம் இவர் கூறியிருந்தாராம்! இதன் மூலம் உலகத்திற்கு ராஜபக்ச தெரிவிக்கும் செய்தி இதுதான்: ‘நாங்கள் கொன்றது எல்லாம், அவர்கள் எத்தனை ஆயிரம் அல்லது இலட்சம் பேராக இருந்தாலும் சரி, அவர்கள் யாவரும் விடுதலைப் புலிகளே’. இவ்வளவு தெளிவாக ‘உண்மை’யை அறிந்து வைத்திருப்பவர், பிறகு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

இப்படியெல்லாம் பேட்டி கொடுத்த பிறகு, தி டைம்ஸ் பத்திரிக்கையாளர்கள் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர்களை மீண்டும் ராஜபக்ச அழைத்துள்ளார். அப்போதுதான் ஆக்ஸஃபோர்டில் அவர் உரையாற்றல் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. “ராஜபக்ச கோபமாகவும், அதே நேரத்தில் இடி விழுந்ததுபோலவும் காட்சியளித்தார் என்று அந்த பத்தரிக்கையாளர்கள் வர்ணிக்கிறார்கள்.

தமிழர்களின் போராட்டத்தைக் கண்டு பயந்தே ஆக்ஸ்ஃபோ்ட் யூனியன் தலைவர், “எதற்காக லண்டன் பயணத்தை மேற்கொண்டேனோ, அந்த நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டதாக” ராஜபக்ச கூறியுள்ளார்.

பூசியத்திற்குக் கீழே, 10 டிகிரிக்கும் குறைவான குளிர் காலத்தில், பனிப்பொழிந்துக் கொண்டிருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீதிக்கு வந்த நடத்திய நியாயப் போராட்டம், தன்னை மகத்தான தலைவனாக காட்டிக்கொள்ள ஒரு இனப் படுகொலையாளன் எதிர்பார்ந்திருந்த நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டது.

10 மில்லியன் பவுண்ட் செலவில் தன்னையும், சிறிலங்க அரசையும் பெருமைப்படுத்தும் விளம்பர வேலைகளைச் செய்து, கைதிற்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, பிரச்சாரத்தின் மூலம் உலகின் கண்களை மறைத்துவிடலாம் என்கிற மமதையுடன் வந்த ராஜபக்சவின் திட்டத்தை, தங்கள் இனத்தை அழித்தவனை பேச விடாமல் தடுக்க நடந்த தமிழர்களின் போராட்டம் முறியடித்துவிட்டது.

சேனல் 4 வெளியிட்ட வீடியோ ஆதாரம், விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய இரகசிய தகவல் பரிமாற்ற ஆவணம், தமிழர்களின் உறுதியான போராட்டம் ஆகிய அனைத்தும், மானுடத்திற்கு எதிரான மற்றுமொரு எதிரியின் முகத் திரையை முழுமையாக கிழித்துவிட்டது.



நன்றி: வெப் டுனியா
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  Empty Re: ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை

Post by sakthy Sun Dec 05, 2010 1:00 pm

உடனுக்குடன் நம் உடன்பிறப்புகளின் செய்திகளை வெளியிடுவது வலிக்கு ஒத்தடம் கொடுப்பது போல் உள்ளது.நன்றி.
மூக்குடைபட்டு திரும்பிய ராஜபக்சே, துப்பாக்கி முனையில் கிளிநொச்சியில் புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருப்பதாக காட்ட முயற்சித்துள்ளார்.
படங்களுடன் தமிழ் நெட்டில் செய்தி.
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33166
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  Empty Re: ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை

Post by அருள் Sun Dec 05, 2010 3:05 pm

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  04_12_10_03_90943_445
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  Empty Re: ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை

Post by அருள் Sun Dec 05, 2010 3:05 pm

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  04_12_10_02_90939_445
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  Empty Re: ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை

Post by அருள் Sun Dec 05, 2010 3:05 pm

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  04_12_10_01_90935_445
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை  Empty Re: ஆதாரங்களால் கிழிந்த ராஜபக்ச முகத்திரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்ச குடும்பத்திற்குள் மூண்டது போர்
» கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?
» கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?
» கிழிந்த நிலையில் தேசியக் கொடியை ஏற்றிய பொலிசார் சஸ்பெண்ட்
» காது ஜவ்வு கிழிந்த நிலையில் தினமணி நிருபர் மருத்துவமனையில்! காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் காட்டுமிராண்டித் தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum