Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நில்... கவனி...செல்... பெட்ரோல் பங்க்களில் நூதன மோசடி
Page 1 of 1

பெட்ரோல் விலை விண்ணை முட்டும் வகையில் ஏறிக்கொண்டிருக்க, வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, சத்தமில்லாமல் புதிய மோசடி பெட்ரோல் பங்குகளில் அரங்கேறி வருகிறது. வாடிக்கையாளர்கள் உஷாராக இருந்தால் மட்டும் இதில் தப்ப முடியும்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளது.இதனால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை எவ்வளவு உயருமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் பெட்ரோல் பங்குகளே விலையை நிர்ணயிக்கலாம் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இதற்கிடையே பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, மறைமுகமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடிக்கையாளர்களின் கவனத்தையும், அவசரத்தையும் அடிப்படையாக வைத்து இந்த மோசடி நடத்தப்படுகிறது.உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட சென்றால், அவருக்கு 200 ரூபாய்க்கான பெட்ரோல் கிடைத்தால், நிச்சயமாக அவர் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லலாம்.
ஏனெனில், 200 ரூபாய்க்கு கேட்டால், பங்க் ஊழியர், 100 ரூபாய்க்கோ அல்லது 50 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுவார்.வாடிக்கையாளர் மீட்டரைப் பார்க்காமல் சென்று விட்டால், அந்த ஊழியருக்கு லாபம். வாடிக்கையாளர் மீட்டரைப் பார்த்து, குறைவாகப் போட்டு விட்டீர்களே என்று உஷாராக கேட்டால், "100 ரூபாய்க்கு தானே கேட்டீர்கள்' அல்லது "சாரி சார்... 100 ரூபாய்க்கு தான் கேட்டீர்கள் என நினைத்தேன்' என வாடிக்கையாளர்களிடம் நைசாகப் பேசி சமாளித்து, பாக்கி பெட்ரோலைப் போடுவர்.மற்றொரு வகை மோசடி என்னவென்றால், பெட்ரோல் போட "டேங்க்' மூடியைத் திறந்து நீங்கள் காத்திருக்கும் போது, பங்கில் உள்ள ஒரு ஊழியர் பெட்ரோல் போடுவார்; மற்றொருவர் உங்களது கவனத்தை திசை திருப்பி, "டேங்க் மூடி துருப்பிடித்துள்ளதே, ஆயில் போடுங்க சார்; இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது' என்பது போல் பேசுவார்.
அதற்குள் மற்றொரு ஊழியர், மீட்டரை ஜீரோ செய்யாமல் ஏற்கனவே பெட்ரோல் போட்ட கணக்குடன் துவங்கி, அடுத்தவருக்கும் போட்டு கணக்கு காட்டி விடுவார்.இந்த மோசடிகள் மாநிலம் முழுவதும் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களால் நடத்தப்படுகிறது. ஒரு சில ஊழியர்கள் தான் இம்மோசடியில் ஈடுபட்டு, மற்ற ஊழியர்களையும் மிரட்டுவதாக தெரிகிறது.இரவுப்பணி முடித்து தூக்க கலக்கத்தில் வருவோர், அலுவலகப்பணி முடிந்து, அவசரமாக வீடு திரும்புவோர், "சீக்கிரம் பெட்ரோல் போடுங்கள்' என அவசரப்படுத்துவோர் ஆகியோரை குறி வைத்து, இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.சரியான அளவில் பெட்ரோல் அடிக்கவில்லை என்று சந்தேகம் தெரிவித்தால், வாடிக்கையாளர்களை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதும் நடக்கிறது. இவ்வாறு புகார் கூறும்பட்சத்தில், "வேண்டுமென்றால் வாகனத்தில் உள்ள பெட்ரோல் முழுவதையும் எடுத்து அளந்து பார்க்கலாம்' என்று ஊழியர்கள் சொல்கின்றனர்.பெரும்பாலானவர்கள் வாகனத்தில் ஏற்கனவே பெட்ரோல் வைத்திருந்து, கூடுதலாக பெட்ரோல் போடுவதால் இந்த சோதனையால் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
எனவே மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாறுவதோ அல்லது அவர்களைப் பிடித்து "பங்க்' உரிமையாளரிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கக்கூறுவதும், வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வில்தான் இருக்கிறது."சில்லரை விஷயம் தானே' என வாடிக்கையாளர்கள் விட்டு விடுவார்கள் என்பதால், ஊழியர்கள் அச்சமின்றி அரங்கேற்றுகின்றனர். சில்லரைப் பிரச்னையாக இருந்தாலும் தற்போது, பெட்ரோல் என்பது மொத்தமான நோட்டுக்கணக்காக மாறிவிட்டதால், வாடிக்கையாளர்கள் உஷாராக இருந்தால்தான் பணத்தை இழக்காமல் தப்ப முடியும்.
சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை : "பெட்ரோல் போடும் போது, ஜீரோவைக் காட்டி சரியான அளவு பெட்ரோலைப் போடுங்கள்' என பெட்ரோலிய நிறுவனங்களும், உரிமையாளர்களும் ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டும். ஊழியர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கண்டிப்பான உத்தரவிட்டு, மோசடியைத் தடுத்தால் தான் அது தொழில் தர்மமாக இருக்கும்.பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது விஜிலன்ஸ் அதிகாரிகள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ஊழியர்கள் மீது, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவில், மோசடி வழக்குப் பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கையும், சம்பந்தப்பட்ட பங்க் மீது தற்காலிக அனுமதி ரத்து அல்லது அபராதம், சரக்கு நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?
» மோசடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரைகளில் நூதன மோசடி அரங்கேற்றம்
» பிளாஸ்டிக்கின் நில்-கவனி-தவிர்; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்; Avoid using plastic products
» உஷார்!!! நூதன பெட்ரோல் திருட்டு...
» பெட்ரோல் "பங்க்'களில் மோசடியோ மோசடி: பழைய விலைக்கே விற்று லாபம் பார்த்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum