Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கை போர்க்குற்றங்களுக்கு ராஜபக்ஷே காரணம் : அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

வாஷிங்டன் : "இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிபர் ராஜபக்ஷே, அவரது சகோதரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு பொறுப்பு உள்ளது' என அமெரிக்க தூதர் கூறியதை, "விக்கி லீக்ஸ்' இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ரகசிய நடவடிக்கைகளை, "விக்கி லீக்ஸ்' இணையதளம், கடந்த சில நாட்களாக அம்பலப்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள் பேசிய ரகசியங்களை ஆதாரத்துடன் அந்த இணையதளம் வெளியிடுகிறது. விக்கி லீக்சின் இந்த அதிரடி நடவடிக்கை, சர்வதேச அளவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பான முக்கிய தகவல்களையும் அந்த இணையதளம் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதர் பாட்ரிகா ஏ புடின், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு கடந்த ஜனவரி 15ம் தேதி அனுப்பிய ரகசிய தகவலை, "விக்கி லீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தகவல், அமெரிக்க தூதரால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போர் குறித்தும், அதிபர் தேர்தல் நிலவரம் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதில், அதிபர் ராஜபக்ஷே, அவரது சகோதரர்கள் மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் போர்க்குற்றம் செய்துள்ளனர். போரின் போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக, அரசு தானாகவே சொந்தமாக ஒரு விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. ஒரு அரசு, தான் பதவியில் இருக்கும்போதே, போர்க்குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, தனது படை வீரர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது, தானாகவே விசாரணை நடத்துவது என்பதை, வேறு எங்கும் இதுவரை கண்டது இல்லை. கொழும்பில் என்னிடம் பேசிய தமிழ் அரசியல்வாதிகள், இந்த விஷயத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என கூறினர்.
தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பி., சிவாஜிலிங்கம், அதிபர் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். அரசும், எதிர்க்கட்சிகளும், தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு போதிய முயற்சி எடுக்கவில்லை என கூறி, அவர் பிரசாரம் செய்து வருகிறார். மேலும், அவர் அதிகாரத்தை பரவலாக்கும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிக்கும், தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கும் தனித்தனி பிரதமர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இறுதிக் கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து, சர்வதேச அளவிலான ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு அமெரிக்க தூதர், தான் அனுப்பிய ரகசிய தகவில் கூறியதாக, "விக்கி லீக்ஸ்' இணையதளம் கூறியுள்ளது.
பாக்., ராணுவம் பிடிவாதம்: பாகிஸ்தான் - இந்தியா தொடர்பான விவகாரங்களையும் விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மும்பை தாக்குதல் விசாரணைக்காக, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் பாஷாவை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு சர்தாரியும் சம்மதித்தார். ஆனால், பாக்., ராணுவம் இதை ஏற்க மறுத்துவிட்டது. இவ்வாறு இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உத்தரகாண்டில் பேரழிவிற்கு என்ன காரணம்? அதிர்ச்சி தகவல் வெளியானது
» தமிழகத்தில் புலிகள் நடத்தும் 3 பயிற்சி மையம்: இலங்கை பார்லி.,யில் பிரதமர் அதிர்ச்சி தகவல்
» அயர்லாந்தில் பல் மருத்துவராக வேலை பார்த்த இந்திய பெண்ணான சவீதாவின் மரணத்திற்கு காரணம் என்ன ? இலங்கை தமிழரின் பரபரப்பு தகவல்
» 95 சதவீதம் பேரை குடியமர்த்தி விட்டோம்: இந்திய குழுவிடம் பாசில் ராஜபக்ஷே தகவல்
» போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum