TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நில ஒதுக்கீட்டில் ரூ.730 கோடி இழப்பு : ஜெயலலிதா குற்றச்சாட்டு

Go down

நில ஒதுக்கீட்டில் ரூ.730 கோடி இழப்பு : ஜெயலலிதா குற்றச்சாட்டு Empty நில ஒதுக்கீட்டில் ரூ.730 கோடி இழப்பு : ஜெயலலிதா குற்றச்சாட்டு

Post by piraba Tue Nov 09, 2010 7:41 am

சென்னை : "நில ஒதுக்கீடு மூலம் தமிழக அரசுக்கு ஏற்பட்ட உண்மையான
வருவாய் இழப்பு 730 கோடி ரூபாய்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா
குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறப்பு பொருளாதார
மண்டலத்தை அமைப்பதற்காக சென்னை திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம்
பகுதிகளில் இருந்த 49.19 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, தமிழ்நாடு
தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியது. கடந்த 2006ம்
ஆண்டு மேற்படி ஏக்கர் நிலம் அமைந்துள்ள பகுதியின் குடியிருப்பு
பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல் மதிப்பு ஒரு சதுர அடிக்கு 3,000 ரூபாய்.
இத்துடன் வருடாந்திர ஏற்ற, இறக்க நிலையை சேர்த்தால் ஒரு சதுர அடி
நிலத்தின் விலை 3,520 ரூபாய். இது குடியிருப்பு பயன்பாட்டிற்கான விலை.
தொழில் பயன்பாட்டிற்காக, பொது ஏலம் மூலம் மேற்படி நிலம் ஒதுக்கீடு
செய்யப்படும் போது, அடி விலை ஒரு சதுர அடிக்கு 7,040 ரூபாய் என நிர்ணயம்
செய்யப்பட வேண்டும். மேற்படி நிலத்தில் டி.எல்.எப்., நிறுவனத்திற்கு 26.64
ஏக்கர் நிலம் தி.மு.க., அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் போது, இந்த முறை
பின்பற்றப்படவில்லை. மாறாக, குடியிருப்பு பயன்பாட்டிற்கான ஒரு சதுர
அடிக்கு 3,520 ரூபாய் என்ற விலை தான் அடி விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் ஏலம் விடப்பட்டு, அதிக தொகையான ஒரு சதுர அடிக்கு 5,757
ரூபாய் தொகையை குறிப்பிட்ட டி.எல்.எப்., நிறுவனத்தை, 2007ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தேர்ந்தெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு இதற்கு ஒப்புதல்
அளித்தது. பின், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 99 ஆண்டு குத்தகை
அடிப்படையில் 26.64 ஏக்கர் நில ஒதுக்கீட்டிற்கான கடிதம் டி.எல்.எப்.,
நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.
கடந்த 1975ம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதலை பின்பற்றாததன் காரணமாக,
668 கோடி ரூபாய் அளவிற்கான வருமானம் மட்டுமே தமிழக அரசுக்கு
கிடைத்திருக்கிறது. அரசு விதிமுறையின்படி தொழில் பயன்பாட்டிற்காக நிலம்
ஒதுக்கீடு செய்யப்படும் போது இரண்டு மடங்கு விலை நிர்ணயம்
செய்யப்பட்டிருந்தால், அதாவது ஒரு சதுர அடி நிலம் 7,040 ரூபாய் என விலை
நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால், 816 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு
வருமானம் கிடைத்திருக்கும். முதல்வரின் விதிமுறை மீறல் காரணமாக, அரசுக்கு
148 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை ஆய்வு
செய்த இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை, இந்த நில ஒதுக்கீட்டில்
விதிமுறை மீறல் நிகழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இது குறித்து தமிழக
அரசு அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றும் தெரிவித்து,
ஒரு நிறுவனத்திற்கு அளவுக்கு மீறி சலுகை காட்டியதை தவிர்க்கும் வகையில்,
நிலத்தின் விலை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் ஆலோசனை
வழங்கியுள்ளது. இந்த ஆலோசனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மேற்படி
நில ஒதுக்கீடு மூலம் தமிழக அரசுக்கு 148 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்
இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை
சுட்டிக்காட்டி இருந்தாலும், தமிழக அரசுக்கு ஏற்பட்ட உண்மையான வருவாய்
இழப்பு 730 கோடி ரூபாய். மேற்படி 49.19 ஏக்கர் நிலத்தில் டி.எல்.எப்.,
நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது போக மீதமுள்ள நிலம், மற்றொரு
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக பொது ஏலம் விடப்பட்டு, அந்த
ஏலத்தில் பங்கு கொண்ட "டாடா ரியல்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்'
என்ற நிறுவனம் அதிக தொகையாக ஒரு சதுர அடிக்கு 12,050 ரூபாய் என்று
குறிப்பிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு மீதமுள்ள நிலத்தை தமிழ்நாடு
தொழில் வளர்ச்சி நிறுவனம், அதே 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒதுக்கீடு
செய்துள்ளது. அதாவது, ஒரே பகுதியில் உள்ள நிலத்திற்கு இரண்டு அளவுகோல்கள்
பின்பற்றப்பட்டுள்ளன. டி.எல்.எப்., நிறுவனத்திற்கு ஒரு சதுர அடி நிலம்
5,757 ரூபாய் என்ற விதத்திலும், "டாடா ரியல்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர்
லிமிடெட்' நிறுவனத்திற்கு ஒரு சதுர அடி நிலம் 12,050 ரூபாய் என்ற
வீதத்திலும் வழங்கப்பட்டிருக்கிறது. "டாடா ரியல்டி அண்ட்
இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அதே தொகை
டி.எல்.எப்., நிறுவனத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு 730
கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு ஜெயலலிதா
கூறியுள்ளார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum