TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எண்ணிக் கொதித்தெழடா!

5 posters

Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty எண்ணிக் கொதித்தெழடா!

Post by தமிழநம்பி Sun Oct 31, 2010 1:57 pm

எண்ணிக் கொதித் தெழடா!


எண்ணிக் கொதித் தெழடா! – தம்பி
ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட .. .. .. .. (எண்ணிக்)

உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே – பொய்
உரைத்துப் பழித்தே இழித்திடுவார்!
அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா – இந்த
அடாப்பழி தொடர விடுவதுவா? .. .. .. .. .. .. .. ...(எண்ணிக்)

சாதி சமயத்தின் பேராலே – நாட்டில்
சண்டை கொடுமைகள் உயிர்க்கொலைகள்!
ஆதி எதுவென ஆராய்ந்தால் – அது
அரசியற் காரரின் தூண்டுதலே! .. .. .. .. .. .. .. .. (எண்ணிக்)

ஊழல் சுரண்டல் பதுக்குதல்கள் – தன்
உறவுக்கு முறைமீறி ஒதுக்குதல்கள்!
ஏழைகள் மென்மேலும் ஏழையராய் – இங்கு
எல்லா மிழந்தே வாழ்நிலைகள்! .. .. .. .. .. .. .. .. (எண்ணிக்)

பள்ளிக் குழந்தைகள் படித்திடவும் – பணம்
பறிகொள்ளைக் கொடுமையைப் பார்த்திருந்தும்
கள்ளத் தனமாகத் துணைபோவார்! – இதைக்
காறி உமிழ்ந்து திருத்திடவே .. .. .. .. .. .. .. .. .. ...(எண்ணிக்)

செல்வர்க்கே உதவிடும் சட்டதிட்டம் – பொருள்
சேர்ந்து குவிந்திடும் அவர்க்குமட்டும்!
சொல்லும் திறத்தாலே ஏமாற்றி – மக்கள்
சொந்த உணர்வை மழுங்கடித்தார்! .. .. .. .. .. .. .. (எண்ணிக்)

சொந்த இனங்கொலத் துணைபோனார்! – வந்த
'சோனி'க்கும் சொத்தைக்கும் நாயானார்!
இந்த இழிவினில் தம்குடும்பம் – பதவி
எலும்புபெறக் காட்டிக் கொடுத்ததெலாம் .. .. .. .. ..(எண்ணிக்)

ஞாயம் நயன்மைகள் சொல்பவரைச் – சொந்த
நாட்டில் சிறைக்குள்ளே பூட்டுவதோ?
தேயத்தில் கொள்ளை அடிப்பவர்கள் – என்றும்
திளைத்துக் கொழுத்துத் திரிவதுவோ? .. .. .. .. .. ... (எண்ணிக்)

அச்சம் துடைத்தெறி, ஆர்த்தெழுவாய்! – அவர்
அழிவினை முடிவுசெய், அதர்ந்தெழுவாய்!
எச்சில் உமிழ்வாழ்க்கை ஏனினியும் – அட,
இரண்டிலொன் றாகட்டும் என்றேநீ .. .. .. .. .. .. .. .(எண்ணிக்)


---------------------------------------------------------------------------------------------


Last edited by தமிழநம்பி on Sun Nov 07, 2010 10:23 am; edited 1 time in total
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by அருள் Sun Oct 31, 2010 4:35 pm

வாழ்க உங்களின் தமிழ் தொண்டு ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by தமிழநம்பி Tue Nov 02, 2010 7:45 am

AARUL wrote:வாழ்க உங்களின் தமிழ்த் தொண்டு ஆச்சரியம்
நன்றி அருள்.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by vidhyasan Tue Nov 02, 2010 11:43 am

10

இதை பள்ளி குழந்தைகளுக்கு பாடலாக சொல்லி தரலாம் . அருமை . உங்களின் திறமை தெரிகிறது . வாழ்த்துக்கள் .
avatar
vidhyasan
உதய நிலா
உதய நிலா

Posts : 5
Join date : 01/11/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by தமிழநம்பி Tue Nov 02, 2010 1:07 pm

நன்றி உதயா.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by sakthy Tue Nov 02, 2010 7:56 pm

இரு தினங்களுக்கு முன்னரே படித்து விட்டேன். ஆனாலும் மனதிற்குள் ஒரு சிறு சலனம். எங்கள் ஊர்க்காரர் செய்து விட்ட கொடும் செயலால் ஏற்பட்ட உறுத்தல்.பாட்டிக்கு படித்துக் காட்டினேன். வெட்கப்பட வேண்டியது நீ அல்ல நான் என்றாள். என்னிடமோ கேள்விக்குறி. பல ஆண்டுகள் பின் நோக்கி செல் என்றாள். தஞ்சையில் இருந்து இரண்டு வேட்டி சட்டையுடன் புறப்பட்ட போது கை அசைத்து வாழ்த்தி அனுப்பியவள் என் பாட்டி மட்டுமல்ல, அம்மாவுக்கு பாட்டியும் கூடத்தான். தமிழ் வளர்ப்பான்,தமிழையும் வளர்ப்பான்,கண்ணீரையும் துடைப்பான் என்றிருந்தோம். கண்ணையும் குத்தி விட்டான்.ஆரியனுக்காக உடன்பிறப்புக்களை கொல்லத் துணையும் போய் விட்டான். பகுத்தறிவாளன் என்றான்,சாதியையும்,மூட கொள்கைகளையும் வளர்த்து விட்டான்.இலவசங்களை கொடுத்து நம் விவசாய நிலங்களையும் அழித்து விட்டான். இலங்கை தமிழர் துயர் துடைக்க படை நடத்தி சென்றவன் எங்கள் ஊர்க்காரன்.எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஈழத் தமிழர்களுக்கு துணையாக நின்றவன். தமிழனை அழிக்க நினைத்தவனை இழுத்து வந்து கல் அணை கட்டியவன்.அவனுக்கு விழா நடத்த,நம் தமிழுக்கு விழா நடத்த இவன் யார்? அழியா பழியை நம் நிலத்திற்கு தந்து விட்டு , வெட்கமின்றி வேடம் தரித்து நிற்கும் இவனை ஏன் வாழ்த்தினோம் என்று வெட்கப்பட வேண்டியவள் நான், சொல்வது நானல்ல என் பாட்டி. தோளோடு தோள் நின்று ஈழத் தமிழர் துடைத்த ராஜ ராஜன் தேடித் தந்த புகழை அடியோடு நாசமாக்கி விட்டு வெட்கமின்றி நிற்பவனை எப்படி நான் அழைப்பேன்? தமிழன் சிந்தனைக் களத்தில் மட்டுமல்ல, எங்கும் சிந்திக்க வேண்டும். ஈழத் தமிழன் போராட்டத்தில் தோளோடு தோள் நின்று போராடுவோம். எங்கள் நிலத்திற்கு-தஞ்சைக்கு- ஏற்பட்ட களங்கத்தை துடைப்போம் .என் மனத்தில் இருந்ததை உங்கள் எழுத்தால் தந்ததற்காக வாழ்த்துக்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by மாலதி Tue Nov 02, 2010 8:18 pm

தமிழன் சிந்தனைக் களத்தில் மட்டுமல்ல, எங்கும் சிந்திக்க வேண்டும். எண்ணிக் கொதித்தெழடா! 917304
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by தமிழநம்பி Wed Nov 03, 2010 2:27 pm

அன்பார்ந்த இனிய உதயா அவர்களுக்கு, உண்மையான, நேர்மையான, மாந்தநேயமுடைய, இனநலன் கருதுவோர் அனைவரின் எண்ணங்களும் உணர்வுகளும் ஒன்றாக இருப்பதில் வியப்பேதும் இல்லை அன்றோ? உங்கள் பாட்டியார் மற்றும் உங்களின் உணர்வுக்கு என் வணக்கமும் நன்றியும் உரித்தாக்குகின்றேன்.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by தமிழநம்பி Wed Nov 03, 2010 2:33 pm

malathi wrote:தமிழன் சிந்தனைக் களத்தில் மட்டுமல்ல, எங்கும் சிந்திக்க வேண்டும். எண்ணிக் கொதித்தெழடா! 917304
சரியாகச் சொன்னீர்கள்! என் வலைப்பதிவு முகவரி: http://thamizhanambi.blogspot.com பார்க்கும்படி அன்புள்ளங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

எண்ணிக் கொதித்தெழடா! Empty Re: எண்ணிக் கொதித்தெழடா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum