TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சித்தர் பாடல்கள் -மெய்ஞ்ஞானப் புலம்பல்

Go down

	சித்தர் பாடல்கள் -மெய்ஞ்ஞானப் புலம்பல்  Empty சித்தர் பாடல்கள் -மெய்ஞ்ஞானப் புலம்பல்

Post by அருள் Sat Oct 30, 2010 7:40 pm

பத்திரகிரியார் பாடல்கள் - மெய்ஞ்ஞானப் புலம்பல்


காப்பு

முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்?

நூல்

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்? 2

தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்? 3

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்? 4

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? 5

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்? 6

சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து
பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்? 7

பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? 8

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? 9

பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்? 10

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்? 11

ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்? 12

தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13

மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? 14

பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? 15

உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்? 16

வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்? 17

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்? 18

ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? 19

தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்? 20

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்? 21

ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்த பிணம்போல்இ ழிந்து காண்பதினி எக்காலம்? 22

அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்? 23

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்? 24

தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம்? 25

தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்? 26

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்? 27

அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம்? 28

அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன்
தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம்? 29

பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம்? 30

தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்? 31

வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்? 32

மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவதும் எக்காலம்? 33

இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்? 34

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்? 35

செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம்? 36

கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்? 37

ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து
போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்? 38

நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்? 39

பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக்
கரந்துன் அடிஇணைக்கீழ்க் கலந்து நிற்பது எக்காலம்? 40

இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
பொம்மைதனைப்போட்டு உன்னைப் போற்றி நிற்பது எக்காலம்? 41

உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே
அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்? 42

சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது எக்காலம்? 43

காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது எக்காலம்? 44

சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம்? 45

தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனைஅறிவது எக்காலம்? 46

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்? 47

கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்? 48

புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்? 49

தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்? 50

பருவத் தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம்? 51

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
குருவை அறிந்தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம்? 52

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்? 53

பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்? 54

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி எக்காலம்? 55

மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல்
உருகுமனம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம்? 56

தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம்வே றானது போல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம்? 57

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம்? 58

எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல்
கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம்? 59

கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம்? 60

ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப்
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்? 61

நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்? 62

அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்? 63

கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்? 64

தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்? 65

ஆதார மூலத்தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்? 66

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்? 67

அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்? 68

மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்? 69

வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்? 70

வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்? 71

உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம்? 72

பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்? 73

கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதி எல்லாம்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம்? 74

கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்? 75

அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்? 76

அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம்? 77

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம்? 78

தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்?
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்? 79

புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம்? 80

நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள்
கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது எக்காலம்? 81

நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
நானே வெளிப்படுத்தித் தருவன் என்பதும் எக்காலம்? 82

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்? 83

ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்? 84

இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு
சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம் ? 85

அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்? 86

கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்? 87

ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்? 88

கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து
சுட்டுவிடுமுன் என்னைச் சுட்டிருப்பது எக்காலம்? 89

தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்
நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்? 90

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம்? 91

காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்? 92

ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச்
சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்? 93

இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம்? 94

மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்? 95

ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்? 96

பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம்? 97

மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று
நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம்? 98

ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்? 99

அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம்? 100

வெல்லும்மட்டும் பார்த்து, வெகுளியெலாம் விட்டு அகன்று
சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம்? 101

மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம்? 102

எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணிப் பாராமல்
கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம் ?103

என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்? 104

ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்? 105

ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்? 106

மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நில்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்? 107

முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம்? 108

கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்? 109

கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க
நினைவைப் பரவெளியில் நிறுத்துவது எக்காலம்? 110

ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம்? 111

நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்? 112

முப்பாழும் பாழாய், முதற்பாழும் சூனியமாய்
அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம்? 113

சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம்? 114

வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்? 115

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்? 116

அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்? 117

நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்? 118

என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்? 119

ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்? 120

ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம்? 121

காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்? 122

பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்? 123

ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்? 124

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? 125

சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்? 126

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்? 127

கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்? 128

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்? 129

தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்? 130

பாகம் நடு மாறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம்? 131

ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்? 132

காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்? 133

ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்? 134

குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்? 135

மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல
பித்தடுத்து நின் அருளைப் பெற்றிருப்பது எக்காலம்? 136

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? 137

என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்? 138

உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்? 139

வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்? 140

பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்? 141

நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்? 142

பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்? 143

பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்? 144

காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே
ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்? 145

உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்? 146

வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்? 147

பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம்? 148

அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்? 149

ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே
எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்? 150

பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்? 151

ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்? 152

பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்? 153

ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம்? 154

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? 155

அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்? 156

இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம்? 157

ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்றதனை அறிவது எக்காலம்? 158

என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்? 159

இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச்
சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம்? 160

மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம்? 161

என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம்? 162

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம்? 163

நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்? 164

பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம்? 165

கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல்
வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்? 166

கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல்
உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம்? 167

அருணப் பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம்? 168

பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல்
உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம்? 169

நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்? 170

சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம்? 171

இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்? 172

கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம்? 173

வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவது எக்காலம்? 174

கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம்? 175

இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல்
அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம்? 176

மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம்? 177

கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம்? 178

பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை
காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம்? 179

செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்? 180

ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை
பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம்? 181

ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை
நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்? 182

சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம்? 183

நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம்? 184

வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ்
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்? 185

எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க்
கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்? 186

உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம்
கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம்? 187

ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம்? 188

சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம்
சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம்? 189

போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும்
தாக்கும் ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம்? 190

நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம்? 191

அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்? 192

நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்? 193

தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம்? 194

நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில்
சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம்? 195

அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்? 196

மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல்
தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்? 197

பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்? 198

வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்? 199

பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்? 200

அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம்? 201

நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல்
நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம்? 202

எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம்? 203

அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம்? 204

அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம்? 205

பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம்? 206

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை
என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம்? 207

ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்? 208

தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல்
உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்? 209

சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக்
காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம்? 210

என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
தன்வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம்? 211

தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்? 212

என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம்? 213

தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம்? 214

இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்? 215

ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம்? 216

முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம்? 217

கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம்? 218

நான் அவனாய்க் காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்? 219

தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்? 220

உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்? 221

ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்? 222

ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்? 223

காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு
மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம்? 224

நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான
தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம்? 225

எவர் எவர்கள் எப்படிக் கண்டுஎந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்? 226

உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்? 227

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம்? 228

என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம்? 229

மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி
காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம்? 230

ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து
நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்? 231
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum