Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
2020ல் ஆட்கள் இல்லாமல் இயங்கும் பீரங்கிகள் : போர் ஊர்தி ஆராய்ச்சி இயக்குனர் பேட்டி
Page 1 of 1

""ஆட்கள் இல்லாமல் இயங்கும், பீரங்கிகள் வரும் 2020ம் ஆண்டு முதல்
ராணுவத்தின் பயன்பாட்டிற்கு வரும். இதற்கான ஆராய்ச்சி, வடிவமைப்பு பணியில்
எங்கள் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்று ஆவடி, போர்
ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன இயக்குனர் சிவகுமார் கூறினார்.
இந்திய ராணுவத்திற்குத் தேவையான பீரங்கிகளை வடிவமைத்து கொடுப்பதற்காக
சென்னை, ஆவடியில் போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.
இது, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ்
இயங்குகிறது. அர்ஜூன், அஜயா, ஆம்புலன்ஸ் பீரங்கிகள் உள்ளிட்ட பல்வேறு
பீரங்கிகள் இங்கு வடிவமைக்கப்பட்டன. இந்திய தொழில் நுட்பத்தைக் கொண்டு
வடிவமைத்து, ராணுவத்தின் பாராட்டினைப் பெற்ற அர்ஜூன் பீரங்கியை
வடிவமைத்ததற்காக, 2009ம் ஆண்டிற்கான "சிலிகான்' விருதினை சி.வி.ஆர்.டி.இ.,
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு சென்ற, இதன் இயக்குனர் பி.சிவகுமார், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
* போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் என்பது என்ன?
மத்திய
பாதுகாப்பு துறையின் கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி,
பாதுகாப்பு தளவாட உற்பத்தி, பாதுகாப்பு தரஉறுதி ஆகிய மூன்று முக்கிய
பிரிவுகள் இயங்குகின்றன. இவை அனைத்தும், ராணுவம், கப்பல் மற்றும் விமானப்
படைகளுக்கு தேவையான உடை, உணவு, துப்பாக்கி, ரைபிள், ஏவுகணை போன்ற போர்
ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றன.
ஐதராபாத்தில் ஏவுகணை, பெங்களூரில் போர் விமானம், விசாகபட்டணத்தில் கப்பல்
ஆராய்ச்சி என நாட்டின் பல்வேறு இடங்களிலும் 52 போர் தளவாட ஆராய்ச்சி
மையங்கள் உள்ளன. அதில், ஒன்று தான், சென்னை, ஆவடியில் உள்ள போர் ஊர்தி
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்(சி.வி.ஆர்.டி.இ.,).
* இதன் பணிகள் என்ன?
கடந்த 1965ல் சென்னை, விஜயந்தா
பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்காக, ஆவடியில் திண் ஊர்தி தொழிற்சாலை
(எச்.வி.எப்.,) ஏற்படுத்தப்பட்டது. இதற்கு உதவி செய்ய, 1967ல் சிறிய
அளவில் ஆராய்ச்சி பிரிவு கொண்டு வரப்பட்டது. அதுவே, போர் ஊர்தி ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி நிறுவனமாக பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
இங்கு, ராணுவத்திற்குத் தேவையான பீரங்கிகள் தயாரிக்க, ஆராய்ச்சி மற்றும்
வடிவமைக்கும் பணி நடக்கிறது. அதன் பின்னர், ஆவடி, திண் ஊர்தி
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு, ராணுவத்திற்குச் செல்கிறது. 20 டன்
எடைக்கு மேற்பட்ட பீரங்கி வாகனங்கள் வடிவமைப்பு பணியினை கையாளுகிறோம்.
* என்ன வகையான பீரங்கிகளை ராணுவத்திற்கு வழங்கியுள்ளீர்கள்?
ஆரம்பத்தில்,
விஜயந்தா பீரங்கிகள் உற்பத்தி செய்வதில் ஏற்படும் சிறு, சிறு குறைபாடுகளை
மட்டும் நீக்கினோம். ஏஆர்வி எனப்படும் "ஆர்மர்டு ரெகவரி வெககிள்' உள்ளிட்ட
வாகனங்களை தயாரித்தோம். தற்போது, ராணுவத்திற்கு தேவையான பீரங்கிகளை
வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பி.எம்.பி., எனப்படும் ரஷ்ய
நாட்டைச் சேர்ந்த பீரங்கிகளை வைத்து, சிறு, சிறு மாற்றங்கள் செய்து
ஆம்புலன்ஸ் பீரங்கிகள், டி72 ரக பீரங்கிகளை மேம்படுத்தி, வடிவமைத்தோம்.
* அர்ஜூன் பீரங்கி உருவானது எப்படி?
எங்களது திட்டத்திலேயே
மிகவும் முக்கியமானது அர்ஜூன் பீரங்கி. கடந்த 1974ம் ஆண்டு 14 கோடி ரூபாய்
திட்ட மதிப்பில், அர்ஜூன் பீரங்கி வடிவமைக்கும் பணி எங்களுக்கு
வழங்கப்பட்டது. அவ்வப்போது, ராணுவத்தினர் கேட்டுக் கொண்ட மாற்றங்களால்,
1985 அர்ஜூன் பீரங்கிக்கான, வடிவமைப்பு வரைமுறை உறுதி செய்யப்பட்டது.
ராணுவத்தினர் சம்மதத்தின் பேரில், 12 சோதனை பீரங்கிகளும், உற்பத்திக்கு
முந்தைய 15 பீரங்கிகள் என 27 பீரங்கி வாகனங்களை வடிவமைத்தோம். ஆரம்பத்தில்
ரூ.14 கோடியில் துவங்கிய ஆராய்ச்சி, 360 கோடியில் நிறைவடைந்தது. இந்த
பீரங்கிகளை, ராணுவத்தினர் 1992-97 வரை பல்வேறு கள சோதனைகள் நடத்தி,
திருப்தியடைந்த பின்னர், இரண்டு "ரெஜிமென்ட்'களுக்கு, 124 பீரங்கிகள்
தயாரிக்க அனுமதி வழங்கினர். இதில் 93 பீரங்கிகள் ராணுவத்தில் ஒப்படைத்து
விட்டோம். மீதமுள்ள 31 பீரங்கிகள் 2011 மார்ச் மாதத்தில் கொடுத்து
விடுவோம்.
* அர்ஜூன் பீரங்கிகள் ராணுவத்தினருக்கு திருப்தி ஏற்படுத்தியதா?
அர்ஜூன்
பீரங்கிகளை ராணுவ உயர் அதிகாரிகள் பாராட்டி, மேலும் 124 பீரங்களை தயாரிக்க
ஆர்டர் வழங்கியுள்ளனர். இதற்கு அர்ஜூன் மார்க்-2 என பெயரிட்டுள்ளோம்.
"முதலில் தயாரான பீரங்கிகளை விட பல்வேறு வசதிகள் வேண்டும்; உள்ளிருந்தே
போர் விமானங்களை சுடும் வசதி வேண்டும்' என்பது உள்ளிட்ட 75 அதிநவீன
வசதிகளை ராணுவத்தினர் கேட்டுள்ளனர். இதற்கான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு
பணியில் எங்களது விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். முதல் பேட்ச்,
2014ம் ஆண்டில் வெளிவரும். 2017க்குள், மீதமுள்ள பீரங்கிகள் நிறைவு பெறும்.
* உங்களின் எதிர்கால ஆராய்ச்சித் திட்டங்கள் என்ன?
எப்.எம்.பி.டி.,
(பியூச்சூர் மெயின் பேட்டில் டேங்க்) என்ற எதிர்கால போர் வாகனங்கள்
தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதன் எடை 50 டன்னுக்குள் இருக்கும்.
இதற்கு, ராணுவத்தின் முதற்கட்ட வடிவமைப்பு வரைமுறைகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனுடைய சோதனை வாகனம் (புரோட்டோ டைப்) 2017ல் நிறைவு பெற்று 2020ல்
உற்பத்தி துவங்கி விடும். எதிரி வாகனத்தில் இருந்து குண்டுகள் வரும்போது,
அதனை இடைமறித்து, தாக்கி அழிக்கும் வசதி, பீரங்கியில் இருந்தே ஏவுகணைகளை
செலுத்துவது உட்பட பல வசதிகள் இதில் இருக்கும். அடுத்ததாக, "அன்மேனுடு
கிரவுண்ட் வெகிக்கிள்' (யுஜிவி) எனப்படும் ஆட்கள் இல்லாமல் இயங்கும்
பீரங்கிகளை வடிவமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம்.
இதன் முதல் கட்டமாக, "இன்பான்ட்ரி' கவச வாகனத்தை, தூரத்தில் இருந்தே
இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். இரண்டாவது கட்டமாக, ஆட்கள் இல்லாமலே,
முழுவதும் தானாக இயங்கக் கூடிய பீரங்கியாக, வடிவமைக்கப்படவுள்ளது. வழியில்
இருக்கும் மேடு, பள்ளங்களை உணர்ந்து, அதற்கு தகுந்தாற் போல் இயங்கும்
திறனை இவை பெற்றிருக்கும்.
* பீரங்கிகளைத் தவிர, வேறு வடிவமைப்புகளில் ஈடுபட்டிருக்கிறீர்களா?
இலகு
ரக போர் விமானமான தேஜஸ்க்கு, 35 கிலோ எடையில் கியர் பாக்ஸ்கள்
வடிவமைத்துக் கொடுத்துள்ளோம். இவ்வகை விமானங்களுக்கு தேவையான "ஹைட்ராலிக்
பில்ட்டர்'கள் வடிவமைத்துள்ளோம். இறக்குதி செய்யப்பட்ட மற்ற போர்
விமானங்களுக்குத் தேவையான, "ஹைட்ராலிக் பில்ட்டர்'கள் இங்கு
வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த வடிவமைப்பு
மையமாக சி.வி.ஆர்.டி.இ., திகழ்கிறது. தேஜஸ் போர் விமானங்களுக்கு பயன்படும்
"பவர் டேக்ஆப் சாப்ட்' உருவாக்கப்பட்டது. போர் விமானங்களில்
பயன்படுத்தப்படும் பேரிங்குகள், இந்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு இங்கு
வடிவமைக்கப்பட்டு வருகிறது. எதிர்கால போர் வாகனங்களுக்குத் தேவையான
இன்ஜின், டிரான்ஸ்மிஷன்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு சி.வி.ஆர்.டி.இ.,
மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், ஐ.ஐ.டி., போன்றவைகளுடன் இணைந்து,
"தேசிய அளவிலான பணித்திட்டம்' அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல், நமது எதிர்கால
போர் ஊர்திகள், இந்திய இன்ஜின்களுடன் மட்டுமே இயங்கும் என்ற நிலை ஏற்படும்.
* இந்தியாவின் பாதுகாப்பு எப்படி உள்ளது? அண்டை நாடுகளை விட நவீன ஆயுதங்கள் நம்மிடம் இருக்கிறதா?
அண்டை
நாடுகள் அனைத்தும் பலவகையான ஆயுதங்களை குவிக்கின்றன. அதே போல், நாமும்
நமக்குத் தேவையான ஆயுதங்களை இறக்குமதி செய்கிறோம். ஏவுகணை தயாரிப்பில் உலக
நாடுகளை விட நாம் முன்னணியில் உள்ளோனம். அக்னி, பிரித்வி, ஆகாஸ்,
பிரம்மோஸ் என அதிநவீன ஏவுகணைகள் நம்மிடம் உண்டு. "அரிகந்த்' என்ற அணுசக்தி
நீர்மூழ்கி போர் கப்பல் அமைத்து, கப்பல் தொழில்நுட்பத்திலும்
முன்னேற்றமடைந்துள்ளோம். தரைப்படையான, ராணுவத்திற்கு மிக முக்கிய ஆயுதமான
பீரங்கிகளை நவீனபடுத்தி, அதிக சக்தி கொண்டவையாக மாற்றும் தொழில்நுட்ப
ஆராய்ச்சியிலும் நாங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம்.
* பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் சேர இளைஞர்களிடம் ஆர்வம் இருக்கிறதா?
ராணுவத்தில்
சேர்ந்து சேவையாற்ற இளைஞர்களிடையே ஆர்வம் உண்டு. ராணுவ ஆயுதங்கள் உற்பத்தி
செய்வதற்காக உள்ள, ஆராய்ச்சி மையங்களில் சேரவும், பட்டதாரி இளைஞர்கள்
ஆர்வமாக உள்ளனர். கல்லூரி மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்ட, ஐ.ஐ.டி., அண்ணா
பல்கலைக் கழகம் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு, பல்வேறு புராஜக்ட்களை
வழங்கி வருகிறோம். இவ்வாறு சிவகுமார் கூறினார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரான பி.சிவகுமார், கடந்த 1984ல், பாதுகாப்பு
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி "பி' ஆக சேர்ந்தார்.
1987ல் சென்னை, எம்.ஐ.டி.,யில் உற்பத்தி பிரிவில் முதுகலை இன்ஜினியர்
பட்டம் பெற்றார். "டிரான்ஸ்மிஷன்' இன்ஜினியரிங் பிரிவில் 20
வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி, பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
2002ம் ஆண்டு இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின், "தேசிய வடிவமைப்பு
விருது, கடந்த 2005ல் 150 எச்பி "ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்'
வடிவமைத்தற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன விருது
உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு, அமெரிக்காவின்
"உலகில் பல்வேறு துறைகளில் பெயர் பெற்றவர்கள்' யார் என்ற பட்டியலில் இவரது
வாழ்க்கை குறிப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்கன் கியர் தயாரிப்பாளர்கள்
சங்கம், அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெட்டல்ஸ், இந்திய பொறியாளர்கள்
நிறுவனம், கோல்கட்டா சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் போன்ற
அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ளார்.
சி.வி.ஆர்.டி.இ., வடிவமைத்த பீரங்கிகள்
* அர்ஜூன் பீரங்கி: இந்திய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு,
ராணுவத்தின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது இந்த பீரங்கி. ரஷ்ய
பீரங்கிகளை விட அதிவிரைவாக சென்று, இலக்கை துல்லியமாக சுடக்கூடியது.
* பீம்: அர்ஜூன் பீரங்கியின் "சேஸ்'ல், 155 எம்.எம்.,
"கன்'னுடன் தயாரானது. அதிகபட்சம் 42 கி.மீட்டர் தூரம் வரை இலக்கை
குறிபார்த்து சுடும் திறன் கொண்டது.
* சிஐ அஜயா: ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் முதன் முதலாக தயாரான
பீரங்கியில், நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்ட மாடல். இதன் சுடு திறன்
மேம்படுத்தப்பட்டுள்ளது.
* எக்ஸ் டேக்ங்: ரஷ்ய பீரங்கியின் "சேஸ்'யையும், இந்திய அர்ஜூன்
"டரட்' (மேல்பாகம்) வைத்து உருவாக்கப்பட்டது. இதன் எடை குறைவாகவும்,
வேகமாக செயல்படக் கூடியது.
* பிஎல்டி டி-72: பாலம் தாங்கி பீரங்கி வண்டியான இது உலகின் மிகச் சிறந்தது.
* "ஆர்மர்டு ஆம்புலன்ஸ்': முதலுதவி பீரங்கி வண்டி.
போர்க்களத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சை பெறுவதற்காக
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. குளிர்சாதனம் வசதி கொண்ட இதில்,
தேவைப்பட்டால் ஹீட்டர் வசதியும் செய்து கொள்ளலாம்.
* கேரியர் மார்ட்டர் டிராக்டு (சிஎம்டி): சிறிய பீரங்கியான இது, இலக்கை துல்லியமாக தாக்கும் தன்மை கொண்டது.
* கேரியர் கமாண்ட் போஸ்ட் டிராக்டு (சிசிபிடி)- தகவல் தொழில்நுட்பட்பம் மற்றும் அனைத்து செயல்பாடுகளும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு
» புதிய ஆவணப்படத்தை இந்திய எம்.பி.க்களுக்கு போட்டு காட்டுவேன் - சேனல்-4 இயக்குனர் பேட்டி
» தலிபான்களுடன் விடுதலைப் புலிகளை ஒப்பிட்டு பேட்டி! இயக்குனர் அமீர் வீடு முற்றுகை
» மகிந்தரின் ஊர்தி மீது கூழ்முட்டை வீச்சு (படங்கள்) |
» முதன் முறையாக இலங்கையில் போர் நடந்த பகுதிக்கு நிருபரை அனுப்பி மக்களிடம் பேட்டி கண்டு “நான் இனப்படுகொலையை பார்த்தேன்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிடுகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum