Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நவம்பர் 6ல் இந்தியா வருகிறார் அதிபர் பராக் ஒபாமா
Page 1 of 1

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் நான்கு நாட்கள்
சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது பயணத்திட்டத்தை வெள்ளை மாளிகை நேற்று
வெளியிட்டது. நவம்பர் 7ம் தேதி மும்பையில் பள்ளி ஒன்றில் குழந்தைகளுடன்
தீபாவளி கொண்டாடுகிறார் ஒபாமா.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின், முதல் முறையாக
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவரது இந்திய வருகை,
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமாவின் இந்திய பயண விவரத்தை
நேற்று வெள்ளை மாளிகையில், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மைக் புரோமன்
நிருபர்களிடம் அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நவம்பர் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை
ஒபாமா இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக தனது மனைவி மிச்சேலுடன்
நவம்பர் 5ம் தேதி விசேஷ விமானத்தில் வாஷிங்டனிலிருந்து புறப்படுகிறார்.
நவம்பர் 6ம் தேதி மும்பை செல்கிறார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம்
தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஓட்டல், புனரமைக்கப்பட்டு
மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. இங்கு தான் ஒபாமா தங்குகிறார்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் ஒபாமா
சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இரண்டு நாட்கள் மும்பையில் தங்கியிருக்கும்
ஒபாமா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தீபாவளி கொண்டாட்டம்: நவம்பர் 7ம் தேதி காலை மும்பையில் பள்ளிக்
குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுகிறார். பின்னர், அமெரிக்க - இந்திய
வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் இந்திய தொழில் துறையினரை
சந்தித்து பேசுகிறார். ஒபாமாவை கவர்ந்த தலைவர்களில் மகாத்மா காந்தியும்
ஒருவர். மும்பையில் உள்ள காந்தி மியூசியத்தையும் பார்வையிடுகிறார். டவுன்
ஹாலில் பல்கலைக் கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். நவம்பர் 7ம் தேதி
மாலை டில்லி செல்லும் ஒபாமா, ஹுமாயூன் சமாதிக்கு செல்கிறார். அன்றிரவு
பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் ஒபாமா தம்பதியினர்
பங்கேற்கின்றனர். நவம்பர் 8ம் தேதி காலை ராஜ்காட் சென்று, மகாத்மா காந்தி
சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கும்,
ஒபாமாவும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
மதியம் பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார்.
அன்றிரவு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும்
ஒபாமா, முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை
சந்தித்து பேசுகிறார்.
டில்லியிலும், மும்பையிலும் தங்கியிருக்கும் போது பல்வேறு துறையைச்
சேர்ந்த பிரபலங்களை சந்தித்துப் பேசவும் ஒபாமா திட்டமிட்டுள்ளார். இது
பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். நவம்பர் 9ம் தேதி காலை
டில்லியில் இருந்து இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்கிறார்.
முன்னதாக மனைவி மிச்சேலுடன் ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிட உள்ளார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பிறகு, பிரதமர் மன்மோகன் சிங்கை இரண்டு
முறை சந்தித்துள்ளார். முதல் முறையாக லண்டனில் நடந்த ஜி20 மாநாட்டில்
சந்தித்தார். பிரதமரின் அணுகுமுறை குறிப்பாக பொருளாதார வளர்ச்சி
நடவடிக்கையில் அவரது செயல்பாடுகளைப் பார்த்து பிரமித்த ஒபாமா, தனிப்பட்ட
முறையில் நட்பு பாராட்டி வருகிறார். இந்த வகையில் 7ம் தேதி பிரதமர்
அளிக்கும் விருந்து, அவர்களது நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவதாக அமையும்.
இவ்வாறு மைக் புரோமன் கூறினார்.
அமைச்சரவை குழு: ஒபாமாவுடன் வரும் குழுவில் அவரது அமைச்சரவை
சகாக்கள் சிலர் இடம் பெற்றுள்ளனர். அதிபருடன் வழக்கமாக வெளியுறவுத் துறை
அமைச்சரும் உடன் வருவது வழக்கம். ஆனால், ஒபாமாவின் இந்திய பயணத்தில்
வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உடன் வரவில்லை. புதிய தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலோன், வர்த்தக அமைச்சர் கேரி லாக்கே,
விவசாயத்துறை அமைச்சர் டாம் வில்சாக், அமெரிக்க நிதியுதவி அமைப்பின்
நிர்வாகி ராஜ் ஷா ஆகியோர் வருகின்றனர். அமெரிக்க நிதி அமைச்சர் டிமோதி
கெய்த்னர், ஒபாமாவின் பயணத்தில் பாதியில் கலந்து கொள்கிறார். பொதுவாக
அதிபருடன் வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரும் வருவது வாடிக்கை.
ஆனால், இந்த பயணத்தில் வர்த்தக குழுவினர் வரவில்லை. அமெரிக்க
நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகள் தனியாக வருகின்றனர். இவர்கள்
மும்பையில் ஒபாமாவை சந்தித்து பேசுகின்றனர். அச்சுறுத்தல் இல்லை: அமெரிக்க
அதிபர் ஒபாமாவின் வருகையையொட்டி, பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து எவ்வித
அச்சுறுத்தலும் வரவில்லை என, உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார்.
இருப்பினும், மும்பையிலும், டில்லியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பராக் ஒபாமா பராக்., பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை ரிப்போர்ட்
» அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.என்னை வலை வீசி பிடித்து அழிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும். ஜூலியன் அசாஞ்ச்
» ஓடி வருகிறார் ஒபாமா ; இந்தியா- அமெரிக்கா உறவு பிரிக்க முடியாததாக இருக்கும் என்கிறார்
» பராக் ஒபாமா பற்றி சில....
» அமெரிக்காவிடம் கையேந்தும் ஆசியா: பராக் ஒபாமா தம்பட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum