Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தன்வினை தன்னைச் சுடும் கட்டம் இது
Page 1 of 1
தன்வினை தன்னைச் சுடும் கட்டம் இது
இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற
குற்றச்சாட்டு இப்போது அனைத்துலக ரீதியாக முக்கிய பேசுபொருளாக மாறி
யுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்களில் முதலில் முகிழ்த்த இந்த
விவகாரம் ஐரோப்பிய நாடுகள் பலவற் றுக்கும் பரவியது.
அதன் முதலாவது விளைவு, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள்
சபையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாகும். ஆனால் இலங்கை
அரசு ஏதோ வகையில் பல தரப்புகளின் உதவியைப் பெற்று அந்த விடயம்
விவாதத்துக்கு வராது தடுத்துவிட்டது.
அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், இலங்கை மீதான
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு அத்துறையில் அந்தப்
பணியில் கைதேர்ந்த நிபுணர்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்ற பலமான
கோரிக்கையும் நிறைவேறவில்லை.
இந்த முயற்சியையும் இலங்கை அரசு ""புகுந்து விளையாடி'' தடுத்துவிட்டது.
ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும்
இடையில் நிலவிய தனிப்பட்ட முறையிலான நட்புமுறையின் செல்வாக்கு அதற்குப்
பயன்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அதன் பிறகு, பல வட்டகைகளின் அழுத்தங்களின் பின்னர், ஐ.நா. செயலாளர் நாயகம்
இதுவிடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழு ஒன்றை
நியமித்திருக்கிறார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தயாரித்த
ஆடைகளுக்கு வழங்கிய ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை கடந்த ஜூலை மாதத்தோடு
நிறுத்தியது. மனித உரிமைகள் தொடர்பாகவும் மற்றும் அவசரகாலச்சட்டம்
தொடர்ந்து நடைமுறைப்படுத் தப்பட்டு வருவது குறித்தும் சில நிபந்தனைகளை
விதித்து ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ரத்துச் செய்தது ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் ஏற்கக் கூடியவை அல்ல என்றும் அவை
இலங்கை அரசின் நல்லாட்சியைப் பாதிக்கும் என்று கூறியும் அவற்றை
""கெப்போர்'' காட்டி நிராகரித்தது எம் நாட்டு அரசு.
ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவை
நியமித் தமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, உள்நாட்டின் நியமிக் கப்பட்ட
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழு போதுமானது என்று தெரிவித்து
கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டும், அதன் முன்னால்
உண்ணாவிரதம் செய்வித்தும் பெரும் எதிர்ப்பைக் காட்டியது அரசாங்கம்.
இலங்கை அரசாங்கத்தின் பல வகையான தாழ்ந்த தராதர நடவடிக்கைகள், மேற்குலக
நாடுகள் மத்தியில் அதற்குப் பெரும் அபகீர்த்தியை உண்டாக்கின. இந்த
அபகீர்த்தியை, அதனால் உண்டான களங்கத்தைக் களையாவிட்டால் ஐக்கிய நாடுகள்
சபை மற்றும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,
இலங்கை தொடர்பான விடயங்களில் முரண்டு பிடித்து, வெளிக்காட்டப்படாத பகைமை
நிலை ஒன்றைத் தோற்றுவிக்கும் ஆபத்தான நிலை அரும்பியிருந்தது.
இதனைக் ""கண்டுபிடித்து'' உணர்ந்து கொண்டதால், தனக்கு ஏற்படக்கூடிய
இழப்புக்களைப் புரிந்துகொண்ட தால், இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட
தரப்புகளிடம் நற்பெயர் வாங்குவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்ய
ஆரம்பித்துள்ளது. மிக முக்கியமாக, பிரதானமானதாக, போரினால் உண் டான
களங்கத்தை நீக்குவதற்கு அரசு அக்கறை காட்டிச் செயற்படுவது புலப்படுகிறது.
அபிவிருத்தித் திட்டங்களுக்கு என்றும் திறைசேரி உண்டியலைச் சரி செய்வதற்கு
என்றும் வெளிநாடு களிடம் இருந்தும் உலக வங்கியிடம் இருந்தும் கடன்
பெறுவதற்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் தயவில் தங்கி இருக்க
வேண்டிய நிலை இந்நாட்டு அரசுக்கு உள்ளது.
அதுமட்டுமன்றி, நலிவுற்ற நிலையில் தனித்து நின்று மற்றைய நாடுகளைப் போன்று
அபிவிருத்தி அடைய முடியாத ஒரு நாடு இலங்கை என்பது மறுக்கப்பட முடியாத,
மறைக்கப்பட முடியாத யதார்த்தம்.
இத்தகைய ஒரு பின்புலத்தில் நாட்டின் வளர்ச்சி கருதி, இதுவரை உண்டான அல்லது
தேடிக்கொண்ட அப கீர்த்தியை நீக்க வேண்டிய நிலை எமது நாட்டுக்கு
அரசாங்கத்துக்கு உண்டு. அது தவிர்க்க முடியாத தட்டிக்கழிக்க முடியாத
தேவையுமாகும்.
ஆனால்....
எமது செயற்பாடுகளால், மனத்தாங்கல் மற்றும் கௌரவப் பிரச்சினையால் தூர விலகி
நிற்கும் நாடுகளை எமக்கு அருகில் மீண்டும் கொண்டு வருவதற்கு நாட்டு
மக்களின் வருமானத்தில் வருடாந்தம் பில்லியன் ரூபாக் கணக்கில் பணத்தைச்
செலவிடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அந்தப் பெருந்தொகையை இந்நாட்டு
ஏழை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குச் செலவிடலாமே!
அரசாங்கத்தின், அதன் அமைச்சர்களின் ""கொம்பன்'' தனத்தையும், முன்யோசனையற்ற
நடவடிக்கைகளையும் ஈடு செய்வதற்கு அதுவே மாற்றுவழிகளைக் கண்டாக வேண்டும்.
பணச்செலவில்லாத வழிமுறைகளைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும், அதற்கான
யுக்தியும் அரசாங் கத்திடமிருந்தே வரவேண்டும். முன்பின் யோசிக்காமல்
இந்நாட்டுக்கு உதவும் செல்வாக்குள்ள, நாடுகளுடன் முண்டிய அரசே அதன்
விளைவைத் தவிர்க்கவும் போக் கவும் வழி தேட வேண்டும்.
தன்வினை தன்னைச் சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பதனைப்
புரிந்துகொள்ளாமல் செயலாற்றிய அரசினர், அபகீர்த்தியைத் துடைக்க மக்களின்
வரிப் பணத்தைச் சுரண்டுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
இதனைக் கருத்திற்கொண்டு, சிதைந்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்குத் தனது
நிலைப்பாடுகளை மாற்றி, பகைமை உணர்வை நீக்கிப் புதிய பாதையில் பயணிக்க
முன்வரவேண்டும்.
தவறு செய்வது இயற்கை; அதனைத் திருத்திக்கொள்ள மனங் கொள்வதே பெருந்தன்மை;
நற்பயன் தரவல்லதும் அதுவே. அரசதரப்புச் சற்று நிதானத்துடன் இது தொடர்பில்
செயற்பட மனங்கொள்ளுமா? தான் செய்த தவறுக்கு, பெரிய விவகாரத்தைப்
பின்விளைவு நோக்காது செயற்பட்ட தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள
வேண்டும். இது விடயத்தில் கௌரவம் கெட்டுப்போவதற்கு அதே முழுப்
பொறுப்புமுடையது.
[ உதயன் ] - [ Oct 25, 2010 04:00 GMT ]

Similar topics
» தமிழர்களின் மீது ஏவிய சட்டங்கள் சிங்களவர்களின் மீது – தன் வினை தன்னைச் சுடும்
» சுடும் வெயிலை ஜில்லாக்க...
» வேலன்:-பெட்டிகளை சுடும் விளையாட்டு
» இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!
» கட்டம் கட்டிக் காட்டுவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum