TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள்

Go down

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள் Empty அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள்

Post by மாலதி Thu Oct 21, 2010 9:04 pm

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள்

திகதி: 20.10.2010
அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 இலங்கையர்கள் தமது பயங்கரமான பயணம் தொடர்பாக விபரிக்கின்றனர்.
இந்தப் பயணத்தில் அவர்களது படகு உடைந்தது, நீர்,உணவு மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டது. மூன்றுபேர் இறந்தனர். இவ்வாறு The Daily Telegraph என்னும் அவுஸ்ரேலிய ஊடகம் தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
படகின் ஜிபிஎஸ் தொகுதி பழுதடைந்து எரிபொருள் தீர்ந்து,இயந்திரமும் பழுதடைந்தபோது தாம் கிறிஸ்மஸ் தீவை நெருங்கியிருந்ததாக அந்தக் குழுவின் அனைத்து தமிழ் மக்களும் நம்பினர்.
பின்னர் உணவு தீhந்துவிட்ட நிலையில் தாம் பிடித்த மீனை உணவாகவும் படகில் விழும் மழை நீரைக் குடிப்பதற்கும் பயன்படுத்தி பயங்கரமான 30 நாட்கள் கடலில் இலக்கின்றி மிதந்து தத்தளித்துக்கொண்டிருந்தனர்.
அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்காக கடல் வழியாகப் பயணம் செய்த 85 தமிழர்களின் திகிலூட்டும் பயண அனுபவங்கள் Pic421
அவர்கள் மீட்கப்பட்ட கிறகற்றவ் எரிமலைக்கு அண்மையிலுள்ள பனிற்றன் தீவில் தரையைத் தட்டுவதற்கு முன்னர் தாம் இந்தோனேசியக் கடல் எல்லைக்குள் வந்துவிட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.
தமது படகிலிருந்து அருகிலிருந்த மீன்பிடிப்படகை உதவிக்கு அழைப்பதற்காக நீந்திச் செல்ல முற்பட்டவேளையில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். படகு தரையைத் தட்டியபோது பாறையுடன் மோதுண்டு இன்னொரு யுவதி உயிரிழந்தார்.
2 வயது முதல் 14 வயது வரையான சிறுவர்கள் அடங்கிய இந்தக் குழுவானது இந்தோனேசிய கடல் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டனர்.
மெராக் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜகார்த்தாவிலுள்ள தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் நியூஸ் லிமிட்டட் இந்தக் குழுவினரை செவ்விகாண கடல் காவல்துறையின் படகில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
வாடிய தோற்றம், சில சிறுவர்கள் அழுதுகொண்டு தமது நோய்கள்பற்றி முறையிட்டனர், ஏனையவர்களிடம் காலணிகளோ எந்த உடமைகளோ இருவிக்கவில்லை.
தனது நாட்டில் குண்டுத் தாக்குதலால் கையில் ஏற்பட்டிருந்த பயங்கரமான வடுவைக் காட்டிய பெண் ஒருவர், இதனாலே தான் தனது கணவனுடனும் இரு பிள்ளைகளுடனும் அந்த நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.
தனது தாயாரும் தானும் படகில் வந்ததாகவும் தனது தந்தை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் சிறுவன் ஒருவன் கூறினான். செயற்கைக் காலுடன் இருந்த இன்னொருவரும் தானும் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தாம் ஏற்கனவே இதுபற்றி ஜகார்த்தாவிலுள்ள அவுஸ்ரேலிய பெடரல் பொலிசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் இவர்கள் ஜகார்த்தாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் அவுஸ்ரேலிய பெடரல் பொலிஸ் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பன்ரன் கடல் காவல்துறையின் தலைமை அதிகாரி புடி கேர்மன் தெரிவித்தார்.
தமது காவல்துறையினர் இந்தக் குழுவைக் கண்டபோது அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
15 பெண்களையும் 18 சிறுவர்களையும் உள்ளடக்கிய இந்தக் குழு இந்தோனேசி குடிவரவுத் திணைக்களத்தின் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று அவர்கள் கரையேறிய தீவிலிருந்து கடுமையான காலநிலை காரணமாக அவர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை.
கடந்த வாரத்தில் இந்தோனேசிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டாவது சிறிலங்காவிலிருந்து புகலிடம் கோருபவர்களின் படகு இதுவாகும். ஆப்கான்கள், ஈராக்கியர்கள் மற்றும் ஈரானியர்களைக் கொண்ட இன்னொரு படகு யோக்யகார்த்தாவில் வைத்து வார இறுதியில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது சிறிலங்காவிலிருந்து ஓகஸ்ட் 31 இல் புறப்பட்டிருப்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கடல் காவல்துறை தலைமை அதிகாரி புடி கேர்மன் தெரிவித்தார்.
சிறிலங்காவிலிருந்து ஆட்களைக் கடத்துபவர்களுக்கு அவர்கள் 200 அமெரிக்க டொலர்கள் கொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. சிறுவர்களுக்குப் பணம் அறவிடப்படவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.
ஆனால் தாம் எவ்வளவு பணம் செலுத்தினார்கள் அல்லது எப்படி இதனை ஒழுங்குபடுத்தினார்கள் என்பது தொடர்பில் நியூஸ் லிமிட்டட்டுடன் கதைத்த எவரும் உறுதியாகக் கூறவில்லை. அவர்களின் கருத்துப்படி, இந்தப் படகு மன்னாரிலிருந்து புறப்பட்டிருப்பதுடன் அவர்களில் படகுபற்றித் தெரிந்தவர்களே ஓட்டுநர்களாக இருந்துள்ளனர்.
சிறிலங்காவிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்வதற்கு 15 நாட்கள் தேவை என தமக்குக் கூறப்பட்டிருந்ததாகவும் 15 நாட்கள் எல்லாம் சுமூகமாகவே சென்றதாகவும் படகை ஓட்டிய 29 வயதுடைய ராஜவர்ணம் தெரிவித்தார்.
ஜிபிஎஸ் பழுதடைந்து, இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இறுதியாக எரிபொருள் முடிவடைந்தபோது, தாம் கிறிஸ்மஸ் தீவுக்கும் அவுஸ்ரேலிய மண்ணுக்கும் அண்மையில் இருந்ததாக அவர் நம்புகிறார். பின்னர் படகானது காற்றின் கருணையில் இலக்கின்றி மிதந்தது.
இறுதியாக உணவும் நீரும் முடிவடைந்த நிலையில் அனைவருக்கும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு அவதியுற்றனர்.
மழை பெய்தபோது மட்டுமே அவர்களுக்கு நீர் கிடைத்தது. அதுவும் ஒவ்வொரு நாளும் கிடைக்கவில்லை.
"கிறிஸ்மஸ் தீவை நாம் தவறவிட்டு இரண்டாவது நாள் எரிபொருள் முடிவடைந்துவிட, வெறுமனே கடலில் மிதந்துகொண்டிருந்தோம்", என்றார் ராஜவர்ணம்.
"அடுத்த 30 நாட்கள் நாம் உயிருடன் இருப்போமா என்பது எமக்குத் தெரியாதிருந்தது. மிகவும் மோசமானது நாம் வாழ்வோமா அல்லது சாவோமா என்ற பயமே".
இறுதியாக பனிற்றன் தீவை அடைந்தபோது அவர்கள் அந்தத் தீவில் கிடைத்த நத்தை, தேங்காய், பழங்கள் மற்றும் தானியங்களை உட்கொண்டனர். இறுதியாக காட்டில் வேலை செய்பவர்கள் அவர்களைக் கண்டு பொலிசுக்குத் தகவல் கொடுத்தனர்.
இன்னும் 15 பேர் அந்தத் தீவில் இருப்பதாகவும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காகவே தாம் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் அவர்கள் அவ்வாறு வெளியேறாவிட்டால் தமக்கோ, தமது பிள்ளைகளுக்கோ எதிர்காலம் இல்லை என்றே தாம் அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குண்டுவீச்சினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தனது கையை சிறிதேவி எமக்குக் காட்டினார். அவர் தனது கணவன்,மகள் மற்றும் மகனுடன் படகில் வந்திருந்தார். தமக்குத் தற்போது என்ன நடக்கும் என்று தெரியாதபோதும் தாம் 'ஒருபோதும் திரும்பி' சிறிலங்காவுக்குப் போகப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.
தமக்கான எதிர்காலம அவுஸ்ரேலியாவிலேயே கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
"நாம் சிறிலங்காவில் நன்றாக வாழ முடியாது. நான் எனது அம்மாவுடனும் அப்பாவுடனும் சந்தோசமாக, அமைதியாக வாழ்ந்து கல்வி கற்க விரும்புகிறேன். நாம் அவுஸ்ரேலியாவுக்குப் போக விரும்புகிறோம். சிறிலங்காவில் அவர்கள் எங்கள்மீது குண்டுகளைப் போடுகிறார்கள். எனது வாழ்க்கை அவுஸ்ரேலியாவிலேயே இருக்கவேண்டும்", என அழகான ஆங்கிலத்தில் ராதாகீதன் எனும் சிறுவன் கூறினான்.
எதிர்காலத்திற்காகவும் வாழ்விற்காகவுமே தான் தனது மகனின் வாழ்க்கையை ஆபத்திலும் அழைத்துவந்ததாக அவனது தாயார் கீதா தெரிவித்தார்.
அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல விரும்புவதற்கான காரணத்தைக் கேட்டபோது, எனது வாழ்க்கைக்காகவும் எனது பிள்ளையின் வாழ்க்கைக்காகவும் அங்கு செல்லவிரும்புவதாக அவர் தெரிவித்தார்.


© Copyright [You must be registered and logged in to see this link.] - contacts: [You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» " புகலிடம் தேடிய தமிழர்களின் விபரங்களை வெளிநாடுகளிடம் பெற இலங்கை கையாளும் புதிய யுக்தி "
» தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனக்கூறி உரையை நிறைவு செய்த சிவாஜிலிங்கம்!
» எர்ணாகுளம் - திருவனந்தபுரம் வரை ரயிலுக்கு அடியில் படுத்து 225 கி.மீ. பயணம் செய்த வாலிபர்
» காந்தி பயணம் செய்த ரெயில் பெட்டி மாயம்: கண்டுபிடிக்கக் கோரி புகார் மனு.
» சிங்கப்பூர் பஸ்ஸில் பயணிகளோடு பயணியாக பயணம் செய்த பேய்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum