Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மருத்துவமனையிலேயே தங்கி தொண்டாற்றும் மாற்றுத் திறனாளி
Page 1 of 1

கரீம்பூர் (நாடியா) : நெருங்கிய உறவினர்கள் இருந்தும் உதவியில்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு மருத்துவமனையிலேயே தங்கி சேவையாற்றி வருகிறார் மாற்றுத் திறனாளி ஒருவர்.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள கரீம்பூரில் ஊரகப்பகுதி மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில், சகாட்டன் பீவி (65) என்ற பெண் டைபாய்டு காரணமாக அனுமதிக்கப்பட்டார். பீவியின் வீடு, மருத்துவமனையில், இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள தெய்ன்பூர் கிராமத்தில் உள்ளது. வயதான அவரது கணவரால், தினமும் வந்து மனைவியை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவருக்கு தேவையான மருத்து, மாத்திரைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்க ஆளில்லை. பீவியின் பிள்ளைகளும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இதையறிந்த நாராயண் மண்டல், சகாட்டா பீவி அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடியும் வரை அவருக்கு உதவியாக இருந்தார். வேளைக்கு மருந்தை அளிப்பது, பீவிக்குத் தேவையான உதவிகளை செய்வது, தினந்தோறும் அவர் உடல் நலம் குறித்து அக்கறையாக விசாரிப்பது என்று நாராயண் மண்டல் அனைத்து விதத்திலும் உதவினார்.
இதே போன்று, ராகி மலேக்கர் என்ற பார்வையற்ற இளம் பெண், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், உதவிக்கு யாரும் இல்லை. கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணுக்கு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் டாக்டர்கள் கூறினார். மருத்துவமனையில், அந்த வசதி இல்லாததால், வெளியில் உள்ள ஆய்வகத்தில் தான் எடுக்க வேண்டும். அதற்கு பணம் கட்ட வேண்டும். ஆனால், கூலித் தொழிலாளியான அந்த பெண்ணின் தந்தையால் பணம் கட்ட இயலவில்லை. உடனே நாராயண், தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, அந்த பெண்ணுக்கு எக்ஸ்-ரே எடுப்பதற்காக பணம் கட்டினார். அதை எடுத்தப் பார்த்தப் பின், அந்த பெண்ணிற்கு அல்சர் இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை செலவு முழுவதையும் நாராயண் தான் கடன் வாங்கி செய்தார்.
இதுபோன்று, ஏழைகள், ஆதரவற்றோர் என அந்த மருத்துவமனைக்கு வரும் அத்தனை நோயாளிகளுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருக்கும் நாராயண் மண்டல் ஒரு மாற்றுத்திறனாளி. போலியோ தாக்குதலில் வலது கால் செயலிழந்துவிட்டது. தற்போது அவருக்கு 52 வயதாகிறது. அவரது முகவரி அந்த நாடியா மருத்துவமனைதான்.கடந்த 1983 ம் ஆண்டு, கடும் காய்ச்சல் காரணமாக, அந்த மருத்துவமனையில், அவரது சகோதரர் கொண்டுவந்து சேர்த்தார். அதன் பிறகு, அவர் அந்த மருத்துவமனை பக்கம் எட்டிப்பார்க்கக் கூட இல்லை. நாராயண் மண்டலுக்கு காய்ச்சல் குணமானதும் திரும்ப வந்து அழைத்துப் போகவும் இல்லை. வேறு போக்கிடம் இன்றி அந்த மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட மண்டல், அங்கு வரும் நோயாளிகளுக்கு உதவ ஆரம்பித்தார்.மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 750 ரூபாயை நாராயண் மண்டல் பெறுகிறார். இந்த தொகையையும், அங்கு வரும் நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து, பழங்கள் வாங்குவதற்கே செலவிடுகிறார்.
இதுகுறித்து, நாராயண் கூறியதாவது:மருத்துவமனையில் சேர்த்த பின்னர், எனது சகோதரன் என்னை திரும்ப அழைத்துச் செல்ல வரவே இல்லை. அதன் பிறகுதான் மருத்துவமனையிலேயே தங்க முடிவு செய்தேன். மருத்துவமனை வராந்தாவில் தான் இரவில் தூங்குவேன். அருகில் உள்ள மக்கள் எனக்கு உணவு அளிக்கின்றனர். இங்கு இருக்கும் டாக்டர்களும், நர்சுகளும் எனக்கு ஆதரவாக உள்ளனர். இந்த மருத்துவமனையை எனது வீடு போலத்தான் இருக்கிறது. இங்கு, வரும் மக்களுக்கு என்னால், முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.இவ்வாறு நாராயண் கூறினார்.
அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் பாபானி பாஸ்வான் கூறியதாவது:நாராயண் இந்த மருத்துவமனையில், இருப்பதால் எங்களுக்கு பணிச்சுமை வெகுவாக குறைந்துள்ளது. இங்குவரும் நோயாளிகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறார். நோயாளிகளின் குடும்பத்தில் ஒருவராகவே பழகுகிறார். இதைத்தவிர, டாக்டர்கள், நர்சுகளுக்கு தேவையான உதவிகளையும் செய்கிறார். மருத்துவமனையை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வதோடு, கழிவறைகளையும் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்கிறார். இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை, டாக்டர், நர்சுகளுக்கு அடுத்தபடியாக நாராயணும் முக்கிய நபராகி விட்டார். இவ்வாறு பாபானி கூறினார்.முர்ஷிதாபாத் தலைமை மருத்துவ அதிகாரி அமித் ஹால்டர் கூறுகையில், "சிகிச்சை முடிந்த பின்னரும், ஒருவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில், தங்கியிருப்பது சட்டத்திற்குப் புறம்பானதுதான். ஆனால், இந்த விஷயத்தில் நாராயண் மண்டலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பார்வையற்ற மாற்றுத் திறனாளி.படுபிஸியான டூ வீலர் மெக்கானிக்
» மாற்றுத் திறனாளியை காதலித்து கரம் பிடித்த இளைஞர்
» மாற்றுத் திறனாளி சிறுமியின் "ஏழாம் அறிவு': தேதி சொன்னால் கிழமையை சொல்லும் அதிசயம்
» பாரதியார் பல்கலைக்கழக மாற்று திறனாளி மாணவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
» ஒரு மணிநேரத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் : மாற்றுத் திறனாளிகளின் கின்னஸ் முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum