Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:16 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கேரள லாட்டரி அதிபருக்கு ஆதரவாக தமிழக அட்வகேட் ஜெனரல் ஆஜர்
2 posters
Page 1 of 1
கேரள லாட்டரி அதிபருக்கு ஆதரவாக தமிழக அட்வகேட் ஜெனரல் ஆஜர்
லாட்டரி அதிபருக்கு ஆதரவாக, தமிழக அட்வகேட் ஜெனரல், வழக்கு ஒன்றில் ஆஜராக இருந்த சம்பவம், அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
லாட்டரி தொழிலில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டு வரும் மெகா தொழிலதிபர்
ஒருவருக்கு ஆதரவாக, கேரளாவில் நடக்கும் வழக்கு ஒன்றில் காங்கிரசைச்
சேர்ந்த அபிஷேக் சிங்வி ஆஜராக இருந்தார். இது, அம்மாநில அரசியலில்
சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு இப்போது உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து
வரும் சூழ்நிலையில், இப்பிரச்னை அம்மாநில காங்கிரசுக்கு பெரும் சிக்கலை
ஏற்படுத்தியது. இதனால், அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், டில்லி மேலிடத்தில்
முறையிட்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக
இருக்கும் அபிஷேக் சிங்வி, இந்த வழக்கில் ஆஜரானால், கட்சிக்கு கெட்டபெயர்
ஏற்படும் என்று புகார் தெரிவித்தனர். மேலிடத்தின் கடும் கோபத்துக்கு ஆளான
அபிஷேக் சிங்வி, இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகிக் கொள்வதாக
அறிவித்துவிட்டார். இருப்பினும், இந்த விவகாரம் நின்றபாடில்லை.
இது குறித்து டில்லியில் நேற்று மேலும் தகவலறிந்த வட்டாரங்கள்
கூறியதாவது: மெகா லாட்டரி அதிபர் கேரளாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும்
கொடிகட்டிப் பறப்பவர். அரசியல் அதிகார மையங்களுக்கு மிக நெருக்கமாக வளைய
வரும் அந்த லாட்டரி அதிபர், தமிழகத்தில் சினிமா தொழிலிலும் முதலீடு செய்து
வருகிறார். கேரள தலைவர்களான குரியன், சாக்கோ, உம்மன் சாண்டி போன்றவர்கள்,
காங்கிரஸ் மேலிடத்தில் முறையிட்டபோது, இதனால் ஏற்படும் பாதகங்களை உணர்ந்து
கட்சியின் தகவல் தொடர்பாளரான சிங்வி மீது நடவடிக்கை பாயும் என்ற நிலை
ஏற்படவே அவரும் வழக்கில் இருந்து விலகிக் கொண்டார். ஆனாலும், இந்த
விவகாரம் தற்போது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. ஏ.கே.அந்தோணி தலைமையிலான அந்த குழு விரைவில் கூடி
சிங்வி மீது நடவடிக்கை எடுக்கும்.
அபிஷேக் சிங்விக்கு பதிலாக இப்போது அந்த வழக்கில் ஆஜராக இருப்பவர்
வக்கீல் ராமன். இவர், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார். ஒரு
அரசின் அங்கமாக இருக்கும் பதவியில் இருந்து கொண்டே முறையற்ற தொழில்
செய்யும் ஒருவருக்கு ஆஜராவதையும் கேரள காங்கிரஸ் ஏற்கவில்லை. முன்னாள்
முதல்வர் உம்மன் சாண்டி இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவிர
முதல்வர் அச்சுதானந்தனுக்கு கடிதம் எழுதுவதோடு மட்டுமல்லாது, தமிழக
முதல்வருக்கும் முறைப்படி தெரியப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
முதலில் காங்கிரசைச் சேர்ந்த ஒரு வக்கீல் ஆஜராகி விலகியுள்ளார். இப்போது
மத்தியில் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஆளும் மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலே
வழக்கில் ஆஜராகவுள்ளார். எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள்
முறையற்ற தொழில் செய்வோருக்கு ஆதரவளிக்கிறது என்ற ரீதியில் விமர்சனம்
எழுந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் இப்போது வேறு திசை நோக்கி
செல்லவுள்ளதால், தேசிய அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது.
கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் இதுகுறித்து கடுமையாக
சாடி உள்ளார். சிக்கிம், பூடான் போன்ற இடங்களில் இருந்தும் ஒரு நம்பர்
லாட்டரியை புழக்கத்தில் விட்டு மக்களை ஏய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள
ஒருவருக்கு ஆதரவாக வாதாட சிங்வி அவ்வளவு எளிதாக ஒப்புக்கொண்டிருக்க
மாட்டார். அவர், சோனியாவின் அனுமதியைப் பெற்றுவிட்டுத்தான் ஆஜராக ஒப்புக்
கொண்டு இருப்பார். எனவே, இதில் சோனியாவுக்கும் பங்கு உண்டு என்ற வகையில்
பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கேரளாவில், சில மாதங்களில் சட்டசபை தேர்தல்
நடக்கவுள்ளதால், அம்மாநில அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை இந்த விவகாரம்
ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ்
கட்சியின் தகவல் தொடர்பாளராக அபிஷேக் சிங்வி உள்ளார். மாநில காங்கிரஸ்
கட்சிக்கு எதிராக சிங்வி செயல்பட்ட விதத்தால், அவர் இனி கட்சி தொடர்பான
தகவல்களை அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. த்தகவலை காங்கிரஸ் கட்சியின்
செயலர்களின் ஒருவரான ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: கேரள லாட்டரி அதிபருக்கு ஆதரவாக தமிழக அட்வகேட் ஜெனரல் ஆஜர்
இந்த லாட்டரி சீட்டு அதிபர் வேறுயாருமில்லை நம்ம எஸ்.எஸ்.மியூசிக் அதிபரே அவர், திருவாளர். சந்தியாகோ மார்ட்டின் அவர்களின் சாதனையே,இதில் நமது சிதம்பரத்திற்கும் மார்ட்டின் நண்பர் ஆவார்
venkatraman- மன்ற ஆலோசகர்
- Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India
Similar topics
» பொது கணக்குக் குழு முன் ஆடிட்டர் ஜெனரல் இன்று ஆஜர் : பிரதமர் ஆஜராவது எப்போது?
» போலி லாட்டரி சீட்டு குற்றவாளிகளுடன் கேரள உயர் போலீஸ் அதிகாரிக்கு பங்கு
» லாட்டரி தடை மசோதா திடீர் வாபஸ்: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி?
» இலங்கையில் சீன பாதுகாப்பு அமைச்சர்: “லாட்டரி கண்ணா லாட்டரி”
» தமிழக எல்லையில் கேரள படகுகள் : சிங்களத்தை பழியாக்கும் மலையாளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|