Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்
Page 1 of 1
இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்
சென்னை, செப். 6:
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப்
போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ÷அத்தியாவசியப்
பொருள்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; தொழிலாளர்களுக்கு
பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான
சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு அமல்படுத்த வேண்டும்; லாபம்
ஈட்டும் இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு கூடாது;
தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாகவும், உறுதியாகவும் செயல்படுத்த
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப்
போராட்டம் நடைபெறுகிறது. ÷ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ.,
ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 8 தேசிய தொழிற்சங்கங்கள் இந்த
வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இடதுசாரி கட்சிகள்
சார்புடைய தொழிற்சங்கங்களுடன், ஆளும் காங்கிரஸ் சார்பு தொழிற்சங்கமான
ஐ.என்.டி.யூ.சி.யும் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது
சுதந்திர இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.÷மேலும்,
பா.ஜ.க. சார்பு தொழிற்சங்கமான பி.எம்.எஸ். வேலைநிறுத்தப் போராட்டத்தில்
கலந்து கொள்ளாவிட்டாலும், தனது தார்மிக ஆதரவைத் தெரிவித்துள்ளது. ÷தமிழகத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தத்துக்கு அ.தி.மு.க. சார்பிலான அண்ணா தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.வங்கிகள்:
இந்தப் போராட்டத்தில் பொதுத் துறை வங்கிகள், இன்சூரன்ஸ், பாதுகாப்புத்
துறை, தொலைதொடர்புத் துறை உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் பெருமளவில்
கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ÷தமிழகத்தில்
பொதுத் துறை மற்றும் சில தனியார் வங்கிகள் முழுமையாக செயல்படாது என
கூறப்படுகிறது. எனினும், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் இந்தப்
போராட்டத்தில் கலந்து கொள்ளாததால், அந்த வங்கிக் கிளைகளில் வழக்கம்போல்
பணிகள் நடைபெறும். ÷எல்.ஐ.சி., நேஷனல், யுனைடெட் இந்தியா, நியூ
இந்தியா, ஓரியண்டல் ஆகிய பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில்
வேலைநிறுத்தம் முழு அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும்,
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.÷பொதுத்
துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும்
ஊழியர்களில் பெரும் பகுதியினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தபால் துறையிலும் பணிகள் பெருமளவு
பாதிக்கும் எனத் தெரிகிறது. ÷ஆவடி ராணுவ கனரக வாகனத் தொழிற்சாலை,
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை ஆகிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களில்
பணியாற்றும் ஊழியர்கள் பெருமளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
கலந்துகொள்ளக்கூடும். ÷பொதுத் துறை நிறுவனங்களான திருச்சி பாரத
மிகு மின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சேலம் உருக்காலை
உள்ளிட்ட நிறுவனங்களில் பெருமளவு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசு
அலுவலகங்கள்: வருமான வரித் துறை, ஏ.ஜி. அலுவலகம், வருமான வரி, மத்திய
கலால் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் அதிக அளவில் வேலைநிறுத்தப்
போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ÷இந்தப்
போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
சங்கம் ஆகிய சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. எனினும், போராட்டத்துக்கு
மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் போதுமான ஆதரவு இருக்காது எனக்
கூறப்படுகிறது. ÷சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வணிக வரித்
துறை அலுவலகம் உள்ளிட்ட சில அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை குறைவாக
இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து: அரசு
போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த முக்கிய தொழிற்சங்கங்கள்
வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. எனினும் இதற்கு
போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் ஆதரவு இருக்காது என்று கூறப்படுகிறது. ÷எனவே சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு பஸ் போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது எனத் தெரிகிறது.÷ரயில்வே
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும்,
போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே, ரயில் போக்குவரத்தில் பாதிப்பு
இருக்காது. ÷தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்று பல
தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் மாநிலத்தில் குறிப்பாக சென்னையில்
சுமார் 50 சதவீத அளவுக்கு ஆட்டோ போக்குவரத்தில் பாதிப்பு இருக்கலாம் எனக்
கூறப்படுகிறது. ÷திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத்
தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படும் என்றும், கோவை மாவட்டத்தில் பொறியியல்
மற்றும் டெக்ஸ்டைல்ஸ் சார்ந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி முழுமையாகப்
பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ÷மேலும், சிவகாசியில்
தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், பீடித்
தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரும், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்
தொழிலாளர்களும் பெருமளவில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் நிலை உள்ளது.மறியல்
போராட்டம்: இதற்கிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200
இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த
சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. ஆகிய இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைப்பு
விடுத்துள்ளன.÷சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபடவும் அந்த சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மக்களுக்கு தா. பாண்டியன் அழைப்பு
» ஆகஸ்ட் 1 முதல் லாரிகள் நாடு தழுவிய ஸ்டிரைக்
» வங்கி ஊழியர்கள் வரும் 7ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்!
» டிசம்பர் 19-ந்தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்..
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இன்றும், நாளையும் நடக்கிறது...Bank employees nationwide strike

Permissions in this forum:
You cannot reply to topics in this forum