Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சாத்தூர் அருகே ரயில் தடம்புரண்டது: பயணிகள் தப்பியது எப்படி ? விபத்துக்கு காரணம் என்ன ?
Page 1 of 1

விருதுநகர்: சாத்தூர் அருகே கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ரயில் பெரும்
விபத்தில் இருந்து தப்பியது. ரயில் தடம் புரண்டதையடுத்து தென்மாவட்டம்
செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்ப்பட்டன. பயணிகள் தங்களுடைய ஊருக்கு
செல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் ரயில் பாதை
சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில்
புறப்பட்டது. ரயிலை டிரைவர்கள் குமாரசாமி, பெஞ்சமின் ஓட்டி வந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு இரவு 1மணியளவில் வந்தது. சாத்தூரில்
இருந்து புறப்பட்டு 1.06 மணிக்கு சாத்தூரில் இருந்து வெங்கடாஜலபுரம் எனும்
இடத்தில் வந்த போது, ரயில் தண்டவாள இணைப்பு இரண்டு அடிக்கு நீளத்திற்கு
உடைந்தது. இதனால் ரயில் இன்ஞ்சின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தை விட்டு
விலகி, சுமார் 800மீட்டர் தொலைவுக்கு வெளியே சென்றது. டிரைவர்களின்
சாமர்த்தியத்தால் ரயில் பெட்டிகளும் எதுவும் கவிழவில்லை. இதனால் பெரும்
விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயிலில் சுமார் 1500 பயணிகள் பயணித்தனர். அவர்களில் யாருக்கும் சிறு
காயம் கூட ஏற்படவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ரயில்வே போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மதுரை
ரயில்வே ஊழியர்கள் மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது.
என்ன என்ன ரயில்கள் நிறுத்தம் : இந்த சம்பவத்தினால் சென்னையில்
இருந்து தென்பகுதிக்கு வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே
நிறுத்தப்பட்டன. தென் மாவட்டத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும்
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்,
மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டன.
கொல்லம் டூ மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில் சாத்தூரில் நிறுத்தப்பட்டன.
கொல்லம் டூ மதுரை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை
எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் , மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக
ரயில் பயணிகள் ஆங்காங்கே தவித்தனர். சென்னையில் இருந்து விருதுநகர் வழியாக
இன்று காலையில் செல்லும் தூத்துக்குடி மங்களூர், செங்கோட்டை எக்ஸ்பிரஸ்,
தென்காசி பாசஞ்சர் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் அடியோடு
பாதிக்கப்பட்டுள்ளன. காலை 9 .45 க்கு மேல் ஒவ்வொரு ரயில்களாக அனுப்பி
வைக்கப்பட்டன.
பயணிகள் தவித்தனர் : சாத்தூர் அருகே ரயில் விபத்து நடந்ததும்
பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். அருகில் பஸ் வரும்
சாலைக்கு அனைவரும் நடந்து சென்று தங்களுடைய பயணத்தை துவக்கினர். பயணிகள்
மீட்டு உரிய பயணத்திற்கு செல்ல பஸ் போக்குவரத்தை ரயில்வே அதிகாரிகள்
செய்யவில்லை என பயணிகள் குமுறினர். இது குறித்து விருதுநகர் ரயில்வே
அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து
எதுவும் உத்தரவு வரவில்லை என்றனர்.
மீட்பு பணிக்கு சென்ற ரயில்வே ஊழியர் பலி : இதனிடையே ரயில்
என்ஜினை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் ஆட்டோ ஒன்றில் வந்து கொண்டு
இருந்தனர். அப்போது அவர்கள் வந்த ஆட்டோ மீது எதிர்பாரா விதமாக கார் ஒன்று
மோதியது. இதில் கேங்மேன் மதுரை வீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உதவி இன்ஜினியர் ராமசுப்ரமணியன், டிராலி மேன் மாரியப்பன் ஆகியோர்
காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் தப்பியது அதிர்ஷ்டவசமே : இந்த ரயில் தண்டவாளம்
உடைந்தும் ரயில் பெட்டிகள் கவிழாமல் இருந்தததால் பயணிகள் யாருக்கும்
உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பெரும் விபத்து எவ்வாறு தவிர்க்கப்பட்டது
பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி என்ற விவரத்தை அங்குள்ள நமது தினமலர்
நிருபர் தரும் தகவல் வருமாறு :
சாத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் இந்த
விபத்து நடந்திருகிறது. முதலில் தண்டவாளம் உடைந்து கிடந்ததால் ரயில்
இன்ஞ்சின் இந்த இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு இழுத்து
சென்றுள்ளது. இதில் இன்ஞ்ஜின் 4 வீல் , சிலிப்பர் கட்டை மற்றும் கற்கள்
மீது ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் பெட்டிகள் எதுவும் தண்டவாளத்தை
விட்டு அகலவில்லை என்பது தான் பெரும் உயிர்ச்சேதம் இல்லாமல் விபத்து
முடிந்தது.
மேலும் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில்தான் ரயில் வந்திருக்க
வாய்ப்பு என்பதால் இன்ஞ்ஜின் 800 மீட்டர் தொலைவுக்குள் ரயில் நின்று
விட்டது. வேகம் அதிகரித்து வந்திருந்தால் ரயில் கட்டுப்பாடு இழந்து
பெட்டிகள் கவிழ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் . என்கிறார் நமது நிருபர்.
80 ஆண்டுகள் பழமையானவை : சாத்தூர் அருகே உள்ள இந்த ரயில் பாதை
நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இது போன்று ரயில்
தண்டவாளத்தில் உடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பாதையில் நாள்
ஒன்றுக்கு 30 ரயில் வந்து செல்கிறது. குறிப்பாக சரக்கு ரயில்களே அதிகம்.
இநத தண்டவாளம் 80 ஆண்டுகள் பழமையானவை. எனவே பலம் இழந்து காணப்படுகிறது.இது
குறித்து வர்த்தக சங்கத்தினர் ரயில்வே துறைக்கு ரயில்பாதை புதுப்பிக்கப்பட
வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது . இது செவிடன் காதில் ஊதிய சங்காக
போனது என்கின்றனர் இந்த சங்க பிரமுகர்கள்.
சதித்திட்டம் இல்லை : இந்த சம்பவத்தில் சதி வேலை என்ற
கேள்விக்கு உரிய முகாந்திரம் இல்லை. ரயில் தண்டவாளம் உடைந்த இடத்தில்
வெடிபொருட்களோ, திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை.
எனவே சதித்திட்டம் இல்லை என லோக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே விளக்கம் : இந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள
தென்னக ரயில்வே, சாத்தூர் மற்றும் துலுக்கப்பட்டி இடையே
கன்னியாகுமரி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதில் யாருக்கும்
காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். விபத்து
குறித்து விசாரணை நடந்து வருகிறது. பயணிகள் அனைவரும் தமிழக மாநில அரசு
போக்குவரத்து கழக பேருந்துமூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு
டிவிசனல் ரயில்வே மேலாளர் ஏ.கே கோயல், கூடுதல் டிவிஷனல் ரயில்வே மேலாளர்
வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்ட ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு
விரைந்துள்ளனர். விபத்து காரணமாக கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக
விருதுநகர் மற்றும் நாகர் கோவில் இடையே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த
ரயிலில் பயணிக்க திட்டமிட்டவர்கள் மும்பை நாகர் கோவில் எக்ஸ்பிரஸ்,
சென்னை எக்மோர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம்
விருதுநகரிலிருந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். மற்ற ரயில் சேவைகள்
வழக்கம் போல் இயங்கும் என்று கூறியுள்ளது.

Similar topics
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 15 பேர் பலி?
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» அசாம்-புரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 50 பேர் காயம்
» பள்ளி மாணவ, மாணவியர் சமயோஜிதம் : பெரும் விபத்தில் இருந்து ரயில் தப்பியது
» உத்திரப்பிரதேசம் ரேபரலி அருகே ரயில் விபத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum