Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் அரசு டாக்டர்கள்
Page 1 of 1

தமிழக அரசு மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில்
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து,
அதன் மூலம் டாக்டர்கள் கமிஷன் பெறுவது அதிகரித்துள்ளது. அரசு
மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை
அனைவரையும் தனியார் மருத்துவமனைகள் தக்க கவனிப்பு மேற்கொள்வதால் அரசு பணம்
விரயமாக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உயிர்
காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச காப்பீட்டு திட்டம் 2009 ஜூலை 23ல்
துவக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 17 மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த திட்டம்
நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர 1,000க்கும் மேற்பட்ட தனியார்
மருத்துவமனைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்
மூலமாக இதயம், இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக
நோய்கள், ரத்த நோய்கள் உட்பட 51 வகையான நோய்களுக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற் கொள்ளப்படும் அறுவை
சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளுக்கும் ஸ்டார் ஹெல்த்
இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் செலுத்துகிறது. முதல் கட்ட சோதனைகளுக்கு மட்டும்
சிகிச்சை பெறுபவர் பணம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை பேரில்
இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நோயாளிகளுக்கு
அளிக்கப்படும் அறுவை சிகிச்சைக்கு தக்கபடி அதற்கான கட்டணத்தை இன்ஷூரன்ஸ்
நிறுவனமே நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனைகளில்
மேற்கொள்ளப்படும் சிகிச்சை கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகம் பெற்றுக்
கொள்கிறது.
அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு
இன்சூரன்ஸ் நிறுவனம் நிர்ணயித்த தொகை பிரித்து வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண தொகையில் 60 சதவீதம் அரசு எடுத்துக்
கொள்கிறது. மீதமுள்ள 40 சதவீதத்தில் 25 சதவீதம் அறுவை சிகிச்சை
மேற்கொள்ளப்படும் துறைக்கும், 15 சதவீதம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட
டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட சிகிச்சை அளித்த அனைத்து
ஊழியர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. அவ்வாறு பிரித்து வழங்கப்படும்
தொகை என்று எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்களுக்கு
கிடைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு அறுவை
சிகிச்சை மேற்கொண்டால் டாக்டர்கள் குழுவுக்கு 1,500 ரூபாய் கிடைக்கிறது.
இந்த தொகையை ஆறு பிரிவு டாக்டர்கள் பிரிக்கும் பட்சத்தில் டாக்டர்
ஒருவருக்கு 200 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.
அதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட தனியார் மருத்துவமனைகள்
சில, தற்போது அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களை வளைத்து
போட்டு இந்த திட்டத்தின் கீழ் தங்கள் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து
வரும் ஊழியர்களுக்கு கமிஷன் வழங்க துவங்கி உள்ளது. இவ்வாறு வழங்கப்படும்
கமிஷன் அரசு மருத்துவமனையில் அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம்
கிடைக்கும் தொகையை விட அதிகமாக இருப்பதால், தற்போது அரசு மருத்துவமனை
டாக்டர்கள், நர்ஸ்களே தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை பரிந்துரை
செய்வதுடன் அழைத்துச் செல்லவும் துவங்கி விட்டனர்.
இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்
நோயாளிகளுக்கு முதல் கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள்
நோயாளிகளிடம் வந்து சேரும் நிலையில் டாக்டர்கள், ஊழியர்கள் நோயாளிகளிடம்
ஆசை வார்த்தைகளால் பேசி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்
செல்கின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டம் தோறும் கலெக்டர்
தலைமையில் மாவட்ட அளவிளான 15 துறை அலுவலர்களை கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவும் டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களை
கண்காணிப்பது இல்லை. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் இலவச காப்பீட்டு
திட்டத்தின் மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படும் பணத்தில்
அரசுக்கும், மருத்துவமனைக்கும் கிடைக்க வேண்டிய பணம் தனியாருக்கு தாரை
வார்க்கப்பட்டு வருகிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தனியார் மருத்துவமனைக்கு விரட்டப்படும் கர்ப்பிணிகள்: தாய்சேய் நல விடுதியில் அரங்கேறும் கொடுமை
» கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கோரி கரூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
» வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திற்கு 12.36% வரி - மத்திய அரசு
» கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நாளைமுதல் போராட்டம்: அரசு டாக்டர்கள் அறிவிப்பு
» நின்று விட்ட இதய துடிப்பை ஒரு மணி நேரம் போராடி மீட்டு அரசு டாக்டர்கள் சாதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum