Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கர்ப்ப கால நோய்கள்
2 posters
Page 1 of 1
கர்ப்ப கால நோய்கள்
கர்ப்பக்காலத்தில் மிகை ரத்த அழுத்தம், ரத்தசோகை, மூலநோய், ரத்த
நாளச்சிதைவு, மலச்சிக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் வருகின்றன. இவற்றில்
சில நோய்கள் கர்ப்பிணியின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன.
மிகை ரத்த அழுத்தம்
கர்ப்பிணிகளில்
15 விழுக்காட்டினர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் கள்.
இந்தியாவில் ஆறு சுகப் பிரசவங்களுக்கு மத்தியில் ரத்த அழுத்ததால் ஒரு
கர்ப்பிணி கர்ப்பக் காலம் அல்லதுபிரசவ காலத்தில் உயிரை இழக்கிறாள்.
ஆண்டுதோறும் 51 விழுக்காடு பெண்கள் மிகை ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
கருக்காலத்தில்
ஏற்படும் மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவை மிகை ரத்த அழுத்தத்தை
உண்டாக்குகிறது. துவக்கத்தில் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். நாட்கள்
செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.
கிராமப்புறங்களில்
இருக்கும் பெண்கள் கர்ப்பக் காலத்தில் கை கால்கள் வீங்கினால் எந்தப்
பொருளின் மீதோ ஆசைப்பட்டதால்தான் இவ்வாறு நேர்ந்தது என்று கண்டுகொள்ளாமல்
விடும் போக்கு இருக்கிறது.
கர்ப்பக்காலத்தைப் பொறுத்தவரை 20
முதல் முப்பது வயதுள்ள பெண்களுக்கு மிகை ரத்த அழுத்தம் உண்டாகிறது. கால்
பாதங்களில் வீக்கம், கண்களின் கீழ் ரப்பைகளில் வீக்கம் ஆகியவை தூங்கி
எழுந்ததும் அதிகமாக இருக்கும். சிறுநீரில் புரதம் அதிகமாகக்
காணப்படும்போதும். பிரசவ நேரத்தில் வலிப்பும்,மயக்கமும் உண்டாவதால் ரத்த
அழுத்தப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்
ரத்தசோகை
கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களை பாதிக்கும் முக்கிய நோய் ரத்த சோகை.
இந்த நோய் வர முக்கியக்காரணம் போதுமான ஊட்டச்சத்தை உண்ணாதது மற்றும் இரும்புச்சத்து குறைந்த உணவை உண்பது ஆகியவை.
இரும்புச்சத்து
குறைவாக கிரகிக்கப் படுதல், கிரகிக்கப்படாமல் வீணாதல், சரியான முறையில்
சேமிக்கப்படாமை,குடலில் புழுக்கள், நேர்யகள், வயிற்றுப் போக்கு ஆகியவை
காரணமாக ரத்த சோகை வரும்.
கர்ப்பக்காலத்தில் ரத்த சோகை
ஏற்பட்டால் குறைபிரசவம் நிகழவோ, குழந்தை கர்ப்பப் பையிலேயே இறந்துபோகவோ
வாய்ப்பு உண்டு. குழந்தை இறக்கா விட்டாலும் நோய்வாய்ப்படும்.
ரத்தசோகையால் கர்ப்பிணியின் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும்.
சரியான ஊட்டச்சத்தை சாப்பிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
ஜீரண மண்ட நோய்கள்
வயிற்றுப்போக்கு,
மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, வித்தியாசமான உணவுகளின் மீது
ஆசை, சீதளபேதி விக்கல் போன்ற பல தொல்லைகள் கர்ப்பக் காலத்தின்போது
ஏற்படுகிறது.
மலச்சிக்கல் இருந்தால் அதை உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மூலநோய் உண்டாகும்.
இதனால்தான் கர்ப்பிணிகளில் பலர் மூலநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு மலச்சிக்கல் மட்டுமின்றி, கருப்பை இடுப்புக்கூட்டுப் பகுதியை அழுத்துவதும் காரணம்.
பெரும்பாலான
வேளைகளில் கர்ப்பிணிகளின் மூலநோய் குழந்தை பிறந்ததும் சரியாகிவிடுகிறது
அவ்வாறு சரியாகாத பட்சத்தில் மருத்துவ சிகிச்சை அவசியம்.
உதிரப்போக்கு
கர்ப்பக்
காலத்தில் சில பெண்களுக்கு கருச்சிதைவின் காரணமாக உதிரப்போக்கு ஏற்படும்.
கருச்சிதைவுஏற்படாமல் அச்சுறுத்தும் கருச்சிதைவு ஏற்பட்டு ரத்த ஒழுக்கு
உண்டாவதும் உண்டு. சிலருக்கு மூக்கு,நுரையீரல், வயிறு அல்லது கருப்பை
போன்றவற்றிலிருந்தும் ரத்தப் போக்கு ஏற்படுகிறது.
ரத்தப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
ரத்தநாளச் சிதைவுகள்
தொடைகள்
மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் ரத்த நாளங்கள் பருத்து நீல நிறமாகத்
தெரியும். இந்தப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம்
அதிகரித்து சிலவேளைகளில் ரத்த நாளச் சிதைவு ஏற்படுகிறது. இதனால்
தாங்கமுடியாத வலியும், வேதனையும் இருக்கும்.
இதயப் படபடப்பு
மிகை
ரத்த அழுத்தத்தால் மட்டுமின்றி, உடலுக்கு போதுமான ஆக்சிஜன்
செல்லாவிட்டாலும் இதயப் படபடப்பு தோன்றும். இயல்பை விட இதயம் அதிகமாகத்
துடிப்பதால் களைப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நேர்ந்து விடுகிறது.
சுவாசக் குழல் நோய்கள்
வளரும்
கரு உதரவிதானத்தை அழுத்துவதால் மூச்சுவிட சிரமம் இருக்கும். பெருமூச்சு
வாங்கும். சிலருக்கு ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றக் கூடும். பனியில்
நனைதல் அல்லது ஈரமான இடத்தில் இருத்தல் போன்ற நிலைகளில் இருமல் போன்றவை
எடுக்கும். கோடைக் காலத்தில் வறட்டு இருமல் வரும். தொண்டையில் மாவுப்
பொருட்கள் படிந்து காணப்படுவதும் உண்டு.
சிறுநீரக பாதிப்புகள்
கரு
வளரும்போது கருப்பையானது சிறுநீரகத்தை அழுத்துவதன் காரணமாக தடையற்ற
சிறுநீர் பிரிதல், சிறுநீரக அழற்சி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல்,
நோய்த் தொற்று, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க
வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். ஆனால் சொட்டு சொட்டு சொட்டாக சிறுநீர்
பிரியும். இப்படிப்பட்ட நிலையில் தொடையிலும், பிறப்புறுப்பிலும் எரிச்சல்
உண்டாகும்.
சிறுநீர்த்தடை கூட கர்ப்பக்காலத்தில் ஏற்படும்.
சிறுநீர் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடுவதால் வீக்கம், வலி, நோய்த்
தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறுநீரை முற்றிலும் வெளியேற்ற இயலாத நிலை
வருகிறது.
பிறநோய்கள்
கர்ப்பக் காலத்தில் மார்பகங்களில்
மாற்றம் ஏற்படுவதால் மார்பக வலிகள், பல்வலிகள், முதுகு வலி, தசை வலிகள்,
பொய்யான வலிநிலைகள் போன்றவை ஏற்படும்.
இதை தவிர மனநிலை மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் கர்ப்பக்காலத்தில் வருகின்றன.
ஆகவே,
கர்ப்பிணிகள் கர்ப்பக் காலம் ஆரம்பித்தது முதல் பிரசவித்து குழந்தை
இயல்பாகும் வரை தொடர்ந்து மருத்துவரின் நேரடிப் பார்வையில் இருப்பது
நல்லது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கர்ப்ப கால குமட்டலை தடுக்க…
» கர்ப்ப காலத்தில் உடைகள்
» கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum