TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா
by வாகரைமைந்தன் Today at 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Go down

இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி  Empty இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

Post by piraba Wed Aug 25, 2010 7:39 am

ராணுவத்திடம்
பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு
'வீரமரணம்' அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன்.

இறுதிப்
போரில் புலிகள் தோற்று, தலைவர் பிரபாகரனும் களத்தில் 'இல்லை' என்றான
சூழலில், புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் கேபி.
ஆனால் அடுத்த சில தினங்களில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது
செய்யப்பட்டார். இலங்கை கொண்டு வரப்பட்டு ரகசிய விசாரணை செய்யப்பட்டார்.
கொஞ்ச காலம் அவரைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.

ஆனால் அவர்
இலங்கை அரசுக்கு ஆதரவாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, அவரைப் பற்றிய
செய்திகளும், அவர் அளிக்கும் பேட்டிகளும் இலங்கை ஊடகங்களில் தொடர்ந்து
இடம்பெற்று வருகிறது.

இப்போது வடக்கு கிழக்கு புணரமைப்பு அமைப்பின்
செயலராக உள்ள கேபி, உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி பெற்று அதனை,
வடக்கு கிழக்கு புணரமைப்புக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அவர் மிக நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் இந்த வாரம் வெளியாகியுள்ள பகுதியில், பிரபாகரன் எப்படி 'கொல்லப்பட்டார்' என்று மிக விரிவாக விளக்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளவற்றில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்...

"பிரபாகரனையும்
அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும்
காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதற்காக 1.5 மில்லியன்
அமெரிக்க டாலர் தேவைப்பட்டது. அதனை காஸ்ட்ரோ தருவதாகக் கூறினார். ஆனால்
கடைசி வரை தரவே இல்லை.

பிரபாகரனைக் காப்பாற்றிய பெயர் எனக்குக்
கிடைத்துவிடுமே என்று அவர்களுக்குப் பொறாமை. அதனால்தான் இப்படி ஆனது.
இயக்கத்தில் தனிநபர் ஆதிக்கம் மிகுந்ததால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

இறுதிப்
போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன்.
அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை
ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை
நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால்
மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி
தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும்
கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம்.

அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது.

அடுத்த
நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன்.
பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது.
தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன்.

ஆனால் நிச்சயமாக என்ன
நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத்
தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது
தலைவர் பிரபாகரனின் உடல்தான்.

அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும்,
பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி
வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக்
கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது.

ராணுவத்தின் மிக உயர்
அதிகாரி ஒருவர் என்னிடம் பிரபாகரனின் இறுதி நேர போரைப் பற்றி மிக
பெருமையாகக் கூறினார். அந்த அதிகாரி யார் என்பதை நான் சொல்ல மாட்டேன்.
கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்தவர்தான்.

நந்திக் கடல் பகுதியில்
பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களும் மிக வீரமாகவும் கடுமையாகவும்
சண்டையிட்டார்களாம். இதில் இறுதி நேரம் வரை சற்றும் பின்வாங்காமல்
பிரபாகரன் சண்டையிட்டே வீர மரணம் அடைந்துள்ளார். இதை ராணுவம்
உறுதிப்படுத்தியது.

பிரபாகரனின் குடும்பத்தினர் மொத்தமாக இந்த சண்டையில் இறந்துவிட்டதும் உண்மையே. சாள்ஸ் ஆண்டனி அவர்களைக் காக்க கடைசி வரை முயன்றார்.

பிரபாகரனின்
மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் போரில் இறந்தனர்.
துவாரகாவும் புலிகள் இயக்கத்தில் போராளியாகவே இருந்தார். பிரபாகரன் மனைவி
மதிவதனி மே 14ம் தேதியே இறந்துவிட்டார்.

பிரபாகரன் தனது மகனையும்
மகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார் என்று சிலர் கூறுவதில்
உண்மையில்லை. பிரபாகரன் தனது பிள்ளைகள் வெளிநாடு செல்வதை அனுமதிக்கவில்லை.
அவரது குடும்பம் முழுவதும் இயக்கத்தில்தான் இருந்தது.

பிரகபாகரனின்
இளைய மகன் பாலச்சந்திரன் மீது எனக்கு பாசம் அதிகம். அவனது மரணம் என்னை
வெகுவாக பாதித்துவிட்டது. அவனிடம் அடிக்கடி நான் போனில் பேசியிருக்கிறேன்.
கடைசி நேரத்தில் கேபி மாமாவுடன் நான் போகப் போகிறேன் என்று ஒரு சிறு பையை
எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தானாம். அதை
நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது...", என்று அவர் கூறியுள்ளார்.

(பிரபாகரன் மரணம் அறிந்து வைகோ குலுங்கி அழுதார்-கேபி பேட்டியின் தொடர்ச்சி நாளை)

nandri thatstamil
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum