Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை: இலங்கை தமிழ் எம்.பி.க்கள்
Page 1 of 1

சென்னை, ஜூலை 20:
இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை
என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.இலங்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,
மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், விநாயகமூர்த்தி ஆகிய
6 தமிழ் எம்.பி.க்கள் ஜூலை 9-ம் தேதி முதல் 5 நாள்கள் புது தில்லியில்
முகாமிட்டு இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினர். பிரதமர்
மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா,
ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத் துறை
செயலாளர் நிருபமா ராவ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்
பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா
ஆகியோரை தமிழ் எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து
விவாதித்தனர். புது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு
திரும்பிய தமிழ் எம்.பி.க்கள், மீண்டும் சென்னைக்கு வந்து முதல்வர்
கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தியத்
தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து
சுரேஷ் பிரேமச்சந்திரன் "தினமணி'க்கு அளித்த பேட்டி: இலங்கையில்
இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற
முடியாமல், ராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அடியோடு
இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உதவியும்
செய்யவில்லை. இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத் தேவையான 10
தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது.
எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும்
அவல நிலை வடக்குப் பகுதியில் உள்ளது.தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு
எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர்களின் சொந்த மண்ணில் சிங்கள
குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இப்போது
இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 லட்சம் சிங்கள ராணுவ வீரர்கள்
நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை
அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் சிங்களவர்களை வடக்குப்
பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தமிழர்களின்
விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும்
நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள
இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள்
ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு
வருகிறது.தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பதுதான் இப்போது அவசரத்
தேவையாக உள்ளது. எனவே, போரின்போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள்
அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ்
மக்களின் வீடு, விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது
மிக அவசியமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பல
வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். அவர்கள்
அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது
என்ற கேள்வியையே கேட்கின்றனர். இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது. எனவே,
இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்திரமாக
வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு
ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை
இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால்
மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்
தர முடியும். இதைத்தான் எங்கள் பயணத்தின்போது இந்தியத்
தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை
இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன்
இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதைத்தான்
நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம்
பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார். தமிழகத்துக்கு
முக்கிய பங்கு: எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து
அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல்
மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால்
மட்டுமே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும். ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது.இப்போது
முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச்
செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித்
தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இந்தியாவை நெருங்க சீனக்கைதிகள் இறக்குமதி: இலங்கை தமிழ் எம்.பி., பேட்டி
» இந்தியாவை முதுகில் குத்திய இலங்கை.
» இந்தியாவை வேவு பார்த்த சீன உளவுக் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை!
» இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழுவை புறக்கணித்தது அ.தி.மு.க.,
» இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணுகின்றது – சுமித் கங்குலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum