Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழில் படித்தால் அரசுப் பணி: தயாராகிறது சட்ட முன்வடிவு
Page 1 of 1
தமிழில் படித்தால் அரசுப் பணி: தயாராகிறது சட்ட முன்வடிவு
சென்னை,
ஜூலை 3: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பது
தொடர்பாக சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள்
சட்ட முன்வடிவினை தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.உலகத்
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது
மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்,
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகத்தில்
முதல்வர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.அதன் விவரம்:பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள்: தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் (Genetic Gardens)அமைக்கப்படும்
என்ற அறிவிப்பு பற்றி பேசப்பட்டது. இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.பி.யோடு கலந்து பேசியிருப்பதால், அவர் தில்லியில் இருந்து
திரும்பியதும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பூங்காக்களை
தொடங்குவதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த
பதினைந்து நாள்களுக்குள் அது பற்றிய அனைத்து விவரங்களும் முதல்வரிடம்
தாக்கல் செய்யப்படும் என்றும் வேளாண்மைத் துறை செயலாளர் பதிலளித்தார்.இலங்கைத்
தமிழர் பிரச்னை - பிரதமருக்கு விரைவில் முதல்வர் கடிதம்: இலங்கைத்
தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு காண மத்திய அரசு
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. இந்த தீர்மானம்
குறித்து கடந்த வாரம் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் வெளியுறவுத் துறை
செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக பிரதமருக்கு
முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.மத்தியில்
தமிழ் ஆட்சி மொழி: மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டுமென்ற
தீர்மானம் குறித்து பேசிய போது, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை
முன்மொழிந்து அதன் மீது விவாதம் கோரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட
வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விவாதித்த போது, இதுகுறித்து ஏற்கெனவே
முதல்வர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு
2006-ம் ஆண்டிலேயே அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றியும்
விவாதிக்கப்பட்டு, மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை அணுகி வலியுறுத்த
வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.தமிழ் மொழிக்கும் கூடுதல் நிதி உதவி: பல்வேறு
மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, எந்த அளவுக்கு செலவு செய்கிறது
என்பதை பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு, தேவையான திட்டக் குறிப்புகளுடன்
தமிழ் மொழிக்கும் கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசை அணுகுவதென்று
முடிவெடுக்கப்பட்டது.இந்திய தேசியக் கல்வெட்டியல் நிறுவனம்: இந்திய
தேசியக் கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென்ற
தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மத்திய அரசுக்கு ஏற்கெனவே முதல்வர்
கருணாநிதி எழுதிய கடிதத்தை நினைவுபடுத்துவதென்றும், இதற்காக தொல்லியல்
அறிஞர் ஐராவதம் மகாதேவனின் முயற்சிகளை கோருவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.கடல்கொண்ட
பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி
செய்வது தொடர்பாக பேசியபோது, இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில்
பிரதமருக்கு, முதல்வரிடம் இருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்றும்
முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாகத் தமிழ்
ஆக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில்,
இதுகுறித்து தலைமைச் செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.தமிழில் படித்தவர்களுக்கு
அரசுப் பணியில் முன்னுரிமை: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில்
முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என்ற முடிவு குறித்து
விரிவாகப் பேசப்பட்டது. சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து
நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.÷இக்கூட்டத்தில்
நிதியமைச்சர் க.அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.ராசா,
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம்,
துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன்,
பூங்கோதை, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி மற்றும் பல்வேறு அரசு துறைச்
செயலாளர்கள் பங்கேற்றனர்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» windows 7 மற்றும் 8 OS .தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது . ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .
» படித்தால் தான் எனக்கு வாழ்க்கையே பெற்றோர் இல்லாத முதல் மாணவி
» ஈ மெயில் படித்தால் பணம்
» ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?
» தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி!
» படித்தால் தான் எனக்கு வாழ்க்கையே பெற்றோர் இல்லாத முதல் மாணவி
» ஈ மெயில் படித்தால் பணம்
» ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?
» தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum