Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் தவிப்பு: எஸ்.ஐ., தேர்வு எழுத அனுமதி மறுப்பால் விரக்தி
Page 1 of 1

சென்னை : திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் எஸ்.ஐ.,
தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தேர்வு எழுத வந்திருந்த போலீசார்
மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக காவல்துறையில்
எஸ்.ஐ., பணிகளுக்கு 1,095 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்காக,
காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு நேற்றும், நேரடியாக
விண்ணப்பித்தவர்களுக்கு இன்றும் தேர்வுகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
காவல்துறையில் குறைந்தபட்சம் ஐந்து வருட பணி மற்றும் பட்டம் பெற்றவர்கள்
இத்தேர்விற்கு தகுதியானவர்கள். இவர்களில் இருந்து 20 சதவீதமும், நேரடியாக
விண்ணப்பித்தவர்களில் இருந்து 80 சதவீதம் பேரும் தேர்வு செய்யப்படுவர்.
காவல்துறையில் பணிபுரிபவர்களில் திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம்
பெற்றவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். திறந்தவெளி
பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட ஹால்
டிக்கெட்டில் தேர்வு எழுத தேவையான கல்வித் தகுதிகள் குறித்து
விளக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாணையத்தின் சார்பில்,
குறிப்பாணை அனுப்பி இருந்தனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும்
இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவர் என குறிப்பிட்டிருந்தனர்.
தமிழகம் முழுவதும் 36 மையங்களில் எஸ்.ஐ., பணிக்கான தேர்வு நேற்று
நடந்தது. "திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எஸ்.ஐ., தேர்வு எழுத
தேர்வாணையம் அனுமதித்துள்ளது' என, செய்தி வெளியானது. அதை நம்பி, தமிழகம்
முழுவதும் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத ஏராளமானோர் குவிந்தனர்.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 700க்கும் மேற்பட்ட
காவலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதால் தேர்வு எழுத
அனுமதி மறுக்கப்பட்ட காவலர்கள் கூறியதாவது: கடந்த 1999ம் ஆண்டு முதல்
2007ம் வரை எஸ்.ஐ., பதவிகளுக்கு ஆண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அப்போது திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் காவலர்கள்,
எஸ்.ஐ., பதவிக்கான தேர்வில் அனுமதிக்கப்பட்டு பலர் தேர்வாகினர். பின்,
2007ம் ஆண்டில் நடைபெற்ற தேர்வில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம்
பெற்ற பல ஆண் காவலர்கள், எஸ்.ஐ., தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு, இன்றும்
பலர் எஸ்.ஐ., பணியில் உள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து, திறந்தவெளி
பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற எங்களுக்கு மட்டும் தேர்வு எழுத அனுமதி
மறுக்கப்படுவது நியாயமற்றது. இவ்வாறு போலீசார் கூறினர்.
காரணம் என்ன? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இயக்குனர்
டி.ஜி.பி., திலகவதி கூறியதாவது: தமிழகத்தில் 1,095 எஸ்.ஐ.,
பணியிடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன. இன்று(நேற்று) 32 மையங்களில்,
போலீஸ் பணியில் இருக்கும் 10 ஆயிரத்து 632 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
நாளை (இன்று) பொதுப்பிரிவை சேர்ந்த 71 ஆயிரத்து 704 பேர், 56 மையங்களில்
தேர்வு எழுதுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் முழுமையாக
சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
எஸ்.ஐ., கல்வித் தகுதிக்கான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய
முடியாது. அதே போன்று பொதுப்பிரிவிலும் 2,015 பேரது விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திலகவதி கூறினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பள்ளி வேன் விபத்தில் 13 பேர் காயம்:பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு
» அக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும் எழுத ஐகோர்ட்டு அனுமதி
» பெரியார் பல்கலையில் தேர்வு முடிந்த அடுத்த நாளே ரிசல்ட்!
» இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த நந்தினிக்கு சீனா பல்கலையில் அனுமதி
» பாலியல் தொடர்பான பகுதியில் வாத்சாயனர் அருளிய காம சூத்ராவை தமிழில் மொழிபெயர்த்து எழுத அனுமதி தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum