TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு

Go down

விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு Empty விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு

Post by piraba Sun Jun 13, 2010 8:03 am

Last Updated :



விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு 12vtrain



விழுப்புரம் அருகே சித்தணியில் சனிக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில்
சிதைந்த தண்டவாளமும், அதற்கு முன் 20 அடி தூரத்தில் நிறுத்தப்பட்ட
மலைக்கோட்டை விரைவு


விழுப்புரம்,
ஜூன் 12: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையை கண்டித்து
விழுப்புரம் அருகே சனிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் வெடிவைத்து
தகர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சேலம் விரைவு ரயிலும், மலைக்கோட்டை
விரைவு ரயிலும் தப்பின.÷சென்னையிலிருந்து 145-வது கி.மீ. (பி
145-10) தூரத்திலும், விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் உள்ள
சித்தணி என்ற ஊர் அருகே இந்த சதிவேலை நடந்தது.÷அதிகாலை 2.15 மணிக்கு அந்த இடத்தை சேலம் விரைவு ரயில் கடந்தபோது, தண்டவாளத்தில் அதிர்வு தெரிந்துள்ளது.÷இது
குறித்து கடைசி பெட்டியிலிருந்த ரயில் கார்டு அடுத்த ரயில் நிலையமான பேரணி
ரயில் நிலைய அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கும், முந்தைய ரயில் நிலையமான
முண்டியம்பாக்கத்துக்கும் தெரிவித்தார்.÷அடுத்ததாக சென்னைக்கு
சென்று கொண்டிருந்த மலைக்கோட்டை விரைவு ரயிலுக்கு இது குறித்து
கட்டுப்பாட்டு அறையிலிருந்தும், முண்டியம்பாக்கம் ரயில்
நிலையத்திலிருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டன.÷எனவே ரயில் ஓட்டுநர்
கோபிநாத்ராவ் 10 கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக ரயிலை செலுத்தினார்.
அப்போது சித்தணி அருகே ரயில் வந்தபோது 3 அடிக்கு ரயில் தண்டவாளம் இல்லாமல்
இருந்ததைக் கண்டு 20 அடி தூரத்தில் ரயிலை நிறுத்தினார்.உடனடியாக
இது குறித்து அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சதிச் செயல்
2.15 மணியிலிருந்து 2.45 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.சம்பவ
இடத்துக்கு போலீஸôர், ரயில்வே பாதுகாப்பு போலீஸôர் உள்ளிட்ட உயர்
அலுவலர்கள் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் தண்டவாளத்திலிருந்து 150
அடி தூரத்தில் உள்ள செந்தாமரை என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மின்
மோட்டார் இணைப்புக்கான மின் கம்பத்தில் உள்ள பீஸ் கேரியர்களை எடுத்து
அதில் மின் இணைப்பு கொடுத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.மின்சாரம்
பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது ஜெலட்டின் வெடிபொருளாக இருக்கலாம் என்று
போலீஸôர் கருதுகின்றனர். வெடிகுண்டு வைக்கப்பட்ட இடத்தில் 1 மீட்டர்
அளவுக்கு தண்டவாளம் பல துண்டுகளாக சிதறி 30 மீட்டர் தூரத்தில்
விழுந்துள்ளது.80 செ.மீ. ஆழம் வரை பள்ளம் விழுந்துள்ளது.
வெடித்தபோது ஏற்பட்ட தண்டவாளத்தின் சிதறல்கள் பட்டு மின்சார ரயிலுக்கான
மின்வயரும் இரண்டு இடங்களில் சேதமடைந்தன.தண்டவாளத்தின் கீழ் இருந்த
இரண்டு சிமென்ட் சிலீப்பர்கள் தூள்தூளாக சிதறின. சம்பவ இடத்தில் கையால்
எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன. அதில் ராஜபட்சவின்
இந்திய வருகையைக் கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணைபோனதாக இந்திய
அரசையும், தமிழக அரசையும் கண்டித்தும் எழுதப்பட்டிருந்தது.எனவே சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று போலீஸôர் கருதுகின்றனர்.இந்த
சம்பவத்தால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பயணிகள் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு, பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.சம்பவ
இடத்தில் கைரேகை நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படைகளின் 5 மோப்ப நாய்கள்
வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தன.இதில் ஒரு நாய் சம்பவ
இடத்திலிருந்து சித்தணி சாலை வழியாக 5 கி.மீ. தூரம் ஓடி விழுப்புரம் -
சென்னை பிரதான சாலையை அடைந்தது. அங்கிருந்து எங்கும் செல்லவில்லை. எனவே
குற்றவாளிகள் சென்னை அல்லது விழுப்புரத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம்
என்று கருதப்படுகிறது.ரயில் தண்டவாளம் தகர்ப்பு குறித்து விசாரணை
அலுவலர்கள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, ரயில்வே ஊழியர்கள்
தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் வேகமாக ஈடுபட்டனர்.இப்பணிகள் காலை
8.40 மணிக்கு நிறைவு பெற்று, விபத்திலிருந்து தப்பிய மலைக்கோட்டை விரைவு
ரயில் மிக மெதுவாக அந்த இடத்தை கடந்துச் சென்றது. அப்போதும் ரயிலிலிருந்த
சில பயணிகளின் முகத்தில் அதிர்ச்சி விலகவில்லை என்பது தெரிந்தது.இந்த
ரயிலைத் தொடர்ந்து திருச்சி-மங்களூர் விரைவு ரயில் 9.10 மணிக்கும், கம்பன்
விரைவு ரயில் 9.30 மணிக்கும் அந்த இடத்தை கடந்துச் சென்றன. சுமார் 6 மணி
நேரம் தாமதமாக ஒவ்வொரு ரயிலும் புறப்பட்டுச் சென்றன.விபத்து
பகுதியில் ரயில்வே டிஐஜி பொன் மாணிக்கவேலு, விழுப்புரம் சரக டிஐஜி இ.மா.
மாசானமுத்து, எஸ்.பி, பொ. பகலவன், மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி,
டி.ஆர்.ஓ ந.வெங்கடாசலம், உள்நாட்டு பாதுகாப்பு ஐஜி சங்கர் ஜுவால்,
தனிப்பிரிவு ஐஜி பிரமோத், திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர்
காந்தி, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பி.சி. சின்ஹா, ஐ.ஜி குணசீலன்,
கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமார், ஆய்வாளர் ராஜ்பாபு, வெடிகுண்டு நிபுணர்
குழு கே.எஸ். அதியமான், தடய அறிவியல் நிபுணர் ஆர். சண்முகம், ரயில்வே
மண்டல மேலாளர் அனுராக், முதன்மை திட்ட கோட்ட பொறியாளர் சதீஷ் உள்ளிட்ட
உயர் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நக்சல் அட்டகாசம்; 4 தண்டவாளம் தகர்ப்பு ; ரயில்கள் தப்பின ; போக்குவரத்து நிறுத்தம்
» விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி!
» விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கு: திணறும் க்யூ பிரிவு போலீஸôர்: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுமா?
» மீஞ்சூர் அருகே தண்டவாளம் உடைந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்தது: பயணிகள் காயத்துடன் தப்பினர்
» ரயில் பாதை தகர்ப்பு விவகாரம் : காங்., எம்.எல்.ஏ., மீது பகீர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum