Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோவையில் கொண்டாட்டம் : திருப்பூரில் திண்டாட்டம்
Page 1 of 1

அதீத கற்பனையா, அச்சமா, ஆரூடமா என்னவென்று அதைச் சொல்ல முடிய வில்லை;
இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், தீபாவளிக்குள் திருப்பூரே பாதி காலியாகி
விடும் என்கிறார்கள். இதற்கு முன்னாலும் இப்படிப்பட்ட சோதனைகளை சந்தித்து,
அதிலிருந்து மீண்டு வந்த அனுபவம், திருப்பூருக்கு இருக்கிறது.ஆனால்,
புயல், சுனாமி, சூறாவளி எல்லாமே சேர்ந்து வந்ததைப் போல், பல பிரச்னைகளில்
ஒரே நேரத்தில் சிக்கி, திக்கித்திணறிக் கொண்டிருக்கிறது திருப்பூர்.
பிரச்னைக்கு தீர்வு காண, ஒன்றாய்ச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய
அமைப்புகள், மறைமுகமாக மல்லுக்கட்ட, அமைதியாய் வேடிக்கை பார்க்கின்றன
அரசுகள்.இன் றைக்கு இந்தியாவின் பின்னலாடைத் தலைநகராக வீறு கொண்டு எழுந்து
நிற்கும் திருப்பூர், 30 ஆண்டுகளுக்கு முன்னால் பல்லடம் தாலுகாவில் உள்ள
ஒரு சிறு நகரம். இப்போது திருப்பூர் மாவட்டத்துக்குள் பல்லடம் ஒரு பகுதி.
இப்படியொரு அசுர வளர்ச்சியை, அப்போது யாரும் கற்பனை கூட செய்திருக்க
முடியாது.
ஆண்டுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும்
திருப்பூர் நகரம், உள் நாட்டுச் சந்தைக்கு 6000 கோடி ரூபாய்க்கு ஆடைகளை
அனுப்புகிறது. வரும் 2015க்குள் திருப்பூரின் ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி
ரூபாயைத்தாண்டும் என்று சவால் விட்டுச் சென்றிருக்கிறார் ஜவுளித்துறைக்கு
முக்கிய பொறுப்பிலுள்ள ஓர் இளைஞர்.ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்பு, அப்துல்
கலாம் முன்னிலையில் எடுத்த இலக்கையே எட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள்
ஏற்றுமதியாளர்கள். 2010க்குள் திருப்பூரின் ஏற்றுமதி இலக்கு, 20 ஆயிரம்
கோடி ரூபாயைத் தாண்ட வேண்டுமென்று தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்
கலாம்.காலம் ஓடியதே தவிர, கலாம் சொன்னது நடக்கவில்லை. அதற்கிடையில்,
அடுத்தடுத்து பிரச்னைகள் வரிசை கட்டி நிற்க, பின்னலாடைத் தொழில் பின்னடைவை
நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாத
நிலையிலேயே, இத்தொழிலில் காலூன்றி ஜெயித்தவர்கள் திருப்பூர்காரர்கள்.
சாய ஆலைப் பிரச்னை, தொழிலாளர் பற்றாக்குறை, உலக பொருளாதார
நெருக்கடியால் ஏற்றுமதியில் ஏற்பட்ட சறுக்கல், மிரட்டும் மின் தடை,
வட்டியில் தாளிக்கும் வங்கிகள்... இத்தனை சோதனைகளையும் தாண்டி, பின்னி
எடுத்தது பின்னலாடைத் தொழில்.இப்போது நூல் வடிவில் வந்துள்ள சிக்கல்தான்,
இந்த தொழிலையே நூலறுந்த பட்டமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6
மாதங்களில் 35லிருந்து 40 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கிறது நூல் விலை.
ஆனால், போட்டி நாடுகளுக்குப் பயந்து, 10 ரூபாயைக் கூட உயர்த்த முடியாமல்
தவிக்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.பின்னலாடைத் தொழிலுக்கான "காட்டன் ஒசைரி'
நூலின் விலை, மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. சமீபகாலமாக,
வாரந்தோறும் விலை ஏற்றப்படுவதால், ஏற்கனவே பெற்ற ஏற்றுமதி
"ஆர்டர்'களுக்கு, நிர்ணயித்த விலையில், ஆடையைத் தயாரித்துத் தர முடியாத
சூழலில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.
உதாரணமாக, பின்னலாடைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் "30 கவுண்ட்' நூல்,
கடந்த மாதத்தில் ஒரு கிலோ 164 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது, அதன்
விலை 181 ரூபாய். இதேபோல, மே மாதத்தில் கிலோ 176 ரூபாய்க்கு விற்கப்பட்ட,
"40 கவுண்ட்' நூல் விலை, இப்போது 201 ரூபாய்.திருப்பூரின் பின்னலாடை
வரலாற்றில், இப்படியொரு அசாதாரணமான சூழ்நிலை, இதற்கு முன் எப்போதுமே
வந்ததில்லை என்கிறார்கள் தொழில்துறையினர். வழக்கமாக, நூல்
மில்காரர்கள்தான், பின்னலாடை நிறுவனங்களில் காத்துக் கிடக்கின்ற நிலை
இருந்தது; இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது.அமெரிக்கா, சீனா போன்ற
நாடுகளில், கடந்த ஆண்டில் பருத்தி உற்பத்தி குறைந்த காரணத்தால், அதிக விலை
கொடுத்து இந்திய நூல்களை வாங்கத் தயாராக இருப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது.
ஏற்றுமதி மட்டுமே காரணமில்லை, இதில் பதுக்கலும் உள்ளது என்கிறது மற்றொரு
தரப்பு.ஓராண்டில் இந்தியாவில் உற்பத்தியாகும் 3000 மில்லியன் கிலோ நூலில்,
237 மில்லியன் கிலோ மட்டுமே வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது, மீதி
நூல்கள் எங்கே என்று கேட்கிறார் பின்னலாடைத்தொழிலில் பழுத்த அனுபவம்
வாய்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர்.
இதனால்தான், கேட்கிற விலையைக் கொடுக்கத் தயாராயிருந்தும் உரிய
நேரத்துக்கு நூல் கிடைப்பதில்லை என்கிறார் அவர். இந்த கருத்தை மறுக்கும்
வேறு சில ஏற்றுமதியாளர்கள், நூல் ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதித்தால்,
பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமென்று நம்புகின்றனர்.திருப்பூரில் 2500க்கும்
அதிகமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், ஏற்றுமதி செய்யும் பெரிய
நிறுவனங்களும், 500க்கும் மேற்பட்ட "பிராண்டடு' நிறுவனங்களும், உள்நாட்டு
ஏற்றுமதி செய்யும் சிறு நிறுவனங்களும் உள்ளன. இந்த விலையேற்றத்தால்,
பாதிக்கப்படுவது சிறு நிறுவனங்கள்தான்.திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப்
பகுதிகளில் உள்ள சிறிய, பெரிய பனியன் நிறுவனங்கள், அவை சார்ந்த
தொழில்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள்
இருக்கின்றனர். சிறு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளானால், 3 லட்சத்தும்
மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழக்க நேரிடும்.
இப்போதே "ஜாப் ஒர்க்' செய்யும் நிறுவனங்களுக்கு ஏராளமான நெருக்கடி
ஏற்பட்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள், தங்களது
சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருவதாக ஓர் அதிர்ச்சித் தகவல்
சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இவர்கள் தரும் விளக்கம், நம்பக்
கூடியதாகவும் உள்ளது.பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில்,
தனியார் பள்ளிகளில் படிக்கும் 40 சதவீத மாணவ, மாணவியரின் மாற்று
சான்றிதழ்களை (டி.சி.) அவர்களது பெற்றோர் வாங்கிச் சென்றிருப்பதாகக்
கூறுகிறார் கல்வி அலுவலர் ஒருவர். இவர்களில் பலர், தங்கள் பிள்ளைகளை சொந்த
ஊரிலேயே பள்ளியில் சேர்த்துள்ளனர்.அதற்கு வாய்ப்பில்லாத பலரும்,
திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாநகராட்சி மற்றும்
ஊராட்சிப் பள்ளிகளில் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு மேல்நிலைப்பள்ளியில், இந்த
ஆண்டில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேர 900 மாணவ, மாணவியர்
விண்ணப்பித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, வருமானம்
குறைவு இவற்றின் எதிரொலியாகத்தான் இதைக் கருத வேண்டியுள்ளது. தற்போதுள்ள
நிலை நீடித்தால், இங்கேயிருந்து கஷ்டப்படுவதை விட, ஊருக்குப் போய்
பிழைத்துக் கொள்ளலாம் என்று தொழிலாளர்கள் பலர் நடையைக் கட்டி விடும்
வாய்ப்பு அதிகம். வேலை உறுதித் திட்டம் இருப்பதால், குறைந்தபட்சம் 100
ரூபாய் தினமும் கிடைத்து விடும். ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச டிவி, இலவச
அடுப்பு, இலவச காப்பீட்டுத் திட்டம் என, மக்கள் உழைப்பதற்கான தேவை
அதிகமில்லை. இந்த எண்ணத்தில் தொழிலாளர்கள் போய் விட்டால், அவர்களை மறுபடி
வரவழைப்பது நடக்காது.இந்த அசாதாரணமான சூழலில் அரசு தலையிட்டு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தொழில் அமைப்புகளின்
எதிர்பார்ப்பாகவுள்ளது. ஆனால், அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து, இதை
வலியுறுத்தவோ, போராடவோ தயாராகயில்லை.
நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், திருப்பூர்
ஏற்றுமதியாளர் சங்கம் போராட்டம் நடத்தியது. விசைத்தறியாளர்களும் களம்
இறங்கிப் போராடினர். அதன் எதிரொலியாக, நூல் ஏற்றுமதிக்கு தரப்பட்ட
"டிராபேக்' உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் படிப்படியாக விலக்கிக்
கொள்ளப்பட்டன.ஆனாலும், இன்று வரையிலும் நூலுக்கு ஏற்றுமதி தடை
செய்யப்படவில்லை; நூல் விலை குறைவதாகவும் தெரியவில்லை. பஞ்சு ஏற்றுமதிக்கு
முன்பு தடை விதித்தபோது, விவசாயிகளின் பெயரில் மத்திய அரசை மிரட்டிப் பணிய
வைத்த ஆதிக்க சக்திகள், இப்போதும் அதே ஆயுதத்தைக் கையில்
எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.இதனால், நூல் ஏற்றுமதிக்கு தடை
விதிப்பதற்கு சாத்தியமேயில்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கின்றனர். இது
தொடர்பாக மத்திய அரசும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது,
நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.
இதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தவேண்டிய அமைப்புகளும் பிளவு
பட்டுக்கிடக்கின்றன.அமெரிக்கா மற்றும் சீனாவில் பஞ்சு உற்பத்தி மீண்டும்
அதிகரித்து விட்டால், இங்கிருந்து பஞ்சும், நூலும் வாங்கப்படாது, அப்போது
இதே நூல் மில்காரர்கள் மீண்டும் பனியன் கம்பெனிகள் முன்னால் தவம் கிடக்க
வேண்டுமென்று எச்சரிக்கை தரும் விதமாகவும் சிலர் பேசுகின்றனர்.இதனால், ஒரே
தொழிலில் இருக்கும் இரு தரப்பினருக்குள்ளும் பகைமை உணர்வு மேலோங்கி
வருகிறது. இரு தரப்பையும் உட்கார வைத்துப் பேச வைத்து, தீர்வு காண வேண்டிய
மத்திய அரசின் ஜவுளித்துறை, கையைக் கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில
அரசும், பிரச்னையின் தீவிரத்தை இன்னும் உணராமல் இருக்கிறது.ஏற்கனவே,
வங்கதேசம், பாகிஸ்தான், வியட்நாம், கம்போடியா போன்ற பல நாடுகளோடு கடும்
போட்டியைச் சந்திக்கும் பின்னலாடை நிறுவனங்கள், இந்த நூல் விலையேற்றத்தால்
"தலைவலி போய் திருகுவலி' வந்த கதையாக திணறிக் கொண்டு நிற்கின்றன. இந்த
தொழிலைக் காக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம்
இருந்தாலும், உடனடியாகச்செய்ய வேண்டியது, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது
மட்டுமே. இல்லாவிட்டால், உழைப்பின் சக்தியால் உயரத்துக்கு வந்த திருப்பூர்
என்கிற ஆலமரம், அடியோடு வீழ்வதை யாருமே தடுக்க முடியாது.
தும்பை விட்டு வாலை பிடிப்பதா?இந்திய நூற்பாலை உரிமையாளர்கள்
சங்க தலைவர் சின்னையன் அறிக்கை:அதிக அளவு ஏற்றுமதியின் காரணமாக பஞ்சின்
விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. இதனால், கொள்ளை லாபம் காண்பவர்கள்
இடைத்தரகர்களே. அறிவிக்கப்பட்டும், அறிவிக்கப்படாமலும் மின்சார தடைகளால்
மில்களை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் ஏற்படும் உற்பத்தி குறைவால்,
நூலின் அடக்க விலை உயர்வது கட்டாயமாகி விடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு உயர் பயன்பாட்டு நேரத்தில் மின்சாரம் பயன் படுத்தியதாக
நூற்பாலைகளுக்கு லட்சத்திலும், கோடிகளிலும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் மில்கள் சாவா, வாழ்வா என்று தவித்துக் கொண் டுள்ளன. உள்நாட்டு
தேவையை கணக்கில் கொள்ளாமல், பஞ்சை தொடர்ந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு
அனுமதித்து வருவதால், வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பஞ்சின் பற்றாக்குறை
இன்னும் அதிகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில் நூல் விலை அதிகமாவதோடு,
திருப்பூர் தொழில் கூடங்களுக்கு போதிய அளவு நூல் கிடைக்காது.எனவே,
திருப்பூர் ஆடை உற்பத்தியாளர் சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டுமென்றால்
பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய மத்திய அரசையும், சீரான மின் விநியோகத்திற்கு
தமிழ்நாடு அரசையும் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்த வேண்டும். ஆடை
ஏற்றுமதியாளர்கள், பின்னலாடை உற்பத்தியாளர்கள், நூற்பாலை உரிமையாளர்
ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து பிரச்னைகளை கலந்து ஆய்வு செய்து
சம்பந்தப்பட்ட அரசுகளை அணுகுவதுதான் நெருக்கடிகளுக்கு தீர்வாக இருக்கும்.
அதை விட்டு நூற்பாலைகளின் மீது பாய்வது தும்பை விட்டு வாலை பிடிப்பதாகும்,
என்றார் சின்னையன்.
நூலுக்கு 8 டாலர்; ஆடைக்கு 100 டாலர்! நூலை அனுப்பி விட்டு,
பணத்துக்காக பனியன் நிறுவனங்கள் முன்பாக காத்துக் கிடந்ததே நூல்
மில்காரர்களுக்கு வாடிக்கையாக இருந்தது. இப்போது, உடனே பணம் கொடுத்தாலும்,
(கேஷ் அண்ட் கேரி) நூல் அனுப்புவதற்கு மில்காரர்கள் தயாராயில்லை என்பதே
ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரதிர்ச்சி.பஞ்சு, நூல் போன்ற
மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதால், நம் நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச்
செலாவணி குறையும் என்பது ஏற்றுமதியாளர்கள் கருத்து. இதுவே, உண்மையும் கூட.
உதாரணமாக, 5 டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சு, நூலாக அனுப்பும் போது
8 டாலர் கிடைக்கும்.அதையே, ஓர் ஆடையாக மாற்றி அனுப்பும்போது, 100 டாலர்
கிடைக்கும். இதில், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அரசுக்கான
வருவாயும் அதிகரிக்கிறது. மூலப்பொருளை ஏற்றுமதி செய்யும் எந்த நாடும்,
தொழில் முன்னேற்றம் காணவே முடியாது என்பதே ஏற்றுமதியாளர்களின்
வாதம்.ஆனால், ஏற்றுமதியால் மட்டுமே நூல் விலை உயர்ந்துள்ளது என்ற கருத்தை,
நூல் மில்காரர்கள் ஏற்பதில்லை.
பஞ்சு விலை ஒரு "பேல்' 24 ஆயிரம் ரூபாயாக இருந்து, இப்போது 32 ஆயிரம்
ரூபாயாக அதிகரித்திருப்பதும், அளவுக்கு அதிகமான மின் தடையால் உற்பத்தி
குறைந்திருப்பதுமே முக்கிய காரணங்கள் என்கின்றனர்.ஏற்றுமதிக்கு
அனுப்புவதால் கூடுதல் லாபம் கிடைப்பதை ஒப்புக் கொள்ளும் இவர்கள், விலை
எங்கே கிடைக்கிறதோ, அங்கேதான் பொருட்களை விற்க முடியும் என்று "லாஜிக்'
பேசுகின்றனர். பின்னலாடை தொழில் வரலாற்றில் முதல் முதலாக நூல்
மில்காரர்களின் கை ஓங்கியிருப்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்நூல்
விலை உயர்வால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து, தொழில் அமைப்பினர்
கொண்டுள்ள கருத்துக்களிலேயே பல மாறுபாடுகள் உள்ளன. தொழிலே அழிந்து விடும்
என்று அச்சப்படுகிறார் ஒருவர்; எப்படியும் மீண்டு வருவோம் என்று
இன்னொருவர் நம்பிக்கையோடு பேசுகிறார். இவர்கள் என்ன சொல்கிறார்கள்...?
ஜி.கார்த்திகேயன், செயலர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்:
கடந்த 40 ஆண்டுகளில் இப்படியொரு சூழல் எப்போதுமே வந்ததில்லை. ஏற்கனவே,
பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் போன்ற பல நாடுகளோடு போட்டி போடும்
சூழலில், தற்போதுள்ள நூல் விலை உயர்வு, இந்த தொழிலையே அழித்துவிடும்
அபாயம் உண்டு.உற்பத்தியாகும் நூல்களில் 16 சதவீதம் மட்டும்தான்,
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மற்ற நூல்கள் பதுக்கி
வைக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பஞ்சு ஏற்றுமதியில் பலன்
பெற்றதைப் போல இடைத்தரகர்களின் கை இதிலும் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
திருப்பூருக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டிய
பொறுப்பு, மாநில அரசுக்கும் உள்ளது. முதல்வரைச் சந்தித்து பிரச்னையை
விளக்கவுள்ளோம். நூல் ஏற்றுமதியை தடை செய்வது மட்டுமே, இதற்கு ஒரே தீர்வு.
அகில் ரத்தினசாமி, தலைவர், நிட்மா: இப்போதுள்ள குழப்பமான
சூழலுக்கு அரசும் ஒரு காரணம். மூலப்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது,
நாட்டின் பொருளாதாரத்துக்கு குழி பறித்து விடும். நூல் ஏற்றுமதியை தடை
செய்ய வேண்டும். உலக வர்த்தக ஒப்பந்த விதிகளுக்குட்பட்டு, ஏற்றுமதி செய்ய
வேண்டிய கட்டாயம் இருந்தால் நூலுக்கு 20 சதவீத வரி விதிக்க வேண்டும். இரு
தரப்பையும் அழைத்து அரசு பேச வேண்டும். தற்போது ஒசைரி நூல் உற்பத்தி
செய்யும் மில்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளது. அதன் எண்ணிக்கையை
அதிகப்படுத்த வேண்டும். இதில் லாபம் அதிகம் கிடைக்குமென்பதை
மில்காரர்களும் உணர வேண்டும்.கோவையில் நூலுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட
வரையிலும், இந்த பிரச்னை இல்லை. திருப்பூருக்கு மாறியவுடன்தான்,
மாதத்துக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு தொழிலை அழித்து
விட்டு, அதைச் சார்ந்த இன்னொரு தொழில் மட்டும் நிலைக்க முடியாது.
"வைகிங்' ஈஸ்வரன், தலைவர், சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்):
மிகப்பெரிய சோதனைக்காலம் இது. சாய ஆலை பிரச்னையே இன்னும் முடிவுக்கு
வரவில்லை. நான்கைந்து மாதங்களில் 30 சதவீத அளவுக்கு நூல் விலை
உயர்ந்திருப்பது, இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை.வெளிமாநிலம் மற்றும்
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு
அளிக்கிற பின்னலாடைத் தொழில் அழிய விடாமல் காக்க வேண்டியது மத்திய, மாநில
அரசுகளின் கடமை. இதற்காகவே, சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்று
தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.விவசாயிகள், இந்திய பருத்திக் கழகம், நூல்
மில்காரர்கள், கைத்தறி, விசைத்தறி சங்க பிரதிநிதிகள், பின்னலாடைத் தொழில்
செய்வோர் என எல்லாத் தரப்பினரையும் கொண்ட ஒரு குழுவை ஜவுளித்துறை அமைச்சர்
தலைமையில் நியமிக்க வேண்டும். 3 மாதத்துக்கு ஒரு முறை இந்த குழுவைக்
கூட்டி, முதலில் பஞ்சுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய
வேண்டும்.விவசாய தேவை தீர்க்கப்பட்டால், பஞ்சு உற்பத்தி அதிகரிக்கும்.
அடுத்து நூல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி வரை எல்லாம் சீராக நடக்கும். நூல்
ஏற்றுமதிக்கு தடை விதித்தால் நூல் மில்களை பலரும் மூட வேண்டியிருக்கும்.
நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பஞ்சு ஏற்றுமதியை
முறைப்படுத்தப்போவதாக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டாலே,
பதுக்கப்பட்டிருக்கும் பஞ்சு வெளியே வரும். தற்போதுள்ள நிலை தொடர்ந்தால்,
பெரிய நிறுவனங்கள் மட்டும் இருக்கும். சிறு நிறுவனங்கள் அனைத்தும்
மூடப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பர்.
ராஜா சண்முகம், உறுப்பினர், பருத்தி ஆலோசனைக் குழு: பின்னலாடைத்
தொழில், பன்முகப் பிரச்னையில் சிக்கித்தவிக்கிறது. உலக பொருளாதார
நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் போட்டி நாடுகளைச்
சமாளிக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாகி விட்டது.உலக வர்த்தக
ஒப்பந்தத்தால், லாப விகிதமும் குறைந்து விட்டது. சாய ஆலைப் பிரச்னை
தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்றுமதிக்கான "பையர்'களை தக்க வைக்க,
விலையேற்ற முடியாத சூழல் உள்ளது. உலக அளவில் பின்னலாடை உற்பத்தியில் 2.5
சதவீதம் மட்டுமே நம்முடையது. வங்கதேசம் கூட 6 சதவீத வர்த்தகம்
செய்கிறது.நம்மிடம் இருக்கும் உழைப்பைக் கொண்டு 10 சதவீத அளவுக்கு
உற்பத்தியை அதிகரிக்கமுடியும். அதற்கு அரசின் ஒத்துழைப்பும், கூட்டு
முயற்சியும் முக்கியம். நூல் விலை உயர்வுக்கு உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள
மாறுதல்களே காரணம். அதிக விலைக்குக் கேட்பதால், ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதை முறைப்படுத்த வேண்டும்.
அத்தனைக்கும் காரணம் அரசுதான்! ஒரு காலத்தில் பனியன்
தொழிலாளியாக இருந்து, தொழிலதிபராகி, இன்றைக்கு எம்.பி. யாக இருப்பவர்
திருப்பூர் சிவசாமி. பின்னலாடைத் தொழிலின் எல்லா நுணுக்கங்களையும் விரல்
நுனியில் வைத்திருப்பவர். பின்னலாடைத் தொழில் பிரச்னைகள் பற்றி,
லோக்சபாவில் பலமுறை குரல் கொடுத்துள்ளார்.
தற்போதுள்ள சூழல் குறித்து அவர் கூறியது:இன்றைய மத்திய அரசு,
எல்லா விஷயங்களிலும் பணக்கார ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிந்தே கொள்கை
முடிவுகளை எடுத்து, நாடு முழுவதும் உள்ள சிறு, குறுந் தொழில்களை ஒட்டு
மொத்தமாக அழித்து வருகிறது. நூல் விலையேற்றத்துக்கும் இந்த அரசின் கொள்கை
முடிவே காரணம்.வங்கதேசத்துக்கு தடையின்றி தரை வழியிலேயே பஞ்சு செல்கிறது.
அதைத் தவிர்த்து, எக்கச்சக்கமாய் ஏற்றுமதியாகிறது. அதற்கு விதித்த தடையை
அரசால் நீட்டிக்க முடியவில்லை. மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மை
காரணமாக, மின் தடை பெரும் பிரச்னையாகி, நூல் உற்பத்தி
குறைந்திருக்கிறது.பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக்கம்பளம் விரித்து,
தடையற்ற மின்சாரத்தை குறைந்த விலைக்கு தரும் மாநில அரசு, இங்கேயே பிறந்து
வளர்ந்து, சுய முயற்சியால் தொழில் செய்யும் சிறு தொழில் நிறுவனத்திருக்கு
தொடர் மின் தடையை பரிசாகத் தருகிறது. இப்போது 40 சதவீத பன்னாட்டு
நிறுவனங்கள்தான் இயங்குகின்றன. மற்றவையும் இயங்கத் துவங்கினால்,
தமிழகத்திலுள்ள அனைத்து சிறு நிறுவனங்களையும் இழுத்து மூடுவதைத் தவிர வேறு
வழியே இல்லை. பின்னலாடைத் தொழிலில் "டிராபேக்' சேர்த்தே 10லிருந்து 15
சதவீதம்தான் லாபம் கிடைக்கிறது.நூல் விலை உயர்வு, சாய விலை ஏற்றம்,
மின்தடையால் ஜெனரேட்டர் பயன்படுத்தும் செலவு, டாலர் விலை வீழ்ச்சியால்
ஏற்பட்டுள்ள பாதிப்பு என 100 ரூபாய்க்கு 33 ரூபாய் அளவுக்கு வருவாய்
இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், தொழிலாளர் பற்றாக்குறை
என்ற நிலை மாறி, இருக்கிற தொழிலாளர்களுக்கே வேலை தர இயலாத சூழல்
ஏற்படும்.இந்த தொழிலைக் காப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,
லோக்சபாவில் நான் பலமுறை பேசியுள்ளேன். எழுத்து மூலமாகவும் எனது கருத்தைப்
பதிவு செய்திருக்கிறேன். இதற்காக எம்.பி.க்கள் குழுவை நியமித்து, சீனாவில்
இந்த தொழிலுக்கு தரும் அரசு ஆதரவை கூர்ந்து கவனித்து, இங்கும் அதே
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, டிராபேக் தொகையை அதிகரித்துத்
தர வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தருவதைப் போல, மின்சாரத்துக்கு
மானியம் தர வேண்டும். இந்த நடவடிக்கைகளை விரைவாக எடுக்காவிட்டால்,
பின்னலாடைத் தொழில் வெகு சீக்கிரமே அழிவைச் சந்திக்கும் அபாயம்
காத்திருக்கிறது.இவ்வாறு, எம்.பி.சிவசாமி தெரிவித்தார்.thanks:dinamalar

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பெயர்த்து நடப்பட்ட அரச மரம் துளிர்விட்டது: திருப்பூரில் முயற்சி வெற்றி
» திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மீது களங்கம்
» ம.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு தாருங்கள்: திருப்பூரில் வைகோ உருக்கம்
» சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: திருப்பூரில் ஜெ., வாக்குறுதி
» திருப்பூரில் 38 கிலோ நகை கொள்ளை கொள்ளையனை பிடிக்க உதவிய போலீஸ் இன்பார்மர் மர்ம சாவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum