TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

4 posters

Go down

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா? Empty உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

Post by logu Mon Jun 07, 2010 8:39 am

பெயர் வைப்பது நமது
கலாசாரத்தில் ஓர் கவிதைத்தனமான ஓர் விஷயம். எத்தனையோ காரணம் காரியம்
நிறைந்ததாக இருக்கிறது. தம்பதிகள் குழந்தை பிறக்கும் முன்னரே தங்களுக்கு
பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைத்து மகிழ்வதை பார்க்க முடியும்.
குலதெய்வத்தின் பெயர், மூதாதையர்களின் பெயர், தேச தலைவர்களின் பெயர் என பல
வழிகளில் பெயர்வைக்க முற்படுவார்கள்.

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா? Nametoon
மேற்கத்திய நாடுகளில் பெயர்வைப்பது என்பது இந்திய கலாச்சாரம் போன்றது இல்லை. எனது மேல்நாட்டு மாணவர் ஒருவருக்கு Schicklgruber என்ற விசித்திரமான பெயர். ஹிட்லரின் பின்பாதி பெயரும் இவரின் பெயரும் ஒன்று. தமிழில் அதை மொழிபெயர்த்தால் வெளியே சொல்ல முடியாது...! பாரத தேசத்தில் இது போல தேடினாலும் கிடைக்காது.


வடகிழக்கு மாநிலங்களில் சிலருக்கு விசித்திரமான பெயர் உண்டு. பூனை, கிளி என்றெல்லாம் பொருள்பட
பெயர்வைப்பார்கள். நாகத்தை தெய்வமாக வழிபடுவதால் நாகப்பன், நாகராஜ் என பெயர்வைப்பவர்கள் பார்த்திருக்கிறோம். பெயர்களை பொருத்தவரை தெய்வத்தின் பெயர்கள், குருவின் பெயர், புண்ணிய தீத்தத்தின் பெயர்கள், புராண கதாபத்திரங்களின் பெயர்கள் மற்றும் முன்னோர்களின் பெயர் என பெயர்கள் வைக்கும் தன்மையை வகைப்படுத்திட முடியும்.


முதல்
குழந்தைக்கு ஆண் என்றால் பெயர்வைக்கும் பொழுது தந்தைவழி தாத்தாவின்
பெயரையும், இரண்டாவது ஆண் குழந்தை என்றால் தாய்வழி தாத்தாவின்

பெயரையும் வைப்பார்கள். பெண்குழந்தைக்கும் இதே போல பாட்டி பெயர்
வைப்பார்கள். குழந்தையின் பெயரையும் அதன் பெற்றோர்கள் பெயரையும் ஞாபகம்
வைத்தால்
போதும் பரம்பரையில் அனைவரையும் சொல்ல முடியும். முன்னோர்களுக்கு
ஸ்ரார்த்தம் கொடுக்கும் பொழுதும், உயில் சம்பந்தமான சட்ட சிக்கல்
வரும்
பொழுதும் இவ்வாறு பெயர் வைக்கும் நோக்கத்தின் முக்கியத்துவம் புரியும்.
தற்சமயம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலையிலும், ஓர்
குழந்தை
போதும் என்ற சூழல் வந்த பிறகும் இவ்வழக்கம் மறைந்து வருகிறது.
நாட்டுகோட்டை நகரத்தார் மத்தியில் இன்றளவும் பெயர் வைப்பதற்கென்றே ஓர்
முறை இருந்து வருகிறது
.

தற்பொழுது
நியூமராலஜி நேமாலஜி என்ற ஆலஜிகள் அலர்ஜியாய் பரவிவருகிறது. தீபா என்ற
பெயர் வைக்க கூடாதாம், அதில் தீ என்ற சொல் வருகிறதாம்
அப்பெயர் கொண்டவர்களின் வாழ்க்கை கருகிவிடும் என நேமாலஜி கூறியவர்கள் பேச்சை கேட்டு பெயர் மாற்றியவர்கள் நான் அறிவேன். இதைவிட ஓர் வேடிக்கை
ஒன்று உண்டு. பெயரின் முடிவில் “நிதி” என இருக்கவேண்டுமாம். அப்பொழுது
வாழ்க்கையின் பிற்பகுதியில் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்.
இப்படிபட்டவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என்னவெல்லாம் அனுபவிக்க போகிறார்களோ என நினைக்கும் பொழுது வருத்தமாக இருந்தது.


இது
இவ்வாறு இருக்க....ஒரு புறம் திருப்பதி,பழனி என்று மட்டும் தான்
பெயர்வைக்க முடியுமா மாஸ்கோ என்றும் , ஜெனீவா என்றும் பெயர் வைத்து இரண்டு
ரூபாய் வாங்கிய பகுத்தறிவாளர்கள் கொண்டது நம் தமிழ் நாடு.


மத்திய
வர்க்க மக்கள் தங்கள் குழந்தைக்கு விசித்திரமான மற்றும் தனித்துவமான பெயர்
இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். உதாரணமாக தணிஷ்கா,
த்ரிஷாந்த்
என பெயர்வைக்கிறார்கள். இந்த நவீன அம்மாக்கள் தங்கள் குழந்தையின் பெயரை
பிறர் கூற கலவரப்படும் பொழுது அவர்களுக்கு டியூஷன் எடுப்பதை
பெருமையாக கருதுகிறார்கள். Smile

சிலர்
புராணங்களை பற்றி தெரியாமலே பெயர் வைப்பதுண்டு. இதற்கு சரியான உதாரணம்
ரவிகுமார் என்ற பெயர். ரவி குமார் என்றால் சூரியனின் குமாரர்கள்.
சூரியனுக்கு சனி மற்றும் யமன் என்று மட்டுமே இரு மகன்கள் உண்டு. கர்ணன்
இதில் இடம் பெறமாட்டார். தங்கள் குழந்தையை சனியாகவோ யமனாகவோ
கூப்பிடுபவர்களை என்ன சொல்லுவது?

குழந்தை பிறந்ததும் கம்யூட்டரிடம் தகவல் கொடுத்தால் அந்த இயந்திரம் ஆயிரம் பெயர்களை எடுத்து கொடுக்கும். அதில் நியூமராலஜி, நட்சத்திர பெயர்
எழுத்துக்கள்
என அனைத்தும் சரிபார்த்து கொடுப்பதால் அப்பெயர் பட்டியல் வாங்க நீண்ட
வரிசையில் காத்திருக்கிறார்கள். தங்கள் குழ்ந்தைக்களுக்கு
பெயர்வையுங்கள் என சில பெற்றோர்கள் வரும் பொழுது நான் எந்த யோசனையும் இல்லாமல் மறுத்துவிடுவேன்.


இயந்திரத்தையோ அல்லது வேறு மனிதர்களையோ நம்பும் இவர்கள் தங்கள் குழந்தைக்காக எளிமையான மற்றும் சிறப்பான பெயர்கள் வைக்க முடியாதா?
பெற்றோர்கள்
மற்றும் அக்குடும்பத்தின் பெரியோர்கள் தவிர வேறு யாருக்கும் குழந்தைக்கு
பெயர் வைக்க யோக்கியதை கிடையாது. (அரசியல் தலைவர் உற்பட)



பெயரில்
ம, மா என்ற எழுத்தில் துவங்க வேண்டுமா? கூட்டு தொகை இந்த எண் இருக்கலாமா
என்பதை காட்டிலும்....அன்பு , பாசம் மற்றும் ஆழ்ந்த
பெற்றோரின் நேசம் மட்டுமே இருக்க வேண்டும். பெயரால்
“மட்டும்” உங்கள் குழந்தையின் எதிர்காலம் மாறிவிடாது. அந்த குழந்தை உருவான
மற்றும் பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகங்கள் மட்டுமே
அக்குழந்தையின் வாழ்க்கையை முடிவு செய்யும்.

ஜோதிட ரீதியாக பெயர் வைக்கலாமா? ஜென்ம நட்சத்திரத்தில் பெயர் வைத்தால் நல்லது என்கிறார்களே என கேட்பவர்கள் உண்டு. முன்பு
நமது நாட்டில் அனைத்து பிரிவினரும் ஜாதகம் கணித்து வைக்கமாட்டார்கள்.
பெற்றோர்கள் இவ்வாறு செய்து விட்டபின்பு அக்குழ்ந்தை வளர்ந்து
பெரியவன் ஆனதும் தனக்கு எதிர்காலம் பார்க்க முயற்சி செய்யும். பிறந்த நேர தகவல்களை குறிக்காததால் ஜாதகம் கணிக்க முடியாமல் ஜோதிடரும் திணருவார்.
இதற்கான தீர்வுதான் நட்சத்திர ஆரம்ப எழுத்தில் பெயர் வைக்கிறார்கள்.
பிற்காலத்தில் வயதும் , பிறந்த மாதத்தையும் சொன்னால் போதும் பெயர்
மூலம் நட்சத்திரத்தை கண்டறிந்து ஜாதகத்தை கணிக்கலாம்.

கோவிலுக்கு சென்றதும் குருக்கள் உங்கள் பெயரை கேட்டதும், அர்ச்சனை தட்டுடன் ராசி நட்சத்திரம்
சொல்லியவாறே கர்ப்பகிரகத்தினுள் செல்ல முடியும். இதை தவிர நட்சத்திர பெயருக்கு வேறு பயன் இல்லை.


அப்பிறம் எப்படிதான் ஸ்வாமி பெயர் வைப்பது என நீங்கள் கேட்பது புரிகிறது.
என்னிடத்தில் பெயர் தேர்ந்தெடுக்க கேட்பவர்களுக்கு நான் சில யோசனைகள் சொல்வதுண்டு.
அந்த கருத்து உங்களுக்காக இங்கே...

ஆண்
குழந்தையாக இருந்தால் விஷ்ணு சகஸ்ர நாமத்திலிருந்தும் பெண் குழந்தையாக
இருந்தால் லலிதா சகஸ்ர நாமத்திலிருந்தும் பெயர் எடுத்து வையுங்கள்.
சகஸ்ர நாமம் என்றால் ஆயிரம் பெயர்கள். இறைநிலையின் ஆயிரம் நாமத்திலிருந்து உங்களுக்கு பிடித்த பெயரை தேர்ந்தெடுத்து வைக்கலாம்.

இறைவன் பெயரே சக்தி வாய்ததாக இருக்கும் பொழுது
அப்பெயருக்கு
நியூமராலஜி நேமாலஜி தேவையில்லை. ஒவ்வொருமுறையும் குழந்தையை கூப்பிடும்
பொழுது சகஸ்ரநமத்தின் ஓர் பகுதியை உச்சரித்த பலன்
கிடைக்கும்.

சகஸ்ரநாமத்திலிருந்து பெயர்வைத்தால் குழந்தையில் பெயர் “கர்நாடகமாக” இருக்குமே என எண்ண வேண்டாம். தலாங்கி, ஸர்வமிதா போன்ற நவீன
பெயர்களும் அதில் உண்டு. வேறு மதத்தவர்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என கேட்கலாம்.

அல்லாவின் ஆயிரம் நாமங்கள் என்ற நூல் முகமதியர்களுக்கும், பைபிள் பெயர்கள்
மூலமாகவும்
அவர்கள் இதே போன்று செய்யலாம்.பெயர்வைக்க மத ரீதயாக நான் பரிந்துறைப்பதாக
தோன்றும், உண்மையில் மத ரீதியாக என்பதை காட்டிலும்
கலாச்சார ரீதியாக என்பதே உண்மை. மேலும் அனைத்து மதத்திலும் கடவுளின் நாமங்களின் வரிசைகள் வேறுபட்டாலும், ஆயிரம் நாமங்களின் பொருள் ஒன்றுதான்.

குழந்தைகளுக்கு
நாம் பெயர் வைக்க இவ்வளவு பிரயாசை கொண்டாலும், அவர்கள் வளர்ந்ததும்
அவர்களின் செயலால் சமூகம் ஓர் பெயர்வைக்கும். அப்பெயரே
எப்பொழுதும்
நிலைத்து நிற்கும். உதாரணம் காந்தி, எம் ஜீ ஆர். குழந்தைகள் சான்றோர் என்ற
பெயர் எடுக்கவேண்டுமானால் பெயரை காட்டிலும் குழந்தையின்
செயலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவ்வாறு பெயரை பெற குழந்தையை மேம்படுத்துவோம். நல்வழியைக்காட்டுவோம்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா? Empty Re: உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

Post by navas Mon Jun 07, 2010 2:13 pm

பெயரை காட்டிலும் குழந்தையின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவ்வாறு பெயரை பெற குழந்தையை மேம்படுத்துவோம். நல்வழியைக்காட்டுவோம் clap
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா? Empty Re: உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

Post by ssln Sun Oct 10, 2010 8:23 pm

ஆச்சரியம் சூப்பர்........... ஆச்சரியம் ஆச்சரியம்
ssln
ssln
உதய நிலா
உதய நிலா

Posts : 17
Join date : 23/08/2010
Location : vickramasingapuram

Back to top Go down

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா? Empty Re: உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

Post by மாலதி Tue Nov 05, 2013 8:26 am

hmmm hmmm hmmm hmmm


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா? Empty Re: உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum