Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தி.மு.க., வலையில் சிக்கும் அடுத்தடுத்த அ.தி.மு.க., புள்ளிகள் யார்?
Page 1 of 1

முதல்வர்
கருணாநிதி முன்னிலையில் நாளை தி.மு.க.,வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர்
முத்துசாமி. அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஈரோடு மாணிக்கம்,
வி.கே.சின்னசாமி உள்ளிட்ட எம்.ஜி.ஆர்., விசுவாசிகளும் இணைகின்றனர்.
தி.மு.க.,வில் இணைந்த பின், தன் ஆதரவாளர்கள், உறவினர்கள்,
ஜாதிக்காரர்கள் உள்ளிட்ட பெரும்படையுடன் தி.மு.க.,வில் இணையும்
நிகழ்ச்சியை இன்னொரு நாளில் தடபுடலாக நடத்தவும் அவர் முடிவு
செய்துள்ளார்.கடந்த சட்டசபை தேர்தலில் சேலம், நாமக்கல், ஈரோடு,
திருப்பூர், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., பெரும் சரிவை
கண்டது. தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாத அளவிற்கு
கொங்கு மண்டலத்தில் தி.மு.க., பின்னடைவை சந்தித்தது. கடந்த 2009ம் ஆண்டு
லோக்சபா தேர்தலில் அதே நிலை தான் நீடித்தது. ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க.,
முன்னாள் அமைச்சர் ராஜாவின் செயல்பாடும் தி.மு.க., மீது அதிருப்தி அலையை
உருவாக்கியுள்ளது. இதை போக்கும் வகையில், கொங்கு மண்டலத்தில் சரிந்த
தி.மு.க.,வின் ஓட்டுக்களை தலை நிமிர வைக்க அம்மாவட்டத்தில் தி.மு.க.,
கவனம் செலுத்தியுள்ளது.
நாமக்கல்,சேலம் பகுதிகளில் தி.மு.க.,வை பலப்படுத்தும் வகையில்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்வகணபதி இழுக்கப்பட்டார். அவருக்கு
ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் இரண்டு
மாங்காய் அடித்தது போல் செல்வகணபதிக்கும் பதவி, வன்னியர்களுக்கும்
கட்சியில் முக்கியத்துவம் என்ற நிலையை தி.மு.க., எடுத்துள்ளது.கொங்கு
மண்டலத்தில் கவுண்டர் ஓட்டுக்களை கவர முத்துசாமிக்கும் தி.மு.க.,
முக்கியத்துவம் அளிக்கும் என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
"முத்துசாமி என்னிடம் எந்த பேச்சும் நடத்தவில்லை' என தி.மு.க., உயர்நிலை
செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார். ஆனால், ரகசியமாக
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினுடன் முத்துசாமி ரகசிய பேச்சு
நடத்தி முடித்து விட்டதாக தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
முத்துசாமியுடன் சேர்த்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கரூர்
சின்னசாமியும் தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தியுள்ளார். அவர் தன்
ஆதரவாளர்களுடன் தனியாக இணைய முடிவு செய்துள்ளார். முத்துசாமியை போல தானும்
முன்னாள் அமைச்சராக பணியாற்றியதால் தனக்கும் கரூர் மாவட்டத்தில்
முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை பொருத்தவரை, முத்துசாமியிடம் மட்டும் சமரசம் செய்துக் கொள்ள
அழைப்பு விடுத்தார். ஆனால், கரூர் சின்னசாமிக்கு ஜெயலலிதா ஏன் அழைப்பு
விடுக்கவில்லை. முத்துசாமி இன்னமும் ஜெயலலிதாவை "அம்மா' என அழைத்து தான்
பேசுகிறார். ஜெயலலிதா என பெயர் சொல்லி அவரை பற்றி பேசவில்லை என்ற வருத்தம்
அவரது ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது. ஜெயலலிதாவை பெயர் சொல்லி பேசினால்
தான் தி.மு.க.,வினருக்கு பிடிக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறியபோது,
முத்துசாமி "தனக்கு யாரையும் அப்படி ஒருமையில் பெயரை சொல்லி பேசும்
பழக்கம் இல்லை' எனக் கூறியுள்ளார். தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்கள்
மனுத்தாக்கல் முடித்த பின் நிருபர்களை சந்தித்த துணை முதல்வர் ஸ்டாலின்
"விரைவில் அ.தி.மு.க., கூடாராம் காலியாகப் போகிறது' என்றார். அவரது
சூசகமான பேச்சு, அ.தி.மு.க., விலிருந்து மேலும் சிலரை தி.மு.க.,வில்
ஐக்கியமாக வைக்கப் போகிறது என்ற கவலையும் அ.தி.மு.க., தலைமைக்கு
உருவாகியுள்ளது.
ராஜ்யசபா பதவி கிடைக்க வில்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் முன்னாள்
அமைச்சர் ஒருவரும் தி.மு.க.,விற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆந்திரா
மாநிலத்தின் எல்லை அருகில் உள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவர்
ஆளுங்கட்சியுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டு கான்ட்ராக்ட் பணிகளை கவனித்து
வருவதால் அவரும் தயாராக இருக்கிறார்.கரூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான
சிவன் கோவிலில் சசிகலா சாமி கும்பிட சென்ற போது அவர் சாதாரண பக்தர்களோடு
பக்தராக நிற்க வைத்து சாமி கும்பிட வைக்கப்பட்டுள்ளார். இந்த ஏற்பாடுகளை
சரிவர செய்யாத கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவருக்கும் "டோஸ்'
விழுந்துள்ளது. அவரும் தி.மு.க., பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தாவும்
பிரமுகர்களின் பட்டியல் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என
எதிர்பார்க்கலாம்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி
» சுரங்கம் நடத்தும் காங்., பிரமுகர்கள் யார் யார்? மோதல் முற்றுகிறது
» மூட்டு வலிக்கு அக்குபஞ்சர் புள்ளிகள் ..
» "அவுட்' * இந்திய அணியில் இருந்து சேவக் * ஆசிய கோப்பையில் யார், யார்
» உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்,யார்? மதியத்திற்குள் முடிவு தெரியும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum