Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மிஸ்டர் கழுகு: அதிகாரப் பசி… பாதாளம் வரை பாய்ந்த பணம்!
Page 1 of 1

அதிகாரப் பசி
இடது கை சுட்டு விரலைக் காட்டியபடியே அலுவலகத்துக்குள் வந்த கழுகார், மழையில் லேசாக நனைந்திருந்தார். ‘‘சூடு தணிந்தது’’ தேர்தல், வானிலை இரண்டையும் குறித்து சிலேடையாகச் சொன்னார்.
‘‘அடுத்த முறை நான் உம்மைச் சந்திக்கும்போது தேர்தல் முடிவுகள் தெரிந்து… ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எது என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கும். நியாயமான தேர்தல்… முழுமையான வாக்குப்பதிவு… மக்களைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம் இவை
மூன்றுதான் நடுநிலையான மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள். முழுமையான வாக்குப்பதிவு நடந்ததா என்பது பின்னர்தான் தெரியும். ஆனால், காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்து வாக்குகளைப் பதிவுசெய்ததைப் பார்த்தால் பெருமைப்படும் இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று சொல்லலாம். ஆனால்…!”
‘‘என்ன ஆனால்..?”
‘‘தேர்தல் நேர்மையாக நடந்ததா என்றால்… இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகாரப் பசிகொண்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீண்டும் பணத்தை அடைவதற்காகப் பணத்தைப் பாதாளம் வரைக்கும் இறைத்தார்கள். தமிழ்நாட்டில் இந்தத் தொகுதி, அந்தத் தொகுதி என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் தொகுதிகளிலும் பணம் பாய்ந்தது. தேர்தல் கமிஷனால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.”
[You must be registered and logged in to see this image.]
‘‘ஓரளவு நடவடிக்கை எடுத்துப் பணத்தைப் பிடித்தார்களே?”
‘‘அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிப்பு வெளியான நொடியில் தொடங்கி, தேர்தல் முடிவுகள் வெளியாகப்போகிற இறுதி நொடி வரை வானளாவிய வரம்பற்ற அதிகாரம் படைத்த அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிடுகிறது. 5 கோடியே 77 லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை, 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகளில் உறுதிப்படுத்துவது சாதாரண காரியம் அல்ல.
6 லட்சத்து 26 ஆயிரம் ஊழியர்களை முடுக்கிவிட்டு, 1 லட்சத்து 32 ஆயிரம் போலீஸ்காரர்களும் 300 கம்பெனி ராணுவத்தையும் பாதுகாப்புக் கொடுக்கவைத்து, இந்தக் காரியத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், இதில் எந்த வேலையும் புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் இதற்கான அடித்தளங்கள் போடப்பட்டு வருகின்றன. அந்தப் பாதையில் கொஞ்சம் நேர்த்தியாகப் பயணித்தால்போதும், தேர்தலை வெற்றிகரமாக நடத்திவிடலாம். இதில் ஆணையத்தைப் பாராட்டுவதற்கோ… ஆணையத்தின் பணிகளைச் சொல்லி ஆச்சர்யப்படுவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால், வரம்பற்ற அதிகாரத்தையும், ஆயிரக்கணக்கான அதிகாரிகளையும், லட்சக்கணக்கான போலீஸையும் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் தேர்தல் ஆணையத்துக்கு, மறைமுகமாக அல்ல… நேரடியாக விடப்பட்ட புதிய சவால், ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுதான். ஒவ்வொரு தொகுதியிலும், பணம் வாரி இறைக்கப்பட்டபோது, அதைக் கொடுத்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்காளர்களுக்கு முன் தனது சகல அதிகாரங்களையும் இழந்து, பல் போன ஆணையமாகக் காட்சியளித்தது தேர்தல் ஆணையம்!”
‘‘அப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கிறது!”
‘‘ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தொகுதிகளில் யாரோ சிலருக்குப் பணம் கொடுப்பார்கள். திருமங்கலம் இடைத் தேர்தலில், ஓட்டுக்கு 2,500 என்று தி.மு.க-வால் இந்த ஃபார்முலா வளர்த்தெடுக்கப்பட்டது. அது தமிழக வாக்காளர்களை ஆச்சர்யமாகவும் அவமானமாகவும் இந்தியா வாக்காளர்களைப் பார்க்கவைத்தது. அதன்பிறகு, நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவு பண விநியோகம் தொடர்ந்தது. ஆனால், இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தரம் பிரித்து, பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது.”
‘‘எவ்வளவு வரை கொடுத்தார்கள்?”
‘‘சாதாரணத் தொகுதிக்கு 250 ரூபாய்; நகரங்களில் உள்ள, வாக்காளர்கள் அதிகம் உள்ள முக்கியமான தொகுதிகளுக்கு ஓட்டுக்கு 500 ரூபாய்; அமைச்சர்கள் களத்தில் இருக்கும் தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாய் என்று விநியோகம் நடந்தது. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுமே இதில் இறங்கின. மோதுபவர்கள் இரண்டு பேருமே மலைகள் என்றால், 3 ஆயிரம் 4 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்கள். உச்சக்கட்டமாக, அ.தி.மு.க-வில் செந்தில்பாலாஜியும் தி.மு.க-வில் கே.சி.பழனிச்சாமியும் போட்டியிடும் அரவக்குறிச்சியில், ஓர் ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாயை அள்ளிக் கொடுத்தனர். அந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, 2 லட்சம். அவர்கள் எல்லோருக்கும் கொடுத்தால் எவ்வளவு ஆகும் என்று கணக்குப் போட்டுக்கொள்ளும். தஞ்சாவூரில் வோட்டுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் தரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பேர் இருந்தால்போதும், அவர் வெளியூரில் இருந்தாலும் 3 ஆயிரத்து 500 ரூபாயை நிர்தாட்சண்யமாக தூக்கிக் கொடுத்துள்ளார்கள். நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.”
‘‘ஆமாம்!”
‘‘நிலைமை இப்படி இருந்தபோது, தேர்தல் ஆணையம் ஓட்டுக்கு கொடுத்த – கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தொகை என்று கைப்பற்றியது வெறும் 105 கோடி ரூபாய். அதன்பேரில் 101 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளவர்கள் யாரும், எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர்களாகக்கூட அல்லாதவர்கள். அவர்கள் கொடுத்தத் தகவலின் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட தொகையின் அடிப்படையில் 3,728 வேட்பாளர்களில் ஒருவரைக்கூட தேர்தல் ஆணையத்தால் கை நீட்டிக் குற்றம் சுமத்த முடியவில்லை.”
‘‘பல் இல்லாத ஆணையம் என்று நீர் சொல்வது சரிதான்!”
‘‘அரசியல்வாதிகள், பணம் கொடுக்கத் தொடங்குவதற்கு முன்பு, வியாபாரத்துக்கு வணிகர்கள் கொண்டு சென்ற சில லட்சங்களைத் தேடித் தேடி வேட்டையாடிய தேர்தல் ஆணையத்தால், அரசியல்வாதிகள் தங்களின் ஆட்டத்தைத் தொடங்கிய பிறகு, ஒன்றும் செய்ய முடியவில்லை. பல இடங்களில் எதிர்க் கட்சிகள் ஆளும் கட்சி மீது பண விநியோகக் குற்றச்சாட்டை வைத்தன… சில இடங்களில் எதிர்க் கட்சி மீது ஆளும் கட்சி குற்றம் சுமத்தியது. ஆனால், எங்கும் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரைக் கைதுசெய்தார்கள். ஆனால், அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம், சென்னை எழும்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் அகப்பட்ட பணம், தஞ்சாவூரில் சிக்கிய தொகை ஆகியவை… அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? யாருக்காகப் பதுக்கப்பட்ட பணம் என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. அமைச்சர்களின் தொகுதிக்கு பணம் விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்த அன்புநாதன், ‘ஹாயாக’ அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.”
‘‘இரண்டு பிரதானக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு கொடுத்தார்களே?”
‘‘சென்னை திருவல்லிக்கேணியில் தி.மு.க கொடுக்கிறது என்றால், சைதாப்பேட்டையில் அ.தி.மு.க கொடுக்கிறது. திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் அருகே போலீஸ் குடியிருப்புக்குள் தைரியமாகப் பண விநியோகம் நடைபெற்றது. அதை அங்கு கேட்பார் இல்லை. 234 தொகுதிகளில் போட்டியிட்ட இன்னொரு கட்சியோ, நாளிதழ் கட்டுகளை மொத்தமாக வாங்கி, அதில் பணக்கட்டு அளவுக்கு வெட்டி, அதற்குள் பணக்கட்டுகளைப் பதுக்கி, ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய வேனில் கொண்டு சென்றனர். சோதனைக்குப்பிறகும் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய் சேர்ந்தது அந்த வேன். பொதுமக்கள் கொடுத்தப் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை இல்லை. காலையில் பணம் கொடுக்கிறார்கள் என்று புகார் சொன்னால், அதுபற்றி விசாரிக்க மாலையில்தான் போலீஸ் போனது. ஒரு சில இடங்களில் மக்களே பிடித்துக் கொடுத்ததும், எதிர்க் கட்சிக்காரர்கள் மாற்றுக் கட்சிக்காரர்களை போட்டுக் கொடுத்ததிலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மற்றபடி, தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து, எந்தத் தேடுதல் வேட்டையையும் நடத்தவில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரவக்குறிச்சியிலும் தஞ்சையிலும் பணம் கொடுத்ததற்காகத் தேர்தலை ஒத்திவைத்த ஆணையம், அந்தப் பணம் யார் கொடுத்தது, எந்தக் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை… அவர்களைக் கேள்விக்கு உட்படுத்தும் நோட்டீஸ்கூட இதுவரை அனுப்பவில்லை.”
‘‘பழைய முறையில் நடக்கும் தேர்தலைச் தொடர்ந்து நடத்தும் தேர்தல் ஆணையம், புதிய சவால்களை எதிர்கொள்ளும் ஆணையமாக இன்னும் மாறவில்லையா அல்லது மாறவிரும்பவில்லையா என்பது நமக்குப் புரியவில்லை.”
‘‘ம்!”
‘‘சில இடங்களில் ‘முதல்ல நீங்க கொடுத்து முடிங்க… அப்புறம் நாங்க கொடுக்கிறோம்’ என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டார்கள். வட தமிழ்நாட்டில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இப்படி சொல்லி வைத்துக்கொண்டு கொடுக்க… இவர்களை பா.ம.க. மட்டும்தான் தடுத்தது” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ‘‘யார் ஜெயிக்கிறார்களோ தெரியாது. யார் ஜெயித்தாலும் இது காஸ்ட்லியான வெற்றியாகத்தான் அமையும்” என்றபடி கழுகார் பறந்தார்.

Similar topics
» மிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'!
» மிஸ்டர் கழுகு: ஈழத்தாய் இமேஜ்!
» மிஸ்டர் கழுகு: அதிகாரிகள் பந்தாட்டம் ஏன்?
» மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
» மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்குள் அ.தி.மு.க. ஆதிக்கமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum