Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
யாருக்கு அந்த ஒரு ஓட்டு?
Page 1 of 1
யாருக்கு அந்த ஒரு ஓட்டு?
யாருக்கு அந்த ஒரு ஓட்டு?
ஓட்டு
முதல் இரண்டு இடம் நமக்கில்லை… இல்லை… இல்லே… ஆனால், மூன்றாவது இடம்? விடக் கூடாது, பா.ம.க.,வுக்கு இந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பே தரக் கூடாது…’ என்ற, ‘திருவிளையாடல்’ தருமியின் மனநிலையில், தே.மு.தி.க.,வும்; ‘உன்னை விட நான் பெரியவன், யார்
வெற்றி பெறுவார் பார்ப்போம்’ என்று சவால் விடுக்கும் மனநிலையில் பா.ம.க.,வும் உள்ளது, இலைமறைக்காயாக வெளிப்படத் துவங்கி விட்டது.அ.தி.மு.க., – -தி.மு.க.,வுக்கு மாற்றாக, -ம.ந.கூ., – -த.மா.கா., இணைந்து, புதிய கூட்டணியை தே.மு.தி.க., உருவாக்கியுள்ளது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, விஜயகாந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அதற்காகவே, அவரது கட்சிக்கு, 104 தொகுதிகள் தரப்பட்டு, வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
விஜயகாந்த் கூட்டணி தேடிய நேரத்தில், பா.ம.க.,வில் வேறு காட்சிகள் அரங்கேறி கொண்டிருந்தன. முடிவில், சட்டையை மாற்றுவது போல், கூட்டணியை மாற்றிக் கொண்டிருந்த ராமதாசை, அடம் பிடித்து அன்புமணி, தனித்து போட்டியிட வைத்திருக்கிறார்.
கூட்டணி துணையின்றி, ஆட்சியை பிடிக்கப் போவதாகவும், அன்பு மகன் அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர் என்றும், ராமதாஸ் பேசி வருகிறார். பெரிய கட்சிகளுக்கு இணையாக, பொதுக்கூட்டம், விளம்பரம், பிரசாரம் என, செலவுகளில் சிக்கனம் பாராமல், ராமதாசும்,
அன்புமணியும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் எங்கே இரு தரப்புக்கும் இடையே, மோதல் என்ற கேள்வி எழலாம்.
தே.மு.தி.க., போட்டியிடுகிறதே, அந்த, 104 தொகுதிகளில் தான் பஞ்சாயத்தே
! 104 தொகுதிகளிலும், தே.மு.தி.க.,வை பா.ம.க., நேரடியாக எதிர்கொள்கிறது. இதில், யாருக்கு வெற்றி என்பது முக்கியமல்ல; யார், யாரை விட அதிக ஓட்டு வாங்குகிறார் என்பது தான் போட்டி.
இவ்விரு கட்சிகளுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதற்கு, கடந்த கால தேர்தல்களே உதாரணம். தே.மு.தி.க.,வை ஆரம்பித்ததில் இருந்து விஜயகாந்த், வன்னியர் மிகுந்த வட மாவட்டங்களில் தான் களமிறங்கி வருகிறார். பா.ம.க.,வின் ஆதரவு வட்டத்தை தகர்த்து, இரு வெற்றிகளை இதுவரைபெற்றுள்ளார்.
பா.ம.க.,வை வீழ்த்துவதற்கு தான், தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவங்கியுள்ளார் என்ற பேச்சு கூட எழுந்தது. அதற்கேற்ப, விஜயகாந்த் வரவால், வட மாவட்டங்களில், பா.ம.க., செல்வாக்கை இழக்க துவங்கியது. 2006க்கு பின் நடந்த தேர்தல் முடிவுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டது.
இரு கட்சிகளும் ஒட்டாமல் உரசாமல் இருந்த நேரத்தில், 2014 லோக்சபா தேர்தல் வந்தது. மோடியை பிரதமராக்க, வலுவான கூட்டணியை ஏற்படுத்த, தமிழக பா.ஜ., தீவிர முயற்சி எடுத்தது. அதன் பலனாக உருவான கூட்டணியில், தே.மு.தி.க.,- – பா.ம.க., இடம் பெற்றன. கூட்டணி வெற்றிக்காக, பா.ம.க.,வுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க தே.மு.தி.க., முன்வந்தது; பழைய விரோதத்தை மறக்க, பா.ம.க., விரும்பவில்லை.
அதனால், பா.ம.க., தரப்பில், அன்புமணி போட்டி யிட்ட தர்மபுரி தொகுதியில் வெற்றி கிடைத்தது. தே.மு.தி.க., தரப்பில், சுதீஷ் போட்டியிட்ட சேலத்தில் தோல்வி கிடைத்தது. அன்புமணி வெற்றிக்கு, தே.மு.தி.க., உதவியது; சுதீஷ் தோல்விக்கு, பா.ம.க., உதவியது என்ற பேச்சு, அப்போதே எழுந்தது.
அந்த தேர்தலோடு, தே.மு.தி.க.,- – பா.ம.க., உறவும் முறிந்தது. அதற்கு பின், இரு கட்சிகளும் பழைய பாதைக்கு திரும்பி, கீறியும் பாம்புமாக மாறின. அந்த கோபம் தான், இப்போதுபிரசாரத்தில் வெடிக்கிறது. போகும் இடமெல்லாம், அன்புமணியும், ராமதாசும், விஜயகாந்த்தை வறுத்தெடுக்கின்றனர். அதற்கேற்ப, விஜயகாந்த் பிரசார பேச்சும் இருக்கிறது என்பது வேறு விஷயம்.
இத்தேர்தல் மூலம் ஆட்சிக் கட்டிலை பிடிக்கிறோமோ இல்லையோ, தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு அடுத்து, மூன்றாவது பெரிய கட்சி என்ற முத்திரையை பெற்று விட வேண்டும் என, பா.ம.க., துடிக்கிறது. 234 தொகுதிகளிலும் தனித்து நிற்பதும் அதற்காகவே. அதே துடிப்பு, தே.மு.தி.க.,க்கும் இருப்பது தான் மோதலுக்கு காரணம். இரு கட்சிகளின் தலைமையும், தங்களது நிர்வாகிகளுக்கு, தனித்தனியாக ரகசிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. ‘எப்படியாவது, ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கி விடுங்கள்’ என்பது தான் அந்த
உத்தரவு.
அந்த, 104ல், வேளச்சேரி, தி.நகர், வேப்பனஹள்ளி, திருப்பத்துார், திட்டக்குடி, பாலக்கோடு, தர்மபுரி, ஆரணி, பாப்பிரெட்டிப்பட்டி, அரியலுார், செய்யாறு, ஏற்காடு, உளுந்துார்பேட்டை, விழுப்புரம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், மேட்டூர், திண்டிவனம், ஓமலுார், சேலம் மேற்கு, கும்மிடிப்பூண்டி, திருவண்ணாமலை, விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, உத்திரமேரூர், காஞ்சிபுரம், சோளிங்கர், ராணிப்பேட்டை, கே.வி.குப்பம், ஆம்பூர், ஜோலார்பேட்டை, ஓசூர், செங்கம், கெங்கவல்லி, பெரம்பலுார் ஆகிய, 36
தொகுதிகளில், இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு அதிகம். இந்த தொகுதியில், தே.மு.தி.க.,வை விட, ஒரு ஓட்டாவது அதிகம் பெற்றுவிட வேண்டும் என்று பா.ம.க.,வினர் முனைப்பு காட்டுகின்றனர். அதே
நேரத்தில், தோற்றாலும் பரவாயில்லை; பா.ம.க.,வை விட முன்னிலை பெற்றுவிட வேண்டும் என்று தே.மு.தி.க.,வும் முட்டி மோத தயாராகி வருகிறது.
யாருக்கு அந்த ஒரு ஓட்டு? தேர்தல் முடிவுக்கு பின் பார்க்கலாம்!

Similar topics
» யாருக்கு ஓட்டு என்பதை கட்சி ஏஜென்டிடம் காட்ட வேண்டும்: எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்
» யாருக்கு வோட்டுப் போடுவது?
» யாருக்கு ஊட்டம்?
» கொ.மு.க., - தி.மு.க., கூட்டணியால் யாருக்கு லாபம்?
» தமிழகத்தில் சங்மாவுக்கு அதிக ஓட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum