Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெயலலிதா… டாஸ்மாக்… மதுவிலக்கு… படிப்படியாக!
Page 1 of 1

டாஸ்மாக்
என்னங்க சார் உங்க சட்டம்… என்னங்க சார் உங்க திட்டம்!
‘‘பூரண மதுவிலக்குதான் . எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்குப் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.’’ – சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் புதிய முழக்கம் இது. மதுவிலக்கு திகில்தான் இப்படி வார்த்தைகளாக வந்துவிழுந்திருக்கின்றன.
‘‘டாஸ்மாக் கடைகளின் நேரம் முதலில் குறைக்கப்படும். பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றெல்லாம் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா. ஐந்தாண்டுகள் சும்மா இருந்த அம்மாவின் தேர்தல் வாக்குறுதி பலிக்குமா? பல் இளிக்குமா?
‘‘கேளுங்கள் வாக்காளப் பெருமக்களே, உண்மையைக் கேளுங்கள். வரலாறு மக்களுக்குத் தெரியாது என்று கருணாநிதி நினைக்கிறாரா? நடந்த பழைய வரலாறுகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா?’’ – இதுவும் தீவுத்திடல் முழக்கம்தான். மதுவிலக்குக்காக இந்த ஆட்சி காட்டிய அக்கறையின் வரலாற்றை பார்ப்போம்.
டாஸ்மாக்கிற்கு பிள்ளையார் சுழி!
1991, 2001 மற்றும் 2011 என மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் தமிழக மக்கள் ஜெயலலிதாவை அமர வைத்தார்கள். அப்போதெல்லாம் ‘மதுவிலக்கு’ பற்றி சிந்திக்காமல் இப்போது ‘தேர்தல் போதி மர’த்தில் ஞானோதயம் பெற்றிருக்கிறார் ஜெயலலிதா. தனியார் விற்று வந்த சில்லறை மது விற்பனையை மாற்றி அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளை 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜெயலலிதாதான் கொண்டு வந்தார்.
எலைட் ஷாப் டு ஹைவேஸ் ஷாப்!
நவீன வசதிகள் கொண்ட எலைட் கடைகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கடை விரிக்கப்பட்டன. ‘விபத்துக்களைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மதுக்கடைகளை அகற்ற மறுத்தார்கள். சுப்ரீம் கோர்ட் வரை அப்பீலுக்குப் போன பிறகுதான் சில மதுக்கடைகள் மூடப்பட்டன.
59 முறை அரஸ்ட்!
மதுக் கடைகளை மூடச் சொல்லி ஊர் ஊராகப் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை காக்கிகள் கூட்டம் ஒடுக்கியது. அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின் தொடர்ந்து போனது போலீஸ் படை. நந்தினி 59 முறையும் அவரது தந்தை ஆனந்தன் 63 முறையும் கைதானார்கள். மதுவிலக்குக் கேட்டுப் போராட்டம் நடத்திய ராமதாஸையும் உள்ளே தூக்கிப் போட்டார்கள்.
டோல்ஃப்ரீ நம்பர்!
போலி மதுபானம் விற்கப்பட்டு அதனால் அரசின் டாஸ்மாக் வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக போலி மதுபானம் பற்றி தகவல்களை தெரிவிக்க 10581 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி சேவை 24.07.2013-ல் ஆரம்பித்தது அ.தி.மு.க. ஆட்சியில்தான். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை குப்பைத் தொட்டிக்குப் போனது.
படத்தை க்ளிக் செய்யவும்
சசிபெருமாள் மரணம்!
மதுவிலக்குக்காகத் தொடர்ந்து போராடி வந்தார் காந்தியவாதி சசிபெருமாள். 2014-ல் வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்குக் கோரி 36 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதெல்லாம் ‘படிப்படியாக’கூட அரசு படியவில்லை. கன்னியாகுமரி உண்ணாமலையில் பள்ளிக் கூடங்களுக்குப் பக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி செல்போன் டவரின் உச்சியில் ஏறிப் போராட்டம் நடத்திய போது அவர் உயிரைவிட்டார். உச்சாணியில் இருந்த ஆட்சியாளர்கள் ‘உச்’க்கூட சொல்லவில்லை. சசிபெருமாளின் மரணத்தைத் தற்கொலை என கொச்சைப்படுத்தினார்கள்.
கோவன் மீது கோபம்!
‘ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்’ ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ எனப் பாடியதற்காக பாடகர் கோவனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள். ‘மச்சி ஓப்பன் தி பாட்டல்’ பாடல் இடம்பெற்ற படத்துக்கு வரிவிலக்கு. மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசத் துரோக வழக்குகள் பதியப்பட்டன.
மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் அடைத்தது அரசு. டாஸ்மாக் கடைகளை எல்லாம் காக்கிகள் காவல் காத்தன. திருவண்ணாமலையில் இளைஞர்கள், நான்கு வயதுச் சிறுவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த கொடூரம் வாட்ஸ்அப், ஃபேஸ் புக்கில் அதிர்வலைகளை உண்டாக்கியது. கோவையில் பிளஸ் டூ மாணவி குடித்துவிட்டுப் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தது, திருசெங்கோட்டில் அரசுப் பள்ளியிலேயே மாணவிகள் மது அருந்தியது, கரூர் பஸ் ஸ்டாப்பில் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி கிடந்தது எல்லாம் அம்மா ஆட்சியின் மணிமகுடங்கள்.
விசுவநாதனின் விசுவாசம்!
‘‘மதுவிலக்கை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. கள்ளச்சாராயம் பெருகும். அரசுக்கு வருமானம் பாதிக்கும். அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிப்பார்கள்’’ இதெல்லாம் சொன்னது அசாம் அமைச்சர் அல்ல. நம்ம அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடந்த ஜனவரியில் நடந்த சட்டசபையில் சொன்னது. இரண்டு மாதங்களில் இப்போது ‘படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம்’ என சொல்கிறாரே முதலைமைச்சர். இதுல எதுங்க உண்மை? ‘‘மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என சொன்னார் நத்தம் விசுவநாதன். ஆனால் அம்மா “படிப்படியாகக் கொண்டு வருவோம்” என்கிறார்.
டாஸ்மாக்… டார்கெட்!
2001-06 அ.தி.மு.க. ஆட்சியைவிட 2006-11 தி.மு.க. ஆட்சியில் மது விற்பனை 109 சதவிகிதம் அதிகரித்ததாகவும், ஆனால், இப்போது குறைந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஓவ்வொரு ஆண்டும் கிடைத்த வருவாய் புள்ளிவிவரத்தை பார்த்தால் அவர் உண்மை புரியும். முந்தைய தி.மு.க ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்தது. ஜெயலலிதா ஆட்சியில், ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1.90 லட்சம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
‘‘உண்மை எப்படி நம்பிக்கையைக் கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியைக் கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியைக் கொடுக்கிறதோ, அது போல எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைக் கொடுத்து இருக்கிறது’’ – இதுவும் தீவுத்திடலில் அம்மா சொன்ன பஞ்ச் வசனங்கள்.

Similar topics
» மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்!' - தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெ. அறிவிப்பு!
» ஜெயலலிதா அவர்களே, இந்தக் கொடூரத்தைப் பார்த்தாவது டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், ப்ளீஸ்!
» மதுவிலக்கு தந்திரங்கள்…விகடன்
» தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது
» சமையல் காஸ் மானியம் படிப்படியாக "கட்!':

Permissions in this forum:
You cannot reply to topics in this forum