TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெயலலிதாவுக்கு நாங்கள் யார் என்பதை புரிய வைப்போம்...!' -விளாசும் வேல்முருகன்

Go down

ஜெயலலிதாவுக்கு நாங்கள் யார் என்பதை புரிய வைப்போம்...!' -விளாசும் வேல்முருகன் Empty ஜெயலலிதாவுக்கு நாங்கள் யார் என்பதை புரிய வைப்போம்...!' -விளாசும் வேல்முருகன்

Post by Tamil Thu Apr 14, 2016 7:55 am

ஜெயலலிதாவுக்கு நாங்கள் யார் என்பதை புரிய வைப்போம்...!' -விளாசும் வேல்முருகன்
ஜெயலலிதா
அ.தி.மு.கவுக்கு நான்கு ஆண்டுகள் விசுவாசமாக இருந்த தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்தத் தேர்தலில் தனித்துவிடப்பட்டிருக்கிறார். தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி என விடாமல் அழைப்புகள் வந்தபோதும், அவரிடம் எந்தப் பதிலும் இல்லை.
'தேர்தலில் என்ன முடிவு எடுத்தால் சரியாக இருக்கும்?' என தொடர்ந்து விவாதித்து வருகிறார். இரண்டு நாள் தொடர் முயற்சிக்குப் பிறகு வேல்முருகனிடம் பேசினோம். கூட்டணி, தேர்தல், அ.தி.மு.க தலைமையின் உதாசீனம் என எதைப் பற்றிக் கேட்டாலும் மடைதிறந்த வெள்ளம் போல பேசினார் வேல்முருகன்.
தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன?
எங்கள் கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்று விடிய விடிய நிர்வாகிகளுடன் பேசினேன். இன்றைக்குள் முடிவாகிவிடும். என்னுடைய மனதில் என்ன இருக்கிறதோ, அதே சிந்தனையில்தான் கட்சி நிர்வாகிகளும் இருக்கிறார்கள். 180 தொகுதிகளுக்கு மனு கொடுத்திருக்கிறார்கள். மீதி தொகுதிகளுக்கும் மனு வர வேண்டியிருக்கிறது. எங்களுக்கான தொகுதிகளை அடையாளம் கண்டு வருகிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் தனித்துப் போட்டிதான்.
'பா.ம.கவுக்கு வேல்முருகன் ஆதரவு' என நேற்று ஒரு செய்தி வெளியானதே? 
அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட செய்தி. 'மதுஒழிப்பு, ஈழவிடுதலை, லோக் ஆயுக்தா உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் ஆதரவைக் கேட்டால் பரிசீலிப்போம்' என்றுதான் நேற்று பத்திரிகையாளர்களிடம் சொன்னேன். 'கூடங்குளம் உதயகுமார், தமிழருவி மணியன், சீமான் போன்றவர்கள் கேட்டால் பரிசீலிப்போம்' என்றேன். 'பா.ம.க ஆதரவு கேட்டால் என்ன செய்வீர்கள்?' எனக் கேட்டார்கள். 'பா.ம.கவுக்காக கோஷம் போட்டு ஜெயிலுக்குப் போன பலர் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் கேட்டால் பரிசீலிப்போம்' என்று சொன்னதும், பா.ம.கவுக்கு வேல்முருகன் ஆதரவு என்று செய்தி போட்டுவிட்டார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதேபோல், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க இவர்களோடும் நான் கூட்டணி வைக்க முடியாது. காரணம். இனப்படுகொலை கட்சி காங்கிரஸ், பா.ஜ.க மதவாத கட்சி, தி.மு.கவும் இனப்படுகொலைக்கு காரணமான கட்சி. அ.தி.மு.க எங்களுக்கு உடன்பாடான கட்சி என்றாலும், கூட்டணியைவிட்டு வெளியேற்றியதால், அவர்களையும் எதிர்க்கிறோம். பா.ம.க எங்களுடைய நேர் எதிரி கட்சி. அவர்களோடு கூட்டணி வைக்கவே முடியாது. தே.மு.தி.க எங்களுக்கு உடன்பாடில்லாத கட்சி. விஜயகாந்த் தலைமையை ஏற்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் மேற்கண்ட இந்தக் கட்சிகளோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஜெயலலிதாவுக்கு நாங்கள் யார் என்பதை புரிய வைப்போம்...!' -விளாசும் வேல்முருகன் %E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-3
சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றால், எதாவது ஒரு பிரதான கட்சியில் இணையத்தானே வேண்டும்?

சட்டமன்றத்தில் ஓரிரு சீட்டுகள் வேண்டும் என்பதற்காக, அன்னை சோனியா வாழ்க, முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்று சொன்னால் நானும் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க வேண்டும். என்னுடைய மனநிலை தனி அணிதான். சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்து இரண்டு சீட்டுக்காக யாருடைய கதவையும் தட்ட விரும்பவில்லை. இதுவரையில், அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுக்கக் காரணமே, ஈழவிடுதலை, மூவர் தூக்கு ரத்து, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு, காவிரி முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற விவகாரங்களில் அவர்கள் காட்டிய ஈடுபாடுதான். அ.தி.மு.கவோடு கொள்கை முரண்பாடு இருந்தாலும், பல பிரச்னைகளில் ஒன்றாக இணைந்திருந்தோம். கோக் பிரச்னைக்கு எதிராகப் போராடியபோது, என் மண்டையை உடைத்தார்கள். அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னுடைய கொள்கையில் நான் எந்த சமரசமும் செய்தது கிடையாது.

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைய விடாமல் தடுத்தது யார்?
சமரசம் இல்லாத கொள்கைவாதியாக நான் உருவாவதை அ.தி.மு.கவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் விரும்பவில்லை. முதல்வரிடம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எங்களைப் போன்ற சக்திகள் அரசியல் அங்கீகாரம் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு முறை முதல்வரை சந்திக்கும்போதும், அவர் என்னிடம் பேசும் விஷயங்கள் ஆச்சர்யத்தைத் தருகிறது. என்னை வாழ்த்தி விட்டு, 'பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று என்னுடன் சட்டமன்றம் வர வேண்டும்' என்றார் முதல்வர். பேச்சுவார்த்தையின்போது, 'பா.ம.கவில் இருந்து வெளியேறி வந்திருக்கிறேன். தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித்துவம் காட்ட வேண்டும்' என்றேன். அதை அ.தி.மு.கவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் ஏற்கவில்லை. இன்றும்கூட, 'அவரசப்படாதீர்கள். அம்மா சீட் ஒதுக்குவார்' என்று பேசுகிறார்கள். தமிழரசன், தனியரசு, கருணாஸ் மாதிரி ஒட்டுமொத்தமாக கட்சியை அடகு வைக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில், முதல்வர் என்னைப் பாராட்டுகிறார் என்று மகிழ்ச்சியடையவில்லை. சுயநலத்திற்காக ஒருநாளும் முதல்வரை சந்தித்தது கிடையாது. எந்த அமைச்சர் வீட்டுக்கும் நான் போனது கிடையாது. ஒரேஒருமுறை முதல்வரிடம் பேசினேன். அதுவும்கூட பேரறிவாளனின் பரோல் விடுப்புக்காகத்தான். வித்தியாசமான சிந்தனையுள்ள கண்ணிமான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய அண்ணன்களைத் தவிர, எந்த முதலாளியிடமும் போய் பத்து ரூபாய் வேண்டும் என்றுகூட நான் கேட்டது கிடையாது. ஒரு சீட், அரை சீட்டுக்காக நான் ஏன் கைகட்டி நிற்க வேண்டும்
மக்கள் நலக் கூட்டணியை ஏற்பதில் என்ன தயக்கம்?
ஐம்பது ஆண்டுகள் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான வைகோ, ஒரு கோமாளிக் கூட்டணியில் சேர்ந்துவிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்த திருமா, விஜயகாந்த்தை முதல்வராக்க முழங்குகிறார். 100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட கம்யூனிஸ்ட்டுகளும் அங்கே இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து விஜயகாந்தை முதல்வராக்கத் துடிக்கின்றனர். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தனித்துப் போட்டி என்ற முடிவு அ.தி.மு.கவுக்கு சாதகமாக முடியாதா?
வேல்முருகனை உதாசீனப்படுத்திய அ.தி.மு.க தலைமைக்கு நாங்கள் யார் என்பதைக் காட்ட வேண்டும். நெய்வேலியில் நான் நாற்பதாயிரம் ஓட்டுக்கள் வாங்குகிறேன் என்றால், அங்கு அ.தி.மு.க தோற்றால் கவலைப்பட மாட்டார்களா? குறிஞ்சிப்பாடியில் எனக்கு முப்பதாயிரம் ஓட்டுக்கள் இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளிலும் நாங்கள் செல்வாக்காக இருக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் எங்கள் கட்சி செல்வாக்காக இருக்கிறது. தர்மபுரி, பெண்ணாகரத்தில் 25 ஆயிரம் ஓட்டுக்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறோம். நாற்பது முதல் அறுபது தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாக எங்கள் கட்சி இருக்கிறது. ஒசூரில் மட்டுமே அறுபதாயிரம் ஓட்டுக்கள் இருக்கிறது. 'எங்கள் வாக்குகள் வலிமையில்லை' என்பதற்காக, எங்களை உதாசீனப்படுத்தியவர்களுக்கு நாங்கள் யார் என்பதை காட்ட வேண்டிய சூழல் இருக்கிறது. எங்களுக்கு உரிய இடம்கூட வேண்டாம். அ.தி.மு.கவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறோம். ஏழு பேரை விடுதலை செய்யுங்கள் என்றுதான் இப்போதும் கேட்கிறோம். அதைப் பற்றி எந்தப் பதிலும் இல்லை. இந்த மண்ணுக்கான தீர்வுகளைத் தேடித்தான் அ.தி.மு.கவோடு இருந்தோம். எங்கள் கட்சியின் ஆட்களின் மண்டையை உடைத்தபோதே, கூட்டணியை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும். பா.ம.கவுக்கும் எங்களுக்கும் கொடி ஏற்றும் பிரச்னையில் ஒரு மாதம் ஜெயிலில் போட்டார்கள். என் மீது 307-வது பிரிவில் வழக்குப் போட்ட போதும்கூட, நான் வெளியே வரவில்லை. இதெல்லாம் ஏதோ ஓரிரு சீட்டுகளுக்காக இல்லை.
உங்கள் கட்சியின் எதிர்கால லட்சியம்தான் என்ன? 
தனித்துப் போட்டி என்ற முடிவு மூலம் இப்போது வெற்றி பெறுவது கடினம் என்று எங்களுக்குத் தெரியும். இன்னும் ஐந்தாண்டு, பத்தாண்டுகளில் போலி அரசியல்வாதிகள், போலி ஈழவிடுதலை ஆதரவாளர்கள், திராவிடக் கட்சி அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள். கருணாநிதியைத் தவிர, தி.மு.கவை யார் வழிநடத்த முடியும்? அதே நிலைதான் அ.தி.மு.க பக்கமும். 'நாம் பொறுமையாக இருப்போம். ஒவ்வொரு அடியையும் நிறுத்தி நிதானமாகவே வைப்போம்' என எனது தொண்டர்களிடம் பேசி வருகிறேன். இந்தத் தேர்தலில் எங்கள் வலிமை என்ன என்பதை புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வைப்போம்.
-ஆ.விஜயானந்த்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: சீமான்
» சிங்களத்திற்கு யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவரால் காண்பித்த நாள் இன்றாகும்.
» "அவுட்' * இந்திய அணியில் இருந்து சேவக் * ஆசிய கோப்பையில் யார், யார்
» விடுதலைப் புலிகள் "யார்" என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்?
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum