Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்
Page 1 of 1

ஹார்ட் டிஸ்க்
கம்ப்யூட்டரை இயக்கிப் பயன்களை அனுபவிக்கையில், மவுஸ், கீ போர்ட், மானிட்டர், இணைக்கப்பட்டிருந்தால் பிரிண்டர் என அனைத்தையும் கவனமாகப் பாதுகாக்கிறோம். இவை எல்லாம் கெட்டுப் போய், இயக்கத்தை நிறுத்தினால், புதியதாக ஒன்று வாங்கி இணைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய் முடங்கிவிட்டால் என்ன செய்வீர்கள். ஹார்ட் டிஸ்க் புதியதாக ஒன்று
வாங்கி இணைத்துப் பயன்படுத்தலாம்.
ஆனால், அது அவ்வளவு எளிதா என்ன? மேலும், அதில் உள்ள டேட்டாவினை மீட்டு எடுக்க முடியவில்லை என்றால், நம்முடைய பல்லாண்டு உழைப்பு அல்லவா வீணாகிவிடும். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அனைத்து பாகங்களும், ஒரு நாளில் இயங்கா நிலையை அடையும். ஆனால், எவை எப்போது தங்களின் இயக்கத்தினை நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில், நம்மால் இயன்ற வகையில், ஹார்ட் டிஸ்க்கினைப் பயன்படுத்துவதனைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.
நாமாக ஏற்படுத்தும் சேதம்: ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க்கில் தான், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்?
கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இடத்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.
அதிக வெப்பம்: ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது.
இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.
சிதறியபடி பதியப்படும் பைல்கள் (File fragmentation): பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும். இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.
இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு.
டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும்.
அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்: ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும். இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது. குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.
மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு: மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும். கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலிருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்? சர்ஜ் ப்ரடக்டர் (surge protector)என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது.
இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

Similar topics
» ஹார்ட் டிஸ்க் செயலிழக்க வைக்க வேண்டுமா ?
» ஹார்ட் டிஸ்க் பழுதாவதற்க்கான முக்கிய காரணங்கள்
» விழித்திருங்கள்… கவனமாய் செயல்படுங்கள்..! ஜெயலலிதா தேர்தல் அலர்ட்
» கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் எப்படி இயங்குகிறது – வீடியோ!
» ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum