TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கல்லீரல் செயலிழப்பு காரணம் என்ன? மருத்துவ பதில்கள்

Go down

கல்லீரல் செயலிழப்பு காரணம் என்ன? மருத்துவ பதில்கள் Empty கல்லீரல் செயலிழப்பு காரணம் என்ன? மருத்துவ பதில்கள்

Post by Tamil Mon Mar 28, 2016 9:23 pm

கல்லீரல் செயலிழப்பு காரணம் என்ன? மருத்துவ பதில்கள்
கல்லீரல்
ரோஹன் – ஸ்வேதா தம்பதிக்குப் பிறந்த அழகான குழந்தை, வருண். இரண்டு வயதுதான் ஆகிறது. திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்படவே, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவனுக்கு மஞ்சள்காமாலை இருப்பது கண்டறியப்பட்டது. என்ன சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால், பாதிப்பு மிகத் தீவிரமான நிலையில், மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றனர். அந்தக் குழந்தைக்கு கல்லீரல் செயலிழந்துவிட்டது, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை. “மது அருந்தினால் கல்லீரல் செயலிழக்கும் என்பது தெரியும்… ஒரு தவறும் செய்யாத சின்னக்குழந்தைக்கு எப்படி கல்லீரல்
செயலிழந்தது?” எனக் கண்ணீர் மல்கக் கேட்டார் ரோஹன்.
வருண் மட்டும் அல்ல… இந்தியாவில் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தை கல்லீரல் செயலிழந்து மரணத்தைத் தழுவுகிறது. சில குழந்தைகளுக்குப் பிறந்தவுடனேயே கல்லீரல் செயலிழப்பு ஏற்படுகிறது. ஏன் இந்த நிலை… எதனால் இந்தப் பிரச்னை வருகிறது… இதற்கு என்னதான் தீர்வு?
மனிதனுக்குள்ளே இருக்கும் ஓர் அற்புதமான தொழிற்சாலை கல்லீரல். மனிதர்களின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சுவது, தேக்கிவைப்பது, நச்சுக்களை வெளியேற்றுவது எனப் பல பணிகளைச் செய்துவரும் கல்லீரல், ஒரு நாள் ஸ்ட்ரைக் செய்தாலும் மிகப்பெரிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். உடனடி கல்லீரல் செயலிழப்பு (Acute Liver Failure), நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு  (Chronic Liver Failure) என  இரண்டு வகையான கல்லீரல் செயலிழப்புகள் உள்ளன.
ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரல் பாதிப்பது, அதிக அளவு கொழுப்பு படிந்து ஃபேட்டி லிவர் பிரச்னையால் கல்லீரல் சுருக்கம் அடைவது போன்றவை நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு வகைக்குள் அடங்கும். இவர்களுக்கு, மெள்ள மெள்ள கல்லீரல் பாதிக்கப்பட்டு, 10 – 15 ஆண்டுகள் கழித்து முழுமையான கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மிகச்சிலருக்கு, திடீரென மஞ்சள்காமாலை போன்ற ஏதாவது கோளாறு ஏற்பட்டு, ஒரு வாரம் முதல் ஒரு மாதத்துக்கு உள்ளேயே கல்லீரல் செயலிழந்துவிடும். இதைத்தான் ‘உடனடி கல்லீரல் செயலிழப்பு’ என்கிறோம்.
இது எந்த வயதிலும் நடக்கலாம். எனினும், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மஞ்சள்காமாலை என்பது ஒரு நோய் கிடையாது; அது ஒரு பாதிப்பின் அறிகுறி. கல்லீரலில் ஏதோ பிரச்னை என்பதால் மஞ்சள்காமாலை வருகிறது என்பதை உணர்ந்து, எந்த நோயின் பாதிப்பு இருக்கிறதோ, அதை அறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்தாலே, பிரச்னையைத் தவிர்த்துவிடலாம்.  குழந்தைகளுக்கு ஏற்படும் உடனடி கல்லீரல் செயலிழப்பு பிரச்னையின் முக்கிய அறிகுறி மஞ்சள்காமாலை தான்.
[You must be registered and logged in to see this image.]
பொதுவாகவே, குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஹெபடைட்டிஸ் ஏ, இ ஆகிய வைரஸ்கள் காரணமாக மஞ்சள்காமாலை ஏற்பட்டால்,  இரண்டு மூன்று நாட்களில் தானாகவே சரியாகிவிடும். மூன்று நாட்களைத் தாண்டியும் காமாலை இருக்கிறது எனில், உடனடிக் கவனம் தேவை. நமது கல்லீரல் 50 சதவிகிதம் வரை பாதிக்கப்படும்போது, நமக்கு எந்த வித அறிகுறியும் தெரியாது, நன்றாகவே இயங்குவோம்.
50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்படும்போதுதான், மஞ்சள்காமாலையின்  வீரியம் அதிகமாகும். ஹெபடைட்டிஸ் வைரஸ்  தாக்காமல் மஞ்சள்காமாலை வருகிறது எனில், எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ரத்தம் உறையத் தேவையான பொருளை உற்பத்தி செய்வது, நச்சுக்களை நீக்குவது, சில சத்துக்கள் கிரகிப்பதற்கான என்சைம்களை உற்பத்திசெய்வது போன்ற பணிகளை கல்லீரல் செய்கிறது. கல்லீரலில் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான என்சைம்கள் தானாகவே சுரக்கும், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் நச்சுக்களை கல்லீரல் டீடாக்ஸ் செய்துவிடும். கல்லீரலில் நச்சுக்கள் வெளியேற்றும் என்சைம்கள் ஒழுங்காகச் சுரக்கவில்லை எனில், உடலில் நச்சுக்கள் தேங்கி, கல்லீரல் பாதிக்கப்படும். 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் சேர்ந்தக் கூட்டுக்கலவைதான் புரதச்சத்து. புரதச்சத்தை உடைத்து, உடலுக்கு ஏற்ற வகையில் மாற்றும்போது வெளிப்படும் பொருள் அமோனியா. இந்த அமோனியாவை கல்லீரலே யூரியாவாக மாற்றி, சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்.
அமோனியாவை யூரியாவாக மாற்றும் என்சைம்கள் கல்லீரலில் உற்பத்தி ஆகவில்லை எனில், உடலில் அமோனியா தேங்கிவிடும். அம்மோனியா அதிகம் சேர்ந்தால், அது நச்சாக மாறி கல்லீரலையே சிதைத்துவிடும். மூளைக்கு ஆக்சிஜன் சரியாகச் செல்லாமல், மூளையில் வீக்கம், கட்டி ஆகியவை ஏற்பட்டு மரணம் ஏற்படும்.
ஒரு சில குழந்தைகளுக்கு அமோனியா பாதிப்பால் மஞ்சள்காமாலை வராமல் நேரடியாக வலிப்பு வரக்கூடும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்து, தொடர்ந்து உடல் பலவீனம் அடைந்துவந்தால், அமோனியா பரிசோதனை செய்வது அவசியம். ரத்தத்தில் அமோனியா எவ்வளவு இருக்கிறது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் அறியலாம். பொதுவாக, ஒருவருக்கு 60 மைக்ரோ மோல் அளவுக்குத்தான் அமோனியா ரத்தத்தில் இருக்க வேண்டும். ஆனால், உடனடி கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு, 1,500 மைக்ரோ மோல் அளவைவிடவும் அதிகமாக இருக்கும்.
வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாக, என்சைம்கள் சுரப்புக் குறைபாடு ஏற்படும் குழந்தைகளுக்கு கல்லீரல் செயலிழப்பு அதிகமாக நடைபெறுகிறது. ஒரு சில குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் இருக்கும் கேலக்டோஸ் செரிக்கும் தன்மை இல்லாமல்போவதால், தாய்ப்பாலே விஷமாகும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாகக் கண்டுபிடித்தால் சிகிச்சை எளிது. எந்த மருந்து, மாத்திரையும் தேவை இல்லை, கேலக்டோஸ் சர்க்கரை இல்லாத உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தாலே, பிரச்னை சரியாகிவிடும்.
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவில் வில்சன் நோய் பிரபலம். இந்தியர்களில் பலருக்கு தாமிரச்சத்தை வெளியேற்றும் என்சைம்கள் ஒழுங்காகச் சுரக்காமல்போவதால், இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. வில்சன் பிரச்னை இருப்பவர்களுக்கும்  கல்லீரல் செயலிழப்பு அபாயம் அதிகம். வில்சன் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் மூலமே உடலில் இருந்து தாமிரத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிட முடியும். உடனடி கல்லீரல் செயலிழப்பைப் பொறுத்தவரையில்  துரிதமாகச் செயல்பட்டு நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுதான் முக்கியம். எனவே, குழந்தைகளுக்கு ரத்தவாந்தி, நினைவு தப்புதல், மஞ்சள்காமாலை போன்றவை ஏற்பட்டால், சுய மருத்துவம் செய்து நேரத்தை வீணடிக்காமல், மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது.
ஹெபடைடிஸ் ஏ, இ தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது, பரம்பரை வழி சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதன் மூலம், பெரும்பாலும் உடனடி கல்லீரல் செயலிழப்பு நோயைத் தடுக்க முடியும்!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» சூர்யா விலகலுக்கு காரணம் என்ன?
» செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum