Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:23 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!
Page 1 of 1

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் தினத்தை ஒட்டி, தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த கூட்டம், மாலை 5 மணி வரை தள்ளிப் போனது. அதுவரை, விஜயகாந்த் நடித்த படங்களின் பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் ஆட்டம்போட்டனர்.
விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!
தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் அணி உறுப்பினர்கள், நிகழ்ச்சி தொடங்கியவுடன் அனைத்துக் கட்சிகளையும் விளாசத் தொடங்கினர். ''அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது கேப்டன் பற்றிப் பேச? அவர் மாநாட்டை ஜபக் கூட்டம் போல் நடத்துகிறார். ஒரு தெருவில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, சீமான் பேசிய ஆடியோவை போட்டு விட்டேன். நாய்களே ஓடிவிட்டது. அந்த நாஞ்சில் சம்பத் பல நூறுக்கும், காருக்கும் விலை போகிறவர். அந்த அம்மாவுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் "செல்வி" என்றே போட்டுக் கொள்கிறார். அவர் கட்சியில் இருக்கும் மற்ற பெண்களும் இப்படித் தான் செய்கின்றனர் என்று ஆளாளுக்கு வசைப்பாடினர்.
ஜெயலலிதா முதலில் மூன்று "P"யை வைத்து ஆட்சி நடத்தினார். தற்போது நம்பரை வைத்து ஆட்சி நடத்துகிறார். 'P' என்றால் Police, Press, Panneerselvam. இவர்களை வைத்துதான் ஆட்சி நடத்தினார். இப்போது "நம்பர்" ஆட்சி செய்து வருகிறார். 110 விதி, எதற்கெடுத்தாலும் 144 தடை, ஐவர் அணி என இது இன்னொரு பக்கம் இருக்கிறது. நம்பர்களை சொல்லி பெண்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா.
இத்தனை வருடங்களாக இல்லாமல், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ராஜீவ் காந்தி கொலை குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய மோடிக்கு கடிதம் எழுதுகிறார். அவருடைய நோக்கமெல்லாம், மறுபடியும் பொதுமக்கள் வாக்குகளைப் பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்க வேண்டும் என்பது தான்.
காவல் துறை ஏவல் துறையாக மாறி, ஏளனம் செய்யக் கூடிய துறையாகி விட்டது. மழைக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரண நிதி, கட்சி அலுவலகத்தில் இருந்தோ, அவர் சொந்தக் காசில் இருந்தோ கொடுக்கப்பட வில்லை. அது மத்திய அரசாங்கம் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. உங்களில் எத்தனை பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது? 40 லட்சம் பேருக்கு இன்னும் நிவாரண நிதி சென்றடைய வில்லை என்று அறிக்கை வந்துள்ளது.
நம்மூர் பெண்களை 100 ரூபாய் சேலைக்கு அலைக்கழித்து, தன்மானத்தை இழக்கச் செய்கிறார். எங்காவது இலவசம் என்றால் ஆண்கள் முந்தியடித்துச் சென்று வாங்கி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் டாஸ்மாக்கை நோக்கித் தான் ஓடுவார்கள். கேப்டன் சொல்வது போல, "வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். வறுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தால் தான் இலவசம் ஒழியும்!"
இந்த ஐந்து வருடங்களில், மாதத்திற்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைப்பேன் என்று அந்த அம்மா கூறினார். எங்கு வைத்தார்? ஆண், பெண் என வேண்டாம் ஒரு மனிதராகவாவது இதுவரை அவர் யாருடனாவது பேசியது உண்டா? அ.தி.மு.க'வில் இருப்பவர்கள் குனிந்தே "ஹன்ச்-பேக்"காக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றால், அவர்களின் குடும்பம் தான் அவர்களை மன்னிக்குமா? அடிமைகளாகவே எத்தனை நாள் தான் வாழ முடியும் என அவர்கள் தொடங்கி விட்டனர். இது சாதனை ஆட்சி அல்ல. வேதனை ஆட்சி.
நான் ஏற்கனவே கூறியுள்ளேன், தி.மு.க. - தில்லு முல்லுக் கட்சி. அ.தி.மு.க. - அனைத்திலும் தில்லு முல்லுக் கட்சி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. மூவருக்கும் முழுப் பக்க விளம்பரம் தேவைப் படுகிறது. தே.மு.தி.க. செய்யப்போவது, நேர்மையான் அதிகாரிகளைக் கொண்டு லஞ்சம் இல்லாத ஆட்சி. அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்றாக படைக்கப்பட்டது தான் தே.மு.தி.க." என்று அவர் சொன்னவுடன், தே.மு.தி.க, தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லையோ, என லேசாக கூட்டம் முணுமுணுக்கத் தொடங்கியது.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''தமிழகத்தில் 94 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்பது எங்கள் கடமை. கடந்த எம்.பி. தேர்தலில் 14 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட்டது. அதில் கிடைத்த வாக்குகளை மட்டும் வைத்து கணக்கு போட்டீர்கள். மீதி இருக்கும் 26 தொகுதிகளின் கணக்கு எங்கே போனது? ஜெயலலிதாவிற்கு பிடித்தது தான் கருத்துக் கணிப்பு. அது கருத்துக் கணிப்பல்ல, கருத்துத் திணிப்பு.
திட்டி, கிண்டலடித்து, வாழ்த்தி என எப்படி கேப்டன் படத்தைப் போட்டாலும் பத்திரிக்கைகள் விற்றுத் தீர்ந்துவிடும். இதுவே தே.மு.தி.க'வின் வெற்றி. கேப்டன் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். அவருக்கு சைனஸ் பிரச்னை உள்ளது. ஒரு மூக்கு எப்போதுமே அடைத்து தான் இருக்கும். அவருக்கு டான்சில்ஸும் உள்ளதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? எம்.ஜி.ஆர். குண்டடிப்பட்டபோது, பேசுவது புரியவில்லை என்றார்கள். காமராஜர் படிக்கவில்லை என்றார்கள். ஆனால், இன்றுவரை அனைவர் மனதில் இருப்பதும் அவர்கள் இருவரும் தான். விஜய்காந்தும் அதுபோன்றவர் தான்" என்று பேசி முடித்தார்.
அதன் பிறகு மேடைக்கு பலத்த கர ஒலிகளுக்கு நடுவே வந்த விஜயகாந்த, ''விஜய்காந்திற்கு பேசத் தெரியாது என்கிறார்கள். என் கட்சியைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் யாரும் வழி நடத்த வேண்டாம். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஜால்ரா அடிக்கத் தான் லாயக்கு. விஜயகாந்த் எங்கு போகப் போகிறார். தி.மு.க.வா? பா.ஜ.க.வா? உங்களுக்கு என்ன? இதை என் கட்சி தொண்டர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும்" என்றார்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு தொண்டர் எழுந்து, "தலைவா, நம்ம தான் கெத்து!" என்று கத்த, "நான் பேசும்போது குறுக்க பேசக் கூடாது" என்று அவரை அதட்டி அமர வைத்து தொடர்ந்த விஜயகாந்த், ''என்னைப் பற்றி பேசுவதைப் போல ஜெயலலிதா அம்மாவைப் பற்றியும் பேசுங்களேன். பத்திரிக்கையாளர்களுக்கான உரிமையை தே.மு.தி.க என்றுமே வழங்கிவிடும்.
யாருடனும் நான் பேரம் பேசவில்லை. என்னைத் தேடி வந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முறை தே.மு.தி.க தனித்துப் போட்டியிடப் போகிறது!" என்று விஜயகாந்த் கூறியவுடன், அரங்கமே ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. உடனே, ''இங்கு வந்திருக்கும் மகளிர் அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த "மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என்று கூறி அத்துடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.
அதன் பின் மீண்டும் மைக் பிடித்த பிரேமலதா, "எங்களுக்கு அழைப்பு விடுத்த மக்கள் நலக் கூட்டணிக்கும், பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எங்கள் பணிவான நன்றிகள்!" என்று கூறி முடித்தார்.
சில ருசிகர துளிகள்...
* சினிமா பாடல்களுடன் துவங்கிய பொதுக்கூட்டத்தில், தேச தலைவர்களை போல் வேடமிட்டவர்களின் ஆடல் பாடலுடன் நடனம் நடைபெற்றது. அந்த பாடல்களின் இறுதியில் அவர்களுக்கு இணையாக விஜயகாந்த் படத்தை காட்டி நிறைவு செய்தது மிகவும் காமடியாக இருந்ததால் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
* சில மாவட்ட செயலாளர்கள் திருவள்ளூவர், பாரதியாரின் பாடல்களை விஜயகாந்துக்கும், பிரேமலாதவிற்கு ஒப்பிட்டு பேசினர். அதை பார்த்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரிப்பை வெளிக்காட்ட முடியாமல் அமர்ந்திருந்தனர்.
* தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் இதையெல்லாம் பேசுங்கள் என்று அறிவுறுத்தியதாக இந்த பொதுக்கூட்டம் இருந்தது.
* சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மகாலட்சுமி, நாஞ்சில் சம்பத்தை திட்டி தீர்த்தார். அதேபோன்று, பா.ம.க. ராமதாஸ், நாம் தமிழர் சீமான், பத்திரிக்கையாளர்கள் என தே.மு.தி.க.வை விமர்சனம் செய்கிறவர்களையும் அவர் விளாசி தள்ளினார்.
* இந்த மகளிரணி பொது கூட்டத்திற்கு பிரமலாதவின் அம்மா வந்ததிருந்தார். அவரை தே.மு.தி.க. பிரமுகர்கள் கை தாங்களராக பிடித்து அழைத்து வந்து அமர வைத்தனர். அவர், முதல் முறையாக இந்த மகளிரணி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
* இந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சருக்கு வழங்கப்படும் பாதுப்பு எப்படி இருக்குமோ அப்படியே, தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையின் உளவுப்பிரிவினர் போல் அவர்களில் சிலர், ஆங்காங்கே கண்காணித்து கொண்டிருந்தனர்.
* விஜயகாந்த பேசிய முடிக்கும்போது கடைசியாக, பெறுப்பாக நீங்கள் அனைவரும் வீடு போய் சேர்ந்தீர்களா என்று மாவட்ட செயலாளர்களிடம் கேட்பேன்" என்று அன்போடு கூறி முடித்தார்
* பிரரேமலதா பேச்சு கோர்வையாக தெளிவாக இருந்தது. ஜெயலலிதாவை சரமாரியாக திட்டி தீர்த்த பிரேமலதா, தி.மு.க.வை மட்டும் மூன்று முறை குறை கூறினார்.
மு.சித்தார்த்
- கே.புவனேஸ்வரி
படங்கள்: மா.பி.சித்தார்த்
(மாணவ பத்திரிக்கையாளர்)

முதலில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்தை தெரிவித்து கொண்டு தன் உரையை ஆரம்பித்த பிரேமலதா, ''மகளிர் அணி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக தேசய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சகோதரிகள் இங்கு மஞ்சள் சீருடை உடுத்தி ஆண்களுக்கு நிகராக வீர நடை போட்டு வந்துள்ளனர். இதற்கு முழுக் காரணம் ராணுவக் கட்டுப்பாட்டோடு இந்தக் கழகத்தை வழி நடத்தி செல்லும் கேப்டன் தான். ஒரு ஆண்மகன் பொதுக் கூட்டத்திற்கு வருவது சாதாரணம். ஆனால், இத்தனை பெண்கள் கூடி வருவது நாம் இதுவரைக் கண்டிராதது. வேலூரிலும், திருச்சியிலும் நடந்த இந்த மகளிர் அணி மாநாடு இப்பொழுது சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது.
ஜெயலலிதா முதலில் மூன்று "P"யை வைத்து ஆட்சி நடத்தினார். தற்போது நம்பரை வைத்து ஆட்சி நடத்துகிறார். 'P' என்றால் Police, Press, Panneerselvam. இவர்களை வைத்துதான் ஆட்சி நடத்தினார். இப்போது "நம்பர்" ஆட்சி செய்து வருகிறார். 110 விதி, எதற்கெடுத்தாலும் 144 தடை, ஐவர் அணி என இது இன்னொரு பக்கம் இருக்கிறது. நம்பர்களை சொல்லி பெண்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா.
தே.மு.தி.க. கட்சி, கேப்டன் ரசிகர் மன்றாமாக இருந்து இப்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது. பேசத் திராணியின்றி முற்றிலும் முடங்கிப் போயிருக்கிறார் ஜெயலிலதா. எங்கள் தயவு இல்லை என்று சொன்னவுடன், வேட்பாளர் பட்டியலை அவர்களால் அறிவிக்க முடியவில்லை.
இத்தனை வருடங்களாக இல்லாமல், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ராஜீவ் காந்தி கொலை குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய மோடிக்கு கடிதம் எழுதுகிறார். அவருடைய நோக்கமெல்லாம், மறுபடியும் பொதுமக்கள் வாக்குகளைப் பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்க வேண்டும் என்பது தான்.
காவல் துறை ஏவல் துறையாக மாறி, ஏளனம் செய்யக் கூடிய துறையாகி விட்டது. மழைக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரண நிதி, கட்சி அலுவலகத்தில் இருந்தோ, அவர் சொந்தக் காசில் இருந்தோ கொடுக்கப்பட வில்லை. அது மத்திய அரசாங்கம் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. உங்களில் எத்தனை பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது? 40 லட்சம் பேருக்கு இன்னும் நிவாரண நிதி சென்றடைய வில்லை என்று அறிக்கை வந்துள்ளது.
நம்மூர் பெண்களை 100 ரூபாய் சேலைக்கு அலைக்கழித்து, தன்மானத்தை இழக்கச் செய்கிறார். எங்காவது இலவசம் என்றால் ஆண்கள் முந்தியடித்துச் சென்று வாங்கி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் டாஸ்மாக்கை நோக்கித் தான் ஓடுவார்கள். கேப்டன் சொல்வது போல, "வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். வறுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தால் தான் இலவசம் ஒழியும்!"
இந்த ஐந்து வருடங்களில், மாதத்திற்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைப்பேன் என்று அந்த அம்மா கூறினார். எங்கு வைத்தார்? ஆண், பெண் என வேண்டாம் ஒரு மனிதராகவாவது இதுவரை அவர் யாருடனாவது பேசியது உண்டா? அ.தி.மு.க'வில் இருப்பவர்கள் குனிந்தே "ஹன்ச்-பேக்"காக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றால், அவர்களின் குடும்பம் தான் அவர்களை மன்னிக்குமா? அடிமைகளாகவே எத்தனை நாள் தான் வாழ முடியும் என அவர்கள் தொடங்கி விட்டனர். இது சாதனை ஆட்சி அல்ல. வேதனை ஆட்சி.
நான் ஏற்கனவே கூறியுள்ளேன், தி.மு.க. - தில்லு முல்லுக் கட்சி. அ.தி.மு.க. - அனைத்திலும் தில்லு முல்லுக் கட்சி. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. மூவருக்கும் முழுப் பக்க விளம்பரம் தேவைப் படுகிறது. தே.மு.தி.க. செய்யப்போவது, நேர்மையான் அதிகாரிகளைக் கொண்டு லஞ்சம் இல்லாத ஆட்சி. அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்றாக படைக்கப்பட்டது தான் தே.மு.தி.க." என்று அவர் சொன்னவுடன், தே.மு.தி.க, தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லையோ, என லேசாக கூட்டம் முணுமுணுக்கத் தொடங்கியது.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''தமிழகத்தில் 94 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்பது எங்கள் கடமை. கடந்த எம்.பி. தேர்தலில் 14 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட்டது. அதில் கிடைத்த வாக்குகளை மட்டும் வைத்து கணக்கு போட்டீர்கள். மீதி இருக்கும் 26 தொகுதிகளின் கணக்கு எங்கே போனது? ஜெயலலிதாவிற்கு பிடித்தது தான் கருத்துக் கணிப்பு. அது கருத்துக் கணிப்பல்ல, கருத்துத் திணிப்பு.
திட்டி, கிண்டலடித்து, வாழ்த்தி என எப்படி கேப்டன் படத்தைப் போட்டாலும் பத்திரிக்கைகள் விற்றுத் தீர்ந்துவிடும். இதுவே தே.மு.தி.க'வின் வெற்றி. கேப்டன் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். அவருக்கு சைனஸ் பிரச்னை உள்ளது. ஒரு மூக்கு எப்போதுமே அடைத்து தான் இருக்கும். அவருக்கு டான்சில்ஸும் உள்ளதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? எம்.ஜி.ஆர். குண்டடிப்பட்டபோது, பேசுவது புரியவில்லை என்றார்கள். காமராஜர் படிக்கவில்லை என்றார்கள். ஆனால், இன்றுவரை அனைவர் மனதில் இருப்பதும் அவர்கள் இருவரும் தான். விஜய்காந்தும் அதுபோன்றவர் தான்" என்று பேசி முடித்தார்.
அதன் பிறகு மேடைக்கு பலத்த கர ஒலிகளுக்கு நடுவே வந்த விஜயகாந்த, ''விஜய்காந்திற்கு பேசத் தெரியாது என்கிறார்கள். என் கட்சியைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்கள் யாரும் வழி நடத்த வேண்டாம். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஜால்ரா அடிக்கத் தான் லாயக்கு. விஜயகாந்த் எங்கு போகப் போகிறார். தி.மு.க.வா? பா.ஜ.க.வா? உங்களுக்கு என்ன? இதை என் கட்சி தொண்டர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும்" என்றார்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு தொண்டர் எழுந்து, "தலைவா, நம்ம தான் கெத்து!" என்று கத்த, "நான் பேசும்போது குறுக்க பேசக் கூடாது" என்று அவரை அதட்டி அமர வைத்து தொடர்ந்த விஜயகாந்த், ''என்னைப் பற்றி பேசுவதைப் போல ஜெயலலிதா அம்மாவைப் பற்றியும் பேசுங்களேன். பத்திரிக்கையாளர்களுக்கான உரிமையை தே.மு.தி.க என்றுமே வழங்கிவிடும்.
யாருடனும் நான் பேரம் பேசவில்லை. என்னைத் தேடி வந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முறை தே.மு.தி.க தனித்துப் போட்டியிடப் போகிறது!" என்று விஜயகாந்த் கூறியவுடன், அரங்கமே ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. உடனே, ''இங்கு வந்திருக்கும் மகளிர் அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த "மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என்று கூறி அத்துடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.
அதன் பின் மீண்டும் மைக் பிடித்த பிரேமலதா, "எங்களுக்கு அழைப்பு விடுத்த மக்கள் நலக் கூட்டணிக்கும், பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எங்கள் பணிவான நன்றிகள்!" என்று கூறி முடித்தார்.
சில ருசிகர துளிகள்...
* சினிமா பாடல்களுடன் துவங்கிய பொதுக்கூட்டத்தில், தேச தலைவர்களை போல் வேடமிட்டவர்களின் ஆடல் பாடலுடன் நடனம் நடைபெற்றது. அந்த பாடல்களின் இறுதியில் அவர்களுக்கு இணையாக விஜயகாந்த் படத்தை காட்டி நிறைவு செய்தது மிகவும் காமடியாக இருந்ததால் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
* சில மாவட்ட செயலாளர்கள் திருவள்ளூவர், பாரதியாரின் பாடல்களை விஜயகாந்துக்கும், பிரேமலாதவிற்கு ஒப்பிட்டு பேசினர். அதை பார்த்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரிப்பை வெளிக்காட்ட முடியாமல் அமர்ந்திருந்தனர்.
* தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் இதையெல்லாம் பேசுங்கள் என்று அறிவுறுத்தியதாக இந்த பொதுக்கூட்டம் இருந்தது.
* சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மகாலட்சுமி, நாஞ்சில் சம்பத்தை திட்டி தீர்த்தார். அதேபோன்று, பா.ம.க. ராமதாஸ், நாம் தமிழர் சீமான், பத்திரிக்கையாளர்கள் என தே.மு.தி.க.வை விமர்சனம் செய்கிறவர்களையும் அவர் விளாசி தள்ளினார்.
* இந்த மகளிரணி பொது கூட்டத்திற்கு பிரமலாதவின் அம்மா வந்ததிருந்தார். அவரை தே.மு.தி.க. பிரமுகர்கள் கை தாங்களராக பிடித்து அழைத்து வந்து அமர வைத்தனர். அவர், முதல் முறையாக இந்த மகளிரணி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
* இந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சருக்கு வழங்கப்படும் பாதுப்பு எப்படி இருக்குமோ அப்படியே, தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையின் உளவுப்பிரிவினர் போல் அவர்களில் சிலர், ஆங்காங்கே கண்காணித்து கொண்டிருந்தனர்.
* விஜயகாந்த பேசிய முடிக்கும்போது கடைசியாக, பெறுப்பாக நீங்கள் அனைவரும் வீடு போய் சேர்ந்தீர்களா என்று மாவட்ட செயலாளர்களிடம் கேட்பேன்" என்று அன்போடு கூறி முடித்தார்
* பிரரேமலதா பேச்சு கோர்வையாக தெளிவாக இருந்தது. ஜெயலலிதாவை சரமாரியாக திட்டி தீர்த்த பிரேமலதா, தி.மு.க.வை மட்டும் மூன்று முறை குறை கூறினார்.
மு.சித்தார்த்
- கே.புவனேஸ்வரி
படங்கள்: மா.பி.சித்தார்த்
(மாணவ பத்திரிக்கையாளர்)
Similar topics
» பிரேமலதா விஜயகாந்த் என்ற சாக்கடைகளின் அரசியல் !
» விஜயகாந்த் நேற்று சிறப்பு பயிற்சி: “சபையில் நாக்கை கடிக்காமல் பேசுவது எப்படி?”
» பொதுக்குழுவில் அனல் கிளப்பிய பிரேமலதா
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 6 நாட்களில் 520 கி.மீ. பிரசாரம் விஜயகாந்த் பிரேமலதா திட்டம்
» இப்போது பேசாமல் எப்போது பேசுவது? நூல் வெளியீட்டு விழா - அரங்கத்தை சூடாக்கினார் பழ.கருப்பையா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum