Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மகாத்மா பயன்படுத்திய பொருட்கள் இந்த மனிதரிடம் இருப்பது தேசத்துக்கு அவமானம் இல்லையா?
Page 1 of 1

மக்கள் பணம் 7 ஆயிரம் கோடியை விழுங்கிய விஜய் மல்லையாவுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து உள்ளன. விஜய் மல்லையாவையும் பணத்தையும் பிரிக்க முடியாது. அவர் நடத்தும் நாடகங்களையும் புரிந்து கொள்ள முடியாது. தற்போது எஸ்.பி.ஐ. வங்கி , அவருக்குள்ள சொத்துக்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவும், அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட பெரிய வங்கிகளிடம் மட்டும் சுமார் 3.5 லட்சம் கோடி வாராக்கடன் இருக்கிறது. இதில் விஜய் மல்லையா மட்டும் ரூ. 7 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும்.
கடைசியாக அவர் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்தது கடந்த 2011ம் ஆண்டு. அப்போது விஜய் மல்லையாவின் சொத்து மதிப்பு 1.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அடுத்த ஆண்டு விஜய் மல்லையாவின் சொத்து மதிப்பு 800 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைய, போர்ப்ஸ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதே ஆண்டில்தான் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்தது.
தற்போது விஜய் மல்லையா தலைவராக உள்ள யுனைடெட் புரூவரிஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.1,750 கோடி ஆகும். இதில் 8.8 சதவீத பங்குகள் விஜய் மல்லையா வசம் உள்ளன. அதுபோல் யுனைடெட் புரூவரீஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் 7.91 சதவீத பங்குகள் விஜய் மல்லையாவிடம் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனம் வாங்கியிருப்பதால், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் விஜய் மல்லையாவுக்கு ஏற்பட்டது. விலகுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், தற்போது அவரது மகன் மட்டுமே இரு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தில் இயக்குநராகத் தொடர முடியும்.
ஆனால் விஜய் மல்லையாவுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. 750 கோடி மதிப்புள்ள மாண்டி கார்லோ தீவு, லட்சத்தீவில் தின்னக்காரா கடற்கரை, ஜோகனஸ் பர்க்கில் 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பண்ணைகள், இமயமலை பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா மையங்கள், பெங்களூருவில் அமைந்துள்ள யு.பி.சிட்டி, ஸ்காட்லாந்தில் கால்நடைப் பண்ணைகள், லண்டன் மற்றும் மாண்டிகார்லோவில் பங்களாக்கள், நியூயார்க் மன்ஹட்டன் பகுதியில் சொத்துக்கள், டெல்லி, மும்பை, பெங்களூருவில் பங்களாக்கள், கர்நாடகத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் குதிரைப் பண்ணை போன்ற சொத்துக்கள் விஜய் மல்லையாவுக்கு குவிந்து கிடக்கிறது.
விஜய் மல்லையா தனது யுனைடெட் புரூவரிஸ் நிறுவனத்தை நம்பினாரோ இல்லையோ ரியல் எஸ்டேட் தொழிலை முழுமையாக நம்பினார். இதனால்தான் உலகம் முழுக்க சொத்துக்களை வாங்கி அவர் குவித்தார். தற்போது டியாஜியோ நிறுவனம் யுனெடட் ஸ்பிரிட் நிறுவனத்தை வாங்கியிருப்பதால், இந்த இரு விளையாட்டு அணிகளுடன் 5 ஆண்டுகளுக்கு விஜய் மல்லையா உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால் ராயல்சேலஞ்சர்ஸ் அணி, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதுபோல் சஹாரா ஃபோர்ஸ் பார்முலா ஒன் நிறுவனத்தின் மீதான உரிமையையும் விஜய் மல்லையா இழக்கிறார்.
அது மட்டுமல்ல, விளையாட்டுத் துறை மீது விஜய் மல்லையாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஐ.பி.எல். அணியான பெங்கரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பார்முலா ஒன் அணியான சஹாரா ஃபோர்ஸ் இந்திய அணிகள் விஜய் மல்லையாவுக்குதான் சொந்தமாக இருந்தன. தற்போது யுனைடெட் புரூவரிஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனம் வாங்கியிருக்கிறது.
தொடர்ந்து ரூ.515 கோடி கொடுத்து டியாஜியோ நிறுவனம் விஜய் மல்லையாவை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கழற்றி விட்டு விட்டது. தற்போது விஜய் மல்லையாவின் கடன்களுக்கும் டியாஜியோ நிறுவனமே பொறுப்பேற்றிருக்கிறது என்பதும் இதில் அடங்கியிருக்கிறது.
எப்போதும் நாட்டின் மீது அக்கறை கொண்டிருப்பவராக காட்டிக் கொள்பவர் விஜய் மல்லையா. திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ஏலம் விடப்பட்டபோது, லண்டன் போன்ஹர்ம்ஸ் நிறுவனத்திடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 30 மடங்கு அதிகம் கொடுத்து, அதாவது 1.75 பில்லியன் பவுண்டு தொகை கொடுத்து விஜய் மல்லையா அதனை வாங்கினார்.
கடந்த 2012-ம் ஆண்டு பில்லியனராக இருந்து மில்லியனராக விஜய் மல்லையா மாறிய காலக்கட்டத்தில் போர்ப்ஸ் பட்டியலில் இருந்து நீக்க்கப்பட்டார். அப்போது விஜய் மல்லையா, '' பில்லியனர் என்று அழைக்கப்படும் இந்த பட்டியலில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு கடவுளுக்கு நன்றி. இனிமேல் என் மீது பொறாமையிருக்காது... என் மீது தேவையில்லாத தனி நபர் தாக்குதல்களும் இனி இருக்காது'' என்று அப்போது ஒரு பேட்டியில் கூறினார்.
ஆனால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடம் ஆயிரம் கோடிகளில் கடன் வாங்கி விட்டு கட்டாமல் ஓட நினைக்கும் விஜய் மல்லையாவை பார்த்து இந்த சமூகம் என்ன சொல்லும்...?
-விகடன்-
விஜய் மல்லையா என்ற இந்த மனிதரிடம் உள்ள சொத்து எவ்வளவு? கணக்கிட முடியாது. உலகம் முழுக்க விஜய் மல்லையாவின் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. கடந்த 2006-ம் ஆண்டு, விஜய் மல்லையாவின் மொத்த சொத்து மதிப்பு போர்ப்ஸ் பட்டியலின் படி 1.3 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் 2008ம் ஆண்டு 390 மில்லியன் டாலர்களாக குறைந்தது. இந்த ஆண்டில் அவர் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெறவில்லை.
கடைசியாக அவர் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்தது கடந்த 2011ம் ஆண்டு. அப்போது விஜய் மல்லையாவின் சொத்து மதிப்பு 1.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அடுத்த ஆண்டு விஜய் மல்லையாவின் சொத்து மதிப்பு 800 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைய, போர்ப்ஸ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதே ஆண்டில்தான் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்தது.
தற்போது விஜய் மல்லையா தலைவராக உள்ள யுனைடெட் புரூவரிஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.1,750 கோடி ஆகும். இதில் 8.8 சதவீத பங்குகள் விஜய் மல்லையா வசம் உள்ளன. அதுபோல் யுனைடெட் புரூவரீஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் 7.91 சதவீத பங்குகள் விஜய் மல்லையாவிடம் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனம் வாங்கியிருப்பதால், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் விஜய் மல்லையாவுக்கு ஏற்பட்டது. விலகுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், தற்போது அவரது மகன் மட்டுமே இரு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தில் இயக்குநராகத் தொடர முடியும்.
ஆனால் விஜய் மல்லையாவுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. 750 கோடி மதிப்புள்ள மாண்டி கார்லோ தீவு, லட்சத்தீவில் தின்னக்காரா கடற்கரை, ஜோகனஸ் பர்க்கில் 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பண்ணைகள், இமயமலை பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா மையங்கள், பெங்களூருவில் அமைந்துள்ள யு.பி.சிட்டி, ஸ்காட்லாந்தில் கால்நடைப் பண்ணைகள், லண்டன் மற்றும் மாண்டிகார்லோவில் பங்களாக்கள், நியூயார்க் மன்ஹட்டன் பகுதியில் சொத்துக்கள், டெல்லி, மும்பை, பெங்களூருவில் பங்களாக்கள், கர்நாடகத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் குதிரைப் பண்ணை போன்ற சொத்துக்கள் விஜய் மல்லையாவுக்கு குவிந்து கிடக்கிறது.
விஜய் மல்லையா தனது யுனைடெட் புரூவரிஸ் நிறுவனத்தை நம்பினாரோ இல்லையோ ரியல் எஸ்டேட் தொழிலை முழுமையாக நம்பினார். இதனால்தான் உலகம் முழுக்க சொத்துக்களை வாங்கி அவர் குவித்தார். தற்போது டியாஜியோ நிறுவனம் யுனெடட் ஸ்பிரிட் நிறுவனத்தை வாங்கியிருப்பதால், இந்த இரு விளையாட்டு அணிகளுடன் 5 ஆண்டுகளுக்கு விஜய் மல்லையா உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால் ராயல்சேலஞ்சர்ஸ் அணி, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதுபோல் சஹாரா ஃபோர்ஸ் பார்முலா ஒன் நிறுவனத்தின் மீதான உரிமையையும் விஜய் மல்லையா இழக்கிறார்.
அது மட்டுமல்ல, விளையாட்டுத் துறை மீது விஜய் மல்லையாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஐ.பி.எல். அணியான பெங்கரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பார்முலா ஒன் அணியான சஹாரா ஃபோர்ஸ் இந்திய அணிகள் விஜய் மல்லையாவுக்குதான் சொந்தமாக இருந்தன. தற்போது யுனைடெட் புரூவரிஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனம் வாங்கியிருக்கிறது.
தொடர்ந்து ரூ.515 கோடி கொடுத்து டியாஜியோ நிறுவனம் விஜய் மல்லையாவை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கழற்றி விட்டு விட்டது. தற்போது விஜய் மல்லையாவின் கடன்களுக்கும் டியாஜியோ நிறுவனமே பொறுப்பேற்றிருக்கிறது என்பதும் இதில் அடங்கியிருக்கிறது.
எப்போதும் நாட்டின் மீது அக்கறை கொண்டிருப்பவராக காட்டிக் கொள்பவர் விஜய் மல்லையா. திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ஏலம் விடப்பட்டபோது, லண்டன் போன்ஹர்ம்ஸ் நிறுவனத்திடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 30 மடங்கு அதிகம் கொடுத்து, அதாவது 1.75 பில்லியன் பவுண்டு தொகை கொடுத்து விஜய் மல்லையா அதனை வாங்கினார்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களையும் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் 9.8 கோடிக்கு )விஜய் மல்லையா ஏலம் எடுத்தார். தேசத்தின் அடையாளங்களாக கருதப்படும் இது போன்ற மதிப்பு மிகு பொருட்கள், 7 ஆயிரம் கோடியை சுருட்டிக் கொண்டு ஓடத் தயாராக இருக்கும் விஜய் மல்லையாவிடம் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்பதும் புரியவில்லை.
கடந்த 2012-ம் ஆண்டு பில்லியனராக இருந்து மில்லியனராக விஜய் மல்லையா மாறிய காலக்கட்டத்தில் போர்ப்ஸ் பட்டியலில் இருந்து நீக்க்கப்பட்டார். அப்போது விஜய் மல்லையா, '' பில்லியனர் என்று அழைக்கப்படும் இந்த பட்டியலில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு கடவுளுக்கு நன்றி. இனிமேல் என் மீது பொறாமையிருக்காது... என் மீது தேவையில்லாத தனி நபர் தாக்குதல்களும் இனி இருக்காது'' என்று அப்போது ஒரு பேட்டியில் கூறினார்.
ஆனால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடம் ஆயிரம் கோடிகளில் கடன் வாங்கி விட்டு கட்டாமல் ஓட நினைக்கும் விஜய் மல்லையாவை பார்த்து இந்த சமூகம் என்ன சொல்லும்...?
-விகடன்-
Similar topics
» எலிசபத் டெயிலர் பயன்படுத்திய $150 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அருங்காட்சியகத்தில் !
» ரஜினிக்கா இந்த அவமானம்!
» "யார் இந்த மகாத்மா?"
» இந்த வீடியோவை நிச்சயம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். (மகாத்மா காந்தி)
» இந்த ராகுல் மங்குனிக்காக நேற்றுவரை நிவாரணப் பொருட்கள் நிறுத்திவைக்கப் பட்டிருந்தன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum