Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மேடை நாகரிகம் அப்படீன்னா....
Page 1 of 1
மேடை நாகரிகம் அப்படீன்னா....
மேடை நாகரிகம் அப்படீன்னா....
அந்த நாகரிகத்தின் மீது எழுப்பப்பட்ட அஸ்திவாரத்தின் மீதுதான் இன்றும் அரசியல் ஆரோக்கியம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று அரசியல் நாகரீகம் மருவிப்போய் விட்டது. மேடை நாகரீகம் என்பது இன்றைய தலைவர்களுக்கு மறந்துபோய்விட்டது.அரசியல் என்றால் என்னவென்று ஆயிரமாயிரம் பேர் விளக்கம் சொல்லியிருந்தாலும் சுருக்கமாக இப்படி சொல்லலாம்; ஒன்றை மற்றொன்று எதிர்ப்பதுதான் அரசியல். அது இரண்டு தனிமனிதர்களுக்கிடை யிலேயோ அல்லது இரு கொள்கைகளுக்கிடையிலே யோ இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் அதற்கான நாகரீக எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சிபிஎம் கட்சியைசேர்ந்த பேராசிரியர் அருணனும் ஒருமையில் பேசி மோதிக்கொண்ட காட்சிகள் அரசியல்நோக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழக தேர்தலின் இன்றைய சூழல் குறித்த கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பான இந்நிகழ்ச்சி அது. விவாதத்தில் நாம் தமிழர் சீமான், பாஜக வானதி சீனிவாசன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அருணன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சீமான் விவாதம் நடந்த ஸ்டூடியோவில் அல்லாமல் வேறு இடத்திலிருந்து விவாதத்தில் பங்கேற்றார். இந்த விவாதத்தின்போது அதிமுக திமுகவை தோற்கடிப்பது தொடர்பாக நாம் தமிழர் சீமானுக்கும், அருணனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை விட தான் ஒரு வாக்கு குறைந்து எடுத்தாலும் தான் அந்தக்கட்சியில் சேர்ந்துவிடுகிறேன் என்று குறிப்பிட்ட சீமான், தொடர்ந்து கம்யூனிஸ்ட்கட்சியில் கொள்கை இல்லை என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலடியாக பேசிய அருணன் ' மார்க்ஸியம் பேசிவிட்டு இனவெறிக் கருத்து பேசினீர்கள். நேற்றுவரை பெரியாரை கும்பிட்டுவிட்டு இன்று பெரியாரையே வசைபாடுகிறீர்கள். உங்களிடம் என்ன கொள்கை இருக்கிறது' என சீமானை குறிப்பிட்டார். இந்த விவாதம் முற்றிய நிலையில் திடீரென ஆவேசமான சீமான், 'ஏய் என்னய்யா லூசு மாதிரி பேசுற' என நேரலையிலேயே சத்தம்போட பதிலுக்கு 'நீதான்டா லூசு, யாரைப்பார்த்து லூசு ங்கிற' என பதிலுக்கு அருணன் எகிற, நேரலையில் பங்கேற்ற மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதன்பிறகு அவர்கள் இருவரையும் சமாதானம் செய்த பின் நிகழ்ச்சி தொடர்ந்தது. லட்சக்கணக்கான பேர் பார்த்துக்கொண்டிருக்கிற ஒரு நிகழ்ச்சியில், தன்னிலை மறந்து பேசுவதுதான் சீமான் போன்ற தலைவர்களுக்கு அழகா எனவும், சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிபெற்றிருக்கிற இன்றைய காலகட்டத்தில் தன் நடத்தை எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இனிவருங்காலங்களில் நினைக்கும்போதெல்லாம் பார்க்க வாய்ப்பு பெருகியுள்ள இந்நாளில், ஒரு நேரலை நிகழ்ச்சியில் சீமானின் இந்த பேச்சு நேயர்களை முகம் சுளிப்புள்ளாக்கியுள்ளது. எதிர்பார்த்ததுபோலவே சீமானுக்கு எதிரான கண்டனங்கள் வாத பிரதிவாதங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற ஆரம்பித்துவிட்டது.
60களில் காங்கிரசுக்கு டஃப் கொடுத்த திமுகவின் பேச்சுக்களாலும் செயலாலும் டென்ஷனான நேரு, சென்னை விமானநிலையத்தின் வாசலில் நின்று 'நான்சென்ஸ்' என்றார் எரிச்சலாக. ஒரு பெரிய கட்சியின் தலைவரான மக்கள் அபிமானம் பெற்ற நேருவின் இந்த வார்த்தை திமுகவை எரிச்சலுக்குள்ளாக்கினாலும் அதற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு சென்னை வந்த நேருவுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்பதே. தேர்தலில் அரசியல் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.
காங்கிரசை எதிர்த்து 1962 ல் தேர்தல் களம் கண்ட திமுக, காங்கிரஸின் செயல்பாடுகளை மேடைதோறும் கடைபரப்பி காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்களை சாதுர்யமா பொறுக்கியது. அந்த எரிச்சலில் தென் தமிழகத்தில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணாவை கடும்வார்த்தையை போட்டு வறுத்தெடுத்தார் மேடைப்பேச்சாளர் ஒருவர். மேடையின் நடுநாயகமாக இருந்த காமராஜர் பொங்கிஎழுந்தார். 'ஏய் என்ன பேசுற நீ...விஷயத்தை மட்டும் பேசு...சும்மா இப்படி பேசுனீன்னா மேடையை விட்டு எறங்கு' என்றார் நீளமான தன் கையை நீட்டியபடி. விக்கித்து அமர்ந்தார் அந்த பேச்சாளர்.
மேடைநாகரிகம் என்ற வார்த்தைக்கு மதிப்பளித்த மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் அப்படிப்பட்ட காமராசரையே பறவை ஒன்றொடு ஒப்பிட்டு அவமதித்தார்கள் அண்ணாவுக்குப்பின் வந்த தலைவர்கள். ஆரோக்கியமான அரசியலுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்ட காலம் அதுதான்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது எம்.ஜி.ஆர்-கருணாநிதி இருவருக்குமிடையே நடந்த கருத்துமோதல்களும் அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் தெரிந்தவிஷயம். அதிமுக துவங்கி சில ஆண்டுகள் கழிந்தபின் நடந்த சம்பவம் அது.
கருணாநிதி-எம்.ஜி.ஆர் மோதல் உச்சத்திலிருந்த நேரம். ஒரு மேடையில் கருணாநிதியை கடும் வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு எம்.ஜி.ஆரை வந்து சந்தித்தார் அந்த இரண்டாம் கட்டத்தலைவர். இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். இரண்டாம் கட்டத்தலைவர், தான் கருணாநிதியை மேடையில் வறுத்தெடுத்ததை எம்.ஜி.ஆரிடம் பெருமிதமாக கூறினார். தலைவர் நம்மை பாராட்டுவார் என்பது அவரது எண்ணம். ஆனால் அந்த தலைவர் கதையை சொல்லி முடித்த அடுத்த வினாடி எம்.ஜி.ஆர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச்சொன்னார்.
சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டத்தலைவரை காரை விட்டு இறங்கச்சொன்னவர், “ கருணாநிதியை மேடையில் கண்டபடி பேசியதோடு இல்லாமல் அதை என்னிடமே வந்துசொல்கிறாயா...கருணாநிதியை பெயர் சொல்லிப்பேச உனக்கு என்ன் அருகதை இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒருகாலத்தில் எனக்கு தலைவராக இருந்தவர். அப்படிப்பட்டவரை நேற்று அரசியலுக்கு வந்த நீ எப்படி இப்படி பேசுவாய்...நான் உனக்கு தலைவர்...உன் தலைவரான எனக்கே அவர் தலைவராக இருந்தவர் என்றால் அவருக்கு என்ன மரியாதை தரவேண்டும்...அரசியல் வெளிச்சத்தில் இன்று நீ வந்துவிட்டாய் என்பதற்காக பழசை மறக்கக்கூடாது. இனிமேலாவது மரியாதையாக பேசு” என சீறினார். பின்பு கிளம்பியது கார். சீறிச்சென்ற காரை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்துநின்றார் அந்த தலைவர். இப்படி அரசியலில் தங்கள் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.
ஆனால் இன்று அரசியலின் ஆரோக்கியம் ஐசியுவிற்கு சென்றுவிட்ட காலம். கட்சிகளின் பெயரை தேர்தல் கமிஷனில் பதிவுசெய்த கையோடு தங்களை சுற்றி தாங்களே வெளிச்சம் பாய்ச்சிக்கொள்கிறார்கள். யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதைப்பற்றிய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வதில்லை. தங்களின் செயல்கள் மக்களால் கவனிக்கப்படுகிறது என்பது பற்றிய எண்ணமும் அவர்களிடம் இருப்பதில்லை.
எல்லா சாலைகளும் ரோம் நகரைநோக்கியே என்பதைப்போல் எத்தனை மேடைகளைப்பொட்டு வெளிச்சம் பாய்ச்சி மாநாடுகள் நடத்தினாலும் உங்களை அதிகாரவீதிக்கு அனுப்பப்போகிறவர்கள் உங்கள் தொண்டர்கள் அல்ல; பெரும்பான்மை மக்கள். அந்த மக்களை வாக்கு கேட்டு நீங்கள் சந்திக்கப்போகிறபோது உங்களது கட்சி சின்னம் அவர்களுக்கு கவனம் இருக்காது. உங்களது கண்ணியமான செயல்கள்தான் நினைவுக்கு வரும். அந்த கண்ணியமும் கட்டுப்பாடுகளும்தான் இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்கள் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்கும்.
கட்சித்தலைவர்களே உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது அரசியல்தலைவர்களுக்குரிய அடக்கத்தை அல்ல; சாதாரண மனிதனுக்குரிய நாகரிகத்தை. அந்த நாகரீகத்தை மறந்துவிட்டு எங்கள் வீதிக்கு நீங்கள் ஓட்டுகேட்டு வருவீர்களானால் நமுட்டுச்சிரிப்புடன் ஒரு கைகுலுக்கலைத்தவிர உங்களுக்கு தர எங்களிடம் ஒன்றும் இருக்காது. புரிந்துகொள்ளுங்கள்!
- எஸ்.கிருபாகரன்
Similar topics
» 'ராத்திரி' என்ன நடந்துச்சுன்னு தெரியலையா?.. அப்படீன்னா உங்களுக்கு 'செக்ஸோம்னியா'!
» அரசியல் நாகரிகம் கருதி கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
» திருவட்டாரில் நாம் தமிழர் பொதுக்கூட்ட மேடை சூறை.
» நடிகர் அஜித் மேடை ஏறி பேசியதை நீங்க பார்த்து இருக்கிறீங்களா ...
» அரசியல் நாகரிகம் கருதி கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
» திருவட்டாரில் நாம் தமிழர் பொதுக்கூட்ட மேடை சூறை.
» நடிகர் அஜித் மேடை ஏறி பேசியதை நீங்க பார்த்து இருக்கிறீங்களா ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum