Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இறுதியுத்ததில் தப்பித்தவரின் வாக்குமூலம்( தமிழ்/ஆங்கிலம்)- 1
2 posters
Page 1 of 1

உயிர் பயத்தோடு 2008மே மாதம் நாங்கள் மன்னார் பகுதியில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கு பெரிய அளவில் குடிபெயரவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். கொஞ்ச மேனும் இயன்றவர்கள் பொருட்களை டிராக்டரில் கட்டிக்கொண்டு நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டனர். மிச்சமீதி இருந்த மக்கள் முடியாத நிலையில் ICRC, TRO, UNHCR மற்றும் ஏனைய NGOக்களின் துணையோடு அந்த இடத்தில் இருந்து குடும்பம் குடும்பமாக அகன்றனர். அடுத்தது என்ன எனத் தெரியாது நடக்கும் அகதிகளாகிப் போன மக்களால் தெருக்கள் நிரம்பியிருந்தது. எதிர்காலம் தெரியாது நடக்கும் எங்களுக்கு கேட்டுக்கொண்டிருந்தது எல்லாம் வடக்கே முகமாலை மற்றும் தெற்கு போர்முனையிலும் வெடித்துக் கொண்டிருந்த குண்டுகளும், துப்பாக்கி சத்தமும் தான்.
நான் சொல்ல வரும் இந்த கோரம் நடந்தது 2008 பிப்ரவரி நான்காம் தேதி. என் வீடு கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திப்பில் தான் இருந்தது. Kfir ஜெட் விமான சத்தம் கேட்டவுடன் என் வீட்டுப்பக்கம் இருந்த பங்கருக்குள் ஓடி ஒளிந்தேன். எனக்கு மிக அருகில் குண்டு வெடித்து சிதறியது. அந்த குண்டு விழுந்தது என் வீட்டை ஒட்டி இருந்த இன்னொரு வீட்டின் மேல். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்து போனார்கள். அவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். நொடிநேரத்தில் இன்னொரு ஷெல் விழுந்து நிலமே அதிர்ந்தது. இனியும் பங்கருக்குள் இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்று தலைத்தெறிக்க ஓடினோம் அந்த ரோட்டில். ஓடும் அந்த பாதையில் பல பேர் இறந்து கிடந்தனர். ஒரு மனிதர் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் ஒரு வீல் சேரில் அமர்ந்து இருந்தார். அந்த ரோட்டின் எதிரே ஒரு வயல்வெளியும் அதை ஒட்டி ஒரு வீடும் இருந்தது. குண்டு வெடித்ததில் அந்த வயலில் ஒரு பெரிய குழி ஒன்று உருவாகி அது குளம் போல இருந்தது. அந்த வீட்டை சேர்ந்த இருவர் அந்த வயல் வெளியில் இறந்து கிடந்தனர்.
இந்த Kfir விமான தாக்குதல் வருடம் முழுக்க நடந்தது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி நகர் பலமுறை தாக்குதலுக்கு ஆளாகி இருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழ் ஈழ காவல்துறை தலைமையகமும், வெற்றிமனை பெண்கள் மனநலக் காப்பகமும் கடும் தாக்குதலுக்கு ஆனது. இந்த தொடர் குண்டுவெடிப்பு நடக்க தொடங்கும் வரை மக்கள் அந்த இடத்தைவிட்டு நகர எண்ணவில்லை. அக்டோபர் இறுதிக்குள், கணக்கிலடங்கா மக்கள் கிளிநொச்சியில் இருந்து கிழக்கே குடிபெயர்ந்தனர்.
நான் அங்கு இருந்த ஒரு குழுவில் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துக்கொண்டிருந்தேன். குறிப்பாக ‘’ Happy time session ‘’ மூலம் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்துகொண்டிருந்தேன். எந்த நேரமும் வெடித்துக்கொண்டிருந்த குண்டு சத்தம் குழந்தைகளுக்கு அவர்கள் சந்தித்த கோரத்தையும், உயிர் இழப்புக்களையும் நினைவுக்கு கொண்டுவந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் சொந்தங்கள், அக்கம் பக்கம் வீட்டார், நண்பர்கள், ஆகியோர் மன்னார், முழங்காவில் ஆகிய இடங்களில் இறந்த கதையை சொன்னார்கள்.
ஜனவரிக்குள், அங்கு நிலை கட்டுக்கடங்காது சென்றது. எல்லோரும் இப்போது முல்லைதீவு மாவட்டத்தில் இருந்த ஒரு சிறிய நிலத்திற்கு குடிபெயர்ந்தோம். தினம் தவறாது வான்வழி தாக்குதலும், குண்டு மழையும் நாள் முழுக்க நடந்துகொண்டு இருந்தது. விமான சத்தம் கேட்கும்போது எல்லாம் மக்கள் பங்கருக்குள் ஓடி ஒளிந்தனர். தெருக்களில் மக்கள் வெள்ளம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், ஒன்றும் அறியாத அப்பாவி பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர். நான் விசுவமடுவிலிருந்து சுதந்திரபுரம, உடையார்கட்டு, தேவிபுரம் பின் அங்கு இருந்து புதுக்குடியிருப்பு, வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் என்று ஒவ்வொரு இடமாக சென்றுகொண்டிருந்தேன்.
ஜனவரி இறுதி நெருங்கையில், வள்ளிப்புனத்திலிருந்த ஒரு தற்காலிக மருந்துவமனை மேல் Kfir விமானம் குண்டு தாக்குதல் நடத்தியதில், நிறைய பொதுமக்கள் இறந்தார்கள். இந்த நாட்களில் மக்கள் உயிருக்கு பயந்து குண்டுதாக்குதலில் அவரவர் உடைமைகளை விட்டுவிட்டு ஓடி ஒளிவதும், குண்டு பொழிவது நின்றதும் பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவதையும், கண்ணெதிரே மக்கள் குண்டுதாக்கி இறப்பதையும், மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டே நான் பார்த்திருக்கிறேன்.
அப்படி ஒரு நாள் நானும் என் நண்பரும் வண்டியில் போய்க்கொண்டு இருக்கையில், ரோட்டில் ஒருவர் தலையில் இருந்து ரத்தம் வழிய இறந்து கிடந்ததையும், அவரை ஒட்டி ஒருவர் தாளமாட்டாது அழுது கொண்டிருக்க, இருவர் அவரை அழுதபடி சமாதானம் செய்வதையும் பார்த்தேன்.
மாட்டுவண்டியில் உடைமைகளை ஏற்றிக்கொண்டு சென்ற வழியில் குண்டு தாக்கப்பட்டு, ஒரு மாடு சிதறி இறந்துகிடப்பதை பார்த்தேன்.
பெரும்பாலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சிங்கள அரசால் பாதுகாப்பான இடம் என்று சொல்லப்பட்ட இடங்களுக்கு விஸ்வமடுவிலிருந்து போக இருந்த ஒரே சாலையில் தான்.
மக்களுக்கிடையே மனக்கலக்கம், பயம், திரும்ப வாழ்க்கை சகஜநிலைக்கு திரும்பாதா என்ற ஏக்கம் பொங்கியிருந்தது. உணவு பற்றாக்குறை வரத்தொடங்கியிருந்தது. திறந்து இருந்த சில கடைகளிலும் உணவு மிக குறைவாகவே இருந்தது. பலரும் சிங்கள அரசால் பாதுகாப்பான இடம் என்று சொன்ன மாத்தளன் பக்கம் செல்ல தொடங்கியிருந்தனர்.
ஜனவரி மாத இறுதி. எனக்கு நெருக்கமாகியிருந்த ஒரு குடும்பம் குண்டுவெடிப்பில் சிக்கியது. அவர்களின் மகன் திலீபன். இத்தாலியில் பிறந்த திலீபனை ஒரு வயது இருக்கும்போது அவனுடைய பெற்றோர்கள் நாடு திரும்ப முடிவு எடுத்து அழைத்துவந்தார்கள. அவனும் என்னோடு நான் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டு இருந்த Happy times sessionல் பங்கெடுத்து, குழந்தைகளுக்கு விளையாட்டு, வேடிக்கை காட்டி சந்தோஷப்படுத்தினான்.
ஜனவரி 16ம் தேதி, நான் புதுக்குடியிருப்பிற்கு செல்ல முக்கிய சாலையில் நடந்துப்போய்க்கொண்டு இருந்தேன். எனக்கு அந்த சமயம் வண்டி இல்லாததால், நடந்து போனேன். பொதுவாக, பஸ்ஸிலோ, அல்லது அந்த வழியே செல்லும் ஏதாவது வண்டியில் செல்வேன். நான் உடையார்கட்டிற்கு குடிபெயர்ந்திருந்த என் தோழியை தேடிப்போனேன். என்னால் அவள் கூறிய வீட்டு அடையாளத்தை கொண்டு அவள் வசிப்பிடத்தை கண்டுபிடிக்க இயலாது போயிருந்தது.
நான் நடக்கையில் திலீபன் ரோட்டில் நின்றுக்கொண்டிருப்பதை பார்த்தேன். அவன் வசிப்பிடமாகி போயிருந்த பங்கருக்கு வரச்சொல்லி அழைத்தான். நான் அவசரமாக செல்லவேண்டும் என்று கூறி நகர முற்பட, நான் மழையில் நனைவதை கண்டு. அவன் ஓடி சென்று ஒரு குடையெடுத்து கொண்டுவந்தான், அத்தோடு நான் செல்லவேண்டிய வழியை கேட்டு திசையும் சொல்லி அனுப்பினான். அன்று திரும்பி தோழியை பார்த்துவிட்டு செல்லும்போது, அவனுடைய தாயாரை சந்தித்தேன். என்னை பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தார்கள். வீட்டுக்கு வர சொல்லி அழைத்தார்கள். அவசர வேலை இருப்பதாய் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
இரண்டு நாள் கழித்து, வீட்டின் வெளியே அவர்கள் அமர்ந்து இருக்கையில் திடீரென குண்டு தாக்குதல் நடந்ததாம். அதில் திலீபனும், அவனுடைய தந்தையும் சிக்கினார்களாம். திலீபன் இறந்துபோனான். வெகுவாய் அடிப்பட்டு பிழைத்துக் கொண்டார் தந்தை. பெற்றதாயே நின்று குழந்தையின் இறுதி சடங்கை செய்து முடித்தாராம், தந்தைக்கு சொல்லாது. இதன்பின் திலீபனின் பெற்றோரை பல முறை சந்தித்தேன், அவர்கள் வாழ்வின் பொருள் தெரியாது நாட்களை கடப்பதை ஒவ்வொருமுறையும் சொன்னார்கள்.
சரியாக நினைவு இருக்குமானால், சுதந்திரப்புரத்தில் ` காரிஸ்டாஸ் ஹுடெக்`` தேவாலயத்தில் பல நிராதரவான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து இருந்த சமயம் அங்கு குண்டு தாக்குதல் நடந்தது அதில் பலர் இறந்ததும், ஜனவரி இறுதியில் தான் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் World Food Programme இருந்தது. பலர் இறந்த இந்த சமயத்தில் ஐக்கிய நாடுகளை சேர்ந்தவர்களும் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
விமான தாகுதல் நாங்கள் இருந்த சிறிய இடத்தில் அடிக்கடி நடைபெற்றது. இங்கு தான் அத்தனை பேரும் குழுமியிருந்தோம். முப்பது கிலோமீட்டர் பரப்பளவில் மூன்றரை லட்சம் மக்கள் தங்கியிருந்தோம். மக்கள் பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்க தொடங்கினர். கட்டாயம் புதுகுடியிருப்பில் தங்குவோம் என்று சொல்லியிருந்த சில குடும்பங்கள் கூட இப்போது அங்கு இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். ஆனால் ரோட்டில் பத்திரமாக நடக்கவும் முடியவில்லை. நான் பாதி நேரம் நடந்தேன். பாதி நேரம், பங்கருக்குள் அமர்ந்து இதுவரை என்னை சுற்றி நடந்ததை எழுதிக்கொண்டு இருந்தேன். அல்லாத சமயங்களில் உறவுகளை இழந்தவர்களை அல்லது உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லை இறந்தார்களா என்று தெரியாது உளைச்சலோடு இருந்தவர்களை தேற்றிக்கொண்டு இருந்தேன்.
புதுக்குடியிருப்பில் இருந்த பொன்னம்பலம் மருத்துவமனை ஒரு அரசு சாரா இயக்கம் கட்டிய புதிய மருத்துவமனை. இங்கு போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி வழங்கப்பட்டு கொண்டு இருந்தது. குண்டு போடப்பட்டு தரைமட்டமாகிய இந்த மருத்துவமனையில் இறந்து போனவர்கள் 60 பேருக்கு மேலே என்று சொன்னார்கள்.
போரால் பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த உயிர்கள் மட்டுமில்லை. பிறக்காத உயிர்களும் தான். என்னுடைய தோழி இந்த கோரத்திற்கு நடுவிலும் மனிதத்தை நினைவுபடுத்தும்படி கருவுற்றாள். அவளுடைய முதல் குழந்தை. அவளால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால், எல்லா மருத்துவமனைகளும் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி இருந்தது. ஒருமுறை உடம்பு முடியாது சென்றபோதும், அவளால் மருந்து பெற இயலவில்லை, மருத்துவர்களோ மருத்துவமனைகளோ கொடுக்க மருந்துகள் இல்லாததால். திரும்ப வந்து விட்டாள்.
அவளும் என்னோடு வாழ்க்கை தொலைத்த மக்களுக்கு உதவினாள். ஒன்பது மாதம் முடிவுற்ற நிலையில், ஒரு நாள் சொன்னாள் என்னிடம் அடிவயிறு வலிப்பதாகவும், நிறைய சிறுநீர் பிரிவதாகவும். நான் குழந்தை பெரியதாக இருந்தால் இப்படி ஆகும் என்று கூறி சமாதானம் செய்தேன். நடந்தது என்ன என்றால் அவளுடைய பனிக்குடம் விரிசல் அடைந்ததால் குழந்தை தாயின் வயிற்றினுள்ளேயே இறந்து இருந்தது. நான்கு நாட்கள் ஆகியிருந்தது அந்த சிசு இறந்து... என்னை பொறுத்தவரை பிறந்து என் யுத்தபூமியை பார்க்காத இந்தக் குழந்தை இறந்ததும் போரால்தான்.
- வாக்குமூலம் தொடரும் -
வாக்கு மூலம் ஆங்கிலத்தில்
the statement of the last - battle survivor
In May of 2008, we started seeing heavy scale displacement from Mannar into the areas of Kilinochchi and Mullaithivu. Those who could afford it would tie up their belongings on a tractor and take the long journey. Those that could not afford to hire a tractor would often be helped by ICRC, TRO, UNHCR and other non-governmental organizations that were the few of the ones that were left in that area. I saw that the roads were packed with people. We could hear shelling on both sides, north from the Muhamaalai front lines and from the southern front lines. The terrific incident in 2008 February 4th I think occurred when a Kfir jet bombed a house right next to the house I was living near Karadipokku Junction in Kilinochchi. Three civilians were killed. I ran into the bunker as soon as the sound of the Kfir was heard. I heard that the shell was dropped very close to me. Of those killed, two were from the same family. After the second shell was dropped, I ran outside fearing a third shell as it was not safe to be inside the bunker. We ran on the road as fast as we could. There was dead person lying on the road. Another person on a wheelchair was wounded and bleeding. There was a house opposite to the road near a paddy field. One bomb had made a huge hole in the paddy field and a pond had been created. Two people from the same family was killed in the house next to the paddy field.
The Kfir bombings continued to happen throughout the year. The Kilinochchi town was the target of shelling in October. I think in October of 2008, there was continuous stretch of attacks of Kilinochchi town on the Tamil Eelam Police Headquarters, Vettimanai Mental Wellness Centre for Women. People were not thinking of vacating the area until that happened. In the end of October, a huge unexpected number of displacements occurred from Kilinochchi towards the east. I was helping out with humanitarian work for the displaced. I organized a session called the Happy Time Session for the displaced children. With shells being fired on both sides, the children found it very hard to enjoy their time as it brought them back dramatic experiences. They told me stories of relatives and neighbours being killed in the shelling in mannar and mulangavil.
By January, the situation had gotten very intense and horrible. We had all now moved towards a very small piece of land in Mullaithivu district. Aerial bombardments and Shell attacks continued throughout the day, every day. People were running to bunkers and taking cover for aerial attacks. The roads were packed. Almost every day, civilians were being killed in large numbers. I kept moving from place to place from Visuvamadu to Suthanthirapuram, Udaiyarkaddu, Thevipuram to Puthukudiyiruppu. And from there to Valaignar madam, Mullivaaikaal. In Late January, a Kfir attack bombed the Vallipunam temporary hospital which was treating patients and many civilians were killed. I have heard of stories of people lying down on the road to take cover from the shelling and then, once the shelling died down, moving away with their belongings. I have speeded past through shelling areas in motorbikes seeing people dying near us. On one day when I was travelling with a friend of mine, I saw a man lying dead on the road, blood flowing down from his head. Another man was sitting beside him crying. Two others were trying to console the man. One of the cattle from the cart that was transporting their goods was also dead in the shelling. Most of the time, the shelling was targetted towards the main road, which was the only road in use for the people to move from the areas of Visuvamadu to the areas declared as safety zones by the Sri Lankan Government. The people were depressed and wanted to live a normal life. Food was starting to get scarce. Even the few shops that were still open had very less food stocks available in them. Most of the people were moving towards Mathalan after the Sri Lankan Government declared it as a safety zone.
A family with which I had become really close was affected in the shelling that occured during the later part of January. The only son of the family was Thileepan. He was born in Italy but his parents decided to move back when he was one year old. He used to volunteer with us when we helped the displaced people. We used to organize Happy Time sessions for the displaced kids which was basically an evening of play activities and fun. They enjoyed it very much. On January 16th, I was walking along the main road to puthukudiyiruppu. I didn’t have a mode of transportation. I would either take the bus or ask for a lift from a passing by vehicle. I got off in Udaiyarkaddu and was looking around for my friend who had just shifted her residence to Udaiyarkaddu. From what she told me, I was not able to find the place. As I was walking, I saw Thileepan standing on the road. He asked me to come in to his residence, a bunker. I told him I had to go. He ran inside his bunker, took out an umbrella as it was raining and asked me where I wanted to go and then directed me. The same day, as I was returning from the friends house I saw his mother who was so happy to see me. She invited me in as well. I said I had to go and I left. Two days later, when Thileepan and his parents were sitting outside a bunker, shells were barraged towards their area. His mother had called upon him to come inside the bunker and before he could react, a shell fell in front of their bunker killing Thileepan and wounding his father. His mother had to perform the last rites of her child and keep the news of the death away from the father until his health was better enough to accept it. I met the parents several times afterwards and they kept saying that they didn’t find any meaning in life and never will.
If I remember correctly, in the end of January, a tragedy occured in Suthanthirapuram when the grounds of a CARITAS HUDEC Church which was giving shelter to many displaced civilians were bombed. The World Food Programme was also located in the premises. People felt a bit of safety locating their tents in these premises as there was some sort of an International watch in that ground. However, artillery barraging was not spared for them. Many civilians were killed in the barraging in the area. I even heard of a UN WFP official being wounded in the attacks. News was big with people about the shelling in Suthanthirapuram.
Kfir attacks were very frequent in the small area we were all in right now. It was almost 30 square kilometre area with more than 350,000 civilians. People were now crowding in the areas of Pokkanai, Maathalan, Valaignar madam and Mullivaaikaal. Even the few families that decided to stay on in Puthukudiyiruppu were now moving out. It was hard to be on the roads for a long time. Most of the time, I was inside the bunker writing about my experiences or consoling people looking for families and facing the loss of family. The Puthukudiyiruppu Ponnambalam hospital which was a non-governmental hospital for the treatment of civilians was bombed with many wounded patients in it. It was a very modern built hospital. It was flat to the ground by the bombing. More than 60 people perished in the bombing of the Ponnambalam hospital.
There were other victims of the war. One was a casualty of a new born child. The mother, a friend of mine was pregnant with her first baby. She did not travel to see the doctor as there was heavy shelling in the hospital. Even the time she did, she was not able to get treatment as the hospital was targeted. She returned back. We used to help out with the displaced together. One day, when she was 9 months pregnant, she told me that she was feeling pain and that she was urinating frequently. She also told me that it could be because the baby was getting bigger. But what had happened was her water bag had cracked open and she delivered the baby four days after it was dead in the motherès womb. This I believe is also a casualty of the war.

siva1- உதய நிலா
- Posts : 3
Join date : 31/05/2010
Similar topics
» ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்
» பழங்கள் பெயர் - ஆங்கிலம்-தமிழ்
» தமிழ்-ஆங்கிலம் இலவச மென்பொருள் அகராதி
» வேலன்:-சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் சுலபமாக கற்க
» போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !தமிழால் பறிபோன மாப்பிள்ளை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum