Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:55 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
குழந்தையைப் பாதிக்கும் குறைப்பிரசவம்!
Page 1 of 1
குழந்தையைப் பாதிக்கும் குறைப்பிரசவம்!
குழந்தையைப் பாதிக்கும் குறைப்பிரசவம்!
கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் அற்புதமான காலகட்டம். கர்ப்பம், ஓர் அதிசயம். ஒரு செல்லில் இருந்து, ஒரு முழுமையான மனிதனாக உருப்பெறும் அற்புதமான பயணம் கர்ப்ப காலம். கடைசியாக மாதவிலக்கு வந்த நாளில் இருந்து, 37வது வாரத்தில் ஆரம்பித்து 40 வாரங்களுக்குள் குழந்தை பிறப்பு நிகழும்போது தாய்-சேய் நலம் பாதுகாக்கப்படுகிறது. இதுவே, 37 வாரங்களுக்கு முன்னதாகக் குழந்தை பிறக்கும்போது, குழந்தையின்நலம் பாதிக்கப்படலாம். இப்படி முன்னதாகப் பிறப்பதை `குறைப்பிரசவம்’ (Preterm delivery) என்கிறோம். ‘உலகம் முழுதும் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குறைப்பிரசவங்கள் நிகழ்கின்றன. இதில், 10 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாமல்போகிறது’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். வளர்ந்த நாடுகளில் குறைப்பிரசவக் குழந்தைகளில் 100-ல் 90 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு, ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பிற தெற்கு ஆசிய நாடுகளில் 100-ல் 10 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். நஞ்சுக்கொடி பாதிக்கப்படுவதால்தான் பெரும்பாலான குறைப்பிரசவங்கள் நிகழ்கின்றன.

நோய்த்தொற்று
கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்ப்பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு, அந்தத் தொற்று கர்பப்பையைப் பாதிக்கும்போது குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம்
கர்ப்ப காலத்தில் சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படலாம். இதனால், நஞ்சுக்கொடி பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ப்ரீ எக்லாம்ப்சியா (Pre Eclampsia) என்ற நிலை ஆகியவற்றின் காரணமாகப் குறைப்பிரசவம் ஏற்படுகிறது.
குழந்தைப்பேறின்மை மருந்துகள்
குழந்தையின்மை காரணமாக எடுக்கும் சிகிச்சையும் குறைப்பிரசவத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது. இவர்கள் எடுத்துக்கொள்ளும் சிலவகை மருந்துகள் காரணமாகக் கருத்தரிக்கும்போது, இரண்டு, மூன்று என ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உருவாகின்றன. இதன் காரணமாக குறைப்பிரசவம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

சிகரெட்டில் இருக்கும் நச்சுக்கள், பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது நஞ்சுக்கொடியைப் பாதிப்பது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும், கணவர் புகைபிடிப்பதால் ஏற்படும் பேஸிவ் ஸ்மோக்கிங்காலும் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
போதை மருந்து, ஆல்கஹால்
போதை மருந்து எடுத்துக்கொள்வது, மது அருந்துதல் காரணமாகவும் நஞ்சுக்கொடி பாதிக்கும். போதைப் பழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் குறைப்பிரசவத்தின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

32 வாரங்களுக்குள் குறைப்பிரசவமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
மூளையில் ரத்தம் கசியலாம்.
டிஸ்லெக்சியா, ஏ.டி.ஹெச்.டி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
நுரையீரல் வளர்ச்சிக் குறைவு காரணமாக, சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.இதனால், எளிதாக நோய்த் தொற்றுக்கள் ஏற்படக்கூடும்.
1. சுவாசம்
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது.
நுரையீரல் சுருங்கிப்போய் இருப்பதால், குழந்தையால் மூச்சுவிட முடியாது. இதன் காரணமாகவே பல குழந்தைகள் இறக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு உண்டு. ஏழு, எட்டாவது மாதங்களில் ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு வரும்போது, அவருக்கு இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் பிரசவம் ஏற்படும் என்பதை டாக்டர் கணித்தால், தாய்க்கு கார்டிக்கோஸ்டீராய்டு என்ற மருந்தைக் கொடுப்பதன் மூலம், குழந்தையின் நுரையீரலை மேம்படுத்த முடியும். ஒருவேளை உடனடிப் பிரசவம் ஏற்பட்டால், அந்தக் குழந்தைக்கு சார்ஃபாக்டன்ட் மருந்தை நுரையீரலில் செலுத்தி, நுரையீரல் உடனடியாகச் சுருங்குவதைத் தடுத்து, எளிதாக உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த இரண்டு சிகிச்சைகள் மூலம் பெருமளவு குழந்தைகள் உயிர் பிழைக்கின்றன.

கருத்தரித்ததில் இருந்து, இதயம், நுரையீல், மூளை என ஒவ்வோர் உறுப்பும் வளரத் தொடங்கி, முதிர்ச்சியடையும். இப்படி, ஒவ்வோர் உறுப்பும் வளர்ச்சியடைவதை `வளர்ச்சிக்கான மைல்ஸ்டோன்’ என்று சொல்வோம். இது சரியாக நடைபெற வேண்டும். இவை நடைபெறத் தகுந்த தட்பவெப்பநிலை இருக்க வேண்டும்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, உடலில் வெப்பத்தைத் தேக்கிவைத்துக்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். மேலும், குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் எடைக் குறைவாகப் பிறப்பதற்கும் அதிக வாய்ப்பு உண்டு. எனவே, இன்குபேட்டர் அவசியம்.
இன்குபேட்டரில் குழந்தையை வைப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். எப்போது குழந்தைக்கு நன்றாகத் தோல் வளர்ச்சி அடைந்து வெப்பத்தைத் தேக்கி வைத்துக்கொள்ளும் திறன் முழுமையாகக் கிடைக்கிறதோ, அதுவரை இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாப்பதுதான் சிறந்தது.

3. பாலூட்டுதல்
குறைப்பிரசவக் குழந்தைகளின் முக்கியப் பிரச்னை உணவு உட்கொள்ளுதல். 32 வாரங்களுக்கு முன்பே பிறக்கும் குழந்தைகளுக்கு தாயிடம் இருந்து பால் குடிக்கத் தெரியாது.
32 வாரங்களுக்கு மேல்தான், மூளை வளர்ச்சி சீராகி, பால் குடிக்கும் உணர்வு குழந்தைக்குத் தூண்டப்படும். 32 வாரங்களுக்கு முன் பிறந்த சில குழந்தைகளுக்குத் தாயிடம் பால் குடிக்கும் திறன் சிறிதளவு இருந்தாலும், அதனை விழுங்கும் திறன் இல்லாததால், தாய்ப்பால் மூச்சுக்குழாய் வழியாகப் பாய்ந்து, பிரச்னை ஏற்படலாம். எனவே, தாயிடம் இருந்து ஒரு பிரத்யேகக் கருவி மூலம் தாய்ப்பால் எடுத்து, குறிப்பிட்ட காலம் வரை குழந்தையின் வயிற்றில் செலுத்துவதன் மூலம் உணவுப் பிரச்னையைச் சமாளித்துவிடலாம். இந்த முறையில் தாய்ப்பால் குழந்தைக்குக் கிடைப்பதால், குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

சில குழந்தைகளுக்கு செயற்கை ஆக்சிஜன் தேவைப்படும். குழந்தை முழு வளர்ச்சி அடையாத சமயங்களில், பார்வைத் திறனுக்கு மிகவும் அவசியமான ரெட்டினாவும் வளர்ச்சி அடைந்திருக்காது. மருத்துவ மனையில் மருத்துவர்கள் செயற்கை ஆக்சிஜன் கவனமின்றி அதிகமாகக் கொடுத்துவிட்டால், குழந்தைக்கு ரெட்டினா பாதிக்கப்படும். ரெட்டினாவில் ரத்தநாளங்கள் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்தால், பிற்காலத்தில் பார்வை பறிபோக நேரிடும்.இந்த நிலைக்கு குறைப்பிரசவ ரெட்டினொபதி (Retinopathy of Premature) என்று பெயர். எனவே, குழந்தைக்குத் தேவையான அளவு, சீராகச் செயற்கை ஆக்சிஜன் கொடுக்கவேண்டியது அவசியம். அதேபோல, தற்போது ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை அதிகமாக இருப்பதால், குழந்தைக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதில் கவனம் தேவை.
5. ஹைஜீன் அவசியம்
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைக் கையாள்வதில் அதிகக் கவனம் தேவை. சுத்தமின்றி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினால், நோய்த்தொற்று ஏற்படலாம். கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். நன்றாகக் கைகளின் இடுக்குகளைக் கழுவி, சுத்தம் செய்த பிறகுதான் குழந்தையைத் தொட வேண்டும்.
வேண்டாமே மூடநம்பிக்கை!
மூடநம்பிக்கை காரணமாக சிலர் எட்டு, ஒன்பது மாதங்களிலேயே ஜோதிடம் பார்த்து, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுகொள்கிறார்கள். 37 வாரங்களுக்குப் பிறகு சிசேரியன் செய்துகொண்டால், குழந்தைக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை. உரிய மருத்துவக் காரணங்கள் இன்றி சொந்த விருப்பத்துக்காக, குறை மாதங்களில் சிசேரியன் செய்து, குழந்தையைப் பெற்றெடுப்பது அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் தீங்கு. மூடநம்பிக்கையை காரணமாக வைத்து குழந்தையின் உயிரோடு விளையாடக் கூடாது.
குறைப்பிரசவம் தவிர்க்க எளிய வழிகள்

உடற்பயிற்சி செய்து, பி.எம்.ஐ அளவை நார்மலில் வைத்திருக்க வேண்டும்.
சிகரெட், போதைப் பொருட்கள், மது தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக் குறைவும், குறைப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
குழந்தையைத் தள்ளிப்போடாதீர்கள்
குழந்தைப்பேறைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அதற்காகக் குழந்தைபேற்றைத் தள்ளிப்போட வேண்டாம். வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு, கருமுட்டையின் தரம் குறைவதால், கரு உருவாவதிலும் பிரச்னை ஏற்படலாம்.

» அன்னாசிப்பழம் சாப்பிட்டால் குறைப்பிரசவம் ஏற்படும்..!
» நோயில்லாக் குழந்தையைப் பெற வேண்டுமா?
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» குழந்தையைப் பாதுகாக்கும் 4 நாகபாம்புகள் video
» நோயில்லாக் குழந்தையைப் பெற வேண்டுமா?
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» குழந்தையைப் பாதுகாக்கும் 4 நாகபாம்புகள் video
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|