TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா?

Go down

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Empty மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா?

Post by Tamil Sun Feb 28, 2016 1:37 pm

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா?

1967-ம் ஆண்டு,  முதன்முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தபோது முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, கோட்டையில் கையெழுத்திட்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். 'திமுகவின் வெற்றிக்கான காரணம் என்ன?' என்றனர் செய்தியாளர்கள். அண்ணா சொன்ன பதில் "வாய்மை".
'புரியலையே...' என்றனர் செய்தியாளர்கள். "வாய்மை. அதாவது வாயும், மையும்தான் காரணம். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாய் வலிக்க ஊர் ஊராக போய் பேசினார்கள். எல்லோரும் பத்திரிகைகளில் மை தீர எழுதினோம். இந்த வாயும் மையும் சேர்ந்து தான் வெற்றிக்கு வித்திட்டது" என்றார்.
மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Annadurai%20550%202
ஆம். அந்தத் தேர்தலின்போது கருணாநிதி, நாவலர், மதியழகன், சம்பத், அன்பழகன் உள்ளிட்ட தலைவர்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தனர். திமுக தலைவர்கள் நடத்திய திராவிடன், போர்வாள், முரசொலி, மன்றம், திருவிளக்கு என பல பத்திரிகைகள்,  கட்சியின் கொள்கைகளை முன்வைத்து எழுதி மக்களிடம் கொண்டு சென்றன. தலைவர்களின் பேச்சும், இந்த பத்திரிகைகளில் எழுதிய எழுத்தும்தான் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு பேருதவி புரிந்தன. 

அதன்பின் 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது திமுக தேர்தலை எப்படி தேர்தலை சந்திக்கிறது என்பதை யோசித்து பார்த்தால், இந்த 50 ஆண்டுகளில் திமுக எப்படியெல்லாம் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கின்றது என்பது தெளிவாகும். பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை போல பல கோடியில் விளம்பரங்கள் செய்து, அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதன் மூலம் பலனை அடையலாம் என நினைக்கிறது திமுக.

அரசியலிலும் கார்ப்பரேட் முறை

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Modi%20400விளம்பரங்களில் என்ன கார்ப்பரேட் முறை?... முன்பெல்லாம் நாம் ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றால், அதன் சுவையும், அது உடலுக்கு நல்லதா என்பதையும், நாம் அதை உட்கொள்வதன் மூலம், உணவின் தன்மையை மூளைக்கு கொண்டு சென்று, அதன் மூலம் அந்தப் பொருளை வாங்கினோம். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவுக்கு பின்னர் பெரும் பொருட்செலவில் விளம்பரங்கள் மூலம், தங்கள் பொருள் சுவையானது என்றும், உடலுக்கு நல்லது எனச்சொல்லியும் நேரடியாக மூளையை ஏற்க வைத்தனர். இதன் விளைவுதான் நாம் நூடுல்ஸ் போன்ற பன்னாட்டு உணவு வகைகளை நல்லது பார்த்து சாப்பிடாமல், விளம்பரத்தை பார்த்து சாப்பிட துவங்கினோம். காக்கா முட்டை திரைப்படத்தில் ஒரு பீட்சா விளம்பரத்தை பார்த்து,  அதை சாப்பிட சிறுவர்கள் அலைந்து திரிவது என்பது இதைத்தான் காட்டுகிறது. 

இந்திய அரசியலில் கார்ப்பரேட் விளம்பர முறையை புகுத்தி அதில் வெற்றி கண்ட முதல் அரசியல் தலைவர் மோடி. காங்கிரஸ் ஆட்சியில் அடுத்தடுத்து வெளிப்பட்ட ஊழல், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி போன்ற இக்கட்டான சூழலில், இவர்தான் இதற்கெல்லாம் தீர்வு என முன்வைக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி. இதில்தான் கார்ப்பரேட் அரசியல் கை கொடுத்தது. மக்களின் பொது புத்தியில் பீட்சாவை போன்று மோடியை ஒரு சரக்காக நுழைத்து அதில் வெற்றி கண்டன விளம்பர நிறுவனங்கள். மோடியை ஒரு ஆகச்சிறந்த தலைவர் என உருவேற்றிய இந்த நிறுவனங்கள், மோடியின் கடந்த கால மோசமான செயல்பாடுகளை மறைக்கவும் பல தந்திரங்கள் செய்தனர். இதுதான் மோடியை மீட்பர் போல காட்டியது. மிகையான தகவல்களை திரும்ப திரும்ப சொல்லியும், உண்மையான தகவல்களை மறைக்க பல தந்திரங்களை செய்தும்தான் மோடி பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். பல கோடி இளைஞர்கள் கிட்டத்தட்ட மூளைச்சலைவை செய்யப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மோடி வழியில் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை முன்னிறுத்த பி.ஜே.பி. பின்பற்றிய இதே வழியைத்தான், ஸ்டாலினுக்காக திமுக செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இந்த தேர்தல் நிச்சயம் வித்தியாசமானது தான். 'இந்தியா முழுவதும் மோடியை கொண்டு செல்ல தேவை இருந்தது. தமிழகத்தில் ஸ்டாலின் அறிமுகமானவர்தானே அதற்கு என்ன அறிமுகம் தேவை இருக்கிறது...' என கேட்கிறீர்களா? அதற்கு தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல்தான் பதில்.

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Stalin%20promo%20300திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுகவை ஆதரிப்பது, அதிமுகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற திமுகவை ஆதரிப்பது என்ற சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கு மாற்றான ஒரு அரசியல் கட்சி வேண்டும், புதிய தலைமை தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற குரல் இப்போது ஓங்கி எழுவதை நாம் பார்க்கிறோம். 

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வறட்சி நிகழ்வதை இது வெளிப்படுத்துகிறது. இந்தச் சூழலில் திமுகவோ, அதிமுகவோ வழக்கமான நடைமுறையை தாண்டி அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். 

சொத்துக்குவிப்பு வழக்கு, சென்னை பெரு வெள்ள பாதிப்புகள், ஐந்தாண்டு ஆட்சியில் நிகழ்ந்த குறைபாடுகள் என அதிமுக மிக மோசமான இமேஜூடன் இருந்தாலும், திமுகவுக்கும் நல்ல பெயர் இல்லை. இன்னும் 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி என பல பிரச்னைகள் மக்கள் நினைவில் இருந்து அகலவில்லை. இதை மறக்கடிக்கும் முயற்சி தான் இந்த கார்ப்பரேட் அரசியல்.


திமுகவின் 3 திட்டங்கள் 

ஏற்கனவே மோடி செய்த அதே அரசியல்தான். கடந்த கால மோசமான செயல்பாடுகளை மறைக்க வேண்டும். அதே சூழலில் ஸ்டாலின் என்ற முகத்தை முன்னிலைப்படுத்த, ஸ்டாலினின் பிம்பத்தை மக்களிடம் உருவாக்கும் முயற்சிகள்தான் இந்த விளம்பரங்களாக இருந்தன. திமுகவுக்கு,  குறிப்பாக ஸ்டாலினுக்கு 3 வேலைகள் நடந்தாக வேண்டும். ஒன்று திமுகவின் முகமாக, பிம்பமாக ஸ்டாலின் நிறுத்தப்பட வேண்டும். இரண்டாவது, கடந்த கால மோசமான செயல்பாடுகளை மறைக்க வேண்டும். மூன்றாவது,  தமிழகத்தில் மாற்று தேவை என்ற அரசியலை உடைத்து,  மாற்றம் என்பது திமுகவால்தான் முடியும் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் கார்ப்பரேட் விளம்பர ரீதியில் செய்து வருகிறது திமுக. இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகிறது.

முதலாவது திமுகவின் முகமாக ஸ்டாலினை முன்னிறுத்துவது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே இதை ஸ்டாலின் தரப்பு துவங்கினாலும், இதில் கார்ப்பரேட் முறை புகுத்தப்பட்டது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்விக்கு பின்னர்தான். ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என கட்சி அறிவிக்காததற்கு முன்னரே, இணையத்தில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் ஸ்டாலின். ஸ்டாலின் பார் சிஎம் 2016 என சமூக வலைதளங்களில் பக்கங்கள் உருவாக்கப்பட்டன.

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Stalin%20promo%20600%2011
தனி ஒருவனாக தோன்றிய ஸ்டாலின்

ஸ்டாலின் என்ற முகம்தான் திமுகவின் முகம் என காட்ட எடுக்கப்பட்ட அடுத்த முயற்சி,  'முடியட்டும் விடியட்டும்' என்ற முழக்கத்துடன் மதுரை, கடலூர், திருப்பூரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள். இவை சாதாரண பொதுக்கூட்டங்களாக இல்லாமல், தனியொரு ஆளாக ஸ்டாலின் மட்டுமே பேசும் கூட்டங்களாக அமைந்தது. இரவில் துவங்கி கிட்டத்தட்ட நள்ளிரவில் முடியும் திமுக கூட்டங்கள், மாலையில் துவங்கி இரவு 7 மணிக்குள் முடிக்கப்பட்டது. 

மக்கள் மத்தியில் ஸ்டாலினை கொண்டு செல்ல எடுக்கப்பட்ட அடுத்த முயற்சிதான்,  நமக்கு நாமே நடை பயணம். தமிழக அரசியலில் நடைபயணம் செல்வதும், மக்களை சந்தித்து பிரச்னையை கேட்பதும் புதியது அல்ல. ஆனால் அதை மேற்கொண்ட விதம்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் இருப்பை உணர்த்தியது. நமக்கு நாமே நடைபயணம் எதேச்சையாக நடப்பது அல்ல. முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட பயணம். ஆனால் அதை யதேச்சையாக நடப்பது போன்று கட்டமைத்தது கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்கள்.

வடிவமைக்கப்பட்ட பயணங்கள்

கட்சியுடன் தொடர்பில்லாத கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆட்கள்,  ஸ்டாலினுடன் இந்த பயணம் முழுக்க சுற்றினர். கணினி செயல்பாடு, ஊடக செயல்பாடுகளை கவனிக்க தொழில் முறை ஆட்கள் இயங்கினார்கள். ஸ்டாலின் எந்த வழியில் செல்ல வேண்டும், எங்கு நிற்க வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எந்த இடத்தில் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும், ஆட்டோ வேண்டும்.. எந்த வீட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும், எந்த ஓட்டலில் சாப்பிட வேண்டும் என்பதெல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டே  செயல்படுத்தப்பட்டது. எப்படி பேச வேண்டும், எங்கு திரும்ப வேண்டும், எப்படி காமிராவை பார்ப்பது என எல்லாமே திட்டமிட்டு நடந்தவை தான். ஆனால் அவை இயல்பாக நடத்தப்படுவதாக கொண்டு செல்லப்பட்டது.

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Stalin%20promo%20600%202
அடுத்து அவரின் உடைகள்... வழக்கமாக வெள்ளை வேஷ்டி, சட்டையில் வலம் வரும் ஸ்டாலின், பல வண்ணங்களில் உடை அணிந்து வந்தார். அமெரிக்க தேர்தலில் போட்டியிடுபவர் போல,  வித விதமான ஆடைகளையும், ஒளிரும் ஷூக்களையும் அணிந்து கொண்டார். இவை எல்லாமே தானாக நடக்கவில்லை. மாறாக நன்கு வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன. அவை எல்லாம் கார்ப்பரேட் விளம்பர நிறுவனத்தின் வேலைகள்தான்.

பக்கம் பக்கமாய் விளம்பரங்கள்


இதன் தொடர்ச்சிதான் தற்போது வெளிவரும் விளம்பரங்கள். ஒரு பொருளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், அதற்கான வித்தியாசமான முறையில் விளம்பரங்களை செய்து மக்களை அதை நோக்கி திருப்பும் கார்ப்பரேட் முறைதான் இதிலும். ஒரே நேரத்தில் இப்படியான விளம்பரங்களை கொண்டு சேர்க்கும் போது அதுகுறித்த பேச்சை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும். இதுவே தொடர்ந்து செய்யும் போது, மக்கள் மத்தியில் ஒரு பொருளை திணிப்பது போல திமுகவையும் திணித்து விட முடியும் என்பதன் முயற்சிதான் இது.

ஒரே மாதிரியான விளம்பரங்கள். அதே நேரம் மக்களை எளிதில் வயப்படுத்தும் வகையில் இந்த விளம்பரங்களை விளம்பர நிறுவனங்கள் அமைத்திருந்தன. எல்லாமே சினிமா வசனங்களை கொண்டு இந்த விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. திமுகவுக்கு வாக்களியுங்கள் என கோருவதாக இந்த விளம்பரங்கள் அமையவில்லை. ஸ்டாலினை முன்னிலைப்படுத்தவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என வாசகங்கள் இடம்பெறவில்லை. மாறாக மக்கள் சந்தித்த பிரச்னைகளை நினைவூட்டுவதாக இருந்தது. சென்னை மழை வெள்ள பாதிப்பு, வெளியே வராத முதல்வர், சட்டம் ஒழுங்கு பிரச்னை என அதிமுக ஆட்சியின் குளறுபடிகளை சொல்வதாக இருந்தது. மக்களை எளிதில் சென்றடைய சினிமா வசனங்களை இமிடேட் செய்து இந்த வசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Stalin%20promo%20600%203
சிங்கம் பட ஸ்டைலில் முதல்வரை பாத்திருக்கியா என கேட்பதாகட்டும், ஆலுமா டோலுமா சட்டம் ஒழுங்கு அவுட்டுமா என சொல்லும் விளம்பரங்கள் ஆகட்டும். ஒவ்வொன்றும் மக்களை எளிதில் சென்று சேரும் வகையில் இருந்தது. நாள்தோறும் முதல் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் வந்த இந்த விளம்பரங்கள் மூலம், இரு விஷயங்களை சாதிக்க நினைக்கிறது திமுக.

எவ்வளவு செலவு தெரியுமா?

ஒன்று அதிமுகவின் ஆட்சி குளறுபடிகளை மக்களிடம் கொண்டு செல்வது. இரண்டாவது மாற்று என்பது திமுக மட்டும்தான் வேறு யாரும் இல்லை என்பதை உணர்த்த முயல்வது. ஒரு நாளைக்கு ஒரு நாளிதழில் விளம்பரம் செய்தால் பல லட்சம் செலவாகும். பல நாளிதழுக்கு ஒரு நாளைக்கான செலவு பல கோடி. அப்படீன்னா பல நாளிதழுக்கு, பல நாட்களுக்கு இப்படியே விளம்பரம் செஞ்சா.... தலை சுற்றுகிறதா ஆம் இது தான் கார்ப்பரேட் அரசியல். ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கு முன்னர் ப்ரமோஷனுக்காக என ஒரு சதவீதம் ஒதுக்கப்படும். தொழிலில் இது சரி. மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய துறையான அரசியலில் இப்படி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்ய செலவிட்டால்...? இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியது நாம் தான்.

திமுக மட்டுமல்ல. 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி', 'அன்புமணி ஆகிய நான்' என அன்புமணி ராமதாஸ் வழங்கும் முதல் பக்க விளம்பரங்களும் இந்த ரகம்தான்.  அதிமுக இன்னும் கார்ப்பரேட் விளம்பர பாணியை கடைபிடிக்கவில்லை என்றாலும், திமுகவை விட விளம்பர செலவில் உச்சத்தில் இருக்கும் கட்சி அதிமுகதான். (ஒருவேளை ஸ்டிக்கர்களே போதும் என நினைத்தவிட்டார்களோ என்னவோ!) தேர்தல் நெருங்க நெருங்க திமுகவுக்கு போட்டி கொடுக்க,  அதிமுகவும் கார்ப்பரேட் விளம்பர நிறுவனத்தை நாடக்கூடும். அதெல்லாம் சரி.  கார்ப்பரேட் நிறுவனம் விளம்பரம் பண்றதுல என்ன தப்புனு கேட்கிறீங்களா?.

மோடி வழியில் ஸ்டாலின்...கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா? Stalin%20farming%20land%20600%202
உங்களுக்கு ஒரு உதாரணத்தை சொல்றேன். ஒரு வாசனை திரவிய (சென்ட்) விளம்பரம். ஒருவன் அந்த சென்ட்டை தன் உடம்பில் ஸ்பிரே செய்வான். உடனே ஊர்ல இருக்குற எல்லா பொண்ணுங்களும் அவனை நோக்கி ஓடி வருவாங்க. அவன்கிட்ட மயங்குவாங்க இது உண்மையானு கேட்டா நீங்க நிச்சயம் இல்லைனு தான் சொல்வீங்க. எல்லோருமே அதைத்தான் சொல்வோம். ஆனா இந்த சென்ட் விற்பனைதான் நம்பர் ஒன்ல இருக்கு. ஏன் தெரியுமா? விளம்பரம். இங்கே உண்மை முக்கியமில்லை. ப்ராண்ட் ப்ரமோஷன்தான் முக்கியம். எல்லோரும் அந்த விளம்பரத்தை பத்தி பேச வைக்கணும். அதைத்தான் தமிழக அரசியல்வாதிகள் இப்போ செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. 

மோடியில துவங்கி ஸ்டாலின், அன்புமணி வரைக்கும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நாம் இன்னும் விளம்பரத்தை பாத்து ஏமாறுகிறார்களாவே இருந்துட்டு வர்றோம். எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போறோம் பாஸ்...?

- ச.ஜெ.ரவி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மாத சம்பளம் ஆயிரங்களில்: சொத்து மதிப்போ கோடிகளில்
» 2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல்
» கோடிகளில் புரண்ட கிரானைட் தொழில் ;மதுரை பி.ஆர்.பி., நிறுவனத்திற்கு சீல்
» காமன்வெல்த் போட்டியில் கோடிகளில் ஊழல்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
» பாசு காட்டிய வழியில் கலைஞர் நடப்பாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum