TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள்

2 posters

Go down

தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள் Empty தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள்

Post by மாலதி Mon May 31, 2010 7:45 am

புகைத்தல் ஆபத்தானது என அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

புகைத்தலும் புற்றுநோய்களும்

அதனால் ஏற்படும் மிக முக்கிய பாதிப்பு நுரையீரல் புற்றுநோயாகும்.
புகைப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கும், அதனால்
மரணமடைவதற்குமான சாத்தியம் புகைக்காதவர்களை விட 10 முதல் 20 மடங்கு
அதிகமாகும்.

தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள் Passive-smoking

அமெரிக்க புள்ளிவிபரங்கள் படி அங்கு நுரையீரல் புற்றுநோயால் மரணமடையும்
ஆண்களில் 90 சதவிகிதமும், பெண்களில் 80 சதவிகிதமும் புகைப்பவர்களாகவே
இருக்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோயைத் தவிர, குரல்வளை, களம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை,
சதையம், இரைப்பை, கருப்பைக் கழுத்து, குருதிப் புற்றுநோய் போன்றவற்றில்
ஏற்படும் புற்றுநோய்களுக்கும் புகைத்தலே முக்கிய காரணமாகிறது.

தன்செயலின்றிப் புகைத்தல்

நீங்கள் புகைக்காதவராக இருந்தபோதும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள்
புகைப்பதாலும் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள்
அதிகமாகும்.

தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள் Smoking+passive

மற்றவர்கள் புகைத்து வெளிவரும் புகையில் 4000 ற்கு அதிகமான நச்சு இரசாயனப்
பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 50 புற்றுநோயை ஏற்படுத்துவையாகும்.

அவ்வாறான தன்செயலின்றிப் புகைத்தல் காரணமாக வருடாந்தம் 3000 பேர் அமெரிக்காவில் மரணமடைகிறார்கள்.

தன்செயலின்றிப் புகைத்தல் என்பது ஒருவரது சுற்றாடலிலுள்ள புகையிலையின் புகையால் Enviromental tobacoo smoke (ETS) ஏற்படுகிறது.

இது இரண்டு வழிகளில் நேர்கிறது.

  • புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டின் எரியும் முனையிலிருந்து வெளிவரும் புகை.
  • இரண்டாவது புகைப்பவர் வெளிவிடும் சுவாசக் காற்றோடு கலந்து வரும் புகையாகும்.
புற்றுநோயைக் கொண்டு வருவது மாத்திரமின்றி வேறும் பல உடல் நலக் கேடுகளை இது ஏற்படுத்துகிறது.

தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள் PassiveSmoking


  • மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.


  • தன்செயலின்றிப் புகைத்தல் காரணமான நெஞ்சில் சளி, இருமல்,
    நெஞ்சு இறுக்கம், நுரையீரலின் செயற்பாடு குறைந்து இளைப்பு ஏற்படுதல்
    ஆகியனவும் ஏற்படும்.


  • நுரையீரலில் கிருமி தொற்றி நியுமோனியா, புரங்கைட்டிஸ் ஆகியவை அதிகம் ஏற்படும்.


  • ஆஸ்த்மா வருவதற்கும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு மோசமடைவதற்கும் தன்செயலின்றிப் புகைத்தல் முக்கிய காரணமாகும்.


  • குழந்தைகளில் உட்காதில் கிருமித்தொற்று (Middle Ear Infections) அதிகளவு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள் Passive-smoking-baby

  • தன்செயலின்றிப் புகைத்தலால் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டு. அவர்கள் நிறை குறைந்த குழந்தைகளாகப் பிறப்பர்.


  • ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் திடீர் மரணம் அடைவதற்கு
    (Sudden Infant death Syndrome -SIDS அத்தகைய தன்செயலின்றிப் புகைத்தல்
    மற்றொரு காரணமாகும்.


  • குழந்தைகளிலும் வளர்ந்தவர்களிலும் காலத்திற்கு முந்திய மரணம் ஏற்படுவதற்கு தன்செயலின்றிப் புகைத்தலும் ஒரு காரணமாகும்.
எவ்வாறு

எவ்வாறு நீங்கள் தன்செயலின்றிப் புகைத்தலுக்கு ஆளாகிறீர்கள்.


  • வேலைத்தளம்,
  • பொது இடங்கள்,
  • வீடு ஆகியனவே அதற்கான சாத்தியமுள்ள இடங்களாகும்.

இலங்கையில் சினிமா அரங்கு, பஸ் போக்குவரத்து ஆகியவற்றில் புகைத்தலைத் தடை செய்திருப்பது முன்னேற்ரகரமான செயலாகும்.

ஆயினும் வியாபார ஸ்தலங்களில் தடை செய்யப்படவில்லை.

வீட்டினுள் புகைக்காதிருப்பது மிக முக்கியமாகும். வீட்டில் அடைபட்டுக்
கிடக்கும் காற்றில் புகையின் செறிவு அதிகமாகும். இதனால் ஒருவரது மனைவி,
குழந்தைகள், வீட்டில் உள்ள முதியவர்கள் என எல்லோரையும் பாதிக்கும்.

தப்புவதற்கு வழி

இதிலிருந்து நீங்கள் தப்புவதற்கு வழி என்ன?

தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள் Passive+smoking


  • வீட்டினுள் புகைப்பதைத் தவிருங்கள்.
  • நீங்கள் புகைக்காவிட்டாலும் வரும் விருந்தினர்கள் புகைப்பதை ஊக்குவிக்க வேண்டாம்.
  • வரவேற்பறையில் சாம்பல் கிண்ணம் வைக்காதீர்கள்.
  • காரில் பயணம் செய்யும்போது புகைக்கவே வேண்டாம்.
நீங்கள் முன்மாதிரியாக இருந்து உங்கள் குடும்பத்தினர்
புகைக்காதிருக்க வழி காட்டுங்கள். அது புகைக்காத சமூகத்தை நோக்கி
முன்நகர்வதற்கான முதல் படியாகும்.

புகைத்தல் பற்றிய எனது மற்றொரு கட்டுரையான 'வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? - புகைத்தல்' பற்றிப் படிக்க கிளிக் செய்யுங்கள்


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள் Empty Re: தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள்

Post by kalairaja Mon May 31, 2010 11:08 am

உங்கள் புகைச்சல் ,புகைபிடிப்பவர்களுக்கு புரிந்தால் நலமே.
பகிர்வுக்கு நன்றி........
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum