Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புத்துணர்வு தரும் உணவுகள்
Page 1 of 1
புத்துணர்வு தரும் உணவுகள்
பிஸி வாழ்க்கையில், வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவை நம்மை ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியாதது. உடலையும் மனதையும் நல்ல முறையில் பராமரித்தால், புத்துணர்வு தானாகவே கிடைக்கும். சரியான உணவு வகைகளை, சரியான நேரத்துக்கு தவிர்க்காமல் எடுத்துக்கொள்வதும், போதுமான நீர் ஆகாரங்களைப் பருகுவதும் சோர்வைத் தவிர்த்து சுறுசுறுப்போடும் புத்துணர்வோடும் வலம் வர நமக்கு உதவும்.
புத்துணர்வுடன் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். (சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரையின்படி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்) உடலில் நீர் அளவு குறையும்போது, உடற்சோர்வு ஏற்படும்.
தேன் நீர்
முருங்கைக்கீரை சூப்
அருகம்புல் சாறு
ராகி கூழ்
சோயா பால்
பார்லி நீர்
சுக்கு காபி
நெல்லிக்காய்ச் சாறு
[You must be registered and logged in to see this image.]
நீர் உணவுபுத்துணர்வுடன் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். (சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரையின்படி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்) உடலில் நீர் அளவு குறையும்போது, உடற்சோர்வு ஏற்படும்.
தேன் நீர்
[You must be registered and logged in to see this image.]
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு அவுன்ஸ் தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர கபத்தன்மை சீராகி, உடல் சோர்வின்றி இருக்கும்; ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லது.முருங்கைக்கீரை சூப்
[You must be registered and logged in to see this image.]
இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நீரில் அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம். முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.அருகம்புல் சாறு
[You must be registered and logged in to see this image.]
அருகம்புல் ஓர் அற்புத மூலிகை. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடியது. உடல் வறட்சியை நீக்கக்கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. விஷக்கடி, தோல் ஒவ்வாமைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து. அருகம்புல்லில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளன. களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி அடிக்காத இடங்களில் சேகரித்த அருகம்புல்லை சுத்தம்செய்து ஒரு டம்ளர் நீரைச் சேர்த்துப் பிழிந்து எடுத்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க நல்லது.ராகி கூழ்
[You must be registered and logged in to see this image.]
முளைகட்டிய ராகி ஒரு பங்கு, தோல் நீக்கிய முழு உளுந்து அரைப் பங்கு, சுக்கு, ஏலக்காய் சிறிதளவு அனைத்தையும் வறுத்து, பின் மாவுபோல் அரைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு எடுத்து, கஞ்சி காய்ச்சி பால், சர்க்கரை கலந்து பருக உடல் பலம் பெறும். ராகியில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. குழந்தைகள். சர்க்கரை நோயாளிகள் (சர்க்கரையைத் தவிர்த்துப் பயன்படுத்தலாம்), இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் போன்ற அனைவருக்கும் சிறந்தது.சோயா பால்
[You must be registered and logged in to see this image.]
ஒரு கைப்பிடி அளவு சோயா எடுத்து, நீரில் ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து, பால் எடுத்துக் காய்ச்சி, ஏலக்காய், சர்க்கரை கலந்து பருகலாம். இதில், அதிக அளவு புரதச்சத்துடன் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், கனிமச்சத்துகள் உள்ளன. மாதவிடாய் நின்ற காலத்தில் இது ஒரு சிறந்த உணவு.பார்லி நீர்
[You must be registered and logged in to see this image.]
பார்லியை அரைத்து மாவாக்கி, 2 தேக்கரண்டி அளவு எடுத்து 3 டம்ளர் நீர்விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை விட்டு ஆறியபின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை, தேவை எனில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும். சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வரும் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.சுக்கு காபி
[You must be registered and logged in to see this image.]
சுக்கு, மல்லி, ஏலக்காய் மற்றும் பனங்கருப்பட்டி கலந்து, காபிபோல் செய்து, பால் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ குடித்துவர, பசி மந்தம், தலைவலி, மூட்டுவலி நீங்கும். மேலும், சுறுசுறுப்புடன் இருக்கவும் இது உதவும்.நெல்லிக்காய்ச் சாறு
[You must be registered and logged in to see this image.]
2 அல்லது 3 பெரிய நெல்லிக்காய்களைக் கொட்டை நீக்கி, ஒரு டம்ளர் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்க, பார்வைத்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நீக்கி, மஞ்சள் தூள் கலந்து பருகிவர ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.- ச.ஆனந்தப்பிரியா
படம்: சூ.நந்தினி
படம்: சூ.நந்தினி
Similar topics
» புத்துணர்வு தரும் உணவுகள்
» தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
» தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
» குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
» அன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள்!
» தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
» தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!
» குளிர்ச்சி தரும் கோடைகால உணவுகள்
» அன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum