Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சர்க்கரை நோயை வென்று சாதிப்பவர்கள்!
Page 1 of 1
சர்க்கரை நோயை வென்று சாதிப்பவர்கள்!
சர்க்கரை நோயை வென்று சாதிப்பவர்கள்!
மனக்கட்டுப்பாட்டாலும் முறையான மருத்துவ முறைகளாலும் இந்த குறைபாட்டை தாண்டி மகத்தான சாதனை புரிந்து வருகிறார்கள். இந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்கள்.இன்னும் பல்லாயிரம் சாதனையாளர்களுக்கு சர்க்கரை நோய் உண்டு.
அறிய வேண்டிய மருந்துகள்
சமுதாயத்தை பயமுறுத்தும் பூதம் என சர்க்கரை நோயை மருத்துவர்கள் பூதாகரமாக்குவதாக சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் உடல் உழைப்பு மிகுந்தவர்களுக்கும் கிராமத்து மக்களுக்கும் வராமல் இருந்த நீரிழிவு, இப்போது நம்மில் அரிசியை பிரதானமாக உண்ணும் மக்கள், எந்த உணவாக இருந்தாலும் அளவு தாண்டி உண்பவர்கள் மற்றும் ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கும் பருமனாக இருப்பவர்களுக்கும் என உலகம் முழுவதுமே தாக்குவதாக அறியப்படுகிறது.
20 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கே வரும் டைப் 1 நீரிழிவானது, அமெரிக்காவிலே கடந்த பத்தாண்டுகளில் 23% அதிகரித்து உள்ளதாகவும், இந்தியாவில் இப்போது இருப்பதைவிட இரு மடங்கு அதிகரித்து 2025ல் 7 கோடி மக்களுக்குப் பரவும் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
தொற்றுநோய்களாலும் புற்றுநோய் களாலும் மாண்டு கொண்டிருந்த மனிதகுலம் இப்போது நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் நோய், இவற்றால் வரும் மாரடைப்பு, வாதம் என 40லிருந்து 80 வயது வரை வாழும் வாழ்க்கையையே பயமுறுத்தி ஆட்டம் காண வைத்திருக் கிறது. 40 – 50 வயதுகளில் இறந்து கொண்டு இருந்த இந்தியர்களை, மருத்துவ அறிவியல் வளர்ச்சியானது இன்று 80 வயது வரை சராசரியாக வாழ வைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், மக்கள் அனைவருக்கும் மருந்துச் சுமையோ, மருத்துவச் செலவோ இல்லாத வயோதிகத்தை அளிக்கவே நவீன மருத்துவம் விரும்புகிறது.
[You must be registered and logged in to see this image.]
சர்க்கரை நோய் வருவதற்கு உடலில் சர்க்கரையை குறைக்கும் இன்சுலின் சுரக்காமல் (Insulin Deficiency) போவதும் சுரக்கும் இன்சுலின் குறைக்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் குறைக்காமல் (Insulin Resistance) போவதும் காரணம். அதனால், உடலில் இன்சுலின் சுரப்பதைத் தூண்டும் மருந்துகள் (Sulfonylurea, Glimepiride, Glipizide, Gliclazide, Glibenclamide), சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் வேலை செய்வதைக் கூட்டும் மருந்துகள் (Insulin Sensitizers Metformin, Pioglitazone), இன்சுலின் சுரப்பியை பாதுகாக்கும் மருந்துகள் (Acarbose, Miglitol, voglibose), இன்சுலின் ஊசிகள் (Insulin)…
இவை தவிர உடலில் சர்க்கரையை உறிஞ்சாமல் தடுக்கும் மருந்துகள் என பல்வேறு ஆராய்ச்சிகளின் விளைவாக புதுப் புது நீரிழிவு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் அதிகரிக்கவே, இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்யும் ஒவ்வொரு கம்பெனியும் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சர்க்கரை நோயின் ஒவ்வொரு நிலைக்கும் மருந்து கண்டுபிடிக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகின்றன.
சர்க்கரை நோய் மருந்துகளில் மிக மலிவாக கிடைக்கும் (Sulfonylurea, Glimepiride, Glipizide, Gliclazide, Glibenclamide) மருந்துகளின் மிக முக்கிய பக்க விளைவு சர்க்கரையின் அளவை மிகக் குறைத்து (Hypoglycemia) விடுவதாகும்.
அதனால், இம்மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அளவாக அடிக்கடி உணவுடன், நேரத்துக்கு மருந்துகளை உட்கொள்ளுவது, மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு சரியான நேரத்தில் உட்கொள்ளுவது மற்றும் விரதம் இருப்பதையும் காலம் தள்ளி சாப்பிடுவதையும் தவிர்ப்பது, அதிக உணவையும் அதிக இடைவேளையையும் தவிர்ப்பது, அதிக உடற்பயிற்சியைத் தவிர்ப்பது என நோயையும் அதன் மருந்துக்கான விளைவையும் தன் உடலின், உணவின் மாற்றங்களையும் புரிந்து நடந்து கொண்டால் பாதிப்பின்றி பத்திரமாக வாழலாம்.
சர்க்கரை நோய் மருந்துகளில் அடுத்து பரவலாக உபயோகப்படுத்தப்படுபவை இன்சுலின் வேலை செய்வதை கூட்டும் (Insulin Sensitizers Metformin, Pioglitazone) மருந்துகள். இவற்றுக்கு சர்க்கரை அளவை உடனடியாக குறைக்கும் பக்கவிளைவு கிடையாது. Metformin மருந்துகள் எல்லா சர்க்கரை நோய் மருந்துகளுடன் சேர்த்து தரப்படுகின்றன. எடை கூடாது. இன்சுலின் ஊசி போட வேண்டிய அளவுக்கு நோயைத் தள்ளாது. Pioglitazone மருந்துகள் சர்க்கரையின் அளவை நன்றாக குறைக்கும் சக்தி உடையவை. ஒரு சிலருக்கு எடை கூடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதய, சிறுநீரக நோயாளிகளுக்கு தர மாட்டார்கள்.
உணவில் உள்ள சர்க்கரையின் அளவை உறிஞ்சும் சக்தியைக் குறைக்கும் (Insulin Sparer) மருந்துகள் சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த கொடையாகும். Acarbose, Miglitol, Voglibose மருந்துகள் எல்லாச் சர்க்கரை நோய் மருந்துகளுடனும் தரப்படுகின்றன.வேலை செய்யும் நேரம், கால அளவு, சர்க்கரையை குறைக்கும் தன்மையைப் பொறுத்து பல்வேறு வகை இன்சுலின் ஊசிகள் வந்து கொண்டே இருக்கின்றன. உடலிலேயே ஊசியைப் பொருத்தி தேவைக்கு ஏற்ப வெளியிடும் கம்ப்யூட்டர் ஊசிகளும் உள்ளன. பருமனைக் கூட்டும் இன்சுலின் ஊசிகளிலிருந்து, எடையை பாதிக்காத ஊசிகள் வரை விஞ்ஞானத்தின் வளர்ச்சி எல்லையே இல்லாதது.
சர்க்கரை நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஹைப்போ கிளைசிமியா என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60mgக்குக் கீழே செல்லும்போது ஏற்படும் நிலை. நீரிழிவு உள்ளவர்களுக்கு உணவு எடுத்துக்கொள்ள முடியாத ஜுரம், வாந்தி, பேதி என்ற நிலையிலும் மருத்துவர் அறிவுறுத்தலுக்கு அதிகமாகவோ, வயதானவர்கள் தெரியாமல் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போதோ, உணவு குறைவாக உட்கொண்டு, உடற்பயிற்சியை அதிகப் படுத்தும் போதோ, திருமணம் மற்றும் குடும்ப விழாக்களில் ஆர்வமாக மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டு உணவை மறக்கும் போதோ ஏற்படலாம்.
ஹைப்போ கிளைசிமியாவின் அறிகுறிகளாக உடல் நடுக்கம், வாந்தி, குமட்டல், படபடப்பு, மனப்பதற்றம், பசி மற்றும் மயக்கமாகி, உடல் வலிப்புடன் உளறுவதாக மாறலாம். இதில் எந்த அறிகுறி இருந்தாலும், இன்சுலின் எடுப்பவராக இருந்தாலும், காரணமின்றி அரை மயக்க நிலையில் இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் கரைசலோ, சர்க்கரைக் கரைசலோ, இனிப்புகளோ தொட்டு தொட்டு வைத்து மருத்துவரை அணுகும் வரை மருந்தாக தர வேண்டும். சர்க்கரை நோய் மருந்துகளுக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பக்க விளைவு உடல் பருமனைக் கூட்டுவதாகும். இது நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது நடைபெறும்.
ஒருவர் ஒழுங்காக மருந்து உட்கொண்டு உணவு, மருந்து, நடைப்பயிற்சி என்று எல்லாம் செய்தும் மாதா மாதம் ரத்தப் பரிசோதனை செய்யாவிட்டால் ஒருசில மாதங்களிலேயே சர்க்கரை கூடி உடல் மெலியக் காணப்படுவார்கள். சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். பார்வை மங்கலாகும். விரல் நுனி, கை, கால் இழுப்பதுடன் மரத்துப் போகும் உணர்வும் ஏற்படலாம்.
அதிக அளவு சர்க்கரை உடலில், ரத்தத்தில் இருக்குமானால் நரம்புகளில் பாதிப்பு (Diabetic Peripheral Neuritis) ஏற்பட்டு கால்களில் மரத்துப்போதல், வலி, புண் ஏற்படலாம். சர்க்கரை நோயைப் பற்றி தெளிவாக அறிந்து மருத்துவர் அறிவுரையின் பேரில் நடந்து கொள்ளுபவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற் பயிற்சி என வாழ்க்கை நோய் பற்றிய தெளிவு வந்துவிடுவதால் மற்ற நோய்கள் வராமல் வாழ் நாட்களை நீட்டித்துக் கொள்ளலாம்.
Thousands more have diabetes accomplishments. The lack of mental discipline beyond the achievement of proper understanding of medical practices
தினகரன்

Similar topics
» சர்க்கரை நோயை விரட்டுவோம்!
» சர்க்கரை நோயை குணமாக்கலாம்
» சர்க்கரை நோயை வெற்றிகரமாக குணப்படுத்துவதற்கான முன்னோட்டம்
» சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறை
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum