TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியாவின் 2015ல் டாப் – 10 பைக்!- Top 10 bikes

Go down

இந்தியாவின் 2015ல் டாப் – 10 பைக்!- Top 10 bikes Empty இந்தியாவின் 2015ல் டாப் – 10 பைக்!- Top 10 bikes

Post by Tamil Wed Feb 10, 2016 7:05 am

இந்தியாவின் 2015ல் டாப் – 10 பைக்!
கடந்த ஆண்டு இருசக்கர வாகன மார்க்கெட் சீரான வளர்ச்சி கண்டது. மேலும், பல புதிய மாடல்கள் வந்தாலும், பட்டியலில் உள்ள பெரும்பாலான இருசக்கர வாகன மாடல்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் நிலையான இடத்தை தக்கவைத்து வருகின்றன. சில மாடல்கள் பட்டியலில் புதிதாக குடியேறி, தனக்கான இடத்தை பதிவுசெய்து கொண்டன. அந்த வகையில், கடந்த ஆண்டு விற்பனையில் இந்தியாவின் டாப் – 10 இருசக்கர வாகன பட்டியல்…

ஹீரோ ஸ்பிளென்டர்


ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 இருசக்கர வாகனம் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் பெறுகிறது. கடந்த ஆண்டில் 24,89,336 ஸ்பிளென்டர் பைக் விற்பனையாகியுள்ளது. 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பிளென்டர் விற்பனையில் தொடர்ந்து சாதித்து வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா


நம்பர்-1 இடத்தை ஒருசில மாதங்கள் கைப்பற்றி, போட்டியாளர்களுக்கு தலைவலியை கொடுத்து வரும் ஹோண்டா ஆக்டிவா, கடந்த ஆண்டு விற்பனையில் 2வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 24,09,166 ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டைவிட விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், முதல் 6 இடத்தில் உள்ள மாடல்களில் விற்பனையில் வளர்ச்சியை பதிவுசெய்த ஒரே மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ பேஷன்




கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தை ஹீரோ பேஷன் பைக் பிடித்தது. கடந்த ஆண்டில் 11,86,621 பேஷன் பைக் விற்பனையானது. இந்த பைக்கும் 2014ம் ஆண்டு விற்பனையைவிட குறைவான எண்ணிக்கையையே பதிவுசெய்துள்ளது. அதாவது, 14 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

ஹோண்டா சிபி ஷைன்


கடந்த ஆண்டு விற்பனையில் ஹோண்டா சிபிa ஷைன் 5வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு இந்த பைக்கின் விற்பனை 8 சதவீதம் குறைந்தது. இருப்பினும், 125 சிசி பைக் மார்க்கெட்டில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

ஹீரோ டீலக்ஸ்


கடந்த ஆண்டு ஹீரோ டீலக்ஸ் நான்காவது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டில் 10,81,851 டீலக்ஸ் பைக் விற்பனையானது. கடந்த 2014ம் ஆண்டைவிட விற்பனை 2 சதவீதம் குறைந்தது.
[You must be registered and logged in to see this image.]

ஹீரோ கிளாமர்


ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான 125 சிசி பைக் மாடல் ஹீரோ கிளாமர். கடந்த ஆண்டு 7வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டில் 6,28,288 கிளாமர் பைக் விற்பனையானது. 2014ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 18 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பல்சர்


டாப் 10 பட்டியலில் பஜாஜ் பல்சர் பைக்குகள் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன. கடந்த ஆண்டில் பல்சர் பிராண்டு 8வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 6,24,182 பல்சர் பைக் விற்பனையாகியுள்ளது. 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை ஒரு சதவீதம் குறைந்தது.

டிவிஎஸ் ஜுபிடர்


டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் 9வது இடத்தை பெற்றது. இந்த ஸ்கூட்டரின் விற்பனை மிக அபாரமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் 4,99,905 ஜுபிடர் ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது. 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை 51 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் விற்பனை பல புதிய மைல் கல்லை கடக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹீரோ மேஸ்ட்ரோ


கடந்த ஆண்டு விற்பனையில் 10வது இடத்தை ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் பிடித்தது. கடந்த ஆண்டில் 4,97,276 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, தற்போது விற்பனை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

டிவிஎஸ் எக்ஸ்.எல் சூப்பர்


இந்தியாவின் ஒரே மொபட் மாடலான டிவிஎஸ் எக்ஸ்.எல் சூப்பர், விற்பனையிலும் சிறப்பான இடத்தை தக்கவைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் 7,18,296 எக்ஸ்.எல் சூப்பர் மொபட் விற்பனையாகியுள்ளது. 1980ம் ஆண்டு டிவிஎஸ் எக்ஸ்.எல் மொபட் பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில், விற்பனையில் ஒரு கோடி என்ற இமாலய இலக்கை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது 4-ஸ்ட்ரோக் இன்ஜினுடன் புதிய எக்ஸ்.எல் சூப்பர் 100 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பஜாஜ் பல்சர் சிஎஸ் 400!    


பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், எப்போது அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. பஜாஜ் நிறுவனம் சார்பாக இந்தியாவில் வழங்கப்படும் முதல் 375சிசி பைக்காக பஜாஜ் பல்சர் சிஎஸ்400  விளங்க உள்ளது.
பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்-கின் அறிமுகத்தின் மூலம், இந்திய வாகன சந்தையில் பவர் குரூஸர் என்ற புதிய ரகத்தையே உருவாக்க, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பஜாஜ் பல்சர் சிஎஸ்400  ஹெட்லேம்ப் மற்றும் ஃப்ரண்ட் ஃபேரிங், நீளமான பெட்ரோல் டேங்க், பல்சர் 200 என்எஸ் பைக்கின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், டுகாட்டியின் டயவெல் பைக்கை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இதன் தோற்றம் மிக அம்சமாக உள்ளது.

இந்த பைக், 375 சிசி, லிக்விட்-கூல்ட், கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் உள்ளது போன்றே சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. பவர் குரூஸர் வாகனத்திற்கு ஏற்ற வகையில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கின் இன்ஜின் 33 பிஎஸ் மற்றும் உச்சபட்சமாக 35 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வகையிலான திறன்கொண்டுள்ளது. இதன் மோட்டார், 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஏபிஎஸ் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த பைக் ரூ/2 லட்சத்துக்கும் குறைவான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum