Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜல்லிக்கட்டிற்கு சட்ட முயற்சி
Page 1 of 1
ஜல்லிக்கட்டிற்கு சட்ட முயற்சி
[size=38]ஜல்லிக்கட்டிற்கு சட்ட முயற்சி
சென்னை: ”ஜல்லிக்கட்டை நடத்த சட்ட ரீதியாக முயற்சிக்கப்படும்,” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
சென்னையில் அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை தான் விதித்துள்ளது; முற்றிலும் தடை செய்யவில்லை. ஜல்லிக்கட்டை நடத்த சட்ட ரீதியான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரைகளை ஏற்று இன்னும் ஒரு வாரத்தில் சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகும் என்றார்.
ஜன. 18ல் வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு:
மதுரை: மதுரையில் முதல் ஜல்லிக்கட்டு நடக்கும் அவனியாபுரத்தில் தடையை நீக்கக்கோரி, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், வாடிவாசலில் பூஜை நடந்தது.ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி, மதுரையில் அவனியாபுரம், அலங்காநல்லுார், பாலமேட்டில் தொடர் உண்ணாவிரதம், மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நேற்று நடப்பதாக இருந்தது. தடையால் நடக்காததால், பஸ் ஸ்டாண்டில் மாடுபிடி வீரர்கள் நேற்று அதிகாலையிலேயே குவிந்தனர். காளைகளை மேய்ச்சலுக்கு கூட அழைத்து செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். காளைகளை வீட்டு வாசலிலேயே கட்டி வைக்கும்படி கூறினர். வாடிவாசலில் பூஜைஅவனியாபுரம் குருநாத சுவாமி அங்காளஈஸ்வரி கோயில் சார்பில், தை முதல் நாளில் (ஜன.,15) ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். தடையை கண்டித்து ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் கலந்து கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு வாடிவாசலை அடைந்தது. அங்கு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
கருப்புப் பொங்கல்:
கண்ணன் கூறியதாவது: அவனியாபுரம், அயன்பாப்பாகுடி, ஆய்வனேந்தல், தவராம்பூ ஆகிய
கிராமங்களில் முன்பு தனித்தனியாக ஜல்லிக்கட்டு நடந்தது.பின் அவனியாபுரம் தென்கால் கிராமத்தில் நான்கு கிராமம் சார்பில்
ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடக் கிறது. தமிழர்களின் வீரம், விவேகம்
தெரியாதவர்கள் சிலர் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு குறித்து முழுமையாக தெரியாமல் உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதாக கருதுகிறோம். இந்த பொங்கல் தமிழர்களுக்கு கருப்பு
பொங்கல், என்றார்.இதைதொடர்ந்து அவனியாபுரம் அனைத்து கட்சி, மாடுபிடி
வீரர்கள், மாடுகள் வளர்ப்போர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊர்வலமாக சென்று வாடிவாசலில் பூஜை நடத்தினர்.
தடையை விலக்கலாம்:
விடுதலை சிறுத்தைகள் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப்: தமிழர் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம் உலகறிந்தது. இந்தியா விவசாய பூமி. கால்நடைகளும், விவசாயிகளும் இரு கண்கள்.வேறுபடுத்திட முடியாது. கால்நடைகளை நம்பி விவசாயிகள் உள்ளனர். காளைகளை அடக்குவது புராண காலத்தில் இருந்தே, தமிழரின் வீர விளையாட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உச்சநீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டை நடத்தி காட்டுவோம். மத்திய, மாநில அரசுகள் நினைத்தால், ஒரு மணி நேரத்தில் தடையை விலக்கிக்கொள்ள முடியும். காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல, என்றார்.
அதிகாரிகளுக்கு தடை:
அலங்காநல்லுார் பேரூராட்சிக்கு உட்பட்ட வலசை, குறவன்குளம், ஒத்தவீடு உள்ளிட்ட கிராம மக்கள் சார்பில் நேற்று மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது: ஏற்கனவே அறிவித்தது போல் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்கிறோம். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக அறிவித்தோம். ஜன., 18 ல் கிராம மக்கள் வாகனங்களில் சென்று கலெக்டரிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம். கலெக்டர் வாங்க மறுத்தால், தலைமை தேர்தல் கமிஷனருக்கு தபாலில் அனுப்புவோம். ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரை அலங்காநல்லுார் பேரூராட்சி உட்பட்ட கிராமங்களில் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது
என்றார்.
[/size]
கருப்புச்சட்டை ஊர்வலம்:
பாலமேடு கிராம மகாலிங்க சுவாமி மடத்து
கமிட்டி மற்றும் கிராம பொது மக்கள் தலைவர் செல்லத்துரை: தடையை கண்டித்துபாலமேட்டில் இன்று (ஜன.,16) கருப்புச்சட்டை ஊர்வலம் நடக்கிறது. வீடுகள்
தோறும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கருப்புச்சட்டை
ஊர்வலத்தில் பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட அனைவரின் வீட்டில் இருந்தும்
ஒருவர் பங்கேற்பர், என்றார்.
திருச்சியில் காளையுடன் வந்து பெண்கள் ஒப்பாரி:
மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது. ஆனால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறையாக ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.இதையடுத்து தமிழகம் முழுவதுமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சியில் நேற்று காலை, திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை பூஜை மண்டபத்தில், திருச்சி மாவட்ட வீர விளையாட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் பழனியாண்டி தலைமையில், ஐந்து ஜல்லிக்கட்டு காளைகளுடன், 300 க்கும் மேற்பட்டவர்கள் கூடினர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பை கண்டித்தும், தடையை விலக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மொட்டை அடிக்கும் போராட்டம் அறிவித்தனர்.
ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காளைகளை நடுவில் நிறுத்தி, போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூடி நின்று ஒப்பாரி வைத்து அழுதனர்.சுமார் இரண்டு மணிநேரம் ஒப்பாரி போராட்டம் நடத்தியவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த அனுதிமக்காவிடில் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். அதுபோல, நேற்று மதியம், திருச்சி அடுத்த அரிய மங்கலத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்டோர், திருச்சி- தஞ்சாவூர் மெயின்ரோடு எஸ்.ஐ.டி., பஸ் ஸ்டாப் பகுதியில் கூடினர்.மூன்று ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்தனர். காளைகளின் கொம்புகளில் கருப்பு துணி கட்டியும், நடப்பாண்டு தங்களுக்கு கருப்பு பொங்கல் என்பதை தெரிவிக்க, கரும்பில் கருப்பு துணிகட்டி வந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த அரியமங்கலம் போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் திடீர் போராட்டத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
dinamalar

Similar topics
» சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை முதல்வராக்க முயற்சி? : உ.பி.,யில் காங்கிரசின் பலே திட்டம்
» சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பாரம்பரியப் பண்பாடு வளர்க்கும் புதிய முயற்சி நலிந்து வரும் கிராமியக் கலைகளை வளர்க்கும் முயற்சி .வாருங்கள் கண்டு களியுங்கள்
» சட்ட மீறலில் ரெட்டி சகோதரர்கள் குவாரிகள்
» ராமதாஸ் சட்ட திருத்தும் கேட்பது எதனால் ?
» திருநங்கையர் சட்ட மசோதா – 2015 விரைவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum