TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அம்மா - கதைகள்

Go down

அம்மா - கதைகள் Empty அம்மா - கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 11, 2015 11:26 am

இரண்டாம் திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்."அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ....."நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய ‪பாசம்‬ இருக்கும்.

ஆனால்..

"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!

‪அம்மாவுக்கு‬ நிகர் இந்த உலகில் யாருமில்லை...

----------------------------------------------
நான் படித்த அம்மா கதைகளை இங்கு தொகுக்கிறேன் .இவை பலஇடங்களில் தொகுத்தவை .முக நூல் அதிகமாக
தொகுத்தேன்
உண்மையில் நான் கண் கலங்கிவிட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா - கதைகள் Empty Re: அம்மா - கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 11, 2015 11:45 am

ஒரு சிறு (உண்மைக்) கதை :அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்
------------

"அம்மா , அம்மா கால் வலிக்குதும்மா! தூக்கிக்கம்மா!" அந்த சிறுவனின் வயது எட்டு. அம்மாவுக்கு பையனை தூக்க ஆசைதான். முயற்சித்தாள்.
"முடியலடா? இன்னும் கொஞ்ச தூரந்தான் ஊரு வந்துரும்பா" என்றாள்.

எப்போதும் தன் அப்பா ஊரிலிருந்து அம்மா ஊருக்கு , அந்த ஒத்தையடிப்பாதையில் தான் செல்வான். இயற்கை, தன் அழகை வழியெல்லாம், பச்சைப்பசேல் என்று வயல் வெளியாய் பறப்பிநிற்கும். தென்னை மரங்கள் கம்பீரமாய் , தலையசைத்து வரவேற்கும்.

அந்த அழகான சிறிய வாய்க்கால் வரப்பு ஓரம் , நடக்கும்போது அம்மா நிலக்கடலைச் செடியை , கொத்தாகப் பிடித்து , அதன் வேரில் உள்ள கடலையோடு , மண்ணைத்தட்டி , நிலக் கடலையை ஒவ்வொன்றாக ஊட்டும்போது , கால்வலி காணாமல் போகும்.
"அம்மா , அம்மா ! அங்க பாரேன் ஆட்டுக்குட்டி! " குறுக்கே வந்த ஆட்டுக்கூட்டத்திலுள்ள , துள்ளிக்குதிக்கும் ஆட்டுக்குட்டியை பார்த்ததும் , கால்வலி பஞ்சாய்ப் பறந்து போகும்.
"கால் வலிக்குதும்மா !" சிறு கற்கள் ரப்பர் செருப்புக்கும் காலுக்கும் இடையில் புகுந்து உறுத்தும்போது, அம்மா அதை அழகாகத் தட்டும்வரை ,அந்த ஒத்தயடிப்பாதையின் சுடுமண் காலைச்சுடும் . கால் நாட்டியமாடும்.

அதோ அங்கே புளிய மரம்!பார்க்கும்போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறும்.
"அம்மா! எனக்கு புளியங்காய் வேணும்," என்பான் . என்றுமே யாருக்குமே எதையும் இல்லை என்று சொல்லாத அம்மா, தனக்கு பிடிக்காத, புளியங்காயை தன் மகனுக்கு தன் உயரத்தையும் , கால் வலியையும் பொருட்படுத்தாமல் ,குதித்து எட்டிப்பறித்துக் கொடுப்பாள் . அவன் அந்த பிஞ்சுப் புளியங்காயை ஒடித்து சுவைக்கும்போது, ஒத்தயடிப்பாதையில் அவனோடு வந்த கால்வலி மறைந்து , புளிச்சுவை நாக்கைச்சுளற்ற வைக்கும்.

"இன்னும் கொஞ்ச தூரந்தான். நம்ம பெரியம்மா வீடு வந்துரும்! "என்று கூறிய அம்மா ,தன் கைப்பயை எடுத்து, பொரி உருண்டையைக் கொடுத்தாள் . பொரி உருண்டையைக்
கொறிக்கும்போது அதன் சுவையும், கண்கவர் வயல்வெளியின் காட்சியும், அவனை பல நிமிடங்கள் கால் வலியை மறக்கச்செய்யும்.

பெரியம்மா வீடு வந்தாகி விட்டது. அவர்கள் வீட்டுத்திண்னையில் ஆட்டுக்குட்டியை பார்க்க ஒரு பரவசம். இது அவனின் அடுத்த இரண்டு நாள் விளையாட்டுத்தோழன் .

புட்டிப்பாலை குழந்தைக்கு ஊட்டித்தான் அவன் இதுவரை பார்த்திருக்கிறான். ஆனால் ,
தாய் ஆடு காட்டில் மேய்வதால், ஆட்டுக்குட்டிக்குக்கு பெரியம்மா புட்டியில் , தாயின் வாஞ்சையோடு பாலூட்டுவது , அவனின் மனத்தில் ,இரக்கத்தையம் அன்பையும் ஊட்டியது.

இரண்டு நாளும் , இரண்டே நிமிடத்தில் கழிந்ததில் அவனுக்கு வருத்தம்.
"அம்மா போலாமாப்பா? "என்று பெரியம்மா கொடுத்த கனமான பலகாரப் பையுடன், அழைத்தபோது, அவனின் மனம் கனத்தது.

கனத்த இதயத்தோடு பெரியம்மாவையும் , ஆட்டுக்குட்டியையும் விட்டுவிட்டு, மீண்டும் அந்த ஒத்தயடிப்பாதையின் விளிம்பில் , அம்மாவின் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான், திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே!

அவனுக்கு இப்போது நாற்பது வயதுக்கு மேல். சென்ற முறை ஊருக்குச் சென்றபோது
அம்மா இல்லை. அந்த ஒத்தயடிப்பாதையாவது இருக்குமா என்று , தேடினான்.
கண்ணில் தட்டுப்பட்டதென்னவோ, வறண்ட பிளாட்டுபோட்ட நிலங்களும் , ஒரு டீக்கடையுந்தான்.

கனத்த இதயத்தோடு , டீக்கடையின் பெஞ்சில் , அண்ணே, ஒரு ....டீ..என்றவாறு அமர்ந்தான்....!!!

--புவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா - கதைகள் Empty Re: அம்மா - கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 11, 2015 12:05 pm

அம்மா சொன்ன 'சுரீர்' வார்த்தை?
------------
அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.

இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்... அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது.

வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான்.
வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள்.
"ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்.

கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது.
இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும் அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை.

அவன் கைப்பையை வாங்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அவனை கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் ஆடைகளை களைந்து விட்டு, அவன் உடல் முழுவதுமாய் நனையும் படி தண்ணீரை வாரி இரைத்து ஊற்றினாள். நடு இரவு என்பதால் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிரும் தான். ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் அதை அவனால் உணர முடியவில்லை.

மகனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று நாற்காலியில் உட்கார வைத்து ஈரம் படிந்த அவன் தலையை நன்றாக துடைத்தெடுத்து அதிகபட்ச வேகத்தில் மின்விசிறியை ஓட விட்டு அவனுக்கு வேறு உடை மாற்றி விட்டாள்.
அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனை சாப்பிடச் செய்தாள். கூடவே எப்போதும் இரவில் மகனுடன் சேர்ந்து சாப்பிடும் அவள் அவனுடன் சேர்ந்து சாபிட்டாள்.
பின்பு மகனை ஒரு கட்டிலில் படுக்க வைத்து, உடம்பை முழுவதுமாக மூடும்படி உள்ள ஒரு போர்வையை அவன் மேல் போர்த்தி விட்டு அந்த கட்டிலின் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த தனக்கான பாயில் படுத்துக்கொண்டாள்.
காலை விடிந்தது...

அம்மா வாசலில் மாட்டுசாணம் தெளிப்பது, கோலம் போடுவது, குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பது என்று அவளுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..
இவன் பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, சிறுது தூரம் நடைபயிற்சி பழகுவது என்று வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

இவற்றையெல்லாம் முடித்து விட்டு குளித்து வேலைக்கு கிளம்ப தயாராகும் தன் மகனுக்கு உணவை ஒரு கிண்ணத்தில் அடைத்து தயாராக வைத்திருந்த அம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தை உதைத்து கிளம்பும் போது "அம்மா நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் விடைபெற, அதற்கு அம்மா "சரிப்பா பத்திரமா போயிட்டு வா...ஆனா நேத்து நைட்டு வந்த மாதிரி வராதப்பா...அத அம்மாவால தாங்கிக்க முடியாதுப்பா" என்று சொன்னாள்.

"நாகரீகம்" என்று வார்த்தையைகூட எழுத தெரியாத அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அவனுக்கு "சுரீர்" என்றிருந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா - கதைகள் Empty Re: அம்மா - கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 11, 2015 12:09 pm

எங்க அம்மா செத்துப் போச்சு..
-------------
செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு.


காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து என்னை அடையாளம் கண்டு கூப்பிடுகிறார் .

கதிர் மாமா என்றதும் அவரின் சிரித்த முகமே எல்லோருக்கும் நினைவில் வரும், நான் கூட நினைப்பதுண்டு "எப்படித்தான் எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது" என்று, அதற்கு என் அம்மா சொல்வார் "அது சாமி கொடுத்த வரம்டா..." என்று

அவரை அருகில் சென்று பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவர் சிரித்தபடி இருந்தாலும் முகத்தில் அந்த இயல்பான சிரிப்பு இல்லை.
"என்ன மாமா ,உடம்பு சரியில்லையா ..முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்rகு?.."

"அட அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , வயசாகிடுச்சுல்ல.." என்று சொல்லி சிரித்தவர்
"காலைலதான் வந்தியா .. அப்பா சொன்னாரு.." -என்று பேசிக்கொண்டே சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்தார்.

சிறிய ஓட்டில்வீடுதான்.தன் சாப்பாட்டு தூக்குபோணியை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு வந்தவர்
"காப்பி சாப்பிடுறியா மாப்ள .." என்றார்
"இல்ல மாமா வேணாம்"
" அட நான் நல்லத்தான் காப்பி போடுவேன் பயப்படாத" என்று சொல்லிவிட்டு சமையல்கட்டு பக்கம் சென்றார்.

ரொம்ப நாள் ஆச்சு இந்த வீட்டுக்குள் வந்து. சுற்றிலும் பார்த்தேன் துவைக்காத துணிகள் கட்டிலின் மேல் களைந்து கிடந்தன. ஒட்டடை அடிக்காமல் வேறு இருந்தது. சுவற்றில் மாமாவின் பையனும் பொண்ணும் பள்ளி சீருடையில் இருக்கும் படமும் அதன் அருகில் மாமா மட்டும் இருக்கும் அவரின் இளமைகால படமும் தொங்கியபடி இருந்தது. முன்பு அங்கே அவரின் திருமண புகைப்படம் இருந்ததாக நினைவு எங்கே அது இப்போது ? மாமாவிடம் கேட்கலாம் என நினைத்தபோது, பள்ளி விட்டு குழந்தைகள் இருவரும் விட்டுக்குள் வந்தார்கள்.பெரியவன் "ஐ மாமா.." என்றபடி என்னை வந்து கட்டிக்கொண்டான்..சின்னவள் சோர்வாக தூக்க கலக்கத்தில் இருந்தாள்.எல்லோருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் மாமா.

"சிக்கிரம் ட்ரஸ் மாத்திகிட்டு டியூஷன் -க்கு புறப்படுங்க " என்று குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருந்த மாமாவை வெளியில் யாரோ அழைக்க அவரும் சென்றுவிட்டார். நான் குழந்தைகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்..பேச்சுவாக்கில் "எங்க பாப்பா உங்க அம்மா " என்று கேட்டேன்,அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை,அப்போது பையன் சொன்னான் "ம்ம்ம் ஏங்க அம்மா செத்துப் போச்சு.." என்று.அப்போது அவன் முகம் வித்தியாசமாக இருந்தது.பின் இயல்பாக அவன் ஆடைகளை மாற்றிக்கொண்டு தயாரானான்.

மாமா வந்ததும் அவர்களிடம் விடைபெற்றுkகொண்டு என் வீட்டுக்கு வந்தேன். முன்வாசலில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்த அம்மா என்னை பார்த்ததும்
"காப்பி போடட்டுமாப்பா.. " - என்றார் .

"இல்லம்மா இப்பத்தான் கதிர்மாமா வீட்டுல சாப்பிட்டேன் "

"ஓ அங்க போயிருந்தியாப்பா.. அவன பாத்தியா.." என்று கேட்டவர் என் பதிலுக்கு காத்திருக்காமல் தொடர்ந்தார் "ம்ம்ம் என்னமோ அவன் வாழ்க்கை இப்படி ஆச்சு ..அவனா ஆச பட்டுத்தான் அவள கட்டிகிட்டான் ,நல்லாத்தானே இருந்தா ..இப்படி பண்ணுவான்னு யாரு கண்டா !ரெண்டு புள்ளைய பெத்தவ, கூட வேல செய்யுற மேஸ்திரிய கூட்டிகிட்டு ஓடிட்டா ,என்ன திமிரு அவளுக்கு, அந்த ****பயலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்கு, ரெண்டுக்கும் புத்தி போயிருக்கு பாரு..ம்ம்ம் உன்கிட்ட சொல்ல வேணாமுன்னு உங்க அப்பா சொன்னாரு அதனாலத்தான் போன்ல எதுவும் சொல்லல." என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார். எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

அம்மா - கதைகள் Empty Re: அம்மா - கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum