Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
20 தொழிலாளர்கள் கொலை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ராமதாஸ்
Page 1 of 1
20 தொழிலாளர்கள் கொலை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ராமதாஸ்
20 தொழிலாளர்கள் கொலை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: ராமதாஸ்
ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப் பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிர்பாராமல் நடந்த மோதலின் விளைவு அல்ல…. திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி மோதல் படுகொலைகள் என்று நம்புவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன.
சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள ஈதலகுண்ட, சீக்கட்டி தீகலகோண ஆகிய இடங்களில் தான் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்த செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, கற்களை வீசியதால் தற்காப்புக்காக சுட்டோம் என்று ஆந்திரக் காவல்துறையினர் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்ட இடங்களில் ஒன்றான ஈதலகுண்டு பகுதியில் செம்மரங்களே கிடையாது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் புதர்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்பகுதியில் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டினார்கள் என்றும், காவல்துறையினர் சென்ற போது மறைந்திருந்து கற்களை வீசித் தாக்கினார்கள் என்பதும் பொய்களால் புனையப்பட்ட கட்டுக்கதை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
கொல்லப்பட்ட தொழிலாளர்கள் வெட்டி வீழ்த்தியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்து பல ஆண்டுகள் பழமையானவை ஆகும். பழைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தக்கட்டைகளை அங்கு போட்டு காவல்துறையினர் நாடகம் ஆடியுள்ளனர். அக்கட்டைகளில் பழைய வழக்கு எண் எழுதப்பட்டிருப்பதும், அதை மறைக்கும் நோக்குடன் அவற்றின் மீது காவல்துறையினர் பெயிண்ட் பூசியிருப்பதுமே இது நாடகம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும்.
பழையக் கட்டைகளா… புதிய கட்டைகளா? என்பதைக் கூட பார்க்காமல் இந்த படுகொலைகள் குறித்த தங்களின் கருத்தை விசாரணை அதிகாரிகள் நம்பி விடுவர் என்று காவல்துறையினர் கருதிகிறார்கள் என்றால் அவர்களின் படுகொலைகளுக்கு ஆந்திர அரசும், அதன் விசாரணை அதிகாரிகளும் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
மோதலின்போது தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அவர்களது உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொல்லப்பட்ட 20 பேருக்கும் மார்பு மற்றும் நெற்றியில் தான் குண்டு பாய்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கத்தில் வைத்து அவர்களது உடலில் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நெருக்கமாக நிற்கவைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை இவை உறுதி செய்கின்றன.
தொழிலாளர்களின் உடல்களில் நெருப்புக் காயங்களும் காணப்படுவதால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைத் தலைவரான காந்தராவ், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வந்தால் அவர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று எச்சரித்திருந்தார். தமிழகத் தொழிலாளர்களை சுட்டு கொல்ல வேண்டும் என்ற வெறி அவருக்கு இருந்ததையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி, தமிழர்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்து விட்டு, அதற்கான காரணத்தை உருவாக்குவதற்காகக் கூட இப்படி ஒரு கடிதத்தை காந்த ராவ் எழுதியிருக்கக் கூடும்.
கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் காவல்துறையினரால் கையாளப்பட்ட விதம் இன்னும் கொடுமையானது. விலங்குகளின் உடல்களை எடுத்து வருவதைப் போல மூங்கிலில் கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் தான் தொழிலாளர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு அசுத்தமான டிராக்டரில் ஒன்றின்மீது ஒன்றாக உடல்களைப் போட்டு குப்பையைப் போல அள்ளிச் சென்றுள்ளனர். படுகொலைகள் நடந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் செல்வதற்கு பாதை உள்ளது. அப்பாதையில் தான் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது தமிழகத் தொழிலாளர்களின் உடல்களை மிக மோசமான முறையில் ஆந்திரக் காவல்துறையினர் கையாண்டது அவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்மத்தையும், வெறுப்பையும் தான் காட்டுகின்றன.
ஏற்கனவே நான் கூறியதைப் போல சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு போன அப்பாவிகள் தான். ஆந்திரத்தைச் சேர்ந்த மாஃபியா கும்பல்கள் தான் செம்மரங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அவர்களுக்கு ஆந்திரத்திலுள்ள அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளுடனும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. இந்தக் கூட்டணி ஆந்திர வனத்தை மொட்டையடித்து வருகிறது. இதை மூடி மறைக்கவே அப்பாவித் தமிழர்களைக் கொன்று கடத்தல்காரர்களாக சித்தரித்து தங்களை உத்தமர்களாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், அதன் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் காந்தாராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை மற்றும் கூட்டுச் சதி வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஆந்திர அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் குறித்து அம்மாநில அரசே விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பிகார் தொழிலாளர்கள் தாக்கப் பட்டதை பிகார் மாநில அரசு தேசிய பிரச்சினையாக்கியது. இப்போது 20 தொழிலாளர்கள் கொல்லப் பட்டுள்ள நிலையில் நியாயமான விசாரணை நடத்தும்படி ஆந்திரத்திடம் தமிழகம் கெஞ்சுகிறது. இது தவறான அணுகுமுறையாகும். உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழீழம் பற்றி பேசக்கூடாதா? இலங்கை அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்
» உடுமலை ஆணவக் கொலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ராமதாஸ்! (வீடியோ)
» கொடநாட்டில் தங்கியது பற்றி அவதூறு: டாக்டர் ராமதாஸ் மீது ஜெயலலிதா வழக்கு
» உடல் நலம் : கிட்னி பற்றி சில அடிப்படை தகவல்கள்
» பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !
» உடுமலை ஆணவக் கொலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ராமதாஸ்! (வீடியோ)
» கொடநாட்டில் தங்கியது பற்றி அவதூறு: டாக்டர் ராமதாஸ் மீது ஜெயலலிதா வழக்கு
» உடல் நலம் : கிட்னி பற்றி சில அடிப்படை தகவல்கள்
» பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum