TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்?

Go down

மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்? Empty மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்?

Post by mmani Sat Mar 14, 2015 7:04 am

முத்துக்குமாரசாமிக்கு முன்பு...
நெல்லை வேளாண் உதவி செயற்பொறியாளரான முத்துக்குமாரசாமியின் தற்கொலை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சி பொறுப்புகள் காலியானதுடன் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதால், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அரண்டு போயிருக்கிறார்கள். முத்துக்குமாரசாமிக்கு முன்பாக நெல்லையில் இரண்டு அரசு அதிகாரிகள் மரணம் அடைந்தனர். அவர்களின் மரணங்களிலும் சர்ச்சைகளும் சந்தேகங்களும் மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. அந்த மரணங்களுக்கும் யார் காரணம் என்பது இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
மரணம் - 1
ரயிலில் பாய்ந்த தாசில்தார் தியாகராஜன்!
மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்? P8
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாசில்தாராகப் பணியாற்றியவர் தியாகராஜன். கடந்த 2011 டிசம்பர் 24-ம் தேதி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகே (முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட இடம்) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கும் அதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்பது குற்றச்சாட்டு.
நெல்லை என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவரான தியாகராஜன், அம்பாசமுத்திரம் தாசில்தாராகப் பணியாற்றி வந்தார். விதிமுறைகளுக்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என்பதில் அவர் கறாராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு, உயர் அதிகாரிகள் சிலரும் அரசியல் புள்ளிகளும் நெருக்கடிகளைக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், தமிழக நில நிர்வாக ஆணையராக இருந்த ஓர் அதிகாரி நெல்லைக்கு வந்துள்ளார். அவரிடம் தாசில்தார் தியாகராஜன் பற்றி தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த அதிகாரி, தியாகராஜன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக நிறைய மனஉளைச்சல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஒருநாள், தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார் தியாகராஜன். அவரது மரணத்துக்கு அதிகாரிகளே காரணம் என அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவருக்கு டார்ச்சர் கொடுத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. தாசில்தார் தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
மரணம் - 2
காரில் பிணமாகக் கிடந்த பொறியாளர் ராஜேந்திரன்!
நெல்லை மாநகராட்சியில் பணியாற்றி வந்தவர், உதவிப் பொறியாளர் ராஜேந்திரன். கடந்த 2013 நவம்பர் 28-ம் தேதி காருக்குள்ளே கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுக் கிடந்தார். நெல்லை மாநகராட்சிக்கான புதிய கட்டடப் பணிகளை ஆய்வு செய்யும் பணியில் இவர் இருந்தார். கட்டுமானத்தில் சில காண்ட்ராக்டர்கள் முறைகேடு செய்ததைக் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். இதனால், ஓரிரு காண்ட்ராக்டர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த சமயத்தில் இவரிடம் சிலர் பேரம் பேச முயன்றுள்ளனர். ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். இந்த நிலையில், வீட்டுக்கு அருகில் இரவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்றுள்ளார். ஆனால், அவர் வீட்டுக்குச் செல்லவில்லை. அவரது கார் குற்றாலம் அருகே நின்று கொண்டிருந்தது.
அதிகாலையில் வாக்கிங் சென்றவர்கள் அந்தப் பகுதியில் ஒரு காரின் எஞ்சின் ஓடிக்கொண்டே இருப்பதைக் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாக நின்றதால் உள்ளே பார்த்தபோது டிரைவர் சீட்டில் உதவிப் பொறியாளர் ராஜேந்திரன் அமர்ந்த நிலையிலேயே பிணமாகக் கிடந்துள்ளார். அவரது கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கிய தடம் காணப்பட்டு உள்ளது. பேன்ட்டிலும் காலிலும் முட்கள் கிழித்த அடையாளங்களும் இருந்துள்ளன. அவரை ஏதோ ஒரு கும்பல் கடத்தி வந்து கொலை செய்துவிட்டு அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதே தவிர, கொலையாளிகள் இதுவரை பிடிக்கப்படவில்லை. அவரது காரை கூட குடும்பத்தினரிடம் கொடுக்காமல் காவல் துறையினர் இழுத்தடித்து வருகின்றனர்.
மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்? P10
தியாகராஜன், ராஜேந்திரன் வழக்கு​களைப் போல முத்துக்குமாரசாமியின் மரண வழக்கையும் முடக்கிப் போடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்ததாம். ஆனால், பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் களத்தில் குதித்தன. தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம், நெல்லை சுதேசி மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டன.
சுதேசி மக்கள் இயக்கத்தின் கூட்டத்தில், 'முத்துக்குமாரசாமியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தற்கொலைக்குத் தூண்டிய அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''முத்துக்குமாரசாமியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். முத்துக்குமாரசாமியுடன் பேசிய அதிகாரிகள், அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அவர் தற்கொலை செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து டார்ச்சர் செய்தவர்கள் யார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு நியாயத்துடன் நடந்துகொள்ளாவிட்டால் அந்தப் பட்டியலை வெளியிடுவேன்' என எச்சரிக்கை விடுத்தார்.
மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்? P9நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏவான வேல்துரை, 'முத்துக்குமார​சாமிக்குக் குடும்பத்தில் எந்த நெருக்கடியும் கிடையாது. அலுவலகம் செல்வதாகக் கிளம்பி வந்த அவரை யாரோ தொடர்ந்து தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். அவரது மரணத்துக்குக் காரணமான நபர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.
ராகுல் ரத்ததான கழகத்தைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் பிரம்மா நம்மிடம் பேசுகையில், ''முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதற்கு யார் காரணம் என்பதைக் காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும். அவரது மரணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டுள்ளேன். அதன் பதில் கிடைத்ததும் பொதுநல வழக்குத் தொடர உள்ளேன்' என்றார் ஆவேசமாக.
அதிகாரிகள் நிம்மதியாகப் பணியாற்றும் நிலை ஏற்பட வேண்டும்.
ஆண்டனிராஜ், படங்கள்: ஏ.சிதம்பரம்


கோடிக்கணக்கில் மோசடி!
மறைக்கப்பட்டதா அதிகாரிகள் மரணங்கள்? P10aதமிழ்நாடு வேளாண்மைத் துறையில் நிறைய மோசடிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. அப்பாவி விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய மானியத்திலும் கைவைத்து விடுகிறார்களாம், உள்ளூர் அதிகாரிகள் சிலர். இதில் மேலதிகாரிகளுக்கு உரிய பங்குத்தொகை போய் சேர்வதாகவும் சொல்லப்படுகிறது. விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் மோசடி நடந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட சமூக வளர்ச்சிக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் காந்திமதிநாதன், ''பின்தங்கிய விவசாயப் பகுதிகளை மேம்படுத்த தமிழக அரசின் சார்பில் நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் இந்த முகமையின் சார்பில் விவசாயிகளுக்கு கசிவுநீர் குட்டைகள் அமைத்துத் தரப்படும். இதற்காக மிகவும் வறட்சியான பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதி விவசாயிகளுக்கு முதல்கட்டமாக திறன் வளர் பயிற்சி நடத்தப்படும். இந்தத் திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறேன்' என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum